Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 085  (Read 2696 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.



நிழல் படம் எண் : 085
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Kanmani அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 15, 2018, 11:36:40 AM by MysteRy »

Offline ReeNa

வாலை பருவமதில் அப்பாவின் துணை கொண்டேன்
தருணி பருவமதில் மன்னவனின் துணை கொண்டேன்
பிரவுடை பருவமதில் குழந்தையின் துணை கொண்டேன்
விருத்தை என்னை விரட்டிடவே கைதடியை பற்றிக்கொண்டேன் .

இந்த வாழ்க்கை வட்டத்தின் எல்லையில் நிற்கிறேன்
உயிர் எல்லை தாண்டி வாழ்கிறேன்
அமைந்த பந்தங்கள் தொலைத்து நிற்கிறேன்
என் சொந்த கால்களில் ஒருத்தியாய் நிற்கிறேன்

நரைத்த  கூந்தல் என் வயதை  காட்டும் செல்வங்கள்
வெண்ணிறம் கொண்ட சேலை என் தனிமையை காட்டும் சுவரங்கள்
என் வாழ்க்கையின்  பயணங்களை காட்டும் என் தோல் சுருக்கங்கள்
என் மகனே வா! மகளே வா !..என்றே அழைக்கும் என் கண்கள்

இன்று காலை சந்தையில் உன்னை வரவேற்கிறேன்
சேனை,அவரை, நூக்கல், தக்காளியுடனே உன்னை சந்திக்கிறேன்
அம்மா இதை கொடுங்கள் என்றே நீ சொல்ல காத்திருக்கிறேன்
என் சட்டியை பொங்க வைக்க உன்னை நம்பி இருக்கிறேன்..



« Last Edit: January 06, 2016, 12:58:11 AM by Forum »

Offline MyNa

தமிழ் தாய்க்கு வணக்கம் ..

வெள்ளைச் சீலையில் தெருவில் அமர்ந்திருப்பது
அந்தத் தாய் மட்டும் அல்ல
மனித நேயம், பாசம் மற்றும் பொறுப்புகளும் தான்..
என்று இவைகள் தலை ஓங்குகின்றனவோ
அன்று தான் அவளும் தலை நிமிர்வாள் ....
அது வரை இவள் தலை பிறர் வருகைகாக
ஏங்கிய படியே இருக்கும்...

தனித்து விடப்பட்ட இவள் துவண்டு விடவில்லை
மாறாகப் போராடிக் கொண்டே தான்  இருக்கிறாள்..
அவள் போராட்டம் எவராலும் பொருட்படுதப்படாது
என்பது அவள் அறியவில்லை போலும்
அவள் நிலை நாளை நமக்கு வரும் வரை
அவள் வெறும் கண்காட்சி தானோ என்னவோ..

கையேந்தவில்லை அவள் மாறாக
அரை வயிற்று சோற்றுக்கு உழைக்கிறாள்..
உழைப்பிற்குக் கூட மதிப்பளிக்காத உலகமா இது ?
அவளுக்கு அடைக்களம் கொடுக்க வேண்டாம்
வாழ ஊக்கமாவது தரலாமே..
தன் இரத்தத்தைப் பாலாய் கொடுத்த அவள்..
இன்றும் இரத்தத்தைச் சிந்துகிறாள் வியர்வையாக ..

அவள் நிலை நாளை நம் தாய்க்கும் வராமல் இருக்க வேண்டும்..
முதுமையிலும் வாழ வழி தேடி அலையும் அவள் எங்கே
இளமையிலேயே வாழ்கையை வீணடிக்கும் நாம் எங்கே ??

சிந்திப்போம் ..

தமிழ் பிரியை மைனா


« Last Edit: January 06, 2016, 01:00:42 AM by Forum »

Offline பொய்கை

  • Full Member
  • *
  • Posts: 108
  • Total likes: 792
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யாகாவராயினும் நாகாக்க...
பெற்றவளை புறம் தள்ளும் உன் அறியாமை!
கொண்டவளை கொண்டாடும் உன் கூடாமை !

உன்னை சுமந்தவளை நீ சுமக்க முடியாமை!
பாவத்தை நீ சுமப்பாய்  என்பதுனக்கு தெரியாமை!

என்னிடம் உள்ளதிப்போ தள்ளாமை !
உன்னிடம் உள்ளதிப்போ இயலாமை !

வேறு ஏதும் செய்திடேன் அது என் கல்லாமை !
எதுவுமே செய்யாமல் நீ ஒதுங்குவது உன்  முயலாமை !

நடை பாதை கடை  போட்டதெந்தன்  பேராண்மை !
இதை கூட பொறுக்காத சிலரிடம் காண்கிறேன்  போறாமை !

இப்போதும் உழைகின்றேன் அது இரவாமை!
இந்நிலையில் நான் வேண்டேன் ஒரு போதும் இறவாமை !

என்றோ நீ உணர்வாய்
                                   யாக்கையின்  நிலையாமை ! 
அன்றே நீ வேரறுப்பாய் இந்த
                 இயலாமை!,கூடாமை! ,முயலாமை! ,போறாமை !

                                            --- பொய்கை ---


« Last Edit: January 06, 2016, 01:01:57 AM by Forum »

jee

  • Guest
இதுக்கு மேல பத்து பைசா   
குறைக்க முடியாதம்மா                     
உனக்கொரு விலை   
மத்தவங்களுக்கொரு விலையாம்மா
 
கூறு பத்து ரூபானு  கூவிக்கூவி         
நாவெல்லாம் வரளுதும்மா                           
என்ன ஏன் கேட்குறே  என்னவோ இருக்கிறேம்மா                         
என்ன பாத்தா தெரியலையாம்மா   
                 
என்ன பெத்தவங்களோட  முப்பத்தொன்னுஓட்டினேன்                                    என்னவரோடமுப்பத்தேமாசந்தாஓட்டினேன்                                                          என்மொவனோடஇருபத்தொன்னுஓட்டினேன்                                                       
பெத்தவளவிட்டுபுட்டு கூட்டிட்டு போயிட்டாம்மா 
                                                       
அன்னைக்கும் இன்னைக்கும் தனிதாம்மா
இநத கட்டைல ஓடுற  வர ஓடட்டும்மா

« Last Edit: January 06, 2016, 01:02:52 AM by Forum »

Offline SweeTie

  மண் கொடுத்த  பசளை போதுமென் றோம்
விண் கொடுத்த மழைநீரில் நிறைவு கண்டோம்
போதும் என்ற மனமே பொன்செய்யும்  மருந்து
போதும் என்ற காலம்  பொய்யாகி  இன்று
வேதி உரம் இல்லை என்றால் விளைச்சல் இல்லை
விளைச்சல் இல்லாமல் வியாபாரமும் தொலைந்து
விஷம் கலந்த உணவே நம் உயிர் கொல்லி யாகி
ஔஷதம் என்ற போர்வையில் விஷமும் சேர்த்துண்டு
விருந்தும் மருந்துமாய் தினமும் மன்றாடி
மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிலே போராட்டம்

வீட்டுக்கொரு   தோட்டம் வைத்து
எருப்  பசளையிட்டு  எற்றமதில் நீர் இறைத்து
வகை வகையாய்  பயிர் வகைகள் நட்டு
அழகுக்கும் அறிவுக்கும் வெண்டி பாத்திகட்டி
நோய் எதிர்ப்பு சக்திக்கு கத்தரி நிரைநிரையாய்
காமாலைக் காச்சலுக்கு புடலைக்கு ஒரு பந்தல்
எடை  குறைய வேண்டி பூசணி நிலம் படரும்
வெங்காய மேடைக்கு விரல்  வைத்து நீர் ஊற்றி
தக்காளி  பூத்ததென்றால்  ஊரெல்லாம் கமகமக்கும்
வேதி உரம் இல்லாமல் ஊருக்குள்ள வெளஞ்ச பயிர்
இயற்கை வளத்தோட இதமாக வளர்ந்த பயிர்
பொண்ண வளர்த்தாபோல் பொத்தி பொத்தி வளர்த்த பயிர்
சொல்லி மாளாது  நம்ம ஊரு காய்கறிகள் ...

வயசாகிப் போனாலும் தலை நரை கண்டாலும்
மனசு மட்டும் இன்னும் மாற்று குறையவில்ல
நோய் என்று ஒரு நாளும் பாயில் படுத்ததில்ல
கூன் விழுந்து போனாலும் நடையில் தளர்ச்சி இல்ல '
விஷம் இல்லா  உணவு வகை உருக்குலைய விட்டதில்ல
நாலு காசு சம்பாதிக்க நடைபாதை அங்காடிக்கு
மூணு கட்டைத்  தூரம் நடையாய் நடந்து வந்து
மனசார  அன்போடு உபசரித்து அழைக்கின்றேன்
வாங்கிடுவீர் இயற்கையில் விளைந்த நம் காய்கறிகள்   
உண்ணுங்கள் விஷம் கலவா உணவுவகை
பெற்றிடுவீர் நீண்டதோர்  சுகவாழ்வுதனை.......

 


« Last Edit: January 06, 2016, 01:04:02 AM by Forum »

Offline சக்திராகவா

நாடி நரம்பெளச்சு
சூடும் தல நெறச்சு
ஆடுன பல் விழுந்தும்
ஓடுன கால் நிக்கலயே!

உச்சி வெயில் பிளக்க
முச்சந்தி கடைபோட்டு
கூன் விழுந்த தடுமாற்றம்
கூறுகட்டி வியாபாரம்!

காய் வித்த காசுக்கு
கால் வையித்து கஞ்சி
உன பார்த்து வருந்தாதா
ஊர் உலகம் திருந்தாதா!

சுருக்குபை இருக்கும் வரை
சொந்தமும் சூழ்ந்திருக்கும்
சூழ்ச்சுமம் தெறிஞ்சவளே
சொந்தஞ் சூழ சேக்குறியா?

கண்ணுல பொற விழுந்தும்
உன் கவுரவம் தர விழல
பேரம் பேச கடவுள் வந்தா
கஷ்டத்துக்கு என்ன விலை!

கடைசிவரைக்கும் உழைக்கனும்னு
இஷ்டபட்டா வாங்கி வந்த
தலைவணங்க தயக்கமில்ல
தாயே உன் தன்னம்பிக்கைக்கு!

வணக்கத்துடன் சக்தி



« Last Edit: January 06, 2016, 01:05:04 AM by Forum »

Offline vaseegaran

தினந்தோறும் பார்க்கிறேன் எங்கள் தெரு முனையில்
அதே சிரிப்பு எப்பொதும் அதே சிரிப்பு
வாங்கப்பு தக்காளி வேணுமா அதே சிரிப்பு
கூறு எவளோ
பதினஞ்சு ரூவா விலை சொலும்போதும் அதே சிரிப்பு
பத்து ரூவா தானே அங்கிட்டு
கட்டாது ராசா மறுபடியும் ஒரு  சிரிப்பு
இருபது ரூபாய் கொடுக்கிறேன்
தக்காளியும் குடுத்து  கொஞ்சம் கருவேப்பிலையும் குடுத்து
கூடவே மீதி 5 ரூபாயும்  கொடுக்கும்போது அதே சிரிப்பு
வாழ்கை தம்மை நெஞ்சை பிளந்த போதும்
நம்பிக்கை துணைகொண்டு அன்பை கொட்டும் சிரிப்பு
அவநம்பிக்கை சூழ் உலகுக்கு உழைப்பை காட்டும் அதே சிரிப்பு
என்னப்பு வேற ஏதும் வேணுமா என்றால்.
வேண்டும் என்றே 5 ரூபாயை கீழே தவறே விட்டு
அவள் பாதம் தொட்டு வணங்கினேன் பதறி போய் பின்பு சிரித்தால்
யாரோ சொன்னார்கள் ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று
பாருங்கள் இங்கே  சிரித்த முகத்தோடு இறைவனே எனக்கு தக்காளி தருவதை....

என்றும் உன் பக்தன்
வசீகரன்



« Last Edit: January 06, 2016, 01:06:02 AM by Forum »

Offline சிநேகிதன்

வங்கியில் கடன் பட்டு
பகட்டாய் காரிலே
போகிறவன், கடன் இல்லாமல்
நடந்து போகிறவனை எகத்தாளமாய்
பார்க்கும் உலகம் இது.

சரி எது  தவறு எது
அறியாமல் பிதற்றுவார்
அதையே பின்பற்றுவார்.
அவர்களுக்கு சுகாதாரம்,
தரம்,ருசி மட்டுமே
மிகவும் முக்கியம் என்பார்கள்
அது எது  என்று அறியாமலே !!

அதிக விலை அங்காடியில்
கலப்பின காய் கனிகளை 
பெயர் தெரியாமலே
வாங்கி குவிப்பார்கள் பெருமைக்காக
அங்கு விலை கேட்டால் இவர்கள்
கௌவுரவம், மதிப்பு குறைந்து விடும்.

அதுவே தோற்றத்தில் முதிர்ச்சியையும்
உழைப்பில் இளமையையும்
உடையிலே வறுமையையும்
உள்ளத்தில் நேர்மையுடன்
வாழ நினைத்து,சிறு நிலத்தில்
இயற்கையோடு ஒன்றி விவசாயம்
செய்து ,சிறிது சிறிதாக கூறு வைத்து
விற்று பிழைக்க நினைப்பவரிடம்
வந்து நின்று இவன் திறமை காண்பிக்கும்
இடமாக பேரம் பேசும் மூடர்களை
என்னவென்று சொல்வது?


நல்ல பொருளை நியாயமான  விலையில்
கொடுக்க முன் வந்தால் அவர்கள்
தோற்றத்திற்கு விலை வைத்து
 வாங்க மறுக்காதீர்கள்.
பொருளின் மதிப்பு விற்கும் இடத்தில இல்லை
பொருளின் தரத்தில் உள்ளது ...

இயற்கையோடு சேர்ந்து வாழ துடிக்கும்
சிறு வியாபாரிகளுக்கு கை கொடுத்து
சற்றே சிந்தித்து  சரியான வாழ்க்கையை
ஆரோக்கியமாக வாழுங்கள்
அவர்களையும் வாழ விடுங்கள்.


- கவிதை இணைப்பில்  சிநேகிதன்


« Last Edit: January 06, 2016, 01:08:06 AM by Forum »

Offline NiThiLa

வானமே கூரையாய்,
பூமியே மேடையாய்,
பொசுக்கும் வெயிலில்,
உருக்கும் பனியில்,
காய்கறி கடை

தாய்-மக்கள் ,கணவன்-மனைவி
என எண்ணற்றோர் காண்கிறேன் தினமும்
அவ்வேளையில்
என் நினைவில் என் பசுமை காலங்கள்
நான் கண்ட வசந்தங்கள்,

அன்று நீ சிரிக்க
நீ பசியாற
உன் கனவுகள் ஈடேற
நீ வாழ்வில் உயர
தெருமுனையில் அமர்ந்தேன் கடை போட்டு

இன்று மறந்து விட்டாயோ
கருவில் சுமந்து
உனக்கு உயிர் கொடுததவளை
உனக்கு உணவு ஊட்டியவளை
உன் விரல் பிடித்து நடை பழக்கியவளை
உன் கனவுகளுக்கு என் உழைப்பால் வண்ணம் கொடுத்ததை

போகட்டும்,
தலை நரைத்தாலும்,
கூன் விழுந்தாலும்
நடை தளர்ந்தாலும்
என்னிடம் சுயமரியாதை உண்டு
 என் மனதில் உறுதி  உண்டு
 
என்றேனும் இந்த கிழவியின் நினைவு வந்தால்
வா மகனே வா மகளே
காத்திருக்கிறேன்
வழி மேல் விழி வைத்து
அதே அன்போடு
உன் தேவைகளுக்கு உதவிட
உன் அளவில்லா ஆசைகளுக்கு நீர் வார்க்க