Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 011  (Read 2405 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
     
நிழல் படம் எண் : 011

இந்த களத்தின்  நிழல் படத்தை RemO கொடுத்துள்ளார் .....  உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....

« Last Edit: October 11, 2018, 06:52:18 PM by MysteRy »
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
எம்மா உன்னால் காதலன் நானம்மா
என்னை முன்னாள் காதலன் ஆக்கியதேனம்மா
நெஞ்சுக்குள்ளே உன்னை பதித்தேன்  நான்
என் நெஞ்சை புதைத்து வதைத்தும், ஏன் ?
அடி உன் இதயம் காத்தேன் பொக்கிஷ பெட்டி போல்
என் இதயம் எறிந்தாய் குப்பை திட்டிக்குள்
என் காதலில் ஏதும் குறையை கண்டாயா ?
என் காதலையே குறையாய் கொண்டாயா ?
மறந்தாலும் உன்னை மறக்க மாட்டேன் நான்
இறந்தாலும் நினைவை இழக்க மாட்டேன் நான் ...

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உனக்காக நான் அனுப்பிய
என் இதயத்தை
ஏற்க மறுத்து
திருப்பி விட்டாய் ....

உனக்காக நான் அனுப்பியது
என் இதயத்தை அல்ல
என் மனதுனுள்
உனக்காக நான்
சேமித்து வைத்த  கனவுகளைத்தான்

அந்த கனவில்
நீ இருந்தாய்
உன் நினைவுகள் இருந்தது
நான் இருந்தேன்
நம் கனவுகள் இருந்தது
நம் குழந்தைகள் இருந்தார்கள்
நம் எதிர்காலம் இருந்தது..

இன்னும் எது இல்லை என்று
திருப்பிவிட்டாய் என் இதயத்தை
உன்னால் உன் நினைவுகள்
சுவசிக்கபட்ட என் இதயம்
உனக்கே குப்பையாக தோன்றிய பின்
எனக்கு மட்டும் கோபுரமாகுமா..?
அதுதான்
உன்னால் திருப்பபட்டு
என்னிடம் வந்த என் இதயத்தில்
உன் நினைவுகளை மட்டும் எடுத்துகொண்டு
முகுதியை  குப்பை தொட்டியில் போடுகின்றேன்

என்னிடம் இருந்தால் வேறு எவனாவது
கவர நினைப்பான் ...
அதுவே குப்பையில் இருந்தால்
எவனுமே தீண்ட மாட்டன் ..

உன் நினைவுகளை சுமந்தபடி நான்
என் மன கனவுகளை சுமந்தபடி
என் இதயம் குப்பையில் .... 
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மரிக்கும் காதலுக்கு
மத்தியில் மறக்க
முடியாத காதல் நீ

மண்டியிட்டு காதலித்து
மனதைத் திறக்க
மனதை அறியாமல்
மறக்கச் சொல்வது முறையோ??

பத்து வரிகள் எழுதினால்
வலிக்கின்ற  கைகள்,
இன்று
வலியோடு
உன் நினைவுகளை
பக்கம் பக்கமாக
எழுதியும்
வலிக்கவில்லை
வலி இதயத்தில்
என்பதாலோ....????

மறு மொழி பேசாமல்
மௌனத்தை அளித்திருந்தாலும்
தாங்கி இருப்பேன்
இதயத்தை
தூக்கி எரிந்து
என் காதலை..
தூக்கிலிட்டு விட்டாய்....

என் கண் முன்னே நீ வர 
பார்வை இருந்தும்
குருடாக்கி கொள்கிறேன்
உன்னை பார்க்க கூடாது
என்பதற்காக...

கண்களை கட்டுபடுத்திய
என்னால்
இதயத்தை
கட்டுக்குள் வைக்க முடியாமல்
தோற்று போகிறேன்

கண்கள் உன்னை காணும் முன்
இதயம் உன்னில்
நிலைக் கொண்டு
என்னை கொன்றுவிடுகிறதே

வார்த்தை  ஜாலம்  பேசி
வலம் வரும்
காதலுக்கு மத்தியில்
ஜாலம் அறியா என் காதல்
இன்று குப்பை தொட்டியில்...


உயிரோடு புதைக்கும்
விந்தை கற்றவளே
கொன்று விடு
காதலை மட்டும் அல்ல
என்னோடு சேர்த்து
உன் நினைவுகளையும் ;) ;)
« Last Edit: January 22, 2012, 11:07:58 PM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
நொறுங்கிய இதயம்
[/b]

பேருந்து பயணம்...........
தினம் பயணிக்கையில்
என்னையே விழுங்கி விடும் பார்வை
எதற்கும் பதில் சொல்லா மௌனம்
என்னை யாரேனும் கடிந்து கொண்டால்
எரித்துவிடும் கோபம்
ஒவ்வொரு நிறுத்ததிலும்
படியையே பார்க்கும் ஏக்கம்
இன்றேனும் பேசிடுவோம் என்ற தயக்கம்
என் இருக்கையை   கடக்கும்போது
உன்னுள்ளே வெக்கம்
நண்பனோடு  சேர்ந்து செய்யும் சேட்டைகளுக்கு
தூரத்திலிருந்தே புன்னகை
இதை எல்லாம் மனதில் வைத்துதானடி
என் இதயத்தை தூது அனுப்பினேன்
எனக்காக ஒரு இதயம் துடிக்கிறதே
என்று இருமாந்திருந்தேனடி
உன்னை என்னவளாக்கி கொள்ள
கர்வம் கொண்டிருந்தேனடி
எதற்கும் பதில் சொல்லா உன் மௌனத்தோடு
விட்டிருந்தால் உயிர் வாழ்ந்திருபேனடி
நீ கிழித்து எரிந்தது கடிதத்தை அல்ல பெண்ணே
 என் இதயத்தை
நீ குப்பையில் வீசியது உனக்கு காகிதமாக
இருக்கலாம் ஆனால் விழுந்தது
என் இதயமாயிற்றே
என் ரகசிய பெண்ணே..............?


உங்கள் - சுதர்சன்சுந்தரம்
« Last Edit: February 08, 2012, 08:21:32 PM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்