Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 008  (Read 2527 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
                          நிழல் படம் எண் : 008

இந்த களத்தின் நிழல் படத்தை தோழி சுருதி கொடுத்துள்ளார் ..... இந்த அழகிய படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....
                               
« Last Edit: October 11, 2018, 06:47:10 PM by MysteRy »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
சின்னம் சிறு வயதில்
சிறகடிக்கும் சிந்தனைகள்
சில்மிசங்கள் செய்து
செல்லமாய் அன்னையிடம்
திட்டு வாங்கும் செல்ல குறும்புகள்
இன்று நினைத்தாலும்
இனிக்கின்ற எண்ணங்களே ...

அன்று ஒருநாள்
அழகான மழை நாள்
வானம் இருண்டு ..
நண் பகலையே
மாலை பொழுது போல்
இருட்டடித்து இனிமையாக்கி கொண்டது ..

பகலவனுக்கு ஓய்வு ...
அந்த பகல் அவனுக்கு ஓய்வு
எனக்கும் ஓய்வு...

மழை எப்போ வரும்
அடிகடி யன்னல் வழியே விழி பார்வை செல்லும்
அப்படியென்ன பார்க்கிறாய்
அடைமழை பெய்யும் போல
அங்க இங்க போகதே
மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும்
இருமல் வரும் ..... தொடர்ந்தது
அன்னையின் மிரட்டல் பட்டியல் ....

இடியும் இடித்தது மின்னலும் கிழித்து ..
அம்மா முமுரமாக சமையல் ..
நானோ பின்புறமாக நழுவல் ...

வீட்டு முற்றத்தில்
அண்ணார்ந்து பார்த்தபடி
முதல் துளிக்காய்
முழுவதும் ஏங்கினேன் ...
முதல் துளி முழு ஆர்ப்பரிப்புடன்
என் முதல் தோலையும் தாண்டி
ஊசியாக குத்தியது ...
அம்மாவின் மிரட்டல்
அவசரமாய் நினைவில் வந்தது
அதை எல்லாம் கேட்டால்
நான் அன்று சுட்டிப் பெண் இலையே ...

பெரு மழை
பெய்யோ பெய்யென்று பெய்தது
கிணற்று கப்பியில்
தண்ணி இழுத்து குளிக்கும்
கஷ்டம் இல்லது ...
வர்ண பகவான் வாரி இறைதான்
வஞ்சனை இல்லது
மழையின் நீர் துளைத்து ஆடினேன் .
சில்லென்ற காற்று
என் சிறு உடலில் நடுக்கம் ..
பளீர் என்ற மின்னல்
என் பார்வையினில் சுருக்கம்
டும் டம் டும் ...
இடி இடிக்கும் ஓசை
என் செவிகளுக்கு சினம் ...

சோ என்ற மழை....
சொல்லவொண்ண சந்தோஷத்தில்
சுற்றி சுற்றி ஆடினேன் ..
அவசரமாய் ஓடி போய்
கையில் கிடைத்த கொப்பி ஒன்று
ஐந்தாறு கிழித்து வந்து
காகித ஓடம் விட்டேன் ...
டைடானிக் கப்பல் விட்ட சந்தோசம் ..
நான் செல்லாமை வளர்த்த நாய் குட்டி
மழையில் நனைந்து உடலை சிலிர்த்து
ஓடி வந்து என்னுடன் ஒட்டிக் கொண்டது ..
அதையும் இழுத்து ...
ஆஹா ஓஹு ம்ஹும்  என்று
அன்று பிரபலமாய் இருந்த சினிமா பாடலை பாடினேன்
எனக்குள் நான் அந்த கதாநாயகி ஆகிவிட்ட எண்ணம் ...

என் பாடல் ... இல்லை கத்தல்
என் அன்னையின் செவிகளுக்கு
இடியையும் கிழித்து சென்று
கணீர் என கேட்டதோ...
கையில் தடியுடன் ...
கள்ள குட்டி உள்ள வாடி
இலைஎண்டா தெரியும் சேதி ..
ஆவேசமாய் ஆமா ..

அயோ அயோ ...
மழையில் நனையும்
ஆசையும் விடவில்லை ..
அம்மா தடியின் பயமும் விடவில்லை
.மழையா.. தடியா...மனதுள் போராட்டம் ...
மழை தோற்று தடி வென்றது ....
உள்ளே ஓடினேன் ...

காதை பிடித்து
காய்ச்சல் வரட்டும் தெரியும் சேதி என்றாள்...
அது ஒன்றும் வராது
எனக்குள் நானே சமாதானமானேன் ...

இரவும் வந்தது கூடவே குளிர் சுரமும் வந்தது ..
வழக்கம் போல அம்மாவின் திட்டுகள் ..
அர்ச்சனையாய் விழுந்தது ...
அப்போது ஓர் குரல்
இந்த கொப்பியில யார் பேபர் கிழிச்சது ....

அய்யோ ... மாட்டி கிட்டேனா ....
நானில்லை அண்ணா ..
என் முந்திரி கொட்டை தனமே
என்னை கட்டி கொடுக்க
நங்குன்னு நடு மண்டையில்
நச்சுனு இடி வைத்தான்
ஓவென்று அலறினேன் ...
இனிமேலும் மழையில்ல
நனையுறது இல்ல ...
சப்தமாக சபதம் போட்டேன் ....

அப்போது அம்மா ..
பெரிய மங்கம்மா சபதம்
மறுக்க மழை வந்தா
மாயமாய் போய்டும் ...

அம்மாவின் சொல்கேட்டு
அனைவரும் சிரித்தனர் ...
என்ன பார்குறிரிங்க....
நானும்தான் சிரித்தேன்
இந்த சபதம் ஒன்றும்
எனக்கும் புது இல்லை
என் வீட்டுக்கும் புதுசில்ல ...

மழை என்றால் எனக்கு
மனம் கவர்ந்த நிகழ்வுதான் ..
எனக்கு மட்டுமல்ல
இதை படிக்கும் உங்களுக்கும்
அப்படி தானே ....?
« Last Edit: November 18, 2011, 05:40:08 AM by Global Angel »
                    

Offline Rainbow

ஒருதுளி உன்னை உடைத்து
உடலெங்கும் ஊடுருவி
உன்னை நீயே
உதறிக் கொண்ட போது
என்னையும் அறியாது
ஏக்கம் கொண்டது
என் மனது ....

உன்னோடு சேர்ந்து
மழை நீராடும்
மார்க்கம் கேட்டு
என் மனதும் மண்டியிட்டு
பிரார்த்தித்தது ...

நீதான்
என்னை திரும்பியும் பார்பதிலேயே...
நாந்தான் உன்னை ரசிக்கின்றேன் ..
நான் ரசிப்பது தெரிந்தால்
மழை நாட்களிலாவது
உன்னை காணும் பாக்கியம்
அற்று போய்விடும் என்
ஆருயிர் தோழியே ...
உனக்குள் நீ சுருங்காமல்
நீ நீயகமாறி
உன்னையே மறக்கவைக்கும்
மழைக்கு என் மனதார நன்றி ..

Offline RemO

சென்ற ஆண்டு என் தாயின் அன்பு
தனக்கு வேண்டும்
என சூழ்ச்சி செய்து
அவளை  அந்த சுயநலம் பிடித்த இறைவன்
அவனிடம் அழைத்துகொண்ட போது
தனியாய் அழுத என்னுடன் சேர்ந்து கண்ணீர் விட்டாய்

வீட்டுப்பாடம் செய்யாததால்
தண்டித்த குரு மீது கோபம் கொண்டு
கொதித்துக்கொண்டிருந்த போது
கொதித்த என்னை குளிரவைக்க
என்மீது விழுந்து குமுறிய உள்ளத்தை
குதுக்கலாமாக்கினாய்
 
நான் நன்றாக படிக்க வேண்டும் என்ற
என் தாயின் ஆசைக்கேற்ப்ப
இன்று முதல் மதிப்பெண் பெற்றபோது
என்னை கட்டி தழுவி வாழ்த்தி
மகிழ ஓடோடி வந்திருக்கிறாய்
பெற்றவளைப் போல்

Offline Yousuf

வானம் பார்த்தத பூமியிலே
குடிதண்ணீர் இல்லாத நேரத்திலே
மக்கள் மனசை குளிரவைக்க...
மழையும் வந்தது எங்கள் ஊரினிலே!

மழலை பருவ என் தங்கை
மழையை பார்த்தால் அதிசியமாய்
மழையில் இறங்கி ஆனந்தமாய்
அவள் துள்ளி குதித்து ஓடுகையில்
வீட்டில் இருந்த என் அன்னை
அதை பார்த்துவிட்டு கூப்பிட்டால்
என் செல்லமே மழையில் இறங்கி நனையாதே...
காய்ச்சல் வரும் என்று எச்சரித்தாள்
இதுவே பார்புகழும் தாய் அன்பு!

மழையை பிரிய மனமில்லா
மழலை பருவ என் தங்கை
வந்தால் வீட்டுனுள் ஏக்கத்தோடு
எங்கள் வீட்டின் முற்றத்தில் அமர்ந்தபடி
மழையின் அழகை ரசித்தாலே!

சின்னஞ்சிறு வயது நினைவுகளை
மீண்டும் ஒரு மழை வந்து நினைவூட்ட
மழையின் அழகை ரசித்துக்கொண்டே
என் தங்கையும் நானும் இந்த நிகழ்வுகளை...
மீண்டும் ஒருமுறை பகிர்ந்து கொண்டோம்!!!