Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 083  (Read 2510 times)

Offline Mirage

  • Jury Team
  • Hero Member
  • *
  • Posts: 681
  • Total likes: 1873
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்பே சிவம்
நிழல் படம் எண் : 083
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Enigmaஅவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 09:43:03 PM by MysteRy »

Offline Software

  • Jr. Member
  • *
  • Posts: 60
  • Total likes: 86
  • Karma: +0/-0
  • Gender: Male
  • your Best Teacher is your last mistake :)
திருநங்கைகளின் கொடுமை இதோ !!

பெற்றவர் செய்த  குற்றம்  இல்லை
பிள்ளை செய்த  குற்றமும் இல்லை 
பாதிப்பு  என்னவோ  பிள்ளைக்கு இங்கு!

பெற்றவர்களின் பாசம்  இருந்தும் 
வெளியேற்ற பட்டார்கள்   வீட்டில்  இருந்து

மனநலம் சரி  இருந்தும் 
துரத்த பாட்டார்கள்   சமூகத்திடம் இருந்து 

முடமாய் பிறக்கவில்லை  – ஆனாலும்
கேலி கிண்டலுக்கு உள்ளான இவர்களின்
மனம் வலிக்கும் என்று மனிதன் நினைக்க வில்லையே !!

அழுத  மனதிற்கு  ஆறுதல் இல்லை 
பெற்றவர் இங்கு உற்றவர் இல்லை 

தாய்மை அடைய  வழியுமில்லை
கர்ப்பம் சுமக்க வழியுமில்லை

சாத்திரங்கள் சொல்லவில்லை 
வேதங்கள்  சொல்லவில்லை 
எங்களை  இழித்துரைக்க

மனிதாபிமானம் மறைந்ததா- இல்லை 
மனிதம்  தான்  மறக்கடிக்க பட்டதா

துணையாய் இருக்க வேண்டாம் 
துன்புறுத்தாது இருக்கலாமே

மனிதனாய் நினைக்க  வேண்டாம் 
ஒரு உயிராய்  நினைக்கலாமே

மாறுமோ  எந்தன்  தேசம் 
மதிக்கப்படுமோ மனித இனம்!!!
« Last Edit: December 12, 2015, 11:10:09 PM by Forum »
By

Ungal Softy

Offline PaRushNi

தவறு செய்தவர்கள் தண்டனை பெறலாம்
அதுவே உலக நியதி
இயற்கையே அரிய படைப்பை உருவாக்கையில்
அவர்களை நோக்கி நாம் ஏன்
ஆள்காட்டி விரலை நீட்ட வேண்டும் ?


மன்னர் ஆட்சி காலத்தில் கூட
மதிப்பு மரியாதையோடு இருந்ததாகவும்
இறைவனோடு ஒப்பிட்டு சொன்னதாய்
பாடல்களும், செப்பேடுகளும் சான்றாய் இருக்கையில்..


மக்களாட்சியில்..
தன் குடும்பமே ஒதுக்கி வைக்கும் பின்னணியில்
கை ஏந்தும் வாழ்வாதாரம் உள்ள
இழிவான சிறை வாழ்க்கை நீங்கி
வாழ்க்கையில் விடியல் தோன்றவும்
கல்வி - சிந்தனை மாற்றத்திற்கு வித்திட்டு
மறுமலர்ச்சி உண்டாகவும்..
கண்ணியமாய் வாழ நினைப்பவர்களை வாழவிடுவோம்.


       கிறுக்கலுடன்
     -பருஷ்ணி :)
« Last Edit: December 12, 2015, 11:10:57 PM by Forum »
Palm Springs commercial photography

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
நாங்கள் என்ன தவறு செய்தோம் 
உலகமே ஏன்  இந்த பரிகாசம்
தாய் இருந்தும் இல்லை  அவள் பாசம்
உறவினர்கள் இருந்தும் அனாதைகள்

தூய்மையானது தாயின் இதயம் 
உன்னுடன் இருக்கையில் உணர்ந்தேன்
இப்போது அறிகிறேன்  தொலைவில் இருக்கையில்
என் உடன்பிறப்புகளுக்கு கிடைத்த
உன்னுடைய அன்பு அரவணைப்பு
எனக்கு கிடைக்கவில்லை என்று
கோவம் இல்லை தாயே
வருந்துகின்றேன் அனாதையாக
தனிமையில் நின்று           

படைப்பிலே  கலந்தோம்   
ஆணும் பெண்ணுமாய்
கருப்பை சுமக்கும் பாக்கியம் இழந்தோம்
இயற்கையின் படைப்பில்
பிரம்மன் செய்த தவறுக்கு
தண்டனை சுமக்கின்ற
கைதியாய் நாங்கள்

எங்கு சென்றாலும்
அங்கிகாரம் பெற இயலாதவர்களாய் நாங்கள்
எதற்காக இந்த தண்டனை
வேதனையில் வெந்து சாகிறோம் தினம் தினம்
முடிவொன்று இருந்தால்
அடுத்த ஜென்மத்தில் அங்கீகரிக்கபட்ட
வாழ்க்கை வேண்டும்
அநாதை அற்ற வாழ்க்கை வேண்டும் தாயே....
« Last Edit: December 13, 2015, 03:31:12 PM by ராம் »

Offline சக்திராகவா

மழை கலந்த சூரியன்
நிறம் கலந்த வானவில்
நீர் கலக்கும் சங்கமம்
நிஜம் கலந்த பொய்களும்!

உலகின் அழகு அறிகிறோம்!
குணங்கலந்த மனங்களை
வகைபிரித்து நகைமறைத்து
நலிந்து வாழ நல்குவோம்?

ஆதிசிவன் பாதி எனில்
அர்த்தநாரீசுவரர்!
ஆணுமில்லை பெண்ணுமில்லை
அருத்து பேசுவர்!

காசுக்கு கையேந்துவதோ
கருணை மறந்து கைவிட்டதால்
வேலை இல்லை வேதணைத்தானே?

எத்தனை இடத்தில் ஏளனம்
எப்படி ஆரும் உள் ரணம்
சுமந்தவள் சுட்டதும் வார்த்தாயால்
சூழ்ந்தவர் சொல்வதில் குறையுன்டோ?

திருந்தாத ஊர் என்றால்
வருந்தாதா இவருள்ளம்
மாற்றும் சக்தி மகளிர் என்றால்
மறக்கும் சக்தி இவர்கள் தானோ

அன்றாடம் காண்கிறோம்
அவர்களும் நம்மினம்
மாற்றத்தில் சேருமா
இவர்கென நம்மனம்

திரு நங்கையே! நம்பியே!
திரும்பும் திசைவேன்டாம்
விரும்பும் திசை தேடு

இகழ்ந்துண்ணை சொல்பவர்
புகழ காண்பேன்
இன்றிலிருந்து நீ
முயற்சி செய் முன்னேற
பயிற்சிகொள் பலம் பெருக


உன்னுடன் சக்தி[/color][/size]

Offline KaniyaN PooNKundranaN

அரவாணிகள் நமால் அரவணைக்க பட வேண்டியவர்கள்

பிறப்பும் இறப்பும் நும் கையில் இல்லை

இப்படி பிறந்தது அவர்கள் குற்றம் இல்லை

வாழ்கை ஒரு பூந்தோட்டம்

இவர்களும் அதோட்டத்தின் மலர்களே

வாழ்வுரிமை அனைவர்க்கும் பொதுவானது

இவர்களும் வாழ் வாங்கு வாழ வாழ்த்துவோம் நன்றி

                                                                     கணியன் பூங்குன்றன்

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
ஆண்டவனின் படைப்பினில்
விசித்திரங்கள் பலப்பல
ரசிக்க பல ருசிக்க பல
நேசிக்க பல அனுபவிக்க பல
பாவப்பட்ட பிறவி சில
அதிலும் இந்த  மானிட பிறவியில்
கடவுளின் அம்சம் என்று சொல்லும்
திருநங்கை நண்பிகளின்
 நிலை அந்தோ பரிதாபம்
இது ஆண்டவனுக்கு மட்டுமே பொருந்தும் !!....

இவ்வுலகில் பாவ பட்டவள்
பெண் என்று நினைத்தேன்
அவளுக்காய் குரல் கொடுக்க
சினம் கொண்ட சிங்கம் மென பாரதியும்
சான்றோரும் பெரியோரும் இருந்தார்கள் ..
ஆனால் நங்கையே உன் நிலமை
ஊமை கண்ட கனவாக இந்த
 சமுதாயத்தில் உந்தன் நிலை ....
எந்த மிருகமும் தன் இனத்தை
சேர்ந்தவரை ஒதுக்கி வைப்பதில்லை
தன் இனத்தை ஒதுக்கி
அவதுறு  பேசி அருவருக்க
செய்யும் இந்த சமுதாயம் என்று திருந்துமோ !!....

யாரை குறை சொல்ல
 பெற்று கை விட்டவனையா?
கல்வி  கொடுக்க  மறுத்தவனையா?
புற அழகு கண்டு மனதில் வக்கிரம் கொண்டு
கிண்டல் பேசும் சமுதாயத்தையா? 
இல்லை படைத்தவனையா?
குற்றம் யார்மேல் இருப்பினும்
நட்டம் இவர்களுக்கே!!....

கவலையை துக்கி தூர ஏறி
ஒரு நாள் வாழும் ஈசலுக்கே
வாழ வழி இருக்கும் போது
உனக்கு இருக்காதா ?
ஆணை விட பலம் படைத்தவள் நீ
பெண்ணை விட ரசனை மிகுந்தவள் நீ
மனதை நேசிக்கும் மானிடர்கள்
துணை கொண்டு உன் திறமை
 வெளிக்கொணர்வாய்
உங்களின் கல்கி போல
உங்களின்' இப்படிக்கு ரோஸ்' போல
இன்னும் பலரும் மின்னல் என
மிளிர காண்பாய்
அவர்களை சிறந்த முன்னுதாரணமாய் கொண்டு
உனக்கான அடையாளம் தேடு நங்கையே !!....

இவர்களின் அக அழகு சிலருக்கு புரியும்
உங்களுக்குள் நீங்களே  உதவிக்கொள்ளும் பழக்கம்
பறவைகளுக்கு பிறகு உங்களிடம் காண்கிறேன்
பாசம் தேடி உங்கள் உரிமைக்காக அழுதது போதும்
பூமிக்குள் எதை புதைத்தாலும் அழிந்து விடும்
அதே பூமியில் விதையை விதைத்தால் துளிர் விடும்
இரண்டும் சாத்தியமே !!
நீ  விதையாய்  துளிர்த்து தளிராய் வளர்ந்து
விருச்சகமாய் செழித்து சமுதாயத்தில் ஆட்சி புரிவாய் !!....
« Last Edit: December 15, 2015, 01:28:35 PM by பவித்ரா »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline ReeNa

வானத்தை நோக்கிய எனது பார்வை .,
என் சிந்தை கேட்கிறது நான் யாரென்று .,,
நான் யாரென்று சொல்வேன் ..?
என்னை எப்படி வரையறுப்பேன் .,,

இந்த சரீரம் எனக்கு சொந்தம் இல்லை.,,
நான் சிக்கியிருகிறேன் .,,ஆமாம்
சப்தம் இல்லாமல் சிக்கியிருகிறேன் .,,
ரகசியங்கள் எனக்கு கைகொடுக்கும்
எனக்குள்ளே ஒரு யுத்தம்
என் போராட்டம் பார்க்கபடுவதுமில்லை ..
சமுகத்தால் கேட்கபடுவதுமில்லை .,,

நீ அறிவாய் நான் மானுடம் என்பதை .,பின்
எதற்கென்னை நீ இப்படியாக்குகிறாய் ?
எதற்கிந்த வேஷம் ., ஏற்றுகொள்ள முடியவில்லை
உந்தன் மாறுபட்ட மனத்தால் .,,
ஏன் இந்த முடிவு.,, நானும் உயிர் ( பெண்) தானே !

நரம்புகளில் வேகமாய் ஓடும்  ரத்த ஓட்டம் .,,
கண்ணீரில் பெருக்கெடுத்த கண்ணீர் துளி  .,
நான் வாழ விளைகிறேன் .,,
அதிகம் என்ன கேட்டுவிட்டேன்.?


உனக்கு மட்டுமே தெரியும் .,,
எல்லாவகையிலும் நானும்
உன்னை போல் மனிதன் என்று,,
« Last Edit: December 15, 2015, 02:45:10 AM by gab »

Offline பொய்கை

  • Full Member
  • *
  • Posts: 108
  • Total likes: 792
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யாகாவராயினும் நாகாக்க...
பிறக்கையிலே ஆண்  என்றார்கள் ..
                           பெண் என்றார்கள் ..
வளர்ந்து விட்டேன்..
             திரு  நங்கை  என்கிறார்கள்..

ஆணாக பிறந்திருந்தால்
        பெண் தேடி ஓடியிருப்பேன் ..
பெண்ணாக பிறந்திருந்தால்
       ஆண் தேடி ஓடியிருப்பேன் ..
இரண்டுமாகி பிறந்துவிட்டேன் ..
       அதனால்
பிழைக்க வழி தேடி அலைகின்றேன்...

திருமால் என்றேன் வணங்கினார்கள் ..
திருமகள் என்றேன் வணங்கினார்கள் .,
திருநங்கை என்றேன் பினங்கினார்கள்.,

உள்ளத்தில் இடம்  இருந்தால்
இல்லத்தில் இடம் இருக்கு ....
உள்ளத்தில் இடம் இல்லை.,,.அனாதை
இல்லத்தில் இடம் இருக்கு .,.

தாலி எப்போதும் போட்டால் அவள் மணமங்கை.,,
ஒருநாள் மட்டும் போட்டால் அவளே திருநங்கை.,

தாயே நீ பேறு பெற்று அழுதிருப்பாய் .,,
நானோ என் பேரு கேட்டு அழுகின்றேன் .,

Offline MaJeStY

                       
ஈனர்களின் பேச்சில் இவள் ஒன்பது
அனைவருக்கும் இன்முகம் காட்டும் நற்பண்பு இவளது !!

இவளும் நங்கையே !!
பாசத்தில் மங்கையே !!

ஆணுக்குள்ளும் பெண் மனம்
பெண்ணுக்குள்ளும் ஆண் குணம்
இவளோ பெண்ணின் குணமும் அழகும்
ஒருங்கே பெற்ற ஆண் !!

நங்கைகளில் இவள் மிகவும் மதிப்புக்குரியவள்
அதாலே இவள் "திரு" நங்கை !!

இந்தியாவின் வடக்கில் இவள் இல்லாத சுபகாரியங்கள் இல்லை
தெற்க்கிலோ இவள் படாத துன்பங்கள் இல்லை

வந்தாரையெல்லாம் வாழவைப்போம் எனும்
தமிழகத்தின் தீர்க்கமான நிலை
இவளை மட்டும் கை விட்டது வரலாற்று பிழை !!

வரலாற்றில் முதல் அரவாணி கண்ணனே !!
இன்று இவளை துன்புறுத்துபவன் நிகழ்கால கண்ணனே !!

உலகில் ஒன்று ஆண் சாதி
 இன்னொன்று பெண் சாதி என்று
பிதற்றும் மடமையர்களுக்கு
மற்றொன்று எம் சாதி என சூளுரைத்தவள் இவள்
இவளுக்கோ  ஜாதி பேதங்கள் கிடையாது !!

குடும்பம் இவளை ஒதுக்கிய போதும்
திருநங்கைகள் குடும்பத்தின் அங்கம் இவள்
மாசற்ற தங்கம் இவள் !!

இன்னல்கள் நித்தம் நித்தம் இவள் வாழ்க்கையை துண்டாடிய போதும்
தளராமல் நின்றாடும் வெற்றி வீராங்கனை இவள் !!

காமுகரின் வக்கிரம் இவளை குதறும் போதும்
வசவுகள் இவளை துளைக்கும் போதும்
கண்களில் கண்ணீரையும் மனதில் வைராக்கிரத்தையும்
தாங்கி நிற்கும் இரும்பு பெண்மணி இவள் !!

பாலியல் தொழில் விடுத்து
பிச்சையெடுத்தேனும் மானத்தோடு வாழ நினைக்கும் இவளை
மானங்கெட்ட சிலர் கொச்சைப்படுத்துவது அவமானத்தின் உச்சம்

ஏய் இருபாலினமே நீயும் வாழ்
எங்களையும் வாழ விடு !!

நாங்கள் உங்களிடம் கேட்பது வாழ்கை அல்ல
நிம்மதியாக வாழ சுதந்திரம் மட்டுமே!!


« Last Edit: December 15, 2015, 11:32:56 PM by MaJeStY »

Offline gab

பிரம்மன் மனிதனை படைக்கும் தருணம்
நொடிப்பொழுது தயக்கத்தின் விளைவோ
உடல்கூறில் முழுமைபெறா இப்படைப்பு?
மானிடராய் பிறப்பது ஒரு பேரு என்றால்
அதில் பாலியல் குறைகளோடு பிறந்தது
இவர்களின் குற்றமா?

மாற்று திறனாளியை பரிதாபத்தோடு
ஏற்றுகொள்ளும் இந்த சமுதாயம்
வாழ்கையை வாழமுனையும் இவர்களை
அங்கீகரிப்பதில் ஏன் தயக்கம் ?...

பெண்களுக்கு 33% ஒதுக்கீடு கொடுக்க
முன்வந்த சமுதாயமே ,
ஒவ்வொன்றுக்குமே உச்சநீதி மன்றத்தின்
கதவுகளை தட்ட இயலுமா?
அது பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே
இன்று நீதி வழங்கி கொண்டிருகிறது...

கல்லறைவரை சொல்லடியில் நோகும்
இவர்களின் இன்றைய நிலை,
நாம் உண்ணும் உணவுமுறையால்
நாளை நம் சந்ததிகளுக்கும் வரலாம் 
என்று யோசித்து பார்.
சற்றே மனம் இறங்குவாய்.. 

இது மக்கள் ஆட்சி தானே ?
ஆதலால் புதிதாய் ஒரு சட்டம் இயற்று !
கொண்டு வா விண்ணப்பத்தில்
மற்றும் ஓர் பாலினம் ,
இவர்களை 'திருநங்கை என  வகைப்படுத்து.
இவர்களுக்கும் இந்த சமுதாயத்தில்
வாழ சம உரிமை கொடு ....
இவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகொடு .

வாழ்கையெனும் ஓட்டப்பந்தயத்தில் 
இவர்களையும் ஓட விடு
கேலி கிண்டல் செய்து
இவர்களை  முடக்காதே !

கண்ணீரில்லா வாழ்கையை சமூகத்தில்
தலைநிமிர்ந்து இவர்களும் வாழட்டுமே!

ஒதுக்காமல் அங்கீகரித்து
இவர்களின் திறமைகளை செதுக்குங்கள்
மங்கல்யான் ஐ மிஞ்சும் வல்லமையை
இவர்களும் பெற்றிருப்பார்கள்.
« Last Edit: December 17, 2015, 02:14:22 AM by gab »