Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 023  (Read 3058 times)

Offline Global Angel

நிழல் படம் எண் : 023

இந்த களத்தின்

இந்த  நிழல் படம் MysteRy  வால் வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....


« Last Edit: August 27, 2015, 10:09:52 AM by MysteRy »
                    

Offline Jawa

சின்னஞ் சிறு வித்து நான்
சிறகாய் காற்றில் பறந்திருந்தேன்
காற்றின் வேகம் குறைந்ததனால்
பூமி மடியில் நான் விழுந்தேன்
விண்ணை மெல்ல நோக்கினேன்
அது பூமி நனைய பொழிந்தது
உள்ளம் துள்ளி குதித்தது
பொறுத்த காலம் முடிந்தது
முளைக்கும் நேரம் வந்தது
மண்ணை கிளறி வேர் விட்டேன்
விண்ணை நோக்கி முளை விட்டேன்
பூமியில் வேரூன்றி நான் நிற்க
எத்தனை பாடுகள் நான் பட்டேன்
அத்தனை கதையும் யார் அறிவார்
கிள்ள வரும் சிறார் கூட்டம்
மேய வரும் கால்நடை கூட்டம்
இத்தனை இடர்களை நான் கடந்து
ஓங்கி வளர்ந்து நிற்கின்றேன்

பெரியவர்க்கும் சிறியவர்க்கும்
வறியவர்க்கும் செல்வர்க்கும்
பொருப்பவர்க்கும் வெறுப்பவர்க்கும்
எடுப்பவர்க்கும் கொடுப்பவர்க்கும்
இலையாய் பூவாய் பிஞ்சாய்
காயாய் கனியாய் நிழலாய்
பாரபட்சம் இல்லாமல்
பகிர்ந்து நான் கொடுத்திட்டேன்
பறவைகள் தங்கும் சரணாலயம் ஆனேன்
வண்டுகள் ரீங்காரம் இடும் சோலைவனம் ஆனேன்

வசந்தமாய் இருந்த என் வாழ்வில்
புயலென தாக்கிற்று ஒரு நிகழ்வு
வாழ்வில் தோல்வியுற்ற வாலிபன்
வந்தான் கயிற்றுடன் தன் உயிர் மாய்க்க
ஓரறிவான உயிரினம் நான்
விதையாய் விழுந்து மரமாய் வளர்ந்து
மானிடர்க்கு பலனாய் நின்றேன்
இடர்கள் பல சந்தித்தேன்
இருந்தும் நான் தளரவில்லை
வேரோடு பெயர்த்தெடுத்தாலும்
விறகாய் பயன் தந்திடுவேன்
ஆறறிவுள்ள மானிடனோ
அணுவளவும் முயற்சி இன்றி
தோல்வியை கண்டு துவல்கின்றான்
உயிரை மாய்க்க முயல்கின்றான்
எனை அழித்து வாழும் மானிடனே
உன் அழிவை நீ தேடாதே
சாவும் துணிவை மாற்றி விடு
வாழ வழி தேடி முயன்று விடு

கார்க்கி

  • Guest
வேர்களற்ற மரம்

தன்னியல்பை
மறந்து தொலைந்த
மரமொன்றை
அதன் வேர்கள்
தேடிக்கொண்டிருக்கிறது...

இறந்தகால விதைகளின்
வேர்க்குஞ்சுகள்
பற்றிப் பரவ
வேர்களற்ற மரத்தை
தேடிக்கொண்டிருக்கிறது...

நிறமிழந்த
பழுப்பு இலையொன்று
தன் முகாந்திரம் அறிய
வேர்களற்ற மரத்தை
தேடிக்கொண்டிருக்கிறது...

நசுக்கப்பட்ட
இளங்காயொன்று
தன்னை பறித்தெறிந்த
குரங்கின் லாவகம் காண
வேர்களற்ற மரத்தை
தேடிக்கொண்டிருக்கிறது...

பாலைவனமான
வனம் ஒன்று
தன் சரித்திர பக்கத்தை
புரட்டிப் பார்க்க
வேர்களற்ற மரத்தை
தேடிக்கொண்டிருக்கிறது...

பயம் சூல் கொள்கிற
இருட் போர்வையினுள்
நுழைகிற இக்கணம்
முழுதும் நிரப்பப்படாத
அந்த ‘தாளில்’
வேர்களற்ற மரத்தின்
இயலாமைகள்
வழிந்தோடி
நிரப்புகிறது......


பின்குறிப்பு: மரமின்றி மழையில்லை. காடு செழித்தால் நாடு செழிக்கும். மரங்களை வெட்டாதீர்கள். மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்.

என்றும் அன்புடன் உங்கள்
கார்க்கி

Offline Yousuf

காலநிலை மாற்றங்கள்
ஓசோனில் ஓட்டை
பூமி வெப்பமயமாதல்
மழை பொயப்பு
இப்படி எத்தனையோ மாற்றங்கள்
செய்திகளாய் நம்...
அன்றாட வாழ்வினிலே!

இதற்க்கு காரணம் என்ன?
நிவர்த்தி செய்வது எப்படி?
இவ்வாபத்துக்களை கையாள்வது எப்படி?
இப்படி கேள்விகளும்...
நீண்டுகொண்டு தான் செல்கிறது!

இதற்கெல்லாம் விடை என்ன?
இதற்க்கு விடை தான் "மரம்"!
மரம் வளர்ப்போம்!
இயற்கை வளம் பாதுகாப்போம்!

சொல்வது வேறு யாருமில்லை
நம் இந்திய அரசாங்கம்!

சொல்லில் மட்டும் தான்
இவர்கள் சிந்தாந்தம் பேசும்!
செயலோ இதற்க்கு மாற்றமாக!

இயற்கையை பாதுக்காக்க
எஞ்சியுள்ள காடுகளையும்
விட்டுவைக்காமல் அன்னியநாட்டு
ஏகாதிபத்திய முதலாளிகளிடம்
தாரைவார்த்து விட்டது!

இதை தட்டி கேட்கும்
அக்காடுகளின் மண்ணின்...
மைந்தர்கள் மீது
அரசபயங்கரவாதம் என்னும்
அத்துமீறலை இந்திய...
அரசபடைகளைக் கொண்டு
அள்ளி வீச தயாராய்
இருக்கிறது இந்திய அரசாங்கம்!

இதை தட்டி கேட்ட
நல்லவர்கள்
சிதரிக்கபடுகிறார்கள்
தீவிரவாதிகளாய்!

அரசபயங்கரவாத்தை
அமல் படித்திய
அரசபடைகள்
சித்தரிக்கப்படுகிறார்கள்
கதாநாயகன்களாய்!

இதே நிலை
இன்னும் தொடர்கதைதான்
அசாமிலும், சட்டீஸ்கரிலும்!

இம்மண்ணின் மைந்தர்கள்
நிலை கண்டு
அக்காடுகளும் கண்ணீரை
செரிகிறது!

என் அன்பின் தோழர்களே!
இக்கொடுமைகளை தட்டிகேட்க்க
இயலாவிட்டாலும்...
நம் எதிர்கால சந்ததியை
நினைவில் கொண்டு...
ஒவ்வொருவரும் ஒரு மரமெனும்
வளர்க்க முனைந்திடுவோம்!
மழை வளம் காத்திடுவோம்!
நம் பூமியை பாதுகாத்திடுவோம்!!!
« Last Edit: May 12, 2012, 07:31:37 PM by Yousuf »

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
என்னை பற்றி சொல்லி
தெரிய வேண்டியதில்லை - நான்
சொல்லில் அடங்குபவனும் இல்லை
என்னால் தான் சமூக மாற்றமே
என்றால் என்னுள் கர்வம் .....!

இப்பொழுது
இவன் யார் என்ற கேள்வி எழுமே?
இவனே கேள்வியும், இவனே பதிலும்,
இவ்வுலகின் மாற்றம் இவனால் தானென்றால்
இவனுக்கு கர்வம் இருக்காதா என்ன ?
இவன் வேறுயாருமல்ல மரமெனும்
அடைமொழிக்கு சொந்தக்காரன்......!

விதையாய்  காற்றில் கலந்து
வயல் வரப்புகளில் விழுந்து
வாய்க்கால்  நீரை பருகி
வீண் விழலாகி போகாமல்
விருட்ஷமாகும் வித்தை கற்றவன்........!

மாற்றங்கள் எண்ணிலடங்காதது என்னால்
எப்படி என்கிறீர்களா....?
விருட்ஷமான நான்
மேகத்தை மெல்ல வருடி
மழையாய் பெய்யவும் செய்வேன்
மேகத்தின் தேகத்தை தீண்டாமல்
மழையை பொய்க்கவும்  செய்வேன்...
மழை பெய்வதும் மழை பொய்ப்பதும
மானிடனே  உன் கையில் தான்.......!

மனித குலதின் வளர்ச்சிக்கு
மழை ஒன்றே ஆதாரம்
மழைக்கு மரம் ஆதாரம்
மனித வளர்ச்சியின்
மழைக்காதாரமான  மரத்தை
மரமாகி(ஜடமாகி) போன
மனிதனே வெட்டும் அவலத்தை,
நினைத்து கண்ணீர் வடிப்பதுண்டு....!

சமூகத்திற்கு பலன்கள் தந்தும்
சமூகத்திற்கு வழிகாட்டியாய்  இருந்தும்
சமூகத்தில் உள்ளவர்களின்
வாகனங்களின் நச்சு புகையை,
தொழிற்சாலைகளின் மாசு படிந்த காற்றை
அதிகமாய் சுவாசித்து
என் தன்மையை இழந்து
எனக்கு தீங்கு நினைத்திடும்
உனக்கு தீங்கு வந்திடுமோ?
என கண்ணீர் வடிப்பதுண்டு.....!

விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்ற பெயரில்
ஆராய்ச்சி மேற்கொண்டு
சுதந்திரமாய் கிளைகளோடு
கூடிய இலையாய்,
பூவாய், காயாய்,
கனியாய் பலன் தந்தவனை
போன்சாய் மரங்களாய்
புட்டியளிலும்,  தொட்டியிலும் இட்ட
மனிதனை நினைத்து கண்ணீர் வடிப்பதுண்டு...!

மழை பெய்தால் நிலத்தடி நீர்
மட்டம் உயரும், பச்சை பசேலென
மரங்கள் செழித்து வளர்ந்து
மகத்துவம் ஏற்படும்,
மரங்களை தொட்டியிலிட்டால்
மழை எப்படி சாத்தியம் என்பதை
மறந்த, சிந்தனையில்லாத
மனிதனை நினைத்து கண்ணீர் வடிப்பதுண்டு...!

இத்தனையும் மறந்து போன மனிதா
கால சுவட்டின் பக்கங்களில்
பின்னோக்கி சென்று பார்
முற்கால மனிதன் மரத்தின்
மகத்துவம் அறிந்திருதான்
மரங்களை பாதுகாத்தான் அதனால்
மாதம் மும்மாரி பெய்ய செய்தவன்,
தற்காலத்தில் ஆண்டுக்கொரு முறை
பெய்ய வைக்கவே  யோசிக்கிறேன்..!
மனிதா இனியேனும் சிந்தித்திடு,
மரங்களை பாதுகாத்திடு,
இல்லையேல்
அழிய போவது நான்.........?
அல்லவே அல்ல ......நீ !!
« Last Edit: May 13, 2012, 01:49:18 PM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline supernatural

நம் சுவாசத்தை சுத்திகரித்து...
மாசில்லா சுவாசமாய்  மாற்றும் ...
பெரும் பணியை...
அரும்  பணியாய் செய்யும் ...
மேன்மை மரங்களை சேரும்....

பசுமையான மரங்கள்...
எழில் நிறைந்த சோலைகள்...
இயற்க்கை நமக்கு ..
கொடுத்த வரங்களில் சில ....

உயிரின் ஆதாரம் இயற்கை...
இயற்கையின் உயிர் மரங்கள்...
உயிர் ஆதாரமான...
உயர் ஆதாரமான..
மரங்கள் கலியுகத்தில்....
கண்ணீர் வடிக்கின்றதே....

பொருளாதார வளர்ச்சி...
நவீனமயமாக்குதல்...
என்னும் வித்தைகளால்.. ...
வாழ்வின் ஆதாரமாய்...
என்றும்  செழித்து ...
வேரூன்றி  வளரும்
மரங்களை அழித்தும்....
மரம் செழிக்கும் மண்ணை...
சீரழித்தும்...
இயற்கை அன்னையை ...
கொடுமையாய் ....கடுமையாய்...
தண்டிக்கிறோம்...

மரம் வளர்ப்போம்..மழை காப்போம்...
என்னும் போதனைகளை விட...
மரம் வளர்த்தால் தான்...
உயிர் வாழ்வோம் ....
என்னும் புது போதனைகள்...
செய்து  மரங்களையும்...
மனித இனத்தையும்...
காத்து வாழ்வோம்...

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
மரத்தில் இருந்து  கண்ணீர் கசிகின்றது
ஆம் ,மரம் கண்ணீர் வடிக்கின்றது .
மரத்தின் கண்ணீரை காண்போர் இல்லை
காரணம் கேட்கவும் எவரும் இல்லை 
சக மனிதனின் கண்ணீருக்கே துளி
மதிப்பும் இல்லாத உலகத்தில்
மரத்தின் கண்ணீர் கவனிக்கபடாததர்க்கு
வருந்துவார் எவர் ??

அதனால் தான் மனித மனம்
மரத்தின் கண்ணீரை மறந்துவிட்டதோ ?
மறுத்துவிட்டதோ ? மறத்து விட்டதோ ?

மரத்தின் கண்ணீர் எதற்க்காக ?
மரங்களின் மீது மதிப்பு அதிகம் எனக்கு
மரம் ஒரு நாளும் மனிதனை போல
சுயநலமாய் சிந்தித்ததில்லை ...

தன் பிள்ளைகள் கொல்லபடுவதை எண்ணி
கண்ணீர் வடிக்கவில்லை
மனிதனில் உயர் பிள்ளையாம்,பெண் பிள்ளைகள்
குலை குலையாய் கொல்லப்படுவதை
(பெண் சிசுகொலை )
எண்ணியே கண்ணீர் வடிக்கின்றதோ ?????

இல்லை , பெண்களின் சுதந்திரம் இன்னும்
ஏட்டளவிலேயே இருப்பதை எண்ணி
கண்ணீர் வடிக்கின்றதோ ?