Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 013  (Read 2791 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நிழல் படம் எண் : 013


இந்த களத்தின்  நிழல் படத்தை நான் வழங்கி உள்ளேன்..... இந்த அழகிய படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....

« Last Edit: October 11, 2018, 06:54:25 PM by MysteRy »
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
   
அன்பே !
நீ அறிந்ததுதான் முன்பே

உன்னை நேசிப்பதை விட
பன்மடங்கு தமிழை நேசிப்பவன் நான்
இருந்தும்,தமிழ் புகழ் பறைசாற்றும்
நன்நூலையே அளவாய் ரசித்து
அளவாய் ருசித்தவன்

உன் தொடர்பினில் தொடர்ந்திட
தொடர்ந்து தொடர் தொடர்ச்சியாய் 
பித்து பிடித்த ரசிகனாய்
முகநூலிலேயே
வசிக்க தொடங்கிவிட்டேன்

கேலிபேசுவோர் பேசிவிட்டு போகட்டும்
வருத்தபடோவோர் வருந்திவிட்டு போகட்டும்
திருத்தபடுவோர் திருந்திவிட்டு  போகட்டும்

வருந்தினாலும் ,திருந்தினாலும்
உன்னை புரிந்துதான்,மனம் பொருந்தி தான்

உன் அகநூல் என்னும் மனம் படிக்க
எனக்கு வைக்கப்படும் தகுதித்தேர்வே
முகநூலில் உனக்கான காத்திருப்பு..

இது என்ன ஆச்சர்யம்
இன்றெனக்கு இல்லாவிட்டாலும்
ஒரு நாள் நிச்சயம் கிட்டும்
உன் அருகாமை எனும் நம்பிக்கையில்
நான் செத்த பின்பும் தொடரும்
முகநூலில் நாம் தொடர்பு..

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
உறவை வளர்த்திட ஒரு இடம்
பாசத்தை பகிர  ஒரு இடம்
நட்பை கொடுத்து நட்பை பெற
ஒரு இடம்
பலரின் முகம் பாராமல்
உறவை தரும் ஒரு இடம்
முக நூல்

பாசத்தை தர பல உறவுகள்
பாதகமாய் போகும் சில உறவுகள்

நட்பை தேடும் உறவுகள்
நஞ்சை விதைக்கும் சில உறவுகள்

அழுகையும் சிரிப்பையும்
பகிர்ந்து பழகி வருகிறோம்
அனுதினமும்

எல்லோருக்கும் நீ வெறும்
முக நூல் தான்
எனக்கு மட்டும் முக நூலகம்

உன்னை தினமும்
படித்துவருகின்றேன்
உன்னில் வசித்து வருகின்றேன்
என் சந்தோஷத்தையும்
துக்கத்தையும் தாங்கி
முகம் மலர்ந்திருக்க
உன்னால் மட்டுமே முடியும்

அன்புக்கு அடிமையாய் இருந்தேன்
பலகாலம்
இன்று உனக்கு அடிமையாகி
நேரம் போவது அறியாமல்
கணினியில் உறைந்து போகின்றேன்

உயிர் இல்லையாம்
கணினியில்
நம்பிக்கையில்லை
என் பல உயிர்கள்
கணினியின் ஊடே
முக நூலில் காத்திருக்க
முழுவதுமாய் உன்னில்
அடிமையாக இருப்பதும்
எனக்கு சந்தோஷமே



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
அடிமையாகி போனேன்


முகநூலில்(facebook)
இன்பமும் உண்டு
துன்பமும் உண்டு
இன்பமமும் துன்பமும் சம அளவில்

எதுவும் இன்பம் தான்
எல்லை மீறாத வரை
எல்லை மீறிய சில பதிவுகள்
துன்பத்தின் வரிசையில்

துன்பம் என்றாலே
மனதில் சஞ்சலம்
துன்பம் வேண்டாம்
ஒதுக்கிவிடுவோம்

உள்ளுரிலேயே
தேங்கி கிடந்த
நட்பு வட்டத்தை
விரிவாக்கிய இடம்....

வெளியூர் வெளிநாடு வரை
பரவி கிடந்த சமுகத்தை
என் ஜன்னலுக்குள்ளே (விண்டோஸ்)
கொடுத்த தளம்....

முகமில்லாத பலரையும்
முகோத்தொடு சிலரையும்
நண்பர்களாக
ஒருங்கே பார்க்கும் இடம்

முகமில்லாதவர்க்கும்
முகவரி கொடுக்கும் இடம்
நண்பர்களோடு  சதா பேசி
அரட்டை அடித்த இடம்...

அடுத்த தலைமுறை சகாக்களும்
மச்சி, மாமு என்று
தலைமுறை இடைவெளி குறைத்து
அன்பை பொழியும் இடம்....

பதிவேற்றத்துக்கும் பதிவிரக்கத்துக்கும்
கலாய்பது, கமென்ட் அடிப்பது
ஓட்டுவது, சைட் அடிப்பது,
சாட் செய்வது
(மன்னிக்க தமிழில் இல்லா வார்த்தைகள்)
இப்படியாய் நகர்ந்தது பொழுதுகள்.

பெண்ணே
உன்னை முகநூளில் காணாத வரை
தளத்தில் குப்பையாக பலர் இருந்தும்
குப்பைக்கு இடையே பூத்த
அழகிய ரோஜா நீ....!

உன் அகபுத்தகதை
நாளும் பிரித்து படிக்க
உதவிய புறபுத்தகம்
இந்த முகபுத்தகம்..

உன்னை கண்ட நாள் முதல்
அனைத்தும் மாறிப்போனது
விந்தையிலும் விந்தை

கொஞ்சம் வேலையாக இருக்கிறேன்
பிறகு பேசலாம் என்கிறது மனம்
நண்பர்கள் அழைபிற்கு

பேசி சிரித்து
கொஞ்சி குலாவி
உன்னோடு
ஆனந்த அரட்டைகள் பல...

அன்பே உனக்கு செவி
கொடுத்து பேசி சிரித்து
எப்பொழுதும் நீ பேசி சிரிப்பதாய்
பேசி சிரிக்கிறேன் தனியாக..

முன்பெல்லாம் உன் வருகைக்காக
காக்க தொடங்கிய நான்
இப்பொழுது நீ இல்லாமலும்
இருப்பதாய் உணவு உறக்கமின்றி
காத்து கிடக்கிறேன் அடிமையாக

அடிமையானது உணக்கா
இல்லை முகநூலுக்கா
என்று தெரியவில்லை

உனக்குள் நான் எனக்குள் நீ
என்பதை
வெளிகொணர்ந்த இடமாயிற்றே
அதெப்படி எளிதில் விலகிட முடியும் .


அன்புடன் -சுதர்சன்சுந்தரம்
« Last Edit: February 18, 2012, 07:51:42 AM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline supernatural

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1444
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • உலகில் அரிதானது அன்பே...
இயந்திரமான மனித வாழ்க்கை ..
எங்கும் ,எப்போதும். எதற்கும் நேரமில்லை ...
அழகான சொந்தங்கள்...
இதமான  நட்பு ....
சுகமான உரையாடல் ...
இதெல்லாம் வெறும் நினைவுகள் ...

இந்த இயந்திர வாழ்கையில் ...
சிறு ஓய்வு தருவது ....
சில சமுக வலை தளங்கள் ...
அதில் முக்கிய பங்கு ...
முகநூலே ....

முகநூல் முகவரி இல்லா...
ஆள் இல்லை இக்காலம் ..
நான் விட்டாலும் ...
என்னை விட மனம் வரா...
முகநூலே ...!!!!
« Last Edit: February 19, 2012, 12:27:53 PM by supernatural »
<a href="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw</a>
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Yousuf

முகப்புத்தகம்...
இதில் முகவரி இல்லாத
முகங்கள் இன்றில்லை...

நட்பை நாடி சில முகங்கள்
இங்கு வந்தாலும் நல்ல நட்பை
பெறுவதென்பது அரிது!

இருந்தும் தேசம் கடந்து...
மொழி கடந்து...
இனம் கடந்து...
நிறம் கடந்து...
நட்பை சுவாசிக்கும் உள்ளங்கள்
இருக்கத்தான் செய்கிறது
முகப்புத்தகத்தில்!

இதோடு பிறரை
வஞ்சிக்க காத்திருக்கும்...
நரி முகங்கள்
இருக்கத்தான் செய்கிறது
முகப்புத்தகத்தில்!

இப்புத்தகத்தை கேளிக்கையாய்
கொண்டு அடிமையாகிப்போனா
என் நண்பர்களே...
இதையும் நல்ல பணிக்காக
பயன்படித்திடலாம்...
என்பதை மறந்ததேனோ?

சர்வாதிகார ஆட்சியை
அகற்றிடவே முகப்புத்தகத்தை...
உடகமாய் பயன்படுத்திய
எகிப்து பெண்மணியை...
மறந்ததேனோ?

நம்மை சுற்றி எத்தனையோ
அவங்கலங்கள் அத்தனையும்
மறந்து விட்டு
வீணான செய்திகளை...
பகிர்ந்துகொள்ளும் நண்பர்களே
நீங்கள் சிந்திக்க
மறந்ததேனோ?

எதிர் வரும் நாட்களிலாவது
வீணான செய்திகளை...
பகிர்ந்து கொள்ளும்
பழக்கத்தை விட்டுவிட்டு
சிந்தனை மிக்க செய்திகளை
பகிர்ந்திடுவோம்!

அறிவியலின் அருட்கொடையாம்
முகப்புத்தகத்தின் வாயிலாக...
சிந்தனை மிக்க சிறந்த
சமுதாயத்தை உருவாக்க...
முனைந்திடுவோம்!





« Last Edit: February 20, 2012, 05:33:36 PM by Yousuf »

Offline RemO

மனிதனுக்கே மனிதன் அடிமையில்லா
இந்நாளில் முகபுத்தகதிற்கு அடிமையாகி போனதாய்
கேலி பேசுகின்றனர் தோழர்கள் 
இந்த கேலிக்கு வருந்தும் எண்ணம் இல்லை எள்ளளவும்

பொழுதுபோக்காக எண்ணிய என் வாழ்க்கைக்கும்
அர்த்தம் கொடுத்த இடமல்லவா
பலவருடம் முன் பார்த்த உன்னை
மீண்டும் அறிமுகம் தந்த நண்பனல்லவா

தோழியாய் தொடங்கி என்னுள் அடங்கி
தன்னையே தந்தவளை எனக்கு தந்த பிரமன் நீ
உள்ளிருந்த காதலை உலகறியச் செய்து
மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியவன் நீ

முகபுத்தகம் காரணப்பெயர் தான்
உன் முகத்தை காட்டி
புத்தகத்தையல்லவா மறக்க செய்தது 

உறவினர்கள் உதவா இக்காதலில்
உதவும் நண்பனாய், தூது செல்லும் தூதுவனாய்
இருக்கும் இதற்க்கு அடிமையாக
இருக்க வேண்டும் உயிர் பிரிந்து சதை பிரிந்த
பின்பும் கூட காதலுடன் ...........
« Last Edit: February 20, 2012, 12:49:10 AM by RemO »

Offline ooviya

முகப்புத்தகம்

யார் எழுதிய புத்தகம் ???
மை இட்டு எழுதாத புத்தகம்
கை எழுத்து இல்லாத புத்தகம்
திருட்டுதனமாக புரட்டி பார்க்கும் புத்தகம்
முடிவுரை இல்லாத புத்தகம்
இரவு பகல் படிக்கும் புத்தகம்
உயிர் இல்லாத இந்த  புத்தகம்
படித்தால்.....
இப்படி உயிர் இல்லாத ஜடமாக தான் நாம் காட்சி அளிப்போம்
« Last Edit: February 21, 2012, 01:07:00 AM by ooviya »
கண்களே ஆண்களை நம்பாதே


Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உன்னை நீங்க நினைத்தாலும்
என்னை நீங்காத ஒரே காதலன் நீதான்

இணையத்தளத்தில் உலா வரும்
உணர்வு கொல்லி நீதான் ...
உன்னை காதலித்தால் என்னாகும் ...'
ஒரு சுற்று உலா வந்தேன்
உன்னை அறிந்து கொள்ள ..,

முக புத்தகம் ..
அங்கே பல முகங்கள் ...
அறிந்தும் அறியாமலும்
புரிந்தும் புரியாமலும்....
நண்பன் ஒருவனின் நண்பர்கள் தொகை
ஆயிரத்தையும் தாண்டி
அடுத்த சதத்தையும் எட்டும் நிலை
அழைத்துக் கேட்டேன் யார் இவர்கள் ...
யாருக்கு தெரியும் ....
இணைப்பு அழைப்பு கொடுத்தார்கள்
இணைத்துக்கொண்டேன் என்றான் ...
ஆயிரத்தில் ஆருயிர் நண்பர்
ஆருமே இல்லையாம் ....


என் அழகான நாய்குட்டி
வாய தொறந்து வால் வால் நு கோரசுது
ஐ அம் ஹாப்பி ..... அட்டை படத்துடன்
அழகான ...... அழகான நாயின் படத்துடன் ...
அழகான பெண்ணின் அரை குறை முகப்பு தகவல் ...
அடித்துக்கொண்டு அறுபது பேர் விருப்ப தெரிவுப்பு ...
இல்லையென்றால் figure கோவித்துகொள்ளுமாம்...
தெரியாமல்தான் கேட்கின்றேன்
நாய் வள் என்று குரைக்காமல்
 ஹாய் டார்லிங் என்ற சொல்லும்....
இதெற்கெல்லாம் நாயை நன்றாக பார்க்க சொல்லி
நயமான தகவல் பரிமாற்றம் வேறு .....

நண்பனுக்கு முடியவில்லை
நாம் எல்லாம் பிரார்த்திப்போம்
நட்பு உள்ளம் ஒன்று  கேட்டும்
ஆறுதலுக்கு கூட ஆரும் ஏதும் சொல்லவில்லை
அதையும் விருப்பம் தெரிவிகின்றார்கள்
மனவருத்ததையும் விரும்பும்
மன நோய் பிடித்தவர்களா இவர்கள்....?

கையிலே மது
கருத்திலே மாது
வாயிலே ஊது ....
இடியே விழுந்தாலும்
இம்மியளவு கூட கேட்காமல்
இடி தாங்கியாக
செவிகளை அடைத்தபடி
இசை அடைப்பு ....

அன்பாக அழைக்கும் அன்னை குரல் கேட்காது
அதட்டி கூப்பிடும் தந்தையை கூட மதிக்காது
அழகான பிகர் சொல்லும்
அது பிகுரா இல்லை மிகுரா என்று
அறிந்து கொள்ளாமலே .....
அது சொல்லும்
அலோ.. என்ற சொல்லுக்காய்
அனுதினமும் ....
உணர்வற்ற உயிருள்ள பிணங்களாய்
இணையத்தின் முன் 
வாழ்வின்  இருள்அடிப்பு ....


இணையத்தில் உலாவரும்
இணையற்ற காதலன் இவன்
என் காதலனை விட
என்னை நேசிக்கும்
இணையற்ற காதலன் ...
ஆனால் இழப்பு நிறைய
காதலிக்கும் போது தெரிவதில்லை
இழப்பு .... காலத்தின் போக்கில்
கடுகதியில் தெரியவரும்
ஓர் இணையை காதலித்தாலும்
இணையத்தை காதலித்தாலும்
இழப்புகள் ஒன்று தான் ...


பாரதி இருந்திருந்தால் பாடி இருப்பான் ....

என்று தணியும் இந்த இணையத்தின் தாகம்
எங்கே முடியும் எங்கள் இளைன்கர்கள் மோகம் ...


« Last Edit: February 23, 2012, 01:53:31 AM by Global Angel »
                    

Offline thamilan

முகமறியாதவர்கள் ஒன்று கூடும்
இடத்துக்குப் பெயர் முகப்புத்தகம்
ஒவ்வொருவருக்கும் நூற்றுக்கு மேற்பட்ட நண்பர்கள்
அவர்கள் கருப்பா சிவப்பா
குட்டையா நெட்டையா
எதுவும் தெரிந்திருக்காது.
என்றாலும் நண்பர்கள்

60 வயது கிழவன் இங்கே
20 வயது என்று பதிந்திருப்பான்
50 வயது கிழவியும் இங்கே
திரிசாவின் படத்தை தன் படமாக‌
பதிவு செய்திருப்பாள்.

வயது தெரியாமல்
முகம் தெரியாமல் அவர்கள்
பதிவுகளை நம்பி
ஜொள்ளு விட்டு
முகப்புத்தகத்தின் முகத்தை
ஈரமாக்கும் இளைஞர்கள் ஏராளம்

மது போதை
புகை போதை இதை போன்றே
இந்த முகப்புத்தகமும் ஒரு போதை தான்
இந்த போதைக்கு அடிமையாகி
மனம் கெட்டு மதி கெட்டு
தூக்கம் கெட்டு இதில்
தொலைந்து போனவர்கள் நிறைய பேர்கள்

வேலை வெட்டி இல்லாத‌வ‌ர்க‌ளுக்கு
உண்மையில் இது ஒரு
ந‌ல்ல‌ பொழுதுபோக்கு சாத‌ன‌ம்.