Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 021  (Read 3045 times)

Offline Global Angel

நிழல் படம் எண் : 021





இந்த களத்தின்

இந்த  நிழல் படம் Remo  வால் வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....

« Last Edit: October 11, 2018, 07:16:31 PM by MysteRy »
                    

Offline Jawa

இனிய குடும்பம்


இ - இருப்பதைக் கொண்டு
னி - நிறைவோடு வாழும்
ய - யதார்த்தமான குடும்பம்
இனிய குடும்பம்...

அன்பான கணவன்
அடக்கமான மனைவி
ஆஸ்திக்கொரு ஆண் மகனும்
ஆசைக்கொரு பெண் மகளுமாய்
அளவான குடும்பமும்
இனிய குடும்பமே...

வரவுக்கு மிஞ்சாத செலவாய்
செலவையும் மீறிய
சேமிப்பைக் கொள்ளும் குடும்பமும்
இனிய குடும்பமே...

அனைவரின் கருத்தையும்
அகத்தில் கொள்ளும் தலைவனும்,
அன்பே உருவான
புன்னகையை செம்மஞ்சலாய்
முகத்தில் பூசிய தலைவியும்,
அடங்கிய குடும்பமும்
இனிய குடும்பமே...

இருப்பதைக் கொண்டு
நிறைவோடு வாழும்
எல்லா குடும்பத்தின்
இலக்கணமும் இதுவே...

Offline Bommi

இத்தனை சிறிய இதயக் கூட்டுக்குள்
எத்தனை சுமைகள் !எத்தனை ஏக்கங்கள்!
இந்த உலகில் நிம்மதி எங்கு உள்ளது
பாசம் ,நேசம்  உள்ளதா?
பரிவும் ,பிரிவும் உள்ளதா ?
இன்பம்,துன்பம் இரண்டையும்
ஒன்றாய் கருதும் என் வீட்டு
சுமைகளை எண்ணி பார்த்து வியக்கிறேன் ...

எங்கிருந்தோ இங்கு வந்து சுகமான
சுமைகளை தாங்கி,அன்பை தோலில்
சுமந்து ஆசைகளை நெஞ்சில் அடக்கி
அந்த சிங்கார தேரோட்டும் -என்
மன்னவன் -அந்த தேரில் பவனி வரும்
என் புதல்வன்-ஆகா இந்த சிங்கார
கூட்டுக்குள் தான் எத்தனை  எத்தனை
இன்பங்கள்

தவழ்ந்து ,விழுந்து எழுந்து தடுமாறி
நடந்த போது தாங்கி பிடித்த
என்னை ஈன்ற தாயே !
சூப்பிய விரலை எடுக்க சொல்லி
சுரிரென்று அடித்த விட்டு
அரவணைத்த  தந்தையே !
எந்தன்  ஏல் பிறப்பிலும் தொடரும் பந்தம்
எட்டு திக்கிலும்  தேடினாலும்
கிடைத்திடாத செல்வம்

கருவறையில் காத்து கௌரவமாய்
என்னை ஈன்றவளே -என் அன்னை
உன் தியாகத்தை ,உன் அன்பை
கண்ணென காத்து கடமையென வளர்த்து
கண்ணியமாய் என்னை காத்த-என் தந்தை
உங்கள் இருவரின் அன்பை ,அரவணைப்பை
பார்த்து கடவுள் காட்சி என் கண்கள் கூச நின்றது
கூசிய  கண்களை துடைத்து விட்டு விழித்த போது
அங்கே என் பெற்றோர்கள் !!!!

« Last Edit: April 23, 2012, 02:15:07 PM by Bommi »

Offline Global Angel

உன்னுடன் நான்
என்னுடன் நீ
எமக்குள் ஓர் உயிர்
காதலால் என் மனவறையில்
உன்னை சுமந்தேன்
நம் காதல் பரிசாய்
எனக்குள் என் கருவறையில்
உன் உயிரை சுமப்பேன்


உனக்குள் நான்
நமக்குள் நம் அன்பு பரிசாய்
என் இதயமும்
நம் இன்பமும் சேர்த்து
உருவாகிய காதல் பரிசாய் நம் குழந்தை


காலங்கள் கடந்தும்
நமக்குள் ஒரு அன்பின் பிணைப்பு
அகத்துள் ஒரு மலர்ச்சி
பூவாகி காயாகி கனிந்து
பழமாகி மீண்டும் விதையாகி
விருட்சமாகி நம் குலம் அன்பு பிணைப்பால்
அனுதினம்  வளரும் அந்த காட்சியை
தினமும் அக கண்ணில் காண்கிறேன் கண்ணாளா ..


உன்னோடு ஒரே பந்தலில்
ஒரே மேடையில்
ஒருவர் கை பிடித்து
உலாவந்து  உலகை வென்று
காதலால் ஒரு பரிசளிக்கும்
அந்த கணப்பொழுதை தந்துவிடு ..
                    

Offline Rainbow




இங்கு ஒரு புது யுகம்
எனக்குள் நீ புகுந்து
என் காதல் மகவை
மண்ணுக்கு கொடுத்து
மகத்தான வாழ்வுதனை கொடுத்த
என் மணவி உனக்கு
மணாளன் ஆனதை தவிர
மகத்தான பாக்கியம் உண்டோ இந்த பாரினில்


புனிதமானவளே  என் பூர்வமும் ஆனவளே
புண்ணுக்கு மருந்தாகவும்
புன்னகைக்கும் தேவதயகவும் வந்து
புது வாழ்வு தந்து
என் ஆண்மைக்கு ஆதரமானவளே
உன்னையும் உன்னோடு
என் மகவையும் கொடுத்த
ஆண்டவனுக்கு நன்றிகள்
அடுத்த பிறவியிலும்
நீங்களே என் உறவுகளாக வேண்டும் .

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 116
  • Total likes: 116
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
காதல் மொழி பேசி
நம் இதயங்கள் இணைந்து
மணமுடித்து
காதல் கவிதை
ஆசையாய்  எழுதிட

கவிதையின் முடிவாய்
சிறு கவிதையை
கருவில் சுமந்து
காதலுக்கு சான்றாய்
மடியில்  நம்  மழலை கவிதை...

அச்சில் ஏற்றிய
அழகிய பதிப்பாய்
அன்பானவன் முகம்
பிஞ்சு முகம் பார்க்கும் தருணத்தில்
தோன்றி மறைய
மட்டற்ற மகிழ்ச்சி என்னுள்...

பத்து திங்களும்
பரவசத்தோடு
பார்த்திருந்தேன்
என் உயிரின்  மறுபாதியாய்
மழலையின் முகம் காண...

அள்ளி கொடுத்த உன்  அன்புக்கு
ஆசையாய்  தர என்னிடம்
ஏதும் இல்லையே என
கவலையாய்
இருந்த தருணத்தில்
உன்னில் பாதியை
உனக்கு தந்த
அளவில்லா சந்தோசம் என்னுள்...

கவலை இல்லாத
உலகத்தில் நம் குழந்தை
வளம் வர செய்ய
அன்பையும் அறிவையும் நீ தந்து
அரவணைப்பை நான் தந்து
அழகாய் சிரித்திடும் மழலையின்
முகம் காணுகையில்
ஈடில்லா சந்தோஷத்தில்
உன் முகம் மலர
இருவரின் சிரிப்பில்
என் கண்களின் ஓரம்
சிறிதாய் சந்தோஷத்தின் தூறல்...

வாழ்க்கை கவிதைக்கு
அர்த்தம் தர வந்த
சிறு கவிதையை
நம்முள் சுமந்து
இணைந்து துடிப்போம்
முற்றாத கவிதையாய்
நம் காதல் கவிதை தொடர....


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்