Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 002  (Read 4251 times)

Offline Global Angel

                                நிழல் படம் எண் : 002

இந்த களத்தின்  நிழல் படத்தை தோழி JS கொடுத்துள்ளார் ..... இந்த அழகிய இதயத்திற்கு   உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....

« Last Edit: October 11, 2018, 02:03:30 PM by MysteRy »
                    

Offline JS

இந்த இதயம் துடிக்கும்
ஓசை கேட்கிறதா.. உன் பெயர் அதில்
கூண்டை விடு வெளி வந்த
பறவை போல என்னை விட்டு
வெளி வந்த போதும்
உன் ராகம் பாடுகிறதே...
அதை கையேந்தி நீ
தாங்குகையில் என்
அணுக்கள் உறைந்து
போவது ஏன்...
என்னை பிரிந்து வந்த
வலி கூட இல்லை
உன் அங்கம் அதை
தழுவதினால்...
உன் மூச்சுக் காற்றினால்
அதை மின்னச் செய்தாயடி...
பிரிந்து செல்ல வேண்டியவனை
அருகில் அழைத்து
உயிர் தந்தாயடி...
உன் இதயத்தை அதில்
இணைத்துக் கொடுத்தால்
என் ஆயுள் முடிந்தாலும்
உன் ஆயுள் வரை
உன்னுடன் இருப்பேனடி...
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 116
  • Total likes: 116
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.

எனக்காக இதயம்
உனக்குள் துடிக்க
தனியாக துடிக்க
இன்னொரு இதயமோ.??


உனக்குள் இருக்கவே
என் மனம் ஏங்க
வேண்டாம் இதயம் என்னுள்...

உன் இதயத்தின் வேலையை
இருமடங்காக்கி விட்டேன்
எனக்கு சேர்த்து துடிக்கும்
நம்  இதயத்திற்கு
என் முத்தத்தை சத்தமாக்கி
விடவா?

எனக்காக நீ அங்கே துடிக்க
உனக்காக இங்கே
உயிர் வாழ்கிறேன்
உன்னை நினைத்து...

உன் இதயத்துடிப்பின்
ஓவ்வொருத் துடிப்பிலும்
என் காதல் உயிர் வாழ
காதலோடு காத்திருக்கிறேன்
உன்னோடு வாழ...

ஒரு நாள் ஏனும் உன்னோடு
உனக்காக உன்னவளாய்
உன் மடியில் உறங்கிடும்
வரத்தை தந்து விடு ..

உன் கரங்கள் எழுதும்
கவிதையாய் என்னை மாற்றிவிடு
உனக்குள் நான் இருப்பதை போல
எனக்குள் நீ வந்துவிடு..

வாழ்நாள் முழுதும்
உன்னோடு தொடர துடிக்கிறேன்
வாழும் காலம் வரை
உன்னையே நினைக்கிறேன்..

என் இதயமே
மௌனமொழி பேசி
என்னை வதைத்து விடாதே..
எல்லாவற்றையும்
தாங்கிக்கொள்ள
தற்போது என் இதயம்
என் வசம் இல்லை ;) :-* :P ;)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Yousuf

இதயம் இல்லையேல் நாம் இல்லை
அந்த இதயத்தை பேணுவது நம் கடமை
இதை அறிந்தோர் வாழ்வார்கள் நெடுவாழ்வு
அறியாதோர் வீழ்வர்கள் படுகுழியில்...
புகைக்கும் மதுவுக்கும் அடிமையாகி
நம் உயிர்வாழ துணை செய்யும் உருப்புகலாம்
கணையம் இதயம் போன்றவற்றை
இழந்துவிட்டு கடைசியில் தவிக்க வேண்டாம்
வருமுன் காப்பது நம் கடமை
நம் இதயத்தை பாதுகாக்க உருதி ஏற்ப்போம்...!!!
« Last Edit: October 12, 2011, 04:58:06 PM by Yousuf »

Offline Global Angel

இது நாள்வரை
என் நெஞ்சம் எனும்
இருள் அறையில்
உனக்காக துடித்த
என் இதயத்தை
இன்று உன் கைகளில்
தந்துவிட்டேன் ....

என்ன ஆச்சர்யம்
உன் கைகளில்
என் இதயம் ...
இழந்தும் ஒளிர்கின்றதே
இதுதான்
இழப்பில் ஓர் உயிர்ப்பா  ...?
இல்லை என்
காதலின் ஒளிர்வா ...

பளபளப்பாய் இருப்பதனால்
மிட்டாய் என நினைத்து
மென்று துப்பி விடாதே ..
என்றும் உனக்கு
இனிமையாய் இருப்பேன்
என்பதற்கு இதுதான் அடையாளம் ..
திருப்பி தந்துவிடதே ...
என் இதயமே
எனக்கு சுமையாகிவிடும் ..
எனக்கு தெரியாமல்
எங்காவது எறிந்துவிடு
உன்னிடம் என் இதயம்
உறங்காமல் ஒளிரும்
என்ற நின்மதி கிட்டும் ...

என் இதயத்தின் ஒளிர்வு
உன் கைகளில் சேர்ந்துதான்
என் வாழ்கையின் ஒளிர்வும்
உன் மெய்யது சேர்ந்தால்தான் ...
புரிந்து கொள்வாயா ...?
இல்லை புரிந்தும் கொல்வாயா ...?


Offline thamilan

இத‌ய‌ம் இல்லாத‌வ‌ன்
என்று சொல்ல‌மாட்டார்க‌ள்
என்னை இனி யாரும்

இத‌ய‌த்தில் நீ தான் இருக்கிறாய்
நான் சொன்ன‌ போது
ந‌ம்ப‌வில்லை நீ
இதோ என் இத‌ய‌ம்
நீயே பார்த்துக் கொள்

என் இத‌ய‌ம் துடிப்ப‌து
உன் பெய‌ர் சொல்லித்தான்
இப்போது கேட்கிற‌தா
அது உன் பெய‌ர் தான் என‌

என் காத‌லை சொன்னேன்
இத‌ய‌த்தில் இட‌மில்லை என்றாய்
இதோ இல‌வ‌ச‌மாக‌ வைத்துக் கொள்
என் இத‌ய‌த்தை
அதில் நிறைய‌ இட‌ம் உண்டு
உன்னைத் த‌விர‌ எவ‌ரும் இல்லை

இத‌ய‌ம்
வெறும் காற்றால் உயிர்
வாழ்கிற‌து என்று தானே நினைத்தாய்
அது அன்பாலும் உன் நினைவாலும்
வாழ்கிற‌து இப்போதாவ‌து புரிந்து கொள்