Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 018  (Read 3773 times)

Offline Global Angel

நிழல் படம் எண் : 018


இந்த களத்தின்

இந்த  நிழல் படம் என்னால் வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....



« Last Edit: October 11, 2018, 07:04:24 PM by MysteRy »
                    

Offline ooviya

கண்களில் கண்ணீர் ..

காரணம் தெரியவில்லை ..!
 
உன்னை பற்றிய சிந்தனை கற்கள் ...

என் நெஞ்சில் மோதி வலிக்கிறது!

உன்னை பற்றிய நினைவுகள் ...

கல்லை அரிக்கும் கடல் தண்ணீரை போல ..

என் இதயத்தை அறிகின்றன ..!

ஏன் உன்னிடத்தில் இந்த மௌனம்

ஏன் நீ என்னை விட்டு வெகு துரம் சென்று கொண்டிருக்கிறாய்

ஏன் இந்த இடைவேளி நமக்குள்

இப்படி விடை தெரியா ஆயிரம் கேள்விகள்

என் முன் நிற்கின்றன ..!

இதுதான் என் கண்ணீருக்கான ..காரணமோ ?!

எத்தனை ஜன்மம் எடுத்தாலும்

உனக்காக காத்திருப்பேன்

உன் வருகைகாக.....


ஓவியா
கண்களே ஆண்களை நம்பாதே


Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 116
  • Total likes: 116
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
என்னவனே
உனக்காக நான் வரைந்த
கவிதைகள் எல்லாம்
வெறும் வரிகளாய்
மட்டுமே பார்க்கும் நீ
என்று  என் வலிகளை
காண போகிறாய்.....
உன் மீது எனக்குண்டான
நேசம் இதோ
கடிதமாய் ஒரு கவிதை...

அன்பே என்றழைக்கவா
என்னவனே என்றழைக்கவா
கண்ணாலனே என்றழைகவா..
முதல் குழப்பமே உன்னை எப்படி
அழைக்க என  தொடங்கிற்றே??....

இப்படி தான் என்னுள் இருக்கும்
உனக்கு உருவமும், உவமையும்
தர முடிவதில்லை...
இன்றுவரை குழப்பத்தில் நான்...

உன்னை நினைத்து
இங்கு நான் சுகமாக அல்ல
சோகமாக....

என்னை நினைத்து
நீ அங்கு சோகமாக அல்ல
சுகமாக இருகின்றாயா??

நீ பேசாதிருந்தாலும்
தாங்கும் மனது
என்னை தவிர்த்து
நீ பேசுவதை
தாங்க முடிவதில்லை


எனக்காக நீ
உனக்காக நான்
என்று உணருவாய்
நீயும் நானும் மாறி
"நாம்" ஆனதை...

மையிட்டு எழுதினால்
கண்ணீரில்
மை கரைந்துவிடுமோ என
இரத்தத்தில் எழுதுகிறேன்
விழிகள் ஏனோ
இப்போதெல்லாம்
கண்ணீரை சிந்தாமல்
செந்நீரை வடிப்பதால்...

உன் நிழல் படத்தை
நான் ரசிக்க நினைத்ததில்லை
என்னுள் நீ நிஜமாய் இருப்பதால்
நிழலை ஏனோ நேசிக்க
நினைக்கவில்லை...

ரோஜாமலரின் இதழ் உதிர்ந்து
மரணிப்பதை போல
உன் இதழ் ஸ்பரிசத்தை
உணர முடியாமல்
மரணிக்கிறேன் தினமும்...

உன்னை சேருமோ என் கடிதம்??
புரிவாயோ என் மனதை...
நீ புரிந்தாலும்
புரிய மறந்தாலும்
என்னை நீ மறந்தாலும்
உன்னை விட்டு நீங்காத
நினைவுகளை நெஞ்சில் நிறுத்தி
தொடர்ந்து நேசிப்பேன்
நீ என்னை தொடராமல் போனாலும்...
« Last Edit: March 28, 2012, 09:43:42 AM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline supernatural

உன்  நினைவலைகளால்....
வாடுகிறேன்....
சிறகுகள் உடைந்த..
பறவையாய்  ..
இங்கு  நான்...

சிறகுகள் இருந்தும் ..
இல்லாதவனாய்..
அங்கு நீ ....
காலத்தின்...
சூழ்ச்சியா   இது ??

உன்னை நினைத்து...
உன் அன்பை நினைத்து...
சிலநேரம்..
பயபடுகிறேன்...

இதை ...
எண்ணி எண்ணி ...
மனம் ...
வெம்மி வெம்மி...
விழியோரம்...
சில துளிகள்...

உதிர்ந்தது ..
வெறும் கண்ணீர் ...
துளிகள் அல்ல...
உள்ளத்தின்...
உதிரத்துளிகள் ....!!!
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
மாலைவேளையில், வேலை முடித்து
வீடு திரும்பும் வேளையில்
விசேஷமாய் ,வித்தியாசமாய் ,விசித்திரமாய்
மனதோரம் ஒரு ஆசை, மனம் நிறைந்த  சிறு ஆசை .

ஆசைக்கு ஆசை தோன்றியது
அப்படி ஒன்றும் ஆச்சரிய படுவதர்க்கில்லையே  என
அவசரப்பட்டு அனுமானித்துவிட வேண்டாம்
அன்பர்களே !
அடிப்படையில்  ஆசையின்  மேல் எனக்கு
அவ்வளவாய் ஆசையே  இருந்ததில்லை
இருந்துமாசை என பெயர் மட்டும் ஏன் ??
சரி நம்மில்தான் இல்லை குறைந்தது
பெயரில் ஆவது இருக்கட்டுமென
புனைபெயறாய் புகுத்தியுள்ளேன்  "ஆசை"
விஷயத்தை விட்டு வெகு தூரம் செல்கிறோமோ ?
சரி,விரைவாய் விஷயத்துக்கு வருவோமே !

மனதோரம் ஒரு ஆசை, மனம் நிறைந்த சிறு ஆசை

"நீங்களும் வெல்லலாம்  ஒரு கோடி "
நிகழ்ச்சியில் தொடர்ச்சியாய் முறையே
மூன்று முறை  கலந்து கொண்டு
முடிந்தவரை என் சிற்றறிவிற்கு எட்டிய வரை
பதில் கூறி  வெற்றி மீது வெற்றிபெற வேண்டும்
வெற்றிதொகையாம் மூணு கோடியை
கட்டு கட்டுகளாய்   பெட்டியில் இட்டு
பெட்டி  பெட்டியாய் பெற்றுக்கொண்டு
அப்பணத்தை அத்தனையும்  தொட்டு கூட பார்க்காமல்
முழு தொகை மூணு கோடி மொத்தத்தையும்
முத்தான உன் மூக்கின் அழகிற்கு
என் சார்பு சொத்தாக சுயநிணைவுடனும்
சம்மதத்துடனும் சொத்தெழுதி வைத்திட
"மனதோரம் ஒரு ஆசை , மனம் நிறைந்த சிறு ஆசை "

"ஆசை" தன் ஆசையை ஆசை வார்த்தைகள்
கொண்டு வரி பதித்து பதிப்பித்தால்
அதை படித்து அளவிட முடியாத ஆனந்தத்தில்
பேசமுடியாத அளவுக்கு ஆனந்த  கண்ணீர் வடிந்தால்
அதில் ஆச்சரியம் இல்லை
ஆச்சரியத்திற்கு அவசியமும் இல்லை

கண்ணீர்துளிகளே அவசியம் இல்லை எனும்போது
உன் கண்களில்  இருந்து
உதிரத்துளிகள்  கசிவது எதற்க்கடி ??



















« Last Edit: March 29, 2012, 07:33:07 PM by aasaiajiith »

Offline thamilan

காதலிக்கும் வரை நினைத்திருந்தேன்
காதல் சுகமானது என‌
காதலித்த பின் தான் தெரிந்தது
காதலும் சுமையானது என‌

காதலுடன் நீ எழுதிய கடிதங்கள்
இன்று எனக்கு கவிதைகள் ஆகின‌
சில நேரம் அவையே
எனக்கு கண்ணீர்க் காவியங்கள் ஆகின‌

நானும் உன‌க்கு க‌டித‌ம் எழுதுகிறேன்
மை கொண்ட‌ல்ல‌
என் க‌ண்ணீர் கொண்டு
என் க‌டித‌ம் ஏன் சிவ‌ப்பெழுத்தில் இருக்கிற‌து
என்று கேட்காதே
அது என் க‌ண்ணீர் அல்ல‌
என் க‌ண்ணில் வ‌டியும் உதிர‌ம்
கொண்டு எழுதிய‌து

அன்பு என்றால் என்ன‌
காத‌ல் என்றால் என்ன‌
என்று உண‌ர்த்திய‌ நீ
பிரிவு என்றால் என்ன‌ என்று
உண‌ர்த்திய‌து ஏன்
இன்ப‌ம் என்றால் என்ன‌
என்று உண‌ர்த்திய‌ நீ
துன்ப‌ம் என்றால் என்ன என்று
உண‌ர்த்திய‌து ஏன்

என்னை பிரிந்து சென்ற‌ நீ
என்றாவ‌து வ‌ருவாய்
என் காத‌ல் உன்னை
என்னிட‌ம் ம‌றுப‌டி சேர்க்கும் என‌
க‌ண்ணீருட‌ன் காத்திருக்கிறேன்

காத‌ல‌ர் அழிந்தாலும்
காதல் அழிவ‌தில்லை என்ப‌ர்
காத‌ல‌ர் அழிந்த‌ பின்
காத‌ல் வாழ்ந்தென்ன‌ ப‌ய‌ன்
காத‌லா என் காத‌லை
வாழ‌வை

Offline Yousuf

கல்வி! அதை கற்றோர்க்கு
சென்ற இடமெல்லாம் சிறப்பு!
கல்வியை திறம்பட கற்க...
ஆசை கொண்டேன்!

அதற்காய் முழு மூச்சுடன்
கல்வி கற்றேன்!

என் போதாதா காலம்
வீட்டிலே திருமணம் நிச்சயம் செய்தார்கள்
பல லட்சம் வரதட்சனையோடு!

தந்தை சொல் தட்டாத
மகள் அல்லவா நான்
திருமணத்திற்கு சம்மதித்தேன்!

தந்தையோ கூலி தொழிலாளி!
மாப்பிளை வீட்டார் கேட்ட கைகூலியோ
ருபாய் பல லட்சம்!

எப்படி கொடுப்பார் என் தந்தை?
எனக்குள் எழுந்தது கேள்வி!

முயற்சி செய்து திரட்டினார்
சில ஆயிரங்களை மட்டும்...
மீதி தொகையை திருமணத்தின் பின்னர்
தருவதாக உறுதி கொடுத்தார்
ஒரு கடனாளியை போல்...
கூனி குறுகி நின்று!

திருமணமும் முடிந்தது!
தினம் தினம் மீதி கைக்கூலி எங்கே..
என்று என்னை மிரட்டும் மாமியார்!

கட்டிய கணவன் நல்லவனா என்றால்...
அவனும் குடிகாரன்...

வரதட்சனையை பற்றி தந்தையிடம்
முறையிடும் முன் மாரடைப்பால்
மரணமானார் என் தந்தை!

தினம் தினம் நரகத்திலே
என் வாழ்க்கை நகர்ந்தது!

கடைசியில் கணவனும்
இறந்தான் புற்றுநோயால்!

கையில் இரு குழந்தையுடன்
நடுத்தெருவில் நான்!

என்ன செய்வது என்று அறியாமல்
இரத்த கண்ணீர் வடிக்கிறேன்!

நான் காதலித்த என்...
படிப்பையும் தொலைத்தேன்!
தந்தையையும் தொலைந்தேன்!

பாலாய் போன குடியால்...
கணவனையும் தொலைத்தேன்!

இன்று இரத்தக்கண்ணீர் வடிக்கிறேன்!

என் அருமை தோழிகளே
கைக்கூலி வாங்கும் கயவர்களை, கோழைகளை
கணவனாய் ஏற்காதீர்கள்!
உங்கள் வாழ்க்கையை தொலைக்காதீர்கள்!!!
« Last Edit: March 31, 2012, 08:16:25 PM by Yousuf »

Offline Global Angel

அன்பே ...

அணைத்திட துடிக்கும் என் கரைங்களை விட
உன்னை அழைத்திட துடிக்கும் இதழ்களை விட
உன் ஸ்பரிசத்தை உணரும் உடலை விட
உன்னை காண துடித்த என் கண்களுக்கு
காரணமின்றி ஏன் தண்டனை கொடுக்கின்றாய் ...

உன்னால் உன் நினைவுகளால்
சிதைந்து போனது என் இதயம் ...
கண்களின் வழியே இதயத்தை காணலாமாம்
என் கண்களில் வடியும் என் உதிரம்
உன்னால் உன் நினைவுகளால்
அணு அணுவாக சிதைந்து கொண்டிருக்கும்
என் இதயத்தை காட்டுகிறதா ....?

உன் நினைவுகளை மலர் கொண்டு
தினவேட்டில் தீட்டினேன்...
என் வேதனைகளை சுமந்து
அதுவும் எனக்காக தன்நீரை
சென்நீராக சிந்துகின்றது
நீமட்டும் என்னை உணராது போனதேனோ ..


என் மனதை திருடிய நீயே
என் மரணத்திற்கும் மாலை  இடுவாயோ  ..
ஒரு முறையாவது
உன் காதலை நான்  ஸ்பரிசிக்கும்
வரம் ஒன்று தந்துவிடு
மனதோடு வாழ்ந்துவிட்டு போவேன் .

                    

Offline RemO

புயலாய் மாறிய தென்றலானது இந்த ஊடல்
இத்தனை நாட்களாய் தித்திப்பாய் முடிந்த ஊடல்
இன்று மட்டும் திகட்டியது கண்டு
உடைந்து தான் போனதென் இதயம்.

என்னைப்போல் நீயும் வருந்தி
இதயம் கரைந்து கண்களின் வழியே
கண்ணீராய் உன் குருதியும் வெளியேறும்
என பயந்து தேடி வந்தேன் உன்னை

உன்னை தேடி வந்ததால்
உண்மை என்னை தேடி வந்தது.
உன்னுடைய வாழ்க்கை நான் என நினைத்திருந்தேன்
ஆனால் உனக்கு வேடிக்கை நான் என தெரிந்து கொண்டேன்.

கொண்ட காதலுக்காக கண்ணீர் வடிப்பாய் நீ என நினைத்தேன்
இறுதியில் கண்ணீர் வடித்தது
என் காதல் தேவதை
அழகாய் வாசம் வீசிய காதல் ரோஜா உதிர்ந்ததை கண்டு ....
« Last Edit: April 01, 2012, 01:59:51 AM by RemO »

Offline Bommi

மனம் சொல்ல நினைப்பது எல்லாம்
சொல்ல முடிவதில்லை
வான்மதியின்  மீது கடல் காதல்
காதல் கொண்டாலும்  காதல்
கைகூடிவிடு வதில்லை

நிலவானில் நிலவு ஒன்று இந்த
நிலவு முகத்தில் உலவும் சோகங்கள் ஆயிரம்
எப்படி அழைப்பேன் எந்தன் மனதை கவர்ந்தவரை
மங்கையின் மனதை வென்றதலே அவனை
மாறன் என்று சொல்லவா -இல்லை
மங்கையின்  காதலை  வென்றதால்
காதல் அரசன் என்று போற்றவா

என் நெஞ்சுக்குள் வைத்து உனை முடினாலும் என் விழியின்
பார்வையில் எல்லாம் நீயாக தெரிகின்றாய்
உன் நினைவு என்னை வாட்டிவதைக்கிறது
பார்வையில் உன்னில் என்னை காண்கின்றேன்
பருவ ராகம்  இசைத்தும் பார்க்கின்றேன்
இணைந்து பாட உன்னை அழைகின்றேன்
பூவா தலையா போட்டு பார்க்கின்றேன்
காதல் சரியாய் தவறா? என்னை கேட்கின்றேன்

ஏன் அன்பினை அளந்திட நாழி இல்லை
அன்பே உன்னை எண்ணிடாத நாழிகை இல்லை
நான் உனக்கு தகுதி வாய்த்தவள் என்று எண்ணி
கார்கால மேகமாய் அன்பை பொழிந்தாயே -இன்று
தியாக உள்ளம் கொண்டு ,துய உள்ளம் கொண்டு
காதலை மறந்தாயே  என்னவனே

கண்ணீரில் நான் பறித்த இந்த ரோஜாப்பூவை
மணமாலையாக்கி உன் தோளில் சேர்த்தேன்
என் உள்ளம் கோவில் கொண்ட என்னவனே
என்  காதல் சோகத்தை துயர் துடைக்க
என்று வருவிரோ ..........!!!!

by
sana

« Last Edit: April 01, 2012, 04:06:01 AM by Bommi »

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
கடிதம்

கண்ணே கனியமுதே
முத்தே என் முத்தான சொத்தே
வடிவே வடிவழகே
நான் சுகம் நீ சுகமா
நம் உறவுகள் சுகமா

உறவுகள் ஆங்காங்கே
சிதறி போனதையும் அறிந்தேன்
சிதைக்க பட்டத்தையும் அறிந்தேன்
உள்ளம் கொதிக்கிறது
உறவுகளை ஒன்று திரட்டி கூடி வாழ்

என்னுயிரே
உன்னவன் வருகைக்காய் காத்திரு
உன் மன்னவன் போர் முனையில்
போராளியாய்......

அண்ணிய மண்ணில் அகதியாகவும்
அடிமையாகவும் வாழ்க்கையை துவங்க
அடியவனுக்கு துளியும் விருப்பம் இல்லை
அதற்காக வாழ்வை தொலைத்திட முடிவு செய்துவிட்டோம்

போர்முனையில்
நல்ல முன்னேற்றம் கண்ட வேளையில்
நல்லதோர் செய்தி கிடைக்கும் தருவாயில்
அண்ணிய படை நம் எதிரிக்கு ஆதரவாக
அதற்கும் நம் படை வீரர்கள் அஞ்சவில்லை

போராட்டக்காரர்கள் எதற்கும் சளைக்கவில்லை
போர் படையை கண்டும் மலைக்கவில்லை
இதுவரையில் காலன் என்னை அழைக்கவில்லை
இங்கு நம் குளம் தழைக்க வழியும் இல்லை

தமிழனுக்கு மாற்று தமிழனென நம்பிய
தருணத்தில் தமிழனே ஏமாற்றுகாரனாய்,
துரோகியாய் கண்டும் மனதில்
துளியும் வருத்தமில்லை

போராளியாய் துப்பாக்கி தோட்டாவில் துவங்கிய
போராட்டம் பீரங்கி டாங்கி என அடுத்தடுத்த பரிணாமம்
அனைத்திலும் அடைந்த வெற்றியில்
அடுத்த பதவிஉயர்வு அண்ணலுக்கு மனிதவெடிகுண்டு

என் ஒவ்வொரு தருணமும் மரணமும்
உனக்கு மட்டும்தான் நினைத்தவன்
என் இனத்திற்காக உயிரிடும் தருணத்தை
எண்ணி அகமகிழ்கிறேன்

இறுதி கட்ட போரை நோக்கி நான்
இதில் வெற்றி என்றால் எனக்காய் காத்திரு
எதுவரை காத்திருப்பது என்கிறாயா ?
உன்னை வாசம் செய்யும் தருணம் வரை
சுதந்திர காற்றை சுவாசிக்கும் வரை

எப்பொழுது சுதந்திர காற்று என்கிறாயா?
எத்துனை காலமென தெரியவில்லை
இன்னுயிர் பலர் நீத்தும்
ஈழம் மலர்ந்திடும் என்ற நம்பிக்கையில்
இம்மியளவு கூட பிசகாமல் நம் வீரர்கள்.

வெற்றி செய்தி எட்டவில்லைஎனில்
எட்டி இருப்பேன் காலனை
எதற்கும் கலங்காதே
எனக்காய் காத்திராதே
மனம் முடித்து கொள் விரைவில்
மழலை செல்வதை பெற்று கொள்

சொல்வதற்கு மனதில் வேதனைதான்
இதயமே ரணம்தான்
இருபினும் நம்மினம் காக்க
போராளி வேண்டும் நினைவில் கொள்

என்னவளே நீ சூடிய ரோஜாமலரை
உன்னவனுடன் இருந்த நினைவு பரிசை
பொக்கிஷமாய் அனுப்புகிறேன்

அன்பு பரிசை
அனுப்பியதற்கு வருந்தாதே
அதுவே ஆ(பெரிய) இதமாக இருப்பதால்
ஆயுதத்தை மறந்து போகிறேன்

அன்பே எனக்கு
அதனினும் பெரிய
ஆயுதங்களை சுமக்க
வேண்டியதால் விளைமதிபற்றதை
விட்டுசெல்கிறேன்
ஆசை முத்தங்களுடன் அன்பு காதலன்........

அவள் கடிதம் கண்டாள்
கற்றாள் கலங்கினாள்
கண்களில் உதிரம் கசிய
உள்ளம் உருகினாள்

அழும் அவளை கண்டும்
தேற்ற முடியாமல் கலங்கினான்
காற்றில் கலந்து போனவன் ......

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்