Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது
(Moderator:
MysteRy
) »
ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 006
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 006 (Read 3860 times)
Global Angel
Classic Member
Posts: 23906
Total likes: 576
Total likes: 576
Karma: +0/-0
என்றும் உங்கள் இனிய இதயம்
ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 006
«
on:
November 03, 2011, 04:11:36 AM »
நிழல் படம் எண் : 006
இந்த களத்தின் நிழல் படத்தை தோழி சுருதி கொடுத்துள்ளார் ..... இந்த அழகிய படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....
«
Last Edit: October 11, 2018, 06:46:16 PM by MysteRy
»
Report to moderator
Logged
fernando
Newbie
Posts: 36
Total likes: 2
Total likes: 2
Karma: +0/-0
Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
«
Reply #1 on:
November 04, 2011, 05:39:41 AM »
உன் விழி பார்வை பார்ப்பது
அந்த ரோஜாவைய ,
அல்லாது அதன் பிம்பயாதிய ,
உனகுளே சக்தி இருக்கு ,
அதை வைத்து வேண்டிடு இந்த
உலக , ரோஜாவை முட்களால் காக்கும் கடவுள்
உனயூம் காப்பன்
வேண்ட்டு வாழ்வை வாழ்த்திடு
இந்த பூமயில் மனிதனாய்
இப்படிக்கு ,
அன்பன்
பெர்னாண்டோ
«
Last Edit: November 14, 2011, 06:50:15 AM by fernando
»
Report to moderator
Logged
maha
Jr. Member
Posts: 60
Total likes: 6
Total likes: 6
Karma: +0/-0
Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
«
Reply #2 on:
November 04, 2011, 09:31:18 AM »
நீ உறங்கினாலும் ,உறங்காமல்
துடிக்கிறேன் அன்பே!!
உன் நினைவில் நான்!!
எனக்கு பதிலாக நான் எழுதிய புத்தகம்
உன் அருகில்!!
உன் ஸ்பரிஷம் பட அந்த புத்தகம்
எத்தனை நாள் ஏங்கியதோ
என்னை போல்!!
நீயும் நானும் சேர்ந்து படிக்க
வேண்டிய பக்கமடி அது!!
அதை துயில் கொண்டு
தனியே கனவில் படிகின்றாய்!!
என்னை நிஜத்தில் கொள்கின்றாய்!!
என்று அறிவாய் எனது
மனதை!!
இந்த புத்தகத்தை போல்
உன் மனதையும் சற்று
திறந்து வை- அன்பே!!
காத்திருக்கிறேன் அன்பே!!
அதை நான் படிக்க!!
Report to moderator
Logged
Yousuf
Golden Member
Posts: 3159
Total likes: 46
Total likes: 46
Karma: +0/-0
Gender:
Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
«
Reply #3 on:
November 04, 2011, 07:28:49 PM »
பெண் போகப்பொருளாய் அடிமையாய்
கருதிய காலம் மலையேறி...
பெண்ணும் சாதிக்க பிறந்தவள் தான்
என்று சாதித்து காண்பிக்கும் காலம் இது...
அடுப்பூதும் பெண்ணிற்கு படிப்பெதற்கு
என்று கூறிய காலம் மலையேறி...
பெண்ணாலும் சாதிக்க முடியும் என்று
நிருபித்து காண்பித்த காலம் இது...
கல்வியை வளர்ப்பது கடமை என்று
கல்விக்காய் வாழ்க்கையை அர்ப்பணித்த...
கண்ணியமிக்க பெண்களும் புவியிலே
புகழ் பெற்று வாழ்ந்திட்ட காலம் இது...
படிப்பே எனக்கு குறிக்கோள் என்று
புத்தகத்தை அணைத்து உறங்கும் பெண்ணே...
நீயும் புவியில் புகழ் பெற்றிட
உன் கல்வியை தரமாய் கற்றுக்கொள்!!!
«
Last Edit: November 04, 2011, 07:34:27 PM by Yousuf
»
Report to moderator
Logged
ஸ்ருதி
Classic Member
Posts: 5778
Total likes: 116
Total likes: 116
Karma: +0/-0
நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
«
Reply #4 on:
November 05, 2011, 08:11:22 AM »
உனக்காக கவி எழுதி
கண் அயர்ந்த பொழுதில்
கனவில் நுழைந்து
தூக்கத்தை கலைக்கும்
கள்வன் நீ ...
உயிராய் உன்னை நினைத்து
உன்னை என்னுள் சிறை வைத்து
நிஜமாய் நீ இருக்க
நிழலைப் போல
உன்னுள் என்னை புதைத்துக்கொண்டு
சிலிர்த்து போகும் என் கனவுகளில்
புல்லரித்து போகின்ற ரோமங்களும்
துடித் துடித்து தவிக்கின்ற இதயமும்
அமைதியாய் இருந்திட
அன்பாய் ஒரு வார்த்தை சொல்வாயா??
இரவுகள் எல்லாம் உன் கனவால்
தூக்கத்தை விரட்ட
பகல்கள் எல்லாம் உன் நினைவில்
துக்கத்தை தாங்கி செல்ல
மௌனமாய் நீ...
ஒவ்வொரு கனவிலும்
அருகே நீ இருக்க
முத்தம் கேட்டு இம்சிக்கும்
என்னை
சலிக்காமல்
கொஞ்சும் உன்னை
அணைத்து துடித்து
நேசத்தை காட்டும் தருணத்தில்
கலைந்து போகும் கனவை
கொல்ல துடிக்கிறேன்
முற்று பெறாத கனவாய்
என் காதல்...
உனக்காக
எழுதிய கவிதைகள் எல்லாம்
என் அருகே புத்தகமாய்..
பிழைத்திருத்தம்
செய்ய வாசித்தபொழுது
கவிதையின் வரிகளில்
மயங்கி கனவுலகில்
மிதக்க
உன் கவியை
நீ படிக்கும் தருணத்தில்
நீயும் உணருவாய்
என் வரிகளின் வலிமையை..
வா கனவுலகில் கை கோர்த்து
காதல் கவிதை
நிஜமாய் வரைவோம்
ஆயிரம் வார்த்தைகள் கொண்டு
கவி எழுதினாலும்
நீ தரும் "உம்மா" என்ற
வார்த்தைக்கு ஈடாக
என் கவிதை வரி
அமைக்க முடியாமல்
வெக்கத்தில் நான்...
என் கனவுக் காதலனே
இனிக்கும் உன் நினைவுகள்
சிலிர்க்கும் என் கனவுகள்
கவியை படிக்க வந்துவிடு
கண்விழிக்கும் பொழுது
என் அருகில் நீ இருக்கும்
அந்நொடியில்
என்னை மறந்து
காலம் முழுவதும்
உன் கையில்
கவிதை புத்தகமாய்
நான் இருக்க
தினம் ஒரு கவி படை(டி)த்திடு
தினம் ஒரு கவி படித்திடு
என் காதலைச் சொல்ல...
உனக்காக மட்டும்
என் "கவி"தைகள் காத்திருக்கும்...
«
Last Edit: February 16, 2012, 03:48:20 PM by ஸ்ருதி
»
Report to moderator
Logged
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 31
Total likes: 31
Karma: +0/-0
Gender:
Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
«
Reply #5 on:
November 06, 2011, 12:28:53 AM »
துயில் கொள்ளும் என் தேவதை..
கையில் நம் காதல் புத்தகம்
நாம் உறங்கும் போதும்
நாம் காதல்
உறங்கமால் விழித்திருக்க வேண்டி
கனவிலும் எடுத்துசெல்கிறாயா??
எத்தனை முறை படித்தாலும்
முடியாத புத்தகமல்லவா
நம் காதல்
ஆதலால் தான் கனவிலும் படித்து
முடிக்க முயற்சிக்கிறாயோ
முடிந்தால் எனக்கும் சொல்.
நீ துயிலும் அழகை
ரசிக்க எனக்கு விருப்பமில்லை
ஆம்,
நான் தூங்காமல் விழித்திருந்தால்
உன்னை கனவிலும் காதலிப்பது யார்??
உறங்காபோது
ஊராருக்கும் உற்றாருக்கும்
பயந்து காதல் வளர்க்கும் நமக்கு
தடையற்ற இடம் கனவு தானே
நிஜத்தில் உன் எதிரே நான் நின்றாலும்
பார்த்தும் பார்க்காமல் விலகும் நீ
கனவில் மட்டும் என்னையே பார்க்கிறாய்
நாள் முழுவதும் உன்னருகில் இருந்தாலும்
ஒரு வார்த்தை பேச ஓர்ராயிரம் முறை
யோசிக்கும் நீ
என்னை யோசிக்கவிடமால் பேசுவது
இங்குமட்டும் தானே
கனவில் நீ தரும் காதலுக்காக
நீ துயில் கொள்ளும் அழகை மட்டுமல்ல
எதை வேண்டுமானாலும் நான் இழப்பேன்
என் காதலை தவிர..
Report to moderator
Logged
Global Angel
Classic Member
Posts: 23906
Total likes: 576
Total likes: 576
Karma: +0/-0
என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
«
Reply #6 on:
November 06, 2011, 02:13:25 AM »
பளபளக்கும் ஜிகினா பட்டும்
பட்டுப்போல் மென்மையான
மயிலிறகும் ...
பார்த்தாலே பரவசமூட்டும்
அழகிய ரோஜா மலரும்
இந்த ரோஜாவிற்கு
தூக்கத்திற்கு பதிலாக
துவளும் வேதனைகளையே
பரிசளிகின்றன .....
உன்னுடன் பழகிய நாட்கள்
நீ பேசிய பேச்சுக்களும்
பார்த்த பார்வைகளும்
பஞ்சன்ன படுக்கை விரிப்பு
உன்னால் அப்பப்போ
அரிதாக கேட்கப்படும்
நலன் விசாரிப்புகள்
மயிலிறகின் தீண்டலாக ...
எனக்காக நீ சிரிக்கும்
சிரிப்புகள் யாவும்
ரோஜா மலர்களாக
இவை அனைத்தையும்
என் படுக்கையாக கொண்டு
பல இரவுகள் தூங்கினேன் அன்று
இன்று இவை யாவும்
முட்க்களாகி முதுகை
கிழிக்கின்ற போதும்
முகம் சுளிக்காது உறங்குவேன்.
உன் நினைவுகள் முட்களாக இருந்தாலும்
முத்தங்களாக இருந்தாலும்
எனக்கு சுகமே.......
இருந்தும் இன்று ...
உன் அசைவுகளை உள் வாங்கி
உன் நினைவுகளை படமாக்கி
அதை அனைத்து தூங்குவதில் இன்பம்
நிஜத்தில் நீ தூரத்தில் இருந்தாலும்
நினைவில் என் அருகிலே..
ஓவியமாயும் உயிராயும்
கலந்திருக்கும் நீ
என் கனவுகளிலாவது
என் காதலின் ஆழத்தை
புரிந்து கொள்வாய் என்று
தினமும் நிழல் திரைகளை
தீண்டியவாறே துயில் கொள்கின்றேன் ...
என்ன பயன்
கனவில் கூட
என்னை காதலிக்க மறுக்கின்றாய் நீ
இல்லைஎன்றால் என் கனவுகளில்
உன் பிம்பத்திற்கு தடை விதிதிருப்பயா ..?
உன்னை காதலிக்க தவிர்த்ததில்லை
உன்னை காண்பதையும் தவிர்த்ததில்லை
ஆனால் இன்று விழித்திருப்பதை தவிர்க்கிறேன்
என் கனவுகளில் உன்னை காண்பதற்காய் ....
ஸ் ஸ் .. சத்தம் போடதே....
தூங்க வேண்டும் நான் ..
இன்றாவது என் காதலன்
என் கனவில் வருவான் ....
நம்பிக்கையில் ........ ...
Report to moderator
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது
(Moderator:
MysteRy
) »
ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 006