Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 079  (Read 3105 times)

Online MysteRy

நிழல் படம் எண் : 079
இந்த களத்தின்இந்த  நிழல் படம் MysteRyஅவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 09:40:16 PM by MysteRy »

Offline thamilan

ஊனம் என்பது ஈனம் இல்லை
அது ஒரு சிறிய குறைபாடே
அங்கங்கள் பலமாக இருந்தாலும்
மனத்தால் அங்க ஈனமானவர்கள்  பலர் இருகிறார்கள்
கை இருப்பது சாப்பிட மட்டுமே
கால் இருப்பது நடக்க மட்டுமே  என
வாழ்பவர்களும் உலகில் இருக்கிறார்கள்


கால் இல்லாவிட்டாலும்
கை இருக்கும் வரை
 மனதில் முடியும் என்ற
நம்பிக்கை இருக்கும் வரையும்
ஊனம் ஒரு பொருட்டே இல்லை
மனிதனுக்கு

கைகள் இல்லாத மாணவி
கால்களால் பரீட்சை எழுதி
சாதனை படைக்கவில்லையா
ஒரு கதவை மூடினால்  இறைவன்
இன்னொரு ஜன்னலைத் திறந்து வைப்பான்
ஒரு அங்கம் ஊனமாக இருந்தால்
இன்னொரு அங்கத்துக்கு அதன் சக்தியும்
சேர்த்து கொடுத்திருப்பான் இறைவன்

மனிதனை இயங்க வைப்பது
நம்பிக்கையும் விடா முயற்சியுமே
இவை இல்லாவிட்டால்
எல்லா மனிதனும் ஊனமுட்டோரே

நம்பிக்கை என்பது கைகளாகவும்
முயற்சி என்பது கால்களாகவும் அமைந்தால்
எந்த சிகரத்தையும் தொடலாம்
எந்த மலையையும் தோளில் சுமக்கலாம்


மனவலிமை வழிகாட்டி
பசுமை என்ற அழகூட்டி!
குறையறியா குழந்தை போல்
சேற்றினில் சோற்றுக்காக!

இரக்கம் வைத்து உனை இன்னல்படுத்த
இதையத்தில் இடமில்லை!
ஊனம் என்று உனைச்சொன்னால்
உதிரத்தில் திடமில்லை!


உண்ண உணவு தந்தாய்
உனை யார் ஊனமென்பார்
மனிதன் உணர்வானோ
மகிழ்ச்சி எதுவென்று!

விதைகள் அறியாது
விதைப்பவன் ஊனமென்று
நீ என் மாற்றுத்திறனாளி
மன்னின் படைப்பாளி...

உனைபற்றி இன்னும் சொல்ல
என் தமிழில் வார்த்தை இல்லை
கவிஞர்கள் மத்தியில்
நான் தான் ஊனமோ........சக்தி
« Last Edit: September 24, 2015, 01:40:20 PM by MysteRy »

Offline PaRushNi

சுயமரியாதையின் எடுத்துக்காட்டு

பட்டாம்பூச்சிக்கு சிறகுகள் அவசியமே
பிறக்கையில் சிறகுகளின் வளர்ச்சி குறைபாடு
அவற்றை பறக்க வேண்டுமானால் தடுத்திருக்கலாம்
ஆனால் அதனின் பறக்கும் கனவை அல்ல

மானின் கால்கள் விபத்தினால்
சேதம் அடைந்திருக்கலாம்
ஆனால் அதனின் எண்ண ஓட்டம்
கால்களை விட வலிமையானவை

யாரையும் சார்ந்திராது.,
சுயமதிப்புடன் வாழ நினைக்கும்
மனிதர்களை
பாவம் என 'உச்' கொட்டாது,
தள்ளி நின்று பரிகாசம் செய்யாது,
புற வித்தியாசங்களை ஒரு பொருட்டாய் எண்ணாது..
இருத்தலே நலம்.
அவர்களுக்கு நாம் இதைவிட பெரிதாய்
என்ன செய்துவிட முடியும் ?



----கிறுக்கலுடன்
      பருஷ்ணி  :)
« Last Edit: September 27, 2015, 03:11:12 PM by PaRushNi »
Palm Springs commercial photography

Offline SweeTie

ஊனம் என்னடா பெரிய ஊனம்
வானம் அளவு நீ வளர்ந்திருந்தாலும்
ஞானம் உன்னிடம் இல்லை என்றால்
சாணம் போன்றவன் நீ

உச்சி முதல் உள்ளங்கால் வரை
உரசிப் பார்த்தால் எல்லாருமே ஊனர்கள்
கண்ணுக்குத் தெரியும் குறைக்கு
ஊனம் என்ற பெயர் தேவையா??

நல்லவன் மாதிரி நடிப்பவனுக்கு மனசு ஊனம்
மதுபோதையில் மிதப்பவனுக்கு நாக்கு ஊனம்
கொலைகாரனுக்கு குருதி ஊனம்
திருடனுக்கு அவன் உடம்பே ஊனம் 

நடக்க கால்கள் இல்லையென்றால்
கைகளே கால்களாகும்
ஓவியம் தீட்ட கைகள் இல்லையென்றால்
கால்கள் தூரிகை பிடிக்கும்
மனசுக்கு குறைகள் இல்லாதபோது
உடம்பு  ஞானத்தில் செயற்படும்

குறையை  ஊனம் என்று ஈனப் படுத்தும்
ஆறறிவு படைத்தவர்கள்   ஆறாம் அறிவைப்
பயன் படுத்தத் தவறியதால்
குறைகள் ஊனம் ஆகியதோ!!!!

Offline NiThiLa

உடல் குறை இழிவல்ல
ஊனமாய் பிறத்தல் உன் தவறல்ல
தவறி நேர்ந்தாலும் அது சாபமல்ல

எளிதாய் வாய்க்கும் வெற்றி சுவை அல்ல
கடின உழைப்பின் சுவைக்கு ஏதும் இணை அல்ல

தன்னம்பிக்கை
மன  உறுதி
நேர்மை
உழைப்பு
உயர்ந்த இலக்கு
என
 
சோதனைகளை உரமாக்கி
சாதனைகள் பல அறுவடை  செய்து
வெற்றியை வியக்க வைக்கும் நீங்கள்
நல்ல மாற்றத்துக்கான திறனாளர்கள்


புலன்கள் உடல் வலுவில் இல்லை உன் மதிப்பு
செயல்களும் எண்ணங்களும் தான் அளவுகோல்

நான்கு அடியில் இருக்கும் அங்காடிக்கு போக
நான்கு சக்கர  வாகனம்

மகிழூந்தில் சென்று கடற்கரையில்
காலை உடற் பயிற்சி

கண்களில் ஒளியில்லை ஆனால்
ஓவியம் ஒளிர்கிறது

மூளை வளர்ச்சி குறைவாம்
சதுரங்கத்தில் வாகை சூடுகிறார்

எனில்
முழுமையானவர் நீங்களா? நானா ?
உங்கள் எள்ளல் பார்வை என்ன செய்து விடும்
என் தன்னம்பிக்கையை
உரக்க கூவிடு தோழா

நாளை விடியல் உனக்காக
வீறு நடை போட்டு வா தோழா
நாளை முதல் உனக்கு ஜெயமாகட்டும்


Offline Software

கால்கள்  தவழ்ந்தாலும் என் மனம்  தளர்வில்லை என்னும்  எண்ணத்தோடு வலிமையோடு உழைக்கும் தோழரை பார்த்து என்  கண் கலங்குகிறது !!!

உடலைத் தாங்கும் வலிமை
என் கால்களுக்கில்லாதிருக்கலாம்.....
எதையும் தாங்கும் வலிமை
இதயத்துக்கிருக்கிறது!!

சூம்பியக் கால்களிருந்தும்
சோம்பியதேயில்லை...
ஒருபோதும் தனிமையில்
தேம்பியதேயில்லை

தவழ்ந்து செல்லும் நிலையிலும்
தளர்ந்து விடாமல்
தொடர்ந்து செல்கிறேன்
எதிர்படும் இன்னல்களை
கடந்து வெல்கிறேன்

வெற்றிக்கு வாழ்த்து சொல்ல
கை கொடுங்கள்....
எழ உதவும் எண்ணத்தைக்
கை விடுங்கள்...
என் தோள் சாரா சுயம்
என்றும் தரும் ஜெயம்

பிறவி ஊனம் என்பது நாம் அறியாமல் விளைந்தது.
போலியோ ஊனம் நம் அறியாமையால் விளைந்தது

தயைக் கூர்ந்து இதை
மமதையாய்க் கருதாமல்
தங்களோடென்னை
சமதையாய் கருதுங்கள்

வளைந்தது இவர்களின்
கால்களானாலும்
வளையாதது இவர்களின்
குறிக்கோள்களாக இருக்கட்டும்..

இவர்களின் சுயம் சுயமாய் முன்னேறட்டும்..
நம்மோடு சக மனிதராய் பார்ப்பதே அவர்களை மகிழ்விப்பது தான்..!
« Last Edit: September 28, 2015, 10:09:39 PM by Software »
By

Ungal Softy