Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 022  (Read 3384 times)

Offline Global Angel

நிழல் படம் எண் : 022



இந்த களத்தின்

இந்த  நிழல் படம் SaNa  வால் வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....

« Last Edit: October 11, 2018, 07:17:06 PM by MysteRy »
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 116
  • Total likes: 116
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
தேர்வு நேரம்
படிப்பில் மூழ்கி
சேர்த்து வைத்த
பாடங்களை அவசரமாக
முடிக்க எண்ணி
இரவும் பகலும்
ஒரே மூச்சாய்
படித்த சோர்வில் நான்
தூக்கத்தில் ஒரு சிறு கனவு

செல்லமே
என் கனவை நினைவாக்க
டாக்டர் ஆகி விடு
தந்தையின் ஆசை...

தைரியமாய் பேசும் நீ
வக்கீல் ஆகி
பெண்களுக்காக குரல் கொடு
என்னை போல அடுப்படியில்
அடைபட்டு இருந்துவிடாதே
அன்னையின் வேண்டுதல்..

இருவரின் ஆசையும்
நிறைவேற்ற ஆசை...
இதில் ஏதோ ஒன்று பலிக்க
ஒரு ஆசை நிராசையாகும்
என்ற சோகம் என்னுள்...

கண்விழித்து படிக்கும்
நேரத்தில் தானும் தூங்காது
என்னோடு விழித்திருக்கும்
பெற்றோர்...
மணிக்கு ஒரு தரம்
சோர்வு நீங்க தலை கோதி
சோர்வு நீக்கும் அன்னை...

வறுமைக்காக படிக்க
அனுப்பாமல்
புத்தகம் எந்த வேண்டிய
பல கைகள் குழந்தை தொழிலாளியாக
அவல பட
வறுமையை மறைத்து
தங்கள் கனவுகளை
என் கண்களில் தேடும்
தெய்வம் போல என் பெற்றோர்...

தூங்கிட்டியா செல்லம்
அம்மாவின் குரல் ஒலிக்க
கனவு கலைந்து
கண் விழித்து பார்த்தபோது
புன்னகையோடு
கையில் தேநீரோடு
காத்திருக்க
கவலை வேண்டாம்
உங்கள் கனவு பலிக்கும்
என் மௌனமொழியை
புரிந்த சந்தோஷத்தில்
அம்மாவின் முத்தம்
கூடுதாலாய் கிடைத்த
சந்தோசம் எனக்கு ;) ;) ;)
« Last Edit: May 03, 2012, 07:28:22 AM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Jawa

கல்விமுறை


பள்ளியென்னும் தொழிற்சாலையில்
பிள்ளைகளெல்லாம் உருவாகுதடா !
ரோட்டுல திரியும் கழுதபோல
பொதிமூட தூக்குதடா !
செக்குல பூட்டுன மாடுபோல
சுத்தி சுத்தி போகுதடா !
கடிவாளம் போட்ட குதிரபோல
சுய சிந்தனையில்லாம ஓடுதடா !
பழம் கொடுத்த கிளியபோல
சொன்னதயெல்லாம் சொல்லுதடா !

கால காலக் கல்விமுற - இது
வெள்ளையன் கொடுத்த கல்விமுற
ஆங்கிலப் பாடல் சொல்லிதரும்- இது
ஆங்கிலவழிக் கல்விமுற
குரு சீடன் மறஞ்சு போய் - இது
ஆசிரிய மாணவன் கல்விமுற
சொந்தபுத்திய குப்பைல போட்டு
மதிப்பெண் வாங்கும் கல்விமுற
பணங்காட்டு நரிகளிடம் - பிள்ளைகள்
பாடம் கற்கும் கல்விமுற
பிள்ளைகள் கனவை எரியூட்டி அதில்
குளிர்காயும் கல்விமுற
இந்தியாவின் தூண்களெல்லாம்
சர்க்கஸில் வரும் சிங்கமென
ஜோரா ஜோரா தாவுதுபார்
சுத்தி சுத்தி வருகுது பார்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
பால்வாடி பாடம் ,பாலபாடம்,பள்ளி பாடம் முட்டும்
மட்டுமே படித்து வந்த பட்டு தென்றல்கள்

பட்டய படிப்பிலும் , பட்ட படிப்பிலும், பற்பல படிப்பிலும்
பட்டையை கிளப்பி வரும் காலம் இது பாப்பா !.....

பெண்ணியம் பேசுகிறேன் பேர்வழி என்று போலியாய்
கேலிகூத்து கதைபேசுபவரை கோலி அடி தோழியே !

துறை பல கண்டும்,கால்பதித்தும்,வெற்றி கொண்டும்
அத்துறைகள் துரைகளின்  கோட்டை எனும் கொக்கரிப்பை
துகள் துகளாக்கி  தகர்த்தெறி கண்ணே !

அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு ??
என்றதும் ஒரு காலம் உண்டு
அவை அனைத்தும்  ஒரு காலம், கடந்த காலம்
காலபோக்கில் கடந்து வராமல், நொண்டி அடிக்கும்
சில நொண்டிகளின் நொந்தல் வரிகளை
நோகாமல் நலுங்காமல்  கந்தல் ஆக்கிவிடு கண்மணியே !

முந்தைய,காலத்தில் தான் முடக்கி  வைக்கப்பட்டு இருந்தீர் !
அக்காலத்தில்,பெண்கள் பெண்களாய் பணிவாய் பண்பாய்
பொறுமையில் பூமிக்கு ஒப்பீடாய் ஒப்பிடபட்டே
அமுக்கப்பட்டு நசுக்கப்பட்டு வந்தீர் ....

இன்றோ, உங்கள் வளர்ச்சியோடு  ஒப்பிடபட்டால்
அமெரிக்க டாலரின் இந்திய ரூபாய் மதிப்பும் ,
தங்க விலை விலையேற்றம் கூட வீழ்ச்சி அடையும்
அந்த அளவிற்கு அசுர வளர்ச்சி ....

படிக்கின்ற போது படிப்பும் ,
படைப்பை, படைக்கும் போது படைப்பும்
ஓய்வின் போது ஓய்வும் , விளையாட்டின் போது
விளையாட்டு ,என பகுதி பகுதியாய் பகுத்து,வகுத்து
வாழ்வதால், பகுத்தறிவில் நீ பாதி பெரியார் !

தன் தனிவாழ்விலும் சிறந்து, போது வாழ்விலும் கலந்து
தளர்வில்லா   மன உறுதியோடு  காய் நகர்த்தி
காரியம் சாதிப்பதால் நீ பாதி கலைஞர் !

எது  எப்படியோ ?
(சில) முதுகெலும்பில்லா ஆண்கள்  சமூகம்  இருக்கும் வரை
உங்கள்      வளர்ச்சியினை, மனிதன் மட்டும் அல்ல
இருப்பதாய் கருதப்படும் அந்த ஆண்டவன் வந்தாலும்
தடுக்க முடியாது !

வாழ்க பெண்ணீயம் ! வளர்க பெண்ணியம் !

Offline supernatural

என்னை மறந்து...
விண்ணை மறந்து...
உலகம் மறந்து...
அனைத்தும் மறந்து....
நிம்மதியாய் ஒரு உறக்கம் ...
உறக்கத்தில் மனம் விரும்பும்..
பல கனவுகள்  நாடினேன்....

கனவு என்னும் இனிமை தேசத்தின்...
புனித வாசலாம் உறக்கம்....
கவலைகள் இல்லா கனவு தேசம்...
மனதை வருடும் பனிதேசம் ....

ஆசைகள் அரங்கேறும் மணி மண்டபம்...
கனவுலகு...
வரையறை இல்லை ....எல்லைகள் இல்லை...
கட்டுப்பாடுகளும் இல்லை....
விரும்பும் அனைத்தும் சொந்தமாகும் ...
மாய உலகம்...

சில நொடிகள் நிலைத்தாலும்...
மனதில் பதியும்  நிழல்களான நிஜங்கள்...
மனதை பிரதிபலிக்கும்  பிம்பங்கள்...கனவுகள்...

கனவு எனும் நிழல்...
நிஜமானால் ???
மனம் படும் ஆனந்தம் ..அளவில்லை....
ஆசைபடும் மனதிற்கு ஆறுதலாய் ...
பல பொழுதும் ...
அழகிய கனவுகளே....
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Global Angel

பொழுது புலர்ந்ததில் இருந்து
ஒரு பொட்டு கூட ஓய்வு இல்லாது
பட படவென பல வேலைகள் பார்த்து
பாட புத்தகத்தை எடுத்தால்
படுத்து உறங்காமல்
பாடமா படிக்க தோன்றும் ...?

ஈழத்து சிறுமிகளின்
சிறப்பான வாழ்வு இப்டித்தான்...
தாயை இழந்து
தந்தையின் அரவணைப்பில்
தளர் நடை போட்டு
தரணியை வலம் வரும் வயதிலேயே
தாய்க்கு நிகரான பொறுப்புகள்
தலையில்   இறக்கபட்டுகின்றது ....

அன்றில் தந்தையை இழந்து
தாயின் அரவணைப்பிலும்
தாய்க்கே தாயாய் மாறும்
தருணங்களும் உருவகபடும் ...

தாய்க்கே தாயாகி
தந்தைக்கே தாயாகி மகளாகி
தன் சிறு வயதிலும்
தாளாத சுமையை தாங்கும்
ஈழ சிறுமியின் கல்வி
எட்டாத கொப்புத்தான்...

அவளுள்ளும் ஆசைகள்
அடுத்தவரை போல்
தானும் கனவுகளை சுமக்க ..
ஆறாத காயங்கள்
அழியாத சோகங்கள்
அவற்றை எல்லாம்
அளித்துவிட்டு அரங்கேற ...

ஆசைகள் மட்டும் இருந்தென்ன லாபம்
அமரரான அன்னையும் தந்தையும்
அருகிருந்தால்
அவளாலும் அகிலத்தை ஆளமுடியும் ...
இருந்தும் விடா முயற்சில்
விழுதுகளை பற்றி  எந்திரிக்கும்
ஈழத்து சிறுமிகளின்
எதிர்கால ஆசைகளுக்கு
இறைவனிடம் ஒரு வேண்டுதல் ...

புத்தகத்தில் தலைவைத்து தூங்கினால்
அறிவு வாளருமாமே...
அந்த வரத்தை
ஈழத்து சிறுமிகளுக்கு
இயைந்தளித்துவிடு ....
                    

Offline !~Bharathy~!

"வீட்டுக்குளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் ",

" மாதர் தம் மடமையை கொளுத்திடுவோம் "

என்ற பாரதி வாக்கு பலித்து விட்டாலும் -இன்றும்

எண்ணில் அடங்கா பெண்ணடிமைத்தனம்

ஆங்காங்கே அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது.



ஏழை ,நடுத்தர வர்க்கத்தின் சொத்து -கல்வி

ஏழ்மையில் படித்து ,பட்டம் பெற்று உயர்பதவிக்கு வந்து -குடும்பத்துக்கு

ஏணியாக தனை அர்ப்பணித்து உழைக்கும் ஒரு பெண்ணுக்கு

நம் தமிழ் சமூகம் கொடுத்த சாபக்கேடுகள் பல ......

அவள் சம்பாதிக்கும் பணத்தை தன் ஆசைக்கு செலவு செய்ய முற்பட்ட போதெலாம் -அதை

அவள் அன்னை தடுத்து (சீ)தனம் சேமி என்று வைப்பிலிட

அவளும் திருமண சந்தையில் தன் மணமகனை வாங்க தயார் ஆகிறாள் .



பி.எ , பி.பி.எ , பிஎஸ்சி முப்பது இலட்சத்தில் ஆரம்பித்து

ஐம்பது இலட்சம் வரை விலை போகிறது -

தரம் கெட்ட அந்த திருமண சந்தையில் போட்டி போட்டு தோற்று விடுகிறாள்

அப்போதுதான் அவள் மனம் குமுறி பல கேள்வள் கேட்கிறது ..

அவள் கற்ற கல்வி ,பெற்ற பட்டம் தான் இன்று

அவள் திருமணத்துக்கு தடையாகியது

படிப்பறிவில்லாத ,வெறும் உப்பு,புளி  சமையலில் மட்டும்  கைதேர்ந்து ,

பகுத்தறிவுடன்  மட்டும் இருந்து இருந்தால் இன்று இவள்

முதிர் கன்னி ஆக்கப்பட்டு இருக்கமாட்டாள்.
 


பெண்ணிடம் பணம் பெற்று வாழ்கை துணை கொடுக்கும்

முதுகெலும்பு  இல்லாத ஒரு  ஆணுடன் வாழ்வது

பாரதி கண்ட புதுமை பெண்ணுக்கு பேர் இழுக்கு ..

இந்நிலை என்றோ ஒருநாள் மாறும் என்ற மூட நம்பிக்கையில்

இன் நாள் வரை நானும் காத்திருக்கேன் ஒரு யதார்த்தவாதியாக ....



கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற வாக்கில்

கடும் பொய்மை இருக்குமோ என்ற ஐயம் இருந்தாலும்

ஈரிரண்டு வயதில் தொடங்கிய கல்வி தவம்

எண்ணிரண்டு வருடங்கள் தாண்டி

நாடு கடந்தும் யாத்திரை செய்கிறது ..


விதி விட்ட வழி என்ற சித்தாந்த போக்கில் -என்

மதியை மட்டுமே  நம்பி

பல புண்களை கண்களாக கொண்ட இந்த சமூகத்தில்-நானும் 

விடை தெரியாத பல  வினாக்களுடன்
...........












 








 
« Last Edit: May 03, 2012, 05:54:50 PM by !~Bharathy~! »


The Purpose of Life is a Llife of Purpose!!

Offline Rainbow


அடடா ....
ஆடி ஓடி விளையாடும் வயதில்
எல்லோர் ஆசைக்கும் ஆட்டி வைத்தால்
அன்பான சிறுமிக்கு அடங்காத தூக்கம்
அரை நொடி கிடைத்தாலும் வந்துவிடும் ..

ஆறு எழு வயதினிலே
அரிவரிதான் படிக்கையிலே
அனைத்தையும் அறிந்திருக்கவேண்டும் என்று
பெற்றவர்கள் .....

காலை எழுந்தவுடன் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு
என்று வழக்கி படுத்தி கொள்ளு பாப்பா ...

என்று பாரதியார் பாடிய காலம் போய்
காலை எழுந்தவுடன் படிப்பு
பின்பு கட்டி போடும் டிவி பார்ப்பு
மாலை முழுதும் கம்ப்யூட்டர் விளையாட்டு
என்று வழக்க படுத்தி கொள்ளு பாப்பா ...
என்று  ஆகிவிட்ட காலமாச்சு ....

அன்னையின் விருபதிற்கு பரதம்
அப்பாவின் விருப்பத்திற்கு கம்ப்யூட்டர்
பாட்டியின் விருப்பத்துக்கு பாட்டு
தாத்தாவின்  விருபத்துகு கராத்தே

புலர்ந்து விட்ட பொழுதெல்லாம்
பிறருக்காய் பிறர் விருப்பத்துகாய்
ஆடி பாடி ஓய்ந்து விட்டால் 
அவளுகென்று பாட புத்தகத்தை தூக்கினால்
அப்படியே தூக்கம் ஆளை சாய்த்துவிடாதா என்ன ...?

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
அன்பு தங்கையே.....! என் வீட்டு
அல்லி  ராணியே...!
ஆழ்நிலை உறக்கம் ஏனோ?
அதிகம் படித்துவிட்டோம் என்று
அலுத்து போனாயா ?
அகிலத்தில் நீ படிக்க வேண்டியது
அதிகம் இருக்க
அதற்குள் கலைத்து போனாதேன்?
ஆரம்ப பாடமே முடித்தபாடில்லை
அப்படி இருக்க  உறக்கம் ஏன்?
அகிலத்தை எப்படி  வென்றிடலாமென
ஆழ்ந்த சிந்தனையா சகோதரியே.....!
 
அதிகம் படித்தாலும்
அசட்டை செய்யும் உலகை
அலட்டிகொள்ளாமல்
அகிலம் போற்றும் அளவிற்கு
அசுர வளர்ச்சி பெற 
அகர படிப்பு மட்டும் போதாது
அனுபவ படிப்பும் தேவை,
அரசை வழிநடத்தும்
அரசியல் அறிவும்,
ஆராய்ச்சி மேற்கொள்ளும்
அறிவியல் அறிவும்,
அனைத்தும் திறம்பட செயலாக்கும்
அதிகார தோரணையும் தேவை  சகோதரியே .....!

அணங்காய் பிறந்தவளை
அலைபேசி முதல்
அலைவழியாய் வரும்
அத்தனை விளம்பரங்களிலும்
அவளை போக பொருளாய் 
அசிங்கமாய் சித்தரிப்பதும்,
அடுக்கடுக்காய் வரும் தொடர்
அத்தனையிலும் பெண்
அழுவதற்குதான் என்கிற
அளவிற்கு அசிங்கங்களை
அரங்கேற்றும் சமூகத்தில்
அறிமுகமானவளே
அக்கரைகளை களைய
அக்கறை கொண்டு
அவலத்தை போக்க விழித்தெழு சகோதரியே...!
 
அன்பே உருவான
அன்னைதெரசா
அஹிம்சையை  கடைபிடித்த
அண்ணல் காந்தி
அறிவின் ஜீவி
 அறிஞர் அண்ணா,
அரசியலமைப்பு தந்த
அம்பேத்கர்,
அரசியலில் அதிகாரம் படைத்த
அன்னை இந்திரா,
அகிலமே வியந்து பார்க்கும்
அப்துல்கலாம், இப்படி
அறிஞர்கள் பலரும் போதித்த
அறிவுரைகளை கடைபிடித்து
அகிலம் போற்ற வாழ
அயர்ந்திடாமல் துயில் களைந்திடு  சகோதரியே..!

அபூர்வமான இப்பிறவியை,
அற்புதமான இப்பிறவியை,
அற்ப பிறவியாக்காமல்
அர்த்தமுள்ள பிறவியாய்  ஆக்கிட
அவகாசம் இல்லாமல் சாவகாசமாய்,
அவசரம் கொள்ளாமல் நிதானமாய்,
அனுகுவாய் எனில்
அவஸ்தை இல்லாத
அட்டகாசமான எதிர்காலமுண்டு சகோதரியே...! 

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Yousuf

சீன தேசம் சென்றேனும் கல்வியை கற்றுக்கொள்!
இது இறைதூதர் முஹம்மது சொன்னது...!

இன்றோ கல்வியின் நிலை என்ன?
நம் நாட்டிலே...

கல்வி வியாபரமாய் வளம் கொழிக்கும் தொழிலாய்
மாற்றப்பட்டுள்ளது!
முதலாளித்துவ முதலைகளால்!

ஒழுக்கத்தையும், நல்ல பழக்க வழக்கங்களையும்
போதிக்க வேண்டிய பாட சாலைகள்
இன்று பணத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டுள்ளது!

பணக்கார குழந்தைகளுக்கு ஒரு கல்வி
ஏழை குழந்தைகளுக்கு ஒரு கல்வி
இப்படி கல்வியிலே எத்துணை வேறுபாடு??

குழந்தைகளின் தகுதிக்கு மீறி
சுமையை திணிக்கும் பாடசாலைகள்...

விளைவு...
மன அழுத்தம், தூக்கமின்மை, சோர்வு
போன்ற என்னன்ற உடல் உபாதைகள்!

இத்தனையும் தாங்கி கொண்டு
சோர்வுடன் புத்தகத்தொடு படுத்திருக்கும்
இச்சிருமியினால் தன் வேதனையை
வெளியிலே சொல்ல இயலாமல்
இருக்கிறாள்!

இவள் மட்டுமல்ல எத்தனையோ
சிறுவர்கள் இவளை போல
வேதனையோடு வாழ்கிறார்கள்!

கல்வி வாழ்க்கைக்கு அவசியம் தான்!
அக்கல்வியிலே பணம் மட்டும்
குறிக்கோளாய் இல்லாமல்
நல்லொழுக்கமுள்ள கல்வியினை வழங்கிட வேண்டும்!

காலை எழுந்த உடன் படிப்பு
மாலை முழுவதும் விளையாட்டு...
என்றான் பாரதி!

இன்றோ விளையாட்டென்றால் என்னவென்று
தெரியாது சில சிறுவர்களுக்கு!

இந்த நிலை மாற வேண்டும்
நண்பர்களே!

பணத்தை குறிக்கோளாய் கொண்ட கல்வியினை
மாற்ற முயன்றிடுவோம்!

பணம் பிடுங்கும் பாட சாலைகளை அகற்றிட ஒரு புரட்சி
செய்வோம்!

கல்வி வியாபாரமாய் அல்லாமல்
சேவையை தொடர்ந்திட ஒரு
புதிய புரட்சி  அவசியம்!