Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 019  (Read 2887 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நிழல் படம் எண் : 019



இந்த களத்தின்

இந்த  நிழல் படம் ஜாவா வால் வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....



« Last Edit: October 11, 2018, 07:05:44 PM by MysteRy »
                    

Offline Bommi

இந்த பூமியில் எத்தனை கடவுள் இருந்தாலும்
இங்கே மனிதன் வாடுகிறான்
எத்தனை தத்துவம் இந்த பூமியில் பிறந்தாலும்
எந்த மனிதனும் அதன் நோக்கில் செல்வது இல்லை
அடடா மனிதா ........

அறியாமை என்ற கூட்டில் பிறக்கிறான்
ஆசை என்ற வீட்டில் வளர்கிறான்
இளமை என்ற பாட்டில் ஆடுகிறான்
முதுமை  என்ற காட்டில் இறக்கிறான்

எதை கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு
எதை நீ படைத்தாய் அது வினாவதற்கு
சிதை படும் மேனிக்கு செருக்கு எதற்கு
அடடா மனிதா ........

உடலுக்குள் ஒரு ஆத்மா உள்ளது என்கிறது வேதம்
உயிரின் துடிப்பு தான் அந்த ஆத்மா என்கிறது மனித நேயம்
கருவில் உருவாகி கல்லறைக்கு போகும் முன்
அந்த இதயத்தில் ,அந்த ஆதமாவில் எத்தனை போராட்டம்
ரணமாகி போன அந்த உடம்புக்கு
பணம், பதவி, சிம்மாசனம் ஹ ஹ ஹ

 எலும்பாகி போன இந்த மனிதனின்
முகத்தில் தான் எத்தனை வருத்தம்?
"ஆம்" உடலை துறந்து விட்ட வருத்தமா?
இந்த எலும்பு  கூட்டிற்கு உணவு தேவை இல்லை,
உடைகள் தேவை இல்லை,இருப்பிடம் தேவை இல்லை
"ஏன்" உறவே தேவை இல்லை என்பதலா.............

அடடா மனிதா!!! மனிதன் என்பவன் ஆனந்தமாக
சிரிக்க வேண்டும் மனிதன் போல் அழகாக
சிரித்து அடுத்தவனை அழ வைக்கும் அந்த
கபட சிரிப்பை விட்டுவிட்டு ஆனந்த
சிரிப்பு சிரிக்க வேண்டும்!!!


By Sana
« Last Edit: April 04, 2012, 02:00:12 AM by Bommi »

Offline Jawa

  • Sr. Member
  • *
  • Posts: 408
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • $$LoVE IS GoD$$
    • FtC
நந்தவனத்தில் நான் நடந்து போகிறேன்
ஆஹா ...  :) :) :)
மலையில் பிறந்து , மரங்களில் நுழைந்து
பூக்களில் புகுந்து
தேகத்தை தீண்டியது தென்றல் காற்று

பச்சை புல்வெளியில் படுத்து ரசிக்கிறேன்
வண்ண வண்ண பூக்களில் வண்ணத்துப் பூச்சிகள்
வந்து புகுந்து மொண்டு கொண்டு வந்தது தேன்
பச்சை புல்வெளியில் படுத்து நான் ரசித்தேன்  ;) ;) ;)

காடுகளை கடந்து போகிறேன்
மூலிகை வாசனை மூக்கை துளைத்தது
தொடர்ந்து நடக்கிறேன் ; தோட்டத்தில் பழங்கள்
இயற்கை விவசாயம் தந்த இனிய பழங்கள்
யோசித்து பார்கிறேன்
இயற்கை தான் தரும் இனிய வாழ்க்கை

எழுந்திரு கண்ணே - மணி ஏழாகி விட்டது
அம்மாவின் கூச்சலில் அதிர்ந்தெழுந்தேன்

எங்கே நான் -
சுவாசித்த காற்று...?
நேசித்த பூக்கள்...??
யோசித்த இயற்கை...  :o :o :o

ம்ம்ம் .....
ஏசிக் காற்றில் என் ஆரோக்கியம் பறந்தது
தூசி படிந்த பூக்களை தேனீ தூக்கி எறிந்தது
மாசு படிந்த இயற்கையில் வாழ்க்கை மடிந்தது
எங்கே போனது இந்த இயற்கை???
எல்லாம்  கனவாய் போனது.... :'( :'( :'( :'(

ம்ம்ம்....
குளோனிங் என்ற பெயரிலே குள்ள குழந்தை மரம்
இயற்கைக்கே அறிவியல் கற்று தருகிறது பாடம்
என்ன அதிசயமோ....
இது எங்கு முடியுமோ... :( :( :(

ஐந்து வயதில் காய்க்கு வர வேண்டிய தென்னை இரண்டு வயதில்
காயிக்கிறது இது தான் அறிவியல் தரும் வளர்ச்சியா??
இந்த அறிவியல் இயற்கையை எங்கு கொண்டு செல்லுமோ???

இந்த அறிவியல் வளர்ச்சியால் நான் சுருங்கி போனேன் என்று
தன்னுள் கேள்வி கேட்டு கொள்கிறது தென்னை.....
அறிவியல் வளர்கிறது....
இயற்கை வற்றுகிறது..... :'( :'(

ஆற்றில் ஓடும் நீரை புண்ணிய  தீர்த்தம் என சொல்கிறோம்
அப்போது நமக்கு தொழில்சாலையின் கழிவு நீரும்
புண்ணிய தீர்த்தம் தானோ???

வண்ணத்துபூச்சிகள் எங்கு தான் சென்று சென்று தேன் எடுக்கும்???
தூசி படிந்த மலர்களிலா ???
வண்ண மலர்களுக்கே அறிவியல் செய்கிறது கலப்பியல்....
இதில் மகரந்த சேர்க்கையும் செயற்கை ஆனது.... 

அறிவியல் வளர்ச்சியால் மரங்கள் அனைத்தும் மாசுற்று போகிறது
இயற்கை அன்னைக்கு கொள்ளி வைக்கிறோம்
தொழில்சாலைகள் எனும் தீப்பந்தததிலே.... :'( :'(

அந்த தீப்பந்தம் நமக்கு ஒளி தருவதாக இருந்தாலும் நமது
இயற்கை அன்னையை எரியூட்டுகிறது ....

அடுக்கு மாடி வீட்டை கட்டுகிறோம் காட்டை அளிக்கிறோம்...
காட்டை அளிப்பது தனது தாய் நாட்டை அளிபதற்கு நிகர் தானே???

இதன் விளைவு தான் என்னவோ
யார் அறிவாரோ.... ??? ???

இயற்கையை பாதுகாப்போம் .....
உலகை இயற்கை வசப்படுத்துவோம்...... 8) 8)
« Last Edit: April 04, 2012, 07:22:34 AM by Jawa »

Offline supernatural

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1444
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • உலகில் அரிதானது அன்பே...
மரம் நிறைந்த காடுகள் ....
பூக்கள் நிறைந்த சோலைகள் ...
எங்கும் பசுமை ...
எதிலும் எளிமை...
அழகாய் இருந்த...
வசந்தகாலம் அது....

இயற்கை  என்றாலே..
மனதில் ஒரு புதுமை..
இயற்கையை ரசிப்பதில் தான்.
எத்தனை இனிமை..
கவலைகளையும்  மறக்க செய்யும்..
இயற்கையின் வலிமை.

ரசிக்க ரசிக்க ....
எழில்மிகு இயற்கை அழகை....
விழிகளால் ருசிக்க ருசிக்க ...
கவிதையின் கருவான...
கற்பனை ஊற்று...
வற்றாது வழிகிறதே..

மனிதர்கள் பல மடங்கு...
வளர்ச்சி பெற்றதாலே...
வாழ்வின் ஆதாரமான ..
சிறப்பான இயற்கையின்...
சிறப்பை...
மறந்துபோகுமோ?

<a href="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw</a>
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Yousuf

முத்து வளம்
மீன் வளம்...
உப்பு வளம்
என்று வளங்கள்...
பல கொண்டதுதான்
முத்தான நகரம்
தூத்துக்குடி!

இயற்க்கை வளத்தால்
செழிப்புற்ற நகரத்தை
சீர்குலைக்க வந்தது தான்
ஸ்டெர்லைட் என்ற...
நாசகார நச்சு ஆலை!

மராட்டிய மக்களின் எதிர்ப்பால்
ஆலையை மூடிவிட்டு...
குஜராத்தில் நுழைய கூட இயலாமல்
கோவாவில் கால் பதிக்க முடியாமல்
கடைசியாய் தடம் பதித்த இடம் தான்
யார் செத்தால் எனகென்ன...
என்று சுயநலமாய் உணர்சியட்ற
தமிழன் வாழும் தமிழ்நாட்டில்!

இந்த நாசகர நச்சு ஆலைக்கு
அனுமதி தந்ததோ கேடுகெட்ட
மானங்கெட்ட வெட்கங்கெட்ட
தமிழகத்தின் ஆட்சியாளர்கள்!

ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலைக்கு
அனுமதி மறுக்கப்பட்ட மாகாணங்கள்
இருந்த போதும் எங்களுக்கு சுயநலம் தான்
பிரதானம் என்று அனுமதி அளித்த
ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும்
கொஞ்சம் கூட தமிழனின் மீது
இறக்கம் இல்லை என்பதை...
என்று தான் நீ உணர்வையோ
உணர்ச்சியற்ற தமிழனே!

நீ தினமும் உண்ணும் உணவிலே
உப்பு போட்டு உன்னுகிறாய்...
அந்த உப்பை உற்பத்தி செய்வது
தூத்துக்குடி அன்றோ!

விதிமுறைகள் மீறலில்
கட்ட பட்ட ஆலையால்
உப்பில் கூட நச்சுத்தன்மை...
கலக்கும் என்பதை
மறந்ததேன்?

வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதால்
ஆலையை அடித்தேரிந்த
மராட்டிய மக்களிடம்...
நீ படிப்பினை பெறுவாயா?
உன் சந்ததிகளின்
எதிர்காலம் பாதிக்கப்படும்
என்பதை உணர்வாயா?
உன்றசியற்ற தமிழனே!

ஒட்டுமொத்த தமிழரும்
ஒரே குரல் எப்பினால்...
நிலநடுக்கம் வந்தது போல்
நொறுங்கி விழும்
நாசகார நச்சு ஆலை!

நீ உண்ணுகின்ற உணவிலே
உப்பு போட்டு சாப்பிட்டால்
உணர்ச்சி வரும் தமிழனே!
ஆளும் வர்க்கத்திற்கு
எதிராய் குரல் கொடுப்பாய்
தமிழனே!





« Last Edit: April 06, 2012, 11:05:59 PM by Yousuf »

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
தாயின் கருவில் விதையாகி
பூமியில் உருவாகி
மழலை பருவத்தில்
புன்னகை மட்டுமே
முகத்தில் கொண்டு
அறியாத உலகை
புரியதா மொழியில் பேசிட
உலகை கற்று தந்த
அன்னையே உலகமென
முதல் பருவத்தை நோக்கி  செல்ல
பேதை பருவத்தில்
படிப்பும் , சில நடிப்பும்
குறும்பும்,
அன்னையின் கொஞ்சலும்
அழகாய் கிடைத்திட
பெதும்பை பருவத்தில்
சிறு பெண் என்று
அடக்கம் பயில அன்னை சொல்ல
கோவமாய்
சிறிது கலக்கமாய்
பருவத்தை பயில
மங்கை பருவத்தில்
மாற்றம் நிகழ
முதல் முறையாய்
வெக்கம் எனும் நிலை உணர
அன்னையின் கண்டிப்பும்
கவலையும் கூட
அபோதும் கவலை இல்லாமல்
அடுத்த பருவத்தை நோக்கி
நாட்கள் நகர
மடந்தை பருவத்தில்
உலகை உணர்ந்தும் உணராதவளாய்
மிரட்சியில் கண்கள் மிளிர
படிப்பும், இளமை பருவ துடிப்பும்
இளைஞர் கூட்டத்து
கிண்டலும் கேலிக்கும் நடுவில்
ரசித்தும் ரசிக்காமலும்
நாட்கள் நகர
அரிவை பருவத்தில்
ஆனந்தமாய்
கல்லூரியில் கால் தடம் பதித்து
புதிய உணர்வாய்
புதிய உலகை ரசித்து
உலகை அறிய
முற்பட்டவலாய்
அடுத்த பருவமான
தெரிவை நோக்கி சென்று
இளமைக்கே உண்டான
துடிப்பும் செயலும்
முயற்சியும், சிந்தனையும்
முற்றிலும் அறிந்து
திருமண நாளுக்காக
காத்திருக்கும்
பேரிளம்பெண் என்ற பருவத்தை அடைந்து
உற்றவனுக்கு ஏற்ற உற்றவளாய்
தன்னை மாற்றி
மணமுடித்து தாய்மை அடைந்து
முழுமையாய் பெண்ணாகி
குடும்பத்தை சுமக்கும்
அன்னையின்  அருமை
தானும் அன்னையாகி உணர்ந்து
வளர்ந்து நிற்கும் மரமாய்
குடும்பத்து சுமைகளை
வேர்களில் மறைத்து
பூக்களாய் மகிழ்சியை மட்டும்
தருபவள் பெண்...
பூக்களாய் சூட வேண்டாம்
சருகாய் கருகாமல்
காப்போம் பெண்களை....


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உன் புன்னகையால்
உன் தீண்டல்களால்
உன் சீண்டல்களால்
உன் நினைவுகளால்
என்னுள்ளே விதையாக விழுந்து
என் விருட்சமாக வளர்ந்து
என்னுள்ளே ஆட்சி செய்கிறாய் ...


பசுமையான உன் நினைவுகள்
எனக்குள்ளே என்னை தொலைத்த நினைவுகள்
உறங்காத இரவுகளில்  நட்சத்திரங்களாய்
உன் நினைவுத் துளிகள்
நிழல் கொண்டு எனை தீண்ட
சுகமான சுந்தர நினைவுகளோடு
உனக்கான என் காத்திருப்பு
தொடர்கின்றது .....


தொலைவினிலே நீ இருந்தாலும்
தொடரும் உன் நினைவுகள்
எனக்குள்ளே நட்சத்திரங்களாய்
மினு மின்னுகின்றன ....

உன் நினைவு சங்கிலிகள்
பாதமாகி பலவாகி
பன் மடங்கு என்னை
பதவிசாக வியாபித்து ...
மூளை ஆகி முண்ணான் ஆகி
மூளியமாகி ,மூலமே நீயாகி
முழுவதுமாய் கட்டி போட்டு
என்னுள் பெரும் விருட்சமாகி
வியாபித்து  பூத்து குலுங்கி
புன்னகை மணம் பரப்புகின்றது


என்னுள் பூத்திருக்கும்
உன் நினைவு பூக்களின் மணம்
உன்னை சேர்ந்தும்
உனக்குள் இருக்கும்
மௌன சிறையை உடைத்து
என்று வருவாய் என்னுள் பூ பறிக்க ...
அன்றில் வராதுதான் போவாயோ..?


அன்பாய் பேசி அகம் எனும் கூட்டில்
விருட்சமாய் படர்ந்து வேரூன்றிய நீயே
வேர்களில் வெந்நீரும் ஊற்றுவாயோ
என் விழுதுகளில்
விழி நீரும் தோற்றுவிப்பாயோ..?

« Last Edit: April 09, 2012, 08:26:16 PM by Global Angel »
                    

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
வளர்ச்சியா - வீழ்ச்சியா
விஞ்ஞான வளர்ச்சி!
விவசாயத்தின் வீழ்ச்சி........
அது அயல்நாட்டின் சூழ்ச்சி.......?

பொக்ரானில் அணுசோதனை வெற்றி என்றதும்
பொறுத்துகொள்ளாத அயல்நாட்டினர்
பொருப்பாய் விதித்தனர்
பொருளாதார தடை......

எவருக்கும் இது தெரியகூடாதென
எளியவர் தன்னிறைவு பெரும்வரை
ஏற்றுமதிக்கு தடையென
எமது அரசு அறிவித்தது.

விதித்த தடையால் .....
விழுந்து விடவில்லை மிக விரைவாக
எழுந்தோம் விவசாயத்தால்.....
விழுந்துடுவோமெனும் அயல் நாட்டின் கூற்றை
விவசாயம் பொய்யாக்கியது.

எப்படி எழுந்தது தடை விதித்தும் ?
ஆராய்ந்தனர் அயல்நாட்டினர்
இந்தியாவின் வளம் வனாந்திர காடுகளும்
இயற்க்கை விவசாயமும் என்பதை தெரிந்து கொண்டனர்.

எழுந்ததை அறிந்த அயல்நாட்டினர்
அழிக்க பெரிதொரு சூழ்ச்சி செய்து
தொழில் முனைவோம் என்ற பெயரில்
தொழிற்சாலைகளை களமிறக்கினர்.

வெள்ளையரிடம் அடிமையாக இருந்து
வாங்கிய சுதந்திரத்தை அயல்நாட்டு
கொள்ளையரிடம் அடகு வைத்தனர்
அரசை வழிநடத்துபவர்கள்..

தரிசு நிலம் எவ்வளவோ இருந்தும்
தழைக்கும் விளைநிலங்களும்
தளிர்க்கும் காடுகளும்
தகுதியான இடமென்றனர்.

வளங்கொழிக்க இதுதான் சரியான
வழியென வனங்களில்
உள்ள மரங்களை வெட்டினர்
வளமிழக்க போகிறோம் என்பதை அறியாமல் ...

விவசாயத்தை நம்பியிருப்பவர்
வீதிக்கு வருவதா என கொந்தளிக்க
அனைவருக்கும் வேலை உண்டு என்றதும்
அடங்கி போயினர் விவரமற்றோர்.

முதலாளிகளை தொழிலாளி ஆக்கியதொடல்லாமல்
முழு மூச்சாய்விவசாயத்தை அழித்ததொடல்லாமல்
தொழிற்சாலை கழிவுகளை
தக்க பாதுகாப்பின்றி வெளியேற்றினர்.

தொழிற்சாலை மாற்றம்
தந்ததா என்றால்?
எண்ணிலடங்கா மாற்றங்கள்
தந்தது கழிவு பொருட்களால்.......

கழிவுகளால் வளங்கொழிக்கும் இடங்கள்
குப்பையும் கூளமுமாக, சேரும் சகதியுமாக........

விலையுர்ந்த விளைநிலங்கள்
விலைமதிப்பற்ற களை நிலங்களாக........

ஜீவநதியாக ஓடிய ஆறுகள் எல்லாம்
மாசு நிறைந்த கூவநதியாக......

தடை செய்யப்பட்ட வாயுக்களை பயன்படுத்துவதால்
வாயுமண்டலமே மாசாக........

இயற்கையில் மணம்வீசிய இடங்கள்
செயற்கையால் துர்நாற்றம் வீசும் இடங்களாக....

நிறைய மாற்றங்கள்
நல்ல மாற்றத்திற்காய் காத்திருந்தவர்களுக்கு
மாசுபட்ட நீராலும், வாயுவாலும்,
புதியது புதியதாய் நோய்களும்
விஷகாய்ச்சலும்தான் மிச்சம்......

அரசை வழி நடத்துபவனும்,
அயல்நாட்டவனும் செய்யும்
அக்கிரமங்கள் அனைத்திற்கும் ஒரு
முடிவு வேண்டி நல்ல
விடிவு வேண்டி
தொலைதூரத்தில் இருந்தே காண்கிறேன்
தொலைநோக்கு பார்வையுடன்.....??

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்