Author Topic: varieties of chicken  (Read 5025 times)

Offline maha

varieties of chicken
« on: July 17, 2011, 02:11:28 PM »
சுவையான எளிதில் செய்யக்கூடிய தயிர் சிக்கன் இது. இதனை சாலட்டுடன், சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். 

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/4 கிலோ
தயிர் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு



அரைத்துக்கொள்ள:

பூண்டு - 6 பெரிய பல்
இஞ்சி - 1 துண்டு
மிளகு - 10
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்



செய்முறை:

* சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

* அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக்கொள்ளவும்.

* சிக்கனுடன் அரைத்த விழுது + தயிர் + தூள் வகைகள் சேர்த்து நன்றாக கலக்கி 5 நிமிடங்கள் ஊறவிடவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த சிக்கனை சேர்க்கவும்.

* சுமார் 10 - 15 நிமிடங்கள் சிக்கன் நன்றாக வெந்து தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும்.

* கடைசியில் எலுமிச்சை சாறு சேர்த்து மேலும் 1-2 நிமிடங்கள் வேகவிடவும்.

குறிப்பு:

* மிளகுக்கு பதிலாக மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளலாம்.

* தயிரினை இஞ்சி, பூண்டு விழுது அரைத்த பிறகு, அத்துடன் சேர்த்து 10 Sec தயிரினையும் அரைத்தால் நன்றாக இருக்கும்.

* தயிரின் புளிப்பின் அளவினை பொருத்து எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளவும். புளிப்பான தயிர் என்றால் எலுமிச்சை சாறு தேவையில்லை.

* இந்த சிக்கனை சாலட்டுடன் சேர்த்து சாப்பிட ரொம்ப நல்லாயிருக்கும்.
« Last Edit: July 17, 2011, 02:13:51 PM by maha »

Offline maha

Re: varieties of chicken
« Reply #1 on: July 17, 2011, 02:37:53 PM »
 
சிக்கன் காலிஃப்ளவர் மசாலாக்கறி!


தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
காலிஃப்ளவர் - 1 கப்
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
பட்டை லவங்கம் - சிறிதளவு
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 3 அல்லது 4
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு



மசாலாவிற்குத் தேவையானவை:
கடலைப்பருப்பு - 3 ஸ்பூன்
சிகப்பு மிளகாய் - 6
மிளகு - 2 ஸ்பூன்
பட்டை - சிறிதளவு
சீரகம்,  சோம்பு - 2 ஸ்பூன்
தேங்காய் துருவியது - 1 கப்


செய்முறை:
* சிக்கனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து திட்டமான பீஸாக்கிக் கொள்ளவும்.

* உப்பும், மிளகாய்த் தூளும் இட்டு சிக்கனை 10 நிமிடம் பிரட்டி வைக்கவும்.

* தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் நீளவாக்கில் அரிந்துக் கொள்ளவும்.

* மசாலாக்களுக்குத் தேவையானவைகளை சட்டியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், அதில் இவைகளைப் போட்டு வறுக்கவும்.

* கடைசியாக தேங்காய்பூவையும் போட்டு வறுத்து சற்று ஆறவிட்டு அதை மிக்ஸியில் போட்டு சற்று கரகரப்பாக அரைக்கவும்.

* சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு அது சூடானதும், பட்டை, லவங்கம் போட்டு அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் அனைத்தையும் போட்டு பின்பு, காலிஃபிளவரை சேர்த்து லேசாகக் கிளறிவிடவும்.

* அது வதங்கியதும் பின்பு அதோடு இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். அதுவும் சற்று மசங்கியதும், அரைத்த மசாலாவையும் சேர்க்கவும்.

* அது எல்லாம் சேர்வதுபோல் கிளறிவிட்டு மிதமான தீயில் வைத்து வைத்து மூடவும். மசாலா வாசம் போய் நல்ல வாசம் வந்ததும் திறந்து நறுக்கிய கொத்தமல்லியை போட்டு இறக்கவும்.
« Last Edit: July 17, 2011, 02:43:46 PM by maha »

Offline maha

Re: varieties of chicken
« Reply #2 on: July 17, 2011, 02:55:48 PM »
 
குடைமிளகாய் சிக்கன் டிக்கா

தேவையானப் பொருட்கள்:

கோழிக்கறி - 1/2 கிலோ (எலும்பில்லாதது)
மிளகு - 15
பச்சை மிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 4 (நடுத்தரமானது)
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - 6 பல்
குடை மிளகாய் - 1 (நடுத்தரமானது)
தயிர் - 1 கப்
ப்ரஷ் க்ரீம் - 3 டேபிள் ஸ்பூன்
கார்ன்ஸ்டார்ச் - 1 டேபிள் ஸ்பூன்
முட்டை - 1 (வெள்ளைக் கரு மட்டும்)
கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்
ஏலப்பொடி - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - சிறிது
உப்பு - தேவையான அளவு



செய்முறை:


கோழிக்கறியினை கழுவி சுத்தம் செய்து கொண்டு, ஒன்றரை அங்குலத் துண்டுகளாக வெட்டிக் கொண்டு, நீரில்லாமல் சற்று உலரவிடவும்.

மிளகினை வறுத்துப் பொடியாக்கிக் கொள்ளவும்.

வெங்காயம், இஞ்சி, பூண்டினைத் தோலுரித்துக், வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.

இஞ்சி, பூண்டினை காம்பு நீக்கின பச்சை மிளகாயுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை எண்ணெய்யில் பொன்னிறமாகப் பொரித்து எடுத்து, எண்ணெய்யை வடித்து பிறகு மையாக அரைத்துக் கொள்ளவும்.


குடைமிளகாயை கழுவி, விதைகளை நீக்கி, ஒரு அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.


தயிரினை ஒரு மெல்லியத் துணியில் கட்டித் தொங்கவிட்டு, நீர் எல்லாவற்றையும் வடித்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த வெங்காய விழுது, இஞ்சி பூண்டு விழுது, தயிர், ப்ரஷ் க்ரீம், கார்ன்ஸ்டார்ச், முட்டையின் வெள்ளைக்கரு, நறுக்கின குடைமிளகாய் துண்டுகள், மிளகுத் தூள், ஏலப்பொடி, தேவையான உப்பு அனைத்தையும் சேர்த்து, ஒன்றாய் கலக்கவும்.


பிறகு அதில் கோழித் துண்டங்களைப் போட்டு நன்கு பிரட்டி சுமார் ஒரு மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து நன்கு ஊறவிடவும்.

ஒரு சொருகு கம்பியில் கோழித்துண்டங்கள், குடைமிளகாய் துண்டங்கள் என மாற்றி மாற்றி சொருகி, தந்தூரி அடுப்பில் வைத்து கருகாமல் வேகவிட்டு எடுக்கவும். இல்லையெனில், 250 டிகிரி சி க்கு சூடேற்றப்பட்ட ஓவனில் சுமார் 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். அவ்வபோது எடுத்து, வெண்ணெய் தடவி மீண்டும் வேகவிடவும்.



« Last Edit: July 17, 2011, 03:00:57 PM by maha »

Offline maha

Re: varieties of chicken
« Reply #3 on: July 17, 2011, 03:05:07 PM »
 
செட்டிநாடு சிக்கன் கிரேவி

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 1
மிளகுத்தூள் - 50 கிராம்
தனியா தூள்- 1/2 டீஸ்பூன்
மஞ்சள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி,பூண்டு- விழுது டேபிள் ஸ்பூன்
உப்பூ- தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில், சிக்கன், உப்பு, மஞ்சள், இஞ்சிப்பூண்டு விழுது இவற்றைக் கலந்து, ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து இறுக்கமான மூடிபோட்டு மூடி, அவனில் 5 நிமிடங்கள் ஹையில் குக் செய்யவும்.

அதன் பிறகு அந்தப் பாத்திரத்தைத் திறந்து மிளகு, தனியாப் பொடி, தக்காளி, வெங்காயம் அரைத்த விழுதைச் சேர்த்து மூடி, 3 நிமிடங்கள் ஹையில் விடவும்.


பிறகு அவனிலிருந்து வெளியே எடுத்து, மூடியைத் திறந்து 3 நிமிடங்கள் மீடியம் ஹையில் வைக்கவும். பாத்திரத்தை 2 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்த பிறகு, சுவையான சிக்கன் கிரேவியை எடுத்துப் பரிமாறவும்.

« Last Edit: July 17, 2011, 03:24:16 PM by maha »

Offline maha

varieties of chicken
« Reply #4 on: July 17, 2011, 04:26:15 PM »
சிக்கன் மக்ரோனி



தேவையான பொருட்கள்:


மக்ரோனி - 150 கிராம்
எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
பச்சைமிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 3 டீ ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீ ஸ்பூன்
தனியா தூள் - 1/2 டீ ஸ்பூன்
சிக்கன் மசாலா தூள் - 1 டீ ஸ்பூன்
பட்டை, ஏலக்காய், கிராம்பு(வாசனைத்தூள்) - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
நெய் - 4 டீ ஸ்பூன்
 
செய்முறை:


* மக்ரோனியை உப்பு சேர்த்து அவித்து தண்­ணீர் வடித்துக்கொள்ளவும்.

* வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, பிரிஞ்சி சேர்க்கவும்.

* பின்னர் மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

* பின் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக கிளறவும்.

* அதில் தக்காளி, பின்னர் எல்லாத்தூள்களையும் தயிர் சேர்த்து வதக்கவும்.

* எண்ணெய் மேலே வந்ததும் சிக்கனை சேர்த்து நன்கு வேகவிடவும்.

* சிக்கன் வெந்ததும் வேக வைத்த மக்ரோனியை சேர்த்து மசாலாவில் உள்ள நீர் வற்ற கிளறி பின் இறக்கவும்.

குறிப்பு:

* மக்ரோனியில் உப்பு சேர்த்திருப்பதால் சிக்கனில் தேவைக்கு மட்டும் சேர்க்கவும். விருப்பப்பட்டால் பொடிதாக நறுக்கிய வெங்காயத் தாள் சேர்த்து பரிமாறலாம்.

* மட்டனுக்கும் இதே செய்முறை தான். ஆனால் குக்கரில் மட்டனை அவிக்க வேண்டும். விருப்பப்பட்டால் புதினா, கொத்தமல்லி சேர்க்கலாம்

Offline maha

Re: varieties of chicken
« Reply #5 on: July 17, 2011, 04:34:04 PM »
 
செட்டிநாடு ஸ்பைஸி சிக்கன்


தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ
வெங்காயம் - 2 பெரியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி - 2 பெரியது
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தனியாதூள் - 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:
 
எண்ணை - 100 மி.லி
பட்டை - இரண்டு அங்குலம் இரண்டு
ஏலக்காய் - 4
மிளகு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது

கடைசியில் தூவ:

மிளகு - 1 டீஸ்பூன் (பொடித்தது)
எலுமிச்சை - 2
கருவேப்பிலை - சிறிது
கொத்துமல்லி - சிறிது
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்


செய்முறை:

* சிக்கனை கழுவி சின்ன சின்ன துண்டுகளாக போட்டு தண்ணீ­ரை வடித்து வைக்க வேண்டும்.

* ஒரு பெரிய வாயகன்ற சட்டியை காய வைத்து பட்டை, ஏலக்காய், மிளகு, கருவேப்பிலை போட்டு வெடிக்க விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவேண்டும்.

* பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நல்லா வதக்கி கலர் மாறியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாதூள், போட்டு வதக்கி சிக்கனை போட்டு அதிக தீயில் கிளறவேண்டும்.

* பிறகு தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு உப்பும் சேர்த்து நல்லா கிளறி தீயை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் தக்காளியை வதங்க விட வேண்டும்.

* பிறகு ஒரு டம்ளர் தண்­ணீர் சேர்த்து மீண்டும் வேக விட வேண்டும்.

* கடைசியில் பட்டர், பொடித்த மிளகு, கருவேப்பிலை, எலுமிச்சை சாறு ஊற்றி கொத்து மல்லி தழை தூவி இறக்க வேண்டும்.



Offline maha

Re: varieties of chicken
« Reply #6 on: July 17, 2011, 04:41:29 PM »
புதினா சிக்கன்


தேவையான பொருட்கள்:

சிக்கன்- அரை கிலோ
புதினா - ஒரு கட்டு
பச்சை மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
தயிர் - அரை கப்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

ஒரு தேக்கரண்டி எண்ணெயில் புதினா, பச்சை மிளகாயை வதக்கி அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த விழுதை தயிரில் போட்டு அரை மணி நேரம் ஊற வையுங்கள்.

குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்து சிக்கனைப் போடுங்கள்.

 அடுத்து இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கிளறுங்கள்.

 ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கும் புதினா கலவையை சேர்த்து தயிரை இதில் கொட்டி கலந்து குக்கரை மூடி விசில் போடுங்கள். இரண்டு விசில் வரும்வரை வேக வைத்து பரிமாறுங்கள்.



Offline maha

Re: varieties of chicken
« Reply #7 on: July 17, 2011, 04:51:25 PM »

KFC சிக்கன்


தேவையான பொருட்கள்:

கோழி தொடைப்பகுதி - 10
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
முட்டை - 3
ப்ரட் க்ரம்ஸ் - தே.அளவு
எண்ணெய் - பொரிக்க
உப்பு - 1/2 ஸ்பூன்

செய்முறை:

•கோழித் தொடைகளை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைக்கவும்.

•பின் கோழியில் மிளகாய்தூள்,மஞ்சள்தூள்,இஞ்சி பூண்டு,எலுமிச்சை சாறு,உப்பு போட்டு பிரட்டி 1 மணி நேரம் வைக்கவும்.

•முட்டைகளை உடைத்து ஒரு கோப்பையில் ஊற்றி கலக்கி வைக்கவும்.

•ப்ரட் க்ரம்ஸை ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.

•ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைக்கவும்.

•கோழிகளை ஒவ்வொன்றாக எடுத்து முட்டையில் நனைத்து பின் ப்ரட் க்ரம்ஸில் பிரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
« Last Edit: July 17, 2011, 05:01:26 PM by maha »

Offline maha

Re: varieties of chicken
« Reply #8 on: July 17, 2011, 05:00:07 PM »

கோழி பொரியல்

தேவையான பொருட்கள்:

கோழி கறி - அரைக் கிலோ
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 3
பூண்டு - 5 பல்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - 5 இதழ்
மல்லித் தழை - சிறிது
சோம்பு - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
மல்லித் தூள் - ஒரு மேசைக்கரண்டி
மிளகு தூள் - அரை மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை மேசைக்கரண்டி
கடுகு - சிறிது
எண்ணெய் - தாளிக்க



செய்முறை:

முதலில் சிக்கனை கழுவி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சிறிது சேர்த்து வைக்கவும். பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். பூண்டு மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும். கறிவேப்பிலை மற்றும் வரமிளகாயை கிள்ளி வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சோம்பு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாயை போட்டு தாளிக்கவும்.

பின் பூண்டு மற்றும் வெங்காயத்தை சிறிது உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும்படி வதக்கி தக்காளியை சேர்த்து குழையும் வரை வதக்கவும்.

பின் ஊற வைத்துள்ள கோழிக் கறியை சேர்த்து நன்கு பிரட்டி 5 நிமிடம் வேக விடவும்.

பின்பு மிளகுத் தூள் தவிர கொடுத்துள்ள மற்ற தூள் வகைகளை தேவையான உப்புடன் சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும்.

எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் மிளகு தூளை சேர்த்து மல்லித் தழையையும் போட்டு கிளறி 2 நிமிடம் வேக விடவும்.
 
இப்போது சுவையான கோழி பொரியல் தயார். இறக்கிய பின் விரும்பினால் தேங்காய் துருவல் சிறிது சேர்க்கலாம்.


Offline maha

Re: varieties of chicken
« Reply #9 on: July 17, 2011, 05:16:01 PM »
எக் சிக்கன் ரோல்


தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 2 கப்
பால் - தேவையான அளவு
முட்டை - 6
எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ
காஷ்மீர் மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - அரை மேசைக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
கேசரி பவுடர் - சிறிதளவு
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு
 

செய்முறை:


வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.


சிக்கனை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி நன்கு சுத்தம் செய்து அதில் கால் மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, கால் மேசைக்கரண்டி காஷ்மீர் மிளகாய் தூள், மிளகு தூள், கேசரி பவுடர், தேவையானளவு உப்பு சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்கவும்.


மைதா மாவில் உப்பு, சிறிதளவு சீனி, அரை தேக்கரண்டி எண்ணெய் மற்றும் காய்ச்சிய பால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்து கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் ஊற்றி சிக்கனை பொரித்து எடுத்துக் கொள்ளவும். (சிக்கன் முக்கால் பதத்திற்கு வெந்தால் போதும்)


அதே கடாயில் சோம்பு சேர்த்து தாளித்து இரண்டு வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.


இதில் தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். தக்காளி வதங்கியவுடன் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறவும்.


பொரித்து வைத்த சிக்கனை சேர்த்து ஐந்து நிமிடம் மிதமான தீயில் வைக்கவும். இறக்குவதற்கு முன் மீதமுள்ள வெங்காயம் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

                                                                         continued......
« Last Edit: July 17, 2011, 05:17:59 PM by maha »

Offline maha

Re: varieties of chicken
« Reply #10 on: July 17, 2011, 05:37:24 PM »
   

    சப்பாதி மாவை சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி போல் சுட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.



முட்டையை உப்பு சேர்த்து அடித்து வைத்து கொள்ளவும். கல்லில் முட்டையை ஊற்றி சுற்றி எண்ணெய் விடவும்.( பாதி வேகும் வரை அதிக தீயில் வைத்து கொள்ளலாம்). தீயை குறைத்து விட்டு சப்பாத்தியை முட்டை மேல் வைக்கவும். சிறிது நேரத்தில் சப்பாதியை முட்டையோடு சேர்த்து திருப்பி போடவும்.( முட்டை சப்பாத்தி இரண்டும் கருகாமல் பார்த்து கொள்ளுங்கள்


இப்பொழுது இந்த முட்டை சப்பாத்தி மீது நாம் தயார் செய்து வைத்திருந்த சிக்கன் கலவையை உள்ளே வைத்து ரோல் பண்ணவும்.


சுவையான சப்பாத்தி எக் சிக்கன் ரோல் ரெடி
« Last Edit: July 17, 2011, 05:49:32 PM by maha »