Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 004  (Read 2974 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
                              நிழல் படம் எண் : 004

இந்த களத்தின்  நிழல்  படம்   என்னால் கொடுக்கப் பட்டுள்ளது ..... இந்த அழகிய  இதயத்திற்கு     உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....


« Last Edit: October 11, 2018, 06:45:17 PM by MysteRy »
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
முள்வேலிக்குள்
என் இதயம்...
நெருங்க முடியாதென்றேன்
ஆணவம் வேண்டாமடி
உன்னை அடக்க-என்
அரை நொடி பார்வை
போதும் என்றாய்..

இன்று வரை உன்னைக்
கண்ணோடு கண்ணாக
பார்க்க முடியாமல் நான்...

உனக்கே அறியாமல்
உன்னை ரசித்தேன்...
என்னை அறியாமல்
உன்னில் விழுந்தேன்..

நீ சொன்னது நிஜமோ??
சுட்டி இழுக்கும்
உன் பார்வை வலையில்
விழுந்துவிடக் கூடாதென
தினமும் ஒரு
முகத்திரை எனக்கு...

நீ பார்க்காமலே
உன் கண்களுக்குள்
கைதியாய் நான்...

நொடிக்கு ஆயிரம் வார்த்தை
பேசுபவள்- இன்று
உன் முன் மட்டும் 
ஊமையாய் வார்த்தையின்றி
தவிக்கிறேன்..

தமிழில் அத்தனை வார்த்தையும்
எனக்கு மட்டும் அந்நியமாய்
போனதோ....

ஒவ்வொரு முறையும்
நீ என்னை அழைக்கையில்
என் பெயரைக் கூட ரசிக்க
தொடங்கிவிட்டேன்...
உன் உதடு பட்டு
அழகாய் போனது என் பெயர்...

காதல் வந்தால் கவிதை வருமாம் ??
பைத்தியங்களின் உளறலென
கேலி செய்து கிண்டல் அடித்து
அழவைத்து பார்த்தேன்
என் தோழிகளை...

இன்று உனக்காக கவி
எழுத நினைத்தபோது
வார்த்தை பஞ்சம் எனக்கு...

காந்த பார்வை நீ வீசுகையில்
இரும்பு முள்வேலிக்கூட
என்னாகும்...
என்னை அறியாமல்
என் இதயத்தை இழந்தேன்...

என்னை இடமாற்றம்
செய்து விடு..
உன் கண்களில் இருந்து
இதயத்திற்கு நிரந்தரமாய்... :-* ;)

« Last Edit: October 19, 2011, 07:54:55 PM by Shruthi »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Yousuf

சர்வாதிகார ஆட்சியாளர்களால்
மண்ணின் மீது மோகம் கொண்ட
மாங்காய் மடையர்களால்...
இன வெறி பிடித்த தலைவர்களால்
சுயநலம் கொண்ட சுயநலவாதிகளால்
எந்த பாவமும் அறியாத அப்பாவி இதயங்கள்
ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு நாளும்
உலகின் ஏதாவதொரு இடத்தில்...
தங்கள் உயிர்களை பரிகொடுக்கின்றன...!!!

தமிழ் ஈழத்திலே அப்பாவி இதயங்கள்
முள்வேலி கம்பிக்குள் அடைபட்டு கிடக்கும் அவலம்...
ஈராக்கிலே மண்ணின் மைந்தர்கள்
அடிமைகளாக்கப்பட்ட அவலம்...
ஆப்கானிலே தேசத்தின் சொந்தக்காரர்கள் பயங்கரவாதிகளாகவும்
நாட்டை ஆக்கிரமித்த நாய்கள் நல்லவர்களாகவும்
சித்தரிக்கப்பட்ட அவலம்...
சோமாலியாவில் பட்டினியில் வாடும் இதயங்களை
கண்டுகொள்ள ஆள் இல்லாத அவலம்...
இதையெல்லாம் கண்டும் காணமல் இருக்கும்
ஐக்கிய நாடுகள் சபை இல்லாமல் இருப்பதே நலம்...!!!
« Last Edit: October 21, 2011, 06:42:51 AM by Yousuf »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
என்ன பார்க்கிறாய்
அதே இதயம்தான்
அதே இடம் தான் ....

அன்று
என் ஆசைகளை சொல்லி
என் அன்பானவன் உனக்கு
என் இதயத்தை பரிசளித்தேன் ..
இதுவே இயல்பென்பது போல்
என் இதயத்தை மறுத்து விட்டாய் ....

உன்னால் மறுக்கபட்ட இதயம்
உன்னால் வெறுக்க பட்ட இதயம்
இன்று வரை உன்
நினைவுகளை சுமந்தபடி
அதே இடத்தில்....

ஏன் இந்த இரும்பு முள்வேலி...
இனம் புரியாத இயல்பு விளங்காத
ஐயம் உன்னுள்
அறிவேன் நான் ...

உன்னால் நிராகரிக்கபட்டது
என் இதயம் மட்டுமல்ல
என் கனவுகள் என் எதிர் காலம்
மொத்தத்தில் என் வாழ்க்கை ..நீதான்

எனக்கு நானே போட்டுக்கொண்ட சிறை
உன்னை காணும்வரை சிறகடித்து பறந்த ஏன் இதயம்
இன்று சிறைக்குள்
இருந்தும் நான் கலங்கவில்லை ...

பூட்டிய என் இதயத்தை திறக்க
பல நெம்புகோல் .... கள்ளச் சாவிகள்
இருந்தும் திறக்கவில்லை ...

உன் நினைவுகளால்  என்னை சுற்றி
நான் அமைத்துகொண்ட இந்த முள் வேலியை
தகர்க்கும் சக்தி எனிடமும் இல்லை
ஏன் யாரிடமும் இல்லை ..
உன் அன்பெனும் காந்தம் கொண்டு
அருகினில் வந்தாலே
அப்படியே திறந்து கொள்ளும் சிறை வாசல்


அன்பே உன்னை நான் நேசிப்பது உனக்கு தெரியும்
என்னை நீ நேசிப்பதும் எனக்கு தெரியும்
சமுதாயம் ... சந்ததி... சம்ப்ரதாயம்
என சாக்குகள் சொல்லி
என்னை நிரந்தரமாய் இங்கே
சிறை வைத்து விடாதே ...
என் இதயத்திற்கும் ஆசைதான்
உயர உயர சிறகடிக்க...
உன் கைகளில்தான் இருக்கிறது
என் இதயத்தின் சிறை வாசமும்
அதன் சிறந்த வாழ்க்கையும்.. .

இது ஓர் இதயத்தின் தவம் .
இதை பார்த்து
இணைந்திட வேண்டும் உன் இதயம்  ..
:-*
« Last Edit: October 21, 2011, 03:20:08 AM by Global Angel »
                    

Offline thamilan

இரும்பான இதயமுள்ள‌
தலைவர்கள் இருக்கும் வரை
என் நாடும்
அன் நாட்டு மக்களுக்கு
இரும்பு சிறை தான்.

ஈவு இரக்கம்
கருணை அன்பு
இவை அனைத்தையும்
இறுக்கப் பூட்டி
இதயத்தை இரும்பு வேலி கொண்டு
அடைத்திட்டு
இரும்பு பெட்டியை மட்டும்
திறந்து வைத்திருக்கும்
அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை
எந்த நாடும்
அந்த நாட்டு மக்களுக்கு
இரும்பு சிறை தான்

மனித நேயம் மறந்து
இன வெறி பிடித்த
பெரும்பான்மை இன‌த்த‌வ‌ர்
வாழும் நாட்டில்
சிறுபான்மை இன‌த்த‌வ‌ரின் இத‌ய‌ங்க‌ள்
க‌ம்பிக் கூண்டுக்குள் அடைப‌ட்டு
வாழ‌த்தான் வேண்டும்
இது உல‌க‌ம் எதிர்காத‌ ஒன்று


Offline JS

இரும்பு போன்ற முள் வேலிகளால்
சூழ்ந்த என் இதயம்
ஒரு சிறைக்குள்
கைதியாய் ஆக்கின
உன் பெண்மை
நீ இல்லாமல்
நொடி கூட நகரவில்லை
உன் பாதம் படாத
இடம் கூட குளிரவில்லை...
அனல் தெரிக்கும்
இந்த சுவர்கள்
உன் மலர்
ஒன்று விழுகையில்
பொன் ரதம் போல
ஆகுதடி...
என் சிறு இதயம்
நீ சொல்ல போகும்
வார்த்தையில் இந்த
கதவை உடைக்க
தயாராகிறது...
 
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை