Author Topic: ~ வாழைப்பழ தோலில் இம்புட்டு விஷயமா? அவிழ்த்துவிட்ட அமெரிக்க ஆய்வாளர் ~  (Read 134 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218490
  • Total likes: 23136
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வாழைப்பழ தோலில் இம்புட்டு விஷயமா? அவிழ்த்துவிட்ட அமெரிக்க ஆய்வாளர்



வாழைப்பழ தோலை இதுவரை தூக்கி எறிந்துவிட்டு சாப்பிட்டவரா நீங்கள்? இனிமேல் வாழைப்பழ தோலையும் சேர்த்தே சாப்பிடுங்கள். ஆமாம், வாழைப்பழ தோலில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்கிறார் சான் டியாகோ பகுதியை சேர்ந்த ஓர் ஊட்டச்சத்து நிபுணர். மேலும் வாழைப்பழ தோலில் இருக்கும் சத்துக்கள் பல உடல்நலக் கோளாறுகளுக்கு தீர்வளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! பற்கள் பளிச்சிட, எலும்புகளின் வலுவை அதிகரிக்க, இதயம், மூளை சார்ந்த பிரச்சனைகள் எழாமல் இருக்க, உடல் எடையை குறைக்க, மனநிலை மேலோங்க என பல வகையில் உடல்நலத்தை வெகுவாக ஊக்குவிக்கிறது வாழைப்பழ தோல் என்று இந்த ஆய்வை செய்த ஊட்டச்சத்து நிபுணர் தனது ஆய்வு முடிவுகளில் கூறியுள்ளார். வாழை இலையும்... அதன் மகத்துவமும்...

ஊட்டச்சத்துக்கள் வாழைப்பழ தோலில் அதிகளவில் வைட்டமின் பி6, பி12 மற்றும் மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம் போன்றவை இருக்கின்றன.

பற்கள் மற்றும் எலும்பின் வலு வாழைப்பழ தோலில் இருக்கும் வைட்டமின் ஏ பற்கள், எலும்பு மற்றும் திசுக்களின் வலுவை அதிகரிக்க உதவுகிறது என்று சமீபத்திய ஆய்வின் மூலம் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இது பற்களை வெண்மையாக்கவும் உதவுகிறதாம்.

நோய் எதிர்ப்பு மேலும் இதன் தோலில் இருக்கும் வைட்டமின் பி6 உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், மூளை மற்றும் இதயத்திற்கு வலு சேர்க்கிறது. இது மட்டுமின்றி இரத்த சர்க்கரை அளவையும் சீராக வைத்துக் கொள்ள வாழைப்பழ தோல் உதவுகிறதாம்.

நரம்பு மண்டலம் வாழைப்பழ தோலில் இருக்கும் வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்திற்கு பக்கபலமாக இருக்கிறதாம். மற்றும் இதன் வைட்டமின் பி 2 மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி உடல் எடையைக் குறைக்க உதவுகிறதாம்
வைட்டமின் சி மேலும் வாழைப்பழ தோலில் இருக்கும் வைட்டமின் சியின் சத்து புதிய திசுக்கள் மற்றும் தசைநார்கள் வளர உதவுகிறது. மற்றும் இதிலிருக்கும் நார்ச்சத்து சருமத்திற்கு நல்லதாம்.

மனநிலையை மேலோங்க வைக்கிறது வாழைப்பழ தோல், மனநிலையை மேலோங்க வைக்க உதவும் ஹார்மோனான செரோடோனினை ஊக்குவிக்கிறது.

கண்பார்வை மற்றும் இதில் இருக்கும் இதர சில மூலப்பொருட்கள் கண் பார்வை அதிகரிக்க பலனளிக்கிறது என்றும் ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொசுக்கடிக்கு மருந்து வாழைப்பழ தோலை உட்புறம் வெளியாக கொசுக் கடித்த இடத்தில் தடவுவது, கொசுக் கடிக்கு சிறந்த மருந்து என்று கூறப்படுகிறது.