Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 014  (Read 2895 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நிழல் படம் எண் : 014


இந்த களத்தின்  நிழல் படத்தை யோசுப் வழங்கி உள்ளார் ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....




நண்பர்களுக்கு ...கவிதைக்கான  ஓவியம் பிரதி சனிக்கிழமைகளில் மாற்றப்படும்.... அதற்குள்ளாக கவிதைகளை பதிவு செய்து கொள்ளுங்கள்
« Last Edit: October 11, 2018, 06:54:49 PM by MysteRy »
                    

Offline Yousuf

வறுமை
மனிதனுக்கு அது ஒரு கொடுமை!
செழுமை
மனிதனிக்கு அது ஒரு இனிமை!

புவியிலே பசியால் வாடும்...
மனிதர்களின் இருப்பிடம் தெருக்கோடி!
பணம் படைத்த மனிதர்கள்...
படுத்து உறங்குவதே
பணம் என்னும் கோடிகளில் தான்!

சுயநலம் தலைக்கேறி
சக மனிதர்களை பற்றி சிந்திக்காத...
சுயநலம் பிடித்த மனிதர்கள்
ஏராளம் இந்த பூமியிலே!

அண்டை வீட்டில்...
அடுப்பெரிந்தாலும் இல்லாவிட்டாலும்
தன் வயிறு நிரம்பினால் போதும் என்று
சுயநல சிந்தனை கொண்ட...
மனிதர்கள் ஏராளம் இப்பூமியிலே!

வீணாய் போகும் உணவுகளை
கீழே வீசவும் தயார்!
ஆனால்...
பசித்த வயிற்றிற்கு ஒரு வாய்
உணவளிக்க சிந்திக்காத மனிதன்!

இல்லை... அவன் மிருகம்!

இருந்தும்...பிறரின் துன்பத்தை
தன் துன்பமாய் கருதும்
மனிதநேயம் படைத்த...
நல்லுள்ளங்களும் இருக்கிறார்கள்
இப்பூமியிலே!

அதற்க்கு எடுத்துக்காட்டுதான்
இப்புகைபடமோ!
என்று வியக்க தோன்றுகிறது...
மனது!

தன் சொந்த பிள்ளைக்கு...
தன் கையால் ஊட்டி விட
நேரமாற்ற மனிதர்கள்
ஏராளம் இக்காலத்திலே!

இருந்தும்... யாரென்றும் தெரியாத
சக மனிதனுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட
அச்சகொதரனுக்கு தன் கையால்
உணவை ஊட்டி விடும்...
இச்சகொதரனின் மனிதநேயத்தை பார்க்கையிலே
நெஞ்சமெல்லாம் உருகுதடா!!!

இப்படிப்பினையை நாமும் ஏற்று...
பசித்தொருக்கு உணவளிக்க முன்வருவோம்!
மனிதநேயத்தை காக்கும் மனிதர்களாய்...
நடந்து கொள்வோம்!

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
சகோதரன் யூசுப் கொடுத்த காட்சி ஒரு மனித நேயமிக்க இளைஞன் வாழ்விழந்து தவிபோர்களுக்கு உணவு கொடுக்கும் உண்மை சம்பவம். இக்காட்சியை ஒரு ஏழை விவசாயின் குமுறலாய் வெளிபடுத்தி இருக்கிறேன்.
தமிழகத்திற்கு வராது போன நதிக்கரையின் ஓரத்தில் வாழ்விழந்து வசிக்கும் ஏழை விவசாயிகளுக்கு இக்கவிதையை காணிக்கையாக்குகிறேன்.

யார் நீ.......!
பெற்றோரால் புறகணிக்க பட்டவனா
காதல் தோல்வி யுற்றவனா
மனைவியால் கைவிட பட்டவனா
மகன் மருகளால் விரட்டி அடிக்கபட்டவனா
கொடிய நோயால் விலகி வந்தவனா
வாழ்வே சூன்யமாகி போனவனா
ஏய்ச்சி பிழைக்கும் சோம்பேறியா
சித்தனா இல்லை பித்தனா
யார் நீ...
மனிதா கூறிடு
உன் அவலத்தை
உன் அவஸ்தையை
உன் வாழ்க்கை தடம் மாறி போன காரணத்தை

அய்யா எம் பேரு ஆறுமுகங்க
அஞ்சாறு வருஷமா மழை பெய்யாம
சேத்துல கால் வைக்காம போனதால
சோத்துக்கு வழியற்று கிடக்கறேனுங்க

கண்மாய் ஓரமா மாடு மேய்ச்சி
கறவை தொழிலும் பாத்தேனுங்க
ஆத்துல தண்ணி வராம
அந்த தொழிலும் போச்சுதுங்க

நானும் எம்பொஞ்சாதியும்
நாத்து நட ஆரம்பிச்சா
ஊரே பாத்து
வாய் பொளக்குமுங்க

வந்த பஞ்சத்துல அவளும்
வாய பொளந்துட்டாளுங்க பொறவு
கழனி காட்ட வித்துபுட்டு புள்ளையும் மருமவளும்
கம்பெனிக்கு போயிட்டுதுங்க

மருமவ போகும்போது
மாமா எங்களோட வந்துடுங்கன்னு கூட்டுதுங்க
பாழாபோன மன்ன விட்டு
போகமாட்டேன்னு இந்த உசிரு துடிக்குதுங்க

மன்னிக்கணும் பெரியவரே சோகத்த உள்ளடக்கி
மாமனிதராக வாழும் தெய்வமே
முதலில் உணவை பிரித்து கவலை
மறந்து உண்ணுங்கள் பிறகு பேசுவோம்

ஏன் தம்பி எதும்
எலக்ஷன்ல நிக்க போறியா
சாப்பாடு வாங்கி குடுத்து
சன்மானம் எதும் கேப்பியா

அய்யா பெரியவரே எங்க பெரிய
அய்யா காலத்திலிருந்தே உதவி செய்யறோம்
எந்த பலனும்
எதிர்பாராது ....

அய்யோ தம்பி என்ன உங்க
அப்பனா  நினைச்சி மன்னிச்சிடு
நான் சொன்னதுக்கும் காரணம்
நானே சொல்லிடுறேன்

ஓட்டு கேட்டவநெல்லாம்
ஓன்ஜாதி ன்னான் .....
சாமி நீதான்னு
சாஷ்டாங்கமா விழுந்தான்

உள்ளுகாரனாச்சே பணம் குடுத்தானே
உண்மையா இருப்பானேன்னு ஓட்டு போட்டோம்
போயி வருஷம் நாலு ஆச்சு
போன இடம் தெரியல

உன்னைபோல யாரும் உதவின்னு செஞ்சாகூட
உள்ளம் மறுக்குதுங்க
இதயம் மறத்து போனதால
இந்த குமுறலுங்க

அதனாலதான் சாமி உன்னையும்
அவன போல எண்ணி வஞ்சு புட்டேன்
தப்பு என்னதுதான் மகராசா மன்னிச்சிடு -நீயும்
தங்கமா தரணியிலே வாழ்ந்திடு.....!

மன்னிப்பையும் வாழ்த்தையும் கேட்டு
நெஞ்சு பதைபதைக்க
நா தழுதழுக்க
வாயில் வார்த்தை வர மறுக்க
இதயம் கனத்து போக

பகட்டு வேஷம் போடும்
பணம் படைத்த சீமான்கள் பலர் இருக்க
குணம் படைத்த
குணசீலன் உணவை ஊட்ட

தாரை தாரையாய் கண்ணீர்
தாத்தாவுக்கு
அவர் அழுகையை கண்ட
அவனுக்கும் செந்நீர் கண்ணீராய்....!!
« Last Edit: March 01, 2012, 07:57:33 PM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline thamilan

ஒரே உலகத்தைப் படைத்த இறைவன்
ஒரே ரத்தம் ஒரே சதை
ஒரே அங்கங்கள் ஒரே இதயம்
கொண்ட மனிதர்களைப் படைத்து
அவர்களில் ஏழை பணக்காரன் என‌
பணத்தால் பிரித்தது ஏன்

கடவுள் இருக்கிறானா
அடிக்கடி இந்த ஏழைகளைப் பார்க்கும் போது
என் மனதில் எழும் கேள்வியிது.

ஏழைகள் சிரிப்பில்
இறைவனைக் காணலாமாம்.
ஏழைகள் சிரிப்பது எப்போது

சில மனிதர்கள்
உடையால் உடம்பால்
சுத்தமாக இருப்பார்கள் ஆனால்
உள்ளம் எல்லாம்
அழுக்காய் இருக்கும்.

ஏழைகளுக்கோ
உடம்பும் உடையும்
அழுக்காய் இருக்கும் உள்ளம் மட்டும்
சுத்தமாக இருக்கும்

அடுத்த வேளை உணவுக்கு
யாரிடம் கையேந்துவது என
யோசிக்கவே நேரம் போதாத அவர்களுக்கு
மற்றவரை எப்படி கெடுப்பது என்று
யோசிக்க நேரம் ஏது?

உலகில் மனித நேயம்
மரணித்து விட்டது
மனிதாபிமானம் மறைந்து விட்டது
மனித மனங்களில்
இரக்கம் என்ற ஈரம் காய்ந்து விட்டது
என்று தான் எண்ணி இருந்தேன்
இத்தனை நாட்களாக‌

இல்லை இன்னும் ஒரு சிலர் மனதில்
ஈரம் ஒட்டியிருக்கிறது என்பதை
எனக்கு உணர்த்திட்டது
இந்த ஓவியம்

யார் கடவுள்
புரியாமல் தவித்திட்ட எனக்கு
எவன் பசித்திருக்கும் ஏழைக்கு
வயிறார உணவிடுகிறானோ அவனே
இறைவன் என உணர்த்திட்டது
இந்த ஓவியம்

Offline ooviya

இந்த மண்ணில் பிறக்கும்
ஒவ்வொரு உயிரும்
அதன் தலை எழுத்து
தெரியாம தான் பிறக்கிறது 

இந்த உலகம்
ரொம்ப சுயநலம் பிடித்தது
பணக்காரன் ஏழை என்று
பிரித்து  பார்க்கிறது

இந்த முதியவர் போல
கோடிப் பேர்கள்
உணவு இல்லாமல் தவிகிறர்கள்

அன்று

கர்ணன்
இல்லை என்று வந்தவர்களிடம்
இல்லை என்று சொன்னதில்லையாம்
நான் படித்து தான் இருக்கேன்
கர்ணனை பார்த்தது இல்லை

இன்று

உதவி கரம் நீட்டி
இந்த முதியவருக்கு
உணவு ஊட்டி விடும்

மதுரை நகரில் வாழும்
அன்பு உள்ளம் படைத்த
இந்த நாராயண கிருஷ்ணன் 
அந்த கடவுளின் அவதாரமே !!!!!!






« Last Edit: March 02, 2012, 06:45:13 PM by ooviya »
கண்களே ஆண்களை நம்பாதே


Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உலகில் ஓராயிரம் பேர்
ஒருவேளை தனிலும்
உணவளிக்க ஆளின்றி
உயிரிழந்து போகும் நிலை
உன்ன உணவில்லை
உடுக்க உடை இல்லை
உறங்க புழக்கடையும் இல்லை
அவர்கள் இன்னல் துடைத்து
இரு கரம் நீட்டி
ஒரு பருக்கை சோறேனும் ஊட்ட
ஒரு நாதி இல்லை ...
இறைவனின் படைப்பில்
இப்படி ஓர் படைப்பு எதற்கு
ஏழை  பணக்காரன்
ஏற்றத் தாள்வெதர்க்கு...


கையிலே செல்போனும்
கருத்திலே வாழ்க்கை சிக்கலையும்
சுமந்து போகும் எவனுக்கும்
கையேந்தி நிற்கும்
எவனை பார்க்கவும் நேரமில்லை
பசியில் மெய் சோர்ந்து
மெருகிழந்து ...
கருத்தேந்து ... கண்ணொளி இழந்து
காடு எது  வீடு எது ...
பிரிவேதும் தெரியாத 
மன ஒழி குன்றிய மகத்தான
உயிர் பிணம் உன்னை
அக கண் கொண்டு
ஆற தலுவியதோ ஓர் உயிர்
வாழ்க நீ பல்லாண்டு ..


இருந்தாலும் எனக்கொரு கோரிக்கை
என் மதிப்பில் உயர்ந்தவனே
உன் மதிக்கு ஏன் எட்டவில்லை
இன்று ஒரு நாள் ஒரு பொழுதுடன்
இவன் பசியும் போகாது
இவன் தேவைகளும் தீராது என்று ...
மானிடா உன் சிந்தனை எப்போது
சில சிலுவைகளை உடைத்தெறியும்
உன் சேவைகள் எப்போது பரந்த நோக்காகும்


சிந்தித்து பார்
உன் கருணை இன்றோடு போய்விடுமா
இல்லை இவன் உயிருள்ளவரை நிலைகனுமா
சுத்தமான ஆடை இல்லை
சுகாதாரமான சூழல் இல்லை
அவனையே அவன் அறியவில்லை
இவன் தேவை எல்லாம்
பாதுகாப்புடன் கூடிய
பலதொலைவான வாழ்க்கை
உன்னால் முடியும்

பசித்தவனுக்கு புசிக்க
பண்போடும் கருணையோடும்
உணவூட்டும் நீ
அவனை பாதுகாப்பான இடத்தில சேர்
உன் புண்ணியமும் வாழும்
அவன் புனிதமும் கூடும் ...
ஒரு பொழுதுக்கு உணவளித்த உன்னால்
ஓராயிரம் பொழுதுக்கும் வகை செய்ய முடியும்
முனைந்திடு சகோதரா
ஜெகத்தினை அன்பின் வசபடுத்திடுவோம் ...
                    

Offline கார்மேகம்

உண்ண  உணவு இல்லாதவனுக்கு
உணவு அளித்தல் உயர்ந்த தர்மம்
உண்ண இயன்றவனுக்கு ஊட்டி விடல்
உனக்கான சுய விளம்பரம்.

கை நிறைய எடுத்து
கவளமாய் ஊட்ட வேண்டிய நீ
கடுகளவு கையிலேந்தி
கர்ணனை போல் பெயர் வாங்க
 கபடம்  செய்கிறாய் .

நீ செய்த நற்செயலை
நீயே நாடகம் நடத்தி நசுக்குகிறாய்.
 
அடுத்த தேர்தலில் நீ வேட்பாளனாகும் கனவா ?
அல்லது உன் மனம் கவர்ந்தவளை கவர நீ செய்யும் சதியா?

வறியவனுக்கு உணவு அளித்த உன்னை பாராட்டி
புகைபடத்துக்காய் நீ செய்த செயலை கண்டித்து
கவி பொழியும் கார்மேகமாய் நான்.