Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 001  (Read 4807 times)

Offline Global Angel

                  நிழல் படம் எண் : 001

இந்த களத்தின் முதல் நிழல் படத்தை தோழி சுருதி கொடுத்துள்ளார் ..... இந்த அழகிய படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....
« Last Edit: October 11, 2018, 02:02:50 PM by MysteRy »
                    

Offline pEpSi

antha kulanthai malarai vida vadi erukirathu pasiyal
antha vaganam uille erupavargal antha pillaiyai parpargalo elayo
antha malarai vanga parpargal ethu thaan ulagam

Offline JS

கையில் இருக்கும் மலர் கொத்து கூட
அவளின் கண்ணீரைப் பார்த்து
கண்ணீர் சிந்துகிறது
ஆனால் ஏனோ அந்த மனிதருக்கு
புரியவில்லை அவளது ஏக்கம்...
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

முதிர்ந்த மலர்களுக்குள்
மொட்டாக நீ ....
முட்டி மோதி எதை பார்க்கிறாய்
கண்ணாடியில் தெரியும்
உன் பிம்பத்தையா ..
கையில் உள்ள
பூக்களின் அழகு கோலத்தையா ..?
கர்வம் கொள் ....
என் கண்களுக்கு
மலர்களை விட
மலர் சுமந்த நீதான் அழகி ...
கறுப்பழகி....

என்ன...? நான் பொய் ஏதும் சொன்னேனா ..?
உன் பூ முகத்தில் புன்னகை காணோம் ..?

ஒரு வேளை.. நீ
ஊன்றி பார்ப்பது .....
உள்ளே உள்ளவர்
உன் உள்ளம்...
 கை சுமக்கும்
உதிரிப் பூக்களை
வாங்குவார் என்றா ....?

கனவு காணாதே ..
அம்மா சொல்லவில்லை
கனவுகள் ..... ஏழையின் கனவுகள்
என்றுமே பலிப்பதில்லைஎன்று ...
உள்ளே இருப்பவர்
ஒரு போதும் உன் பூவை
வாங்கப் போவது இல்லை ...

அலங்காரமாய் அணிந்துள்ள சட்டையில்
அழகாக  சொருகிக் கொள்ளும்
அன்றலர்ந்த பூவை கூட
ஐம்பது ருபாய் கொடுத்து
அலங்காரமான கடையில் வாங்கினதாக
வாய் திறந்து சொல்லத்தான் ஆசை கொள்வான் ..
அநாதை சிறுமி போல் அருகே வந்து
அரை காசுக்கு கொடுத்ததை
கை நீட்டி வாங்கினாதாக சொல்லவே மாட்டான்
கை நீட்டி உன் கை தொட்டு வாங்கினால்
அவர்கள் கெளரவம் மாசு படும்
உன் கை பட்ட அந்த கண்ணாடியும் மாசு படும் ...
நீ மட்டும் மொட்டாக இல்லாமல்
பூவாக இருந்திருந்தால்
உன்னை பூஜைக்கு அழைத்து
புழுதியில் உருட்டி இருப்பார்கள்

நீதான் மொட்டாக சிரிகின்றாயே ..
சிரி....
வறுமையின் நிறம் சிவப்புதான்
உன் கையில் உள்ள மலரை போல
அவர்கள் வாழ்கையின் நிறம்
 கருப்புத்தான் .. கண்ணாடி  போலே

இவர்கள் திறக்காது போனால் என்ன
கதவடைப்பு ஒன்றும்
கஷ்டப் படுபவர்க்கு புதிதல்ல
இன்னும் ஒரு கதவு
எங்கோ உனக்காய் திறந்திருக்கும்
இறுதி வரை தட்டு நம்பிக்கையுடன்  ...

Offline gab

வறுமையை சித்தரிக்கும் உன் வாட்டமான தோற்றத்தை விட்டு
 தன்னம்பிக்கை கொள்! தரணியை வெல்!

உன் ஒரு நாள் வறுமையை போக்கும் மூலதனமாய்
உன் கைகளில் வைத்திருக்கும் அழகிய ரோஜாக்களை பார்.

தன் குறுகிய வாழ்வை முடிக்கும் முன்
மற்றவர்களை அலங்கரித்து உதவ போவதை எண்ணி
எவ்வளவு அழகாய் சிரிக்கிறது.

ஒரு புதிய வரலாற்றை படைக்கவல்ல நீ மட்டும்
ஏன் துவண்டுபோய் காட்சியளிக்கிறாய்?

வாகன கண்ணாடியில் உன் வறுமையை பார்ப்பதை விட்டுவிட்டு

உழைப்பால் உயர்ந்தது மற்றவர்க்கு ஒரு காலக் கண்ணாடியாய் நீ மாறு
பாரதி கண்ட புதுமை பெண்ணாய் !
« Last Edit: October 08, 2011, 02:42:12 AM by gab »

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 116
  • Total likes: 116
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
வாடிய பூவைக் கையில்
வாடாத பூக்கள்..

எதை நோக்கி உனக்குள் தேடல்??
உள்ளத்து தேடல் அறியா
ஊமை நெஞ்சம் உள்ளே உள்ளதோ??

பூக்கள் விற்று தீருமோ ??
பசி மயக்க  முற்று பெறுமோ ??
உன் கண்கள் ஆயிரம் கதை பேச
கண்ணீரோடு எதை காண்கிறாய்??
 
கண்ணாடி திறந்தால் குளிர் காற்று
கசிந்து விடும் என மூடிவைக்கும்
பகட்டு மனிதர்களுக்கு
உன் கண்கள் கசியும்
கண்ணீர் அறிய வாய்ப்பில்லை
கண்ணீரில் கலங்கும் ஓவியம் நீ..
 
தந்தையின் தேக பசியில்
தாய் வறுமையாகி
உன்னை ஈன்றாலோ??

அழகிய பூவை உன்னை
தெருக்களில் உலா வர செய்த
அன்னைக்கு கல் நெஞ்சமோ??

புத்தகம் ஏந்த வேண்டிய கைகள்
இன்று பூக்களை ஏந்தி
வாழும் போராட்டமோ??

ஒருநாள் வாழ்ந்து மடியும்
மலராய் இருந்து விடாதே...
நம்பிக்கை மலர்க்கொண்டு
புது மணம் வீசி
நீ புன்னகைக்கும் நாள்
வெகுதொலைவில் இல்லை..

கூண்டுக் கிளியாய் இருந்து விடாதே
கூண்டுக்குள்ளும் சில கழுகுக் கூட்டம்
உன்னைக் களவாடக் கூடும்.. ;)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline thamilan

ரோஜாவின் ஈரம் பனித்துளியால்
என்று நினைத்தேன்
உன் கண்ணீர் துளியால் தான்
என்று இன்று தான் கண்டுகொண்டேன்

கண்ணீரை கண்டால்
கல்லும் இரங்கும் என்பர்
சில பணக்காரர்களின்
கல் நெஞ்சங்கள் மட்டும்
இரங்காதது ஏனோ

அந்தக் கண்ணாடியில் பிரதிபலிப்பது
அந்த குழந்தையின் முகம் மட்டுமல்ல‌
அதன் பசி வறுமை இல்லாமை
எல்லாம் தான்
கண்ணாடி மாட்டிக் கொண்டு
கண்ணாடி வழியே பார்க்கும்
கனவான்களுக்கு எல்லாம்
இருட்டாகத் தான் தெரியும்

மனிதாபிமானம் மறந்து
ம‌ணிதாபிக‌ளுக்கு ம‌ன‌தெங்கே
இருக்க‌ப் போகிற‌து

குழ‌ந்தையும் ம‌ல‌ர்க‌ளும் ஒன்றென்ப‌ர்
இந்த‌ குழ‌ந்தை ப‌சியால் வாடும்
முக‌ம் க‌ண்டு
அந்த‌ ம‌ல‌ரும் வாடுகிறதோ
அல்லது
அந்த குழந்தையின் நிலை கண்ட
வெட்கி த‌லை குனிகிற‌தோ

Offline Yousuf

கையில் பூவோடு
வயிற்றில் பசியோடு
தெருவில் நிற்கிறது
ஒரு அழகிய பிஞ்சு...!

காரில் காசோடு
மனதில் திமிரோடு
அந்த பிஞ்சை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கிறது
பணத்திமிர் கொண்ட நஞ்சு...!!!


Offline RemO

வாடாத மலரை கையிலேந்தி
அதன் மூலம் தான் மலர
ஏங்கி தவமிருகிறது
ஒரு வாடிய மொட்டு

வரம் கொடுக்க எந்த வாகனத்தில்
வருவாரோ
கடவுள்

காரில் வந்த கனவான்
கடவுளாக வரம் கொடுத்து
மலரவைப்பார் என எண்ணி
ஏமாற்றத்தில் இன்னும் வாடியது

அந்த வாடிய மொட்டு