Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 007  (Read 3430 times)

Offline Global Angel

                                   நிழல் படம் எண் : 007

இந்த களத்தின் நிழல் படம் என்னால் கொடுக்கப்பட்டுள்ளது ..  ..... இந்த அழகிய படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....



« Last Edit: October 11, 2018, 06:46:44 PM by MysteRy »
                    

Offline Global Angel

உன் நினைவுகள் எனும்
ஆணிகள் கொண்டு
என் இதய சிறகுகள்
சிலுவையில் அறையப்பட்டு
சிதிலமாய் கிடக்கின்றது ...

உன்னை உனக்காகவே
நேசித்தவள் ...
உன்னிடம்
உள்ளார்ந்த அன்பை மட்டும்
எதிர் பார்த்தவள் ..
உனக்காக பேசி
உனக்காக அழுது
உனக்காக கோபம் கொண்டு
உனக்காக சிரித்து
உன்னை நினைத்தே
வாழ பழகிவிட்டவள் நான்..

அறிந்து தெரிந்தும்
என்னை அணு அணுவாய்
வதைக்க உன்னால் மட்டுமே முடிகிறது..
ஒவொரு தடவையும்
உன்னால் காயப்பட்ட வடுக்கள்
உன் ஆறுதல் வார்த்தைகள் இன்றியே
அதுவாக ஆறி விடுகிறது
காரணம் உன் மேல் கொண்ட காதலால்

என்ன செய்தால் உனக்கு பிடிக்கும்
எப்படி நடந்தால் உனக்கு பிடிக்கும்
என்ன பேசினால் உனக்கு பிடிக்கும்
இதையெல்லாம் சிந்தித்தே
என் மூளையின் செயல்திறன்
அடிக்கடி ஓய்வுக்கு விண்ணப்பிகின்றது...

ஒவொன்றாக
உனக்காக பார்த்து பார்த்து செய்தாலும்
உன் பார்வையில் அவை
ஏனோ தீண்டத்தகாத செயல்கள் தான் ...
அதுதான்  திரும்ப திரும்ப என்னை
சிதிலமாக சிதைகின்றாய்

உன்னை நேசிக்கும் என்னை
என்னை நீ நேசிகாது போனாலும்
என்னை காயப் படுத்தவாவது  நீ வேண்டும்
அதனால்தான் உன்னை சுற்றி வருகிறேன் ..

என் இதயத்தை பார்
உன்னால் எத்தனை முறை
கிழிக்க பட்டாலும்
சிலுவையில் அறையப்பட்டாலும்
 சிறகடிக்க முடியாது
சிறகுகள் சிறைவைகப்பட்டாலும்
துடிக்கத் தவிக்கிறது ..
அங்கே வாழ்வது நான் அல்ல  நீதான்
உன்னால் அடிக்கப்படும்
ஒவோர் ஆணியும்
எனக்குள் இருக்கும் உனக்கு  அடிபதுதான் ...
அதனால்தான் என் இதயம்
இன்னும் துடிக்கிறது
உன்னை காப்பதற்காய் ....

என் சிறகுகள் உதிருமுன் வா ...
என் ஜீவன் கருகுமுன் வா ..
என்றோ ஒரு நாள்
என்னிடம் நீ வருவாய்
அன்று உன் இதயத்தை
உன்னிடம் தந்து
உயர பறக்கும் இந்த உயிர் அற்ற இதயமும் ..

Offline Rainbow

எதற்கு என்
 சிறகுகளை சிறை  வைத்தாய்
 உன்னை மறக்க முடியாமல்தான்
உன்னை மறுபடியும்
சுற்றி வருகிறேன் ..

உன்னால் சுக்கலாக
கிழிக்கப் பட்ட
என் இதயத்தில்
காயத்தின் வடுக்கள்
ஆறுவதற்கு முன்னர்
அதன் மேல்
கூரிய ஆணி கொண்டு
குத்துகின்றாய் ...

என்னை நீ
நேசிக்காதது உன் உரிமையோ
அது போல்
உன்னை நேசிப்பது என் உரிமை ..
உன்னால் ஒரு நூறு
ஆணிகள் அடிக்கப்பட்டாலும்
உன் மேல் அசையாத
அன்புடன் நான்  என்றும் ..

Offline fernando



உன் விழி பார்வை பார்ப்பது அந்த ரோஜாவைய ,
அல்லாது அதன் பிம்பயாதிய ,
உனகுளே சக்தி இருக்கு ,அதை வைத்து வேண்டிடு
இந்த உலகை ,   ரோஜாவை முட்களால் காக்கும்
கடவுள்   உனயூம் காப்பன்
வேண்ட்டு வாழ்வை வாழ்த்திடு, இந்த பூமயில் மனிதனாய் ,
இப்படிக்கு 
அன்பன் பெர்னாண்டோ

Offline thamilan

சின்னச்சிறு வயது முதல்
கவலை தெரியாமல்
கபடு அறியாமல்
மனசுமை ஏதும் இல்லாமல்
குடும்ப பாரம் இன்றி
சுதந்திரமாய் சுற்றித் திரிந்தேன்

காலம் பருவ‌ம் என்ற பெயரில்
க‌ன‌வுகளை வ‌ள‌ர்த்த‌து
காத‌ல் என்ற‌ உண‌ர்வு
சிற‌கு விரிக்க‌த் தொட‌ங்கின‌

ப‌ருவ‌ வ‌ய‌தில் காத‌லும்
ஒரு போதை தான்
போதை த‌லைக்கேறிய‌தும்
யார் எது சொன்னாலும்
காது கேட்காது

நானும் அப்ப‌டித்தான்
காத‌லை எதிர்த்த‌ பெற்றோரை எதிர்த்து
காத‌ல‌னின் பின் ஓடினேன்
பூவில் தேன் குடித்த்த‌தும்
வ‌ண்டு ப‌ற‌ப்ப‌து போல‌
காம‌ம் அட‌ங்கிய‌தும்
காத‌லனும் ம‌றைந்து விட்டான்

சிற‌குக‌ள் பிய்க்க‌ப்ப‌ட்டு
ப‌ற‌க்க‌ வ‌ழியின்றி
பெற்றோரிட‌மே ச‌ர‌ண‌டைந்த்தேன்
காத‌ல் த‌ந்த‌ வ‌லியை விட‌
இத‌ய‌த்தில் ஆணிய‌டித்தாற் போல‌
ஓடுகாலி என்ற‌ பட்ட‌ம்
இத‌ய‌த்தை சின்னாபின்னமாக்கிய‌து

காத‌ல் இனிமையான‌து தான்
அந்த‌க் காத‌ல் உண்டாக்கும்
வ‌லியும் வ‌டுவும் கொடுமையான‌து