Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 086  (Read 2733 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218362
  • Total likes: 23059
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.



நிழல் படம் எண் : 086
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Viper அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
« Last Edit: October 11, 2018, 09:53:21 PM by MysteRy »

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
எதற்காக சம்பாதிகின்றோம்
என்று உணராமலே,
எதை நோக்கி பயணிக்கிறோம்
என்று  தெரியாமலே,
அவதி அவதியாய்
ஓடும் இந்த கலிகாலத்தில்
விஞ்ஞான வளர்ச்சியின்
ஒரு அங்கமாக இன்று
நிறைய இணைய தளங்கள் ....

மனிதனின் நேரத்தை முழுங்கிட
புத்திசாலிகள் கண்டு பிடித்ததே
இந்த வலைத்தளங்கள்.
விரல் நுனியில் இன்று உடனுக்குடன்
நாம் பல விஷியங்களை தெரிந்து கொண்டாலும்,
இதன் பின் ஒளிந்து இருக்கும் ஆபத்துக்களை
உணராத விட்டில் பூச்சிகளாக சில மனிதர்கள்
சிக்கி கொள்கிறார்கள் ....


எங்கோ நடக்கும் ஒரு சகோதரியின்
பரிதாப நிலைக்கு பாவம் பார்த்து
 வீறு கொண்டு கருத்துக்களை கோபமாக  பகிரும்
 வலைத்தள ஹீரோக்களுக்கு அருகில் நடக்கும்
அக்கரமத்தை தட்டி கேட்க தோணாதது  ஏனோ ...

ஆனாலும் அப்பாவியாய் இருக்கும் பெண்களே,
சற்று சிந்தித்து உங்கள் புகை படங்களை
வலை தளங்களில் பதிவிடுங்கள்.
ஏன் என்றால் அழகை  அன்போடு பார்க்க
அங்கு அன்னை தேரேசவோ
அன்பை போதிபவர்களோ இல்லை ....

எனக்கு வாழ பிடிக்கவில்லை  என்று ஒருத்தி
தகவல் பகிர்ந்தால் என்ன ஆயிற்று என்று பதறும்
அதே கூட்டம் ஒரு ஆண்  பகிர்ந்தால்
கயிறு அனுப்பவா மருந்து வேணுமா
என்று பாரா  பட்சம் பார்க்கும் கேளிக்கை
மனிதர்கள் உலவும் இடம் அது ...

எந்த ஒரு கண்டு பிடிப்பிலும் சாதகமும் பாதகமும்
சேர்ந்தே இருக்கும் , எது நமக்கு தேவை
 என்பதை நாம் தான் உணர்ந்து
நல்லதுக்கு மட்டுமே பயன் படுத்தி
அனைவரையும் பயன் பெற செய்ய வேண்டும் ...
« Last Edit: January 04, 2016, 09:18:27 PM by பவித்ரா »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline JEE

ஆல மரத்தடியில் ஆண்மக்கள்   
அரட்டையடிக்க நேரமில்லை நேரமில்லை
முழு  நிலவொளியில் பெண்மக்கள்
கதையடிக்க நேரமில்லை நேரமில்லை
                                 
பேராண்டீ  வாயேன் என காலை நீட்டி                                                                                             
வெத்தல  பாக்கு உரலில் வைத்து   இடித்து
க்ரீச் க்ரீச்சென்ற ஓசையுடன்  வளித்து எடுத்து                                                                 
வாயில்  போட்டு கதை  கேட்க அழைக்கும்
பாட்டிக்குநேரமில்லை  நேரமில்லை

பாட்டி கதை கேட்க மாந்தர  எவர்க்கும்   
நேரமில்லை   நேரமில்லை   
 
பயனுள்ள  இணைய  தளங்கள் பலபல
இணையவழிக் கல்விக்கென பலபல                               
வேலைவாய்ப்பிற்கென பலபல                                                       
பயனுள்ளதாக  காண்பவர்க்கு 
பயக்கும்பயன்கள் பலபல
                                                                                                                                                                                                              பதினோராயிரம்தமிழ்தளங்கள் 
தேடித் தேடி பார்த்து நேர‍த்தை சேர்த்து 
நேரமில்லை என்று சொல்லாமல்
எனக்கொரு வேலை தேடித்தா 
இநத இணைய தளத்தில்.

 
« Last Edit: January 04, 2016, 03:03:16 AM by Forum »
with kind regard,

G'vakumar.

Offline ReeNa

பேஸ் புக் ,டிவிட்டர் , யு டுயுப் , ஸ்கயிப்
நேரத்தை செலவிடும் உங்கள் கூட்டாளிகள்.
உலகத்தின் பார்வையை ஈர்க்கும் புகைப்பட குப்பைகள்.
பிடிக்கும் பிடிக்காதென்று உங்கள் எண்ணங்களை பதிவிடலாம் ..

அம்மா சொல்லுவாள் தலை  நிமிர்ந்து நடவென்று ..
ஆனால் தொடர் வண்டி , பேருந்து ,வணிக மையம், சாலை ஓரமென .
 தலைநிமிர்ந்து நடைபோடும் நாம் .,சமூக தளங்களில் தலைகவிழ்ந்து  போனோம்..
வார்த்தை மறந்து போய்.. எழுத்துகளை மட்டுமே பரிமாறி கொள்கிறோம் ..

சுவரை பார்ப்பது போல பேஸ்புக் பார்க்கிறாய் ..
தெரியாதவர் நட்பின் அழைப்பை நெகிழ்ச்சியோடு பார்க்கிறாய் ..
என்ன வாங்கினாயோ  அதை பற்றி ட்விட்டர் இல் கிறுக்குகிறாய்
யு டுயூப் என்ற அகழியில் வீழ்ந்து  கிடக்கின்றாய் .,,
ஸ்கை பில் கமலோடும்., ஜமாலோடும் வெட்டியாய் பேசுகிறாய் ..

பொருந்தாத தூரத்தில் இந்த பொறிகள் .,,
மனங்களை சிறை பிடிக்கும் முடிவில்லா வலைகள் ..
வந்தவர்களை வசீகரிக்கும் சுவைகொண்ட  உணவகங்கள் .,
யாரையும் அடிமையாக்கும் இங்கே கிடைபதேன்னவோ..
கொஞ்சம் சந்தோசமும் ., கொஞ்சம் பூக்களுமே .,,

திரையில் தெரியும் எழுத்துக்கு பின்னால் அர்த்தங்களை  மறைத்து
போலியான பொம்மைக்கு பின்னால் உண்மையான உணர்வுகள் மறைத்து
சிந்தனைகளுக்கும் ,இலட்சியங்களுக்கும் வண்ணம் பூசி ..
பதிவிட்டு .. பதிவிட்டு ., நம் எல்லா அசைவுகளையும் பதிவிட்டு ..
யாருக்கு தெரியும்.,, யாரும் படித்தார்களா ., பார்த்தார்களா என்று ?

இவ்வுலகை விட்டு நாம் விடைபெறும் நாளில் .,
இவ்வளைதலங்களும் விடை பெற வழி செய்வோம் ..
என் தனிமை போய்விட்டது .,,அதற்கு என்ன விலை ?
வலைதளங்களுக்கு ஏது கருணை ..
எண்ணங்கள் திருடப்படுகிறது  .. சட்டங்கள் மீறப்படுகிறது

வார்த்தைகளே உண்மையான ஆயுதம்..
உன்னை ஒரு அமானுஷ்யம் பார்க்கிறது..சந்தர்பத்திற்காக .
உன்னை பற்றிவிட்டால் மந்திரக்காரன் கை பதுமை நீ ..
மறந்துவிடாதே ! உன் வாழ்கையை நீ வாழ வில்லை என்பதை .,,
« Last Edit: January 07, 2016, 03:19:39 AM by Forum »

Offline பொய்கை

  • Full Member
  • *
  • Posts: 108
  • Total likes: 792
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யாகாவராயினும் நாகாக்க...
கணிபொறியை  கண்டு வச்சான் !
பிரமாவையே  அசர  வச்சான்  !

மென்பொருளை உள்ளே வச்சான் !
வன்பொருளை மேலே வச்சான் !

கீ போர்டு என்ற பலகை வச்சான் !
விரலுக்கு  வேலை  வச்சான் !

மெயில் என்ற ஒன்றை வச்சான் !
கடிதம் அவசரமா அனுப்ப வச்சான் !

பேஸ் புக்கை திறந்து  வச்சான் !
நட்பையும்தான் குவிச்சு வச்சான்!

லைக் கயும்,கமெண்ட்சயும்  அதில வச்சான் !
சந்தோசமாய் பார்க்க வச்சான் !

காதலுக்கு தூது வச்சான் !
காதலரை சேர்த்தும்  வச்சான்!

ஸ்கய்ப்  என்ற கண்ணை வச்சான் !
குடும்பம் நெனச்சப்ப பார்க்க  வச்சான் !

ட்விட்டரில்  எழுத  வச்சான் !
மனித மனம் பார்க்க வச்சான் !

யுடியூப்  இல் சினிமா வச்சான் !
சந்தோசத்த அள்ள வச்சான் !

உலகத்தை இணைக்க வச்சான் !
வலையாக பின்ன வச்சான் !

வச்சான்! வச்சான் ! எல்லாம் வச்சான் !
உலக நடப்பை  ஒருநொடியில் காண வச்சான் !

ஒரு நிழல் படத்தை  இங்கே   வச்சான் !
என்னையும் இப்போ எழுத  வச்சான் !
 

                           ---  பொய்கை ---
« Last Edit: January 07, 2016, 10:41:47 AM by பொய்கை »

Offline MyNa

தமிழ் தாய்க்கு வணக்கம்..

தொடங்குகிறேன் என் கிறுக்கலை மன உறுத்தலுடன்..

உயிரற்ற எழுத்துக்களும் படங்களும் பேசுகையிலே..
உயிருள்ள மனிதனோ ஜடமாகிறான் கைப்பேசியிலே..

சமூகதத் தளங்கள் படையெடுக்கையிலே..
மனிதனின் பொன்னான நேரம் போவது குப்பையிலே..

ஆண் என்ன பெண் என்ன இவ்வுலகிலே..
அனைவரும் அடிமைகளே இன்று இணையத்தளத்திலே..

தாய் தந்தை இருந்தும் நாம் இருப்பது தனிமையிலே..
நம்மைத் தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டிருகிறார்கள் அவர்கள் இருட்டிலே..

தொலைந்தது நீ மட்டும் அல்ல ஊடகத்திலே..
உனது இளமையும் அடையாளமும் கூட மறைந்தது காற்றிலே..

நீயாக உணர்ந்து எழுந்தால் நல்ல எதிர்காலம் உன் முன்னே..
இல்லையேல் உன்னைப் பற்றிப் பேசத் தடயங்கள் கூட இருக்காது பின்னே..

சற்றே சிந்திப்போம் .. முடிந்தால் மாறுவோம் ..

இது எனக்குமே ஒரு நினைவுறுத்தல்...

( மைனா தமிழ் பிரியை
) ]
« Last Edit: January 07, 2016, 05:42:04 AM by MyNa »

Offline StasH

கதிரவனுக்கும்
நிலா மங்கைக்கும்
காதல் சாத்தியமாயிற்று !

ஆயிரம் மைல்களுக்கு அப்பாலும்
அன்பு முத்தங்களை
அலுங்காமல் சுமந்து செல்லும்
அறிவியல் சாதனம் பெற்றாயிற்று !

இதழ்கள் மோதி
காயமுற வேண்டாமென
கைபேசி கவசம் உடுத்தியாயிற்று !

கண்ணீர் சிந்தி
சிதைய வேண்டாமென
நீர் புகா நுட்பம் பொறுத்தியாயிற்று !

-------------------------------------------------------------------------------------------

'வீல்ல்ல்ல்ல்ல்'
விரைந்தான் தொட்டிலை நோக்கி

முப்பது நொடி
தொட்டிலாட்டாலே போதும்;
இன்றேனோ, வீறினாள்
மூன்று நிமிடங்கள் மேலும்

பதறியவன்
பற்றினான் கைபேசியை
பொத்தான்களை அழுத்தி
அழைத்தான் துணைவியை

செல்லம் கண்ணு, அம்மா பாருடா
இங்க பாரு இங்க பாரு ;
'வீல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்'

செல்லத்த புடி !! புடி புடி புடி !
நண்டு வருது நண்டு வருது ;
'வீல்ல்ல்ல்ல்ல்ல்'

முயற்சி வீணாக
வீல்ல்ல் பலமாக
கண்கள் குளமாகியது
குரல் நடுங்கியது

செல்ல்ல்ல்லம்ம்ம்ம், அம்ம்மம்ம்மா ப்ப்பாருடா
அழ்ழ்ழாதடா குட்டி;
'வீல்ல்ல்ல்ல்ல்ல்'

தன் வயித்தை தடவினாள், 'பசியாக இருக்குமோ?'
இவன், தன் மார்பை தடவினான், 'நான் என்ன செய்ய?'

வீல்ல்ல் ஓயவில்லை
பதட்டம் குறையவில்லை
காதுகளை கிழிக்கும் கதறல்
பிஞ்சின் தொண்டை கிழிக்கிமோ
அஞ்சினான், செய்வதறியா நின்றான்

சடேலென, ஏதோ உரைத்தவனாய்
தெளிந்தவனாய்;
கைபேசி விடுத்து, அள்ளி எடுத்தான்
தன் மகளை

ஸ்பரிசம் உணர்ந்து
வீல்ல்ல் ஓய்ந்தது
அறையில் அமைதி
தாய்க்கு நிம்மதி

-------------------------------------------------------------------------------------

வீல்ல்ல்ல் ஓய்ந்ததில்
ஆனந்த கண்ணீர் மல்கினாள்
நிலா மங்கை ...
ஜன்னல் வழியே

அனைத்தும் சுபமே என்று
அணைத்தான் கதிரவன் ;
ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள
மற்றொரு ஜன்னல் வழியே ...
« Last Edit: January 07, 2016, 03:45:02 PM by StasH »
மழைக்காதலன்,
StasH

Offline சக்திராகவா

முகம் பார்த்து சிரிப்பதில்லை
முகபுத்தக முக்கியத்துவம்
அடைபட்டோம் அறைக்குள்
அன்றாட தேவையாய் இணையம்!


கணக்கின்றி போனது
கணினி உண்ட கணங்கள்!
கருத்து சுதந்திரம்
கழுத்துக்கு கத்தி!

அறிவியல் வளர்ச்சியின்
அடுத்த நொடி
வளர்ந்தவன் இடித்த வாசற்படி

உண்மையோ பொய்யோ
ஊர்பரப்ப உடன் சேரும்
சாட்சிக்கு கூட இன்று
சமூக வலைதளம்!

நிகழ்வின் நிழற்படம்
நீண்ட நாள் பொக்கிஷம்
விதவிதமான புகைப்படம்
விரும்புவோர் விரும்ப!

சார்ந்தோரை சேர்ப்பதே
சாதனைத்தானே!
வேதனை சிலவேளை
இறந்தவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

எளிய வழி இதுவோ
என் கவிதை காட்சி பெற
வலிய மொழி இதுவோ
எல்லோரும் இணைந்துவிட

நன்மையா? தீமையா?
நமக்கெதற்காராய்ச்சி!
அளவின்றி போனால்
ஆபத்துதானே!

....சக்தி
« Last Edit: January 07, 2016, 08:04:27 PM by சக்திராகவா »

Offline SweeTie

இணையத்தில் இணைவோம்  தேவையை நாடுவோம்
தேவையைத் தேடுவோம்  சேவையைத்  தெரிவோம்
சேவையும் செய்வோம்  அறிமுகம் ஆவோம்
அன்புடன் பழகுவோம் வாழ்கையில் ஜெயிப்போம்

ஆயிரம் மைல்  கடந்துவந்து  அம்மாவின்
முகம் பார்த்து  அன்பாக நாலு வார்த்தை
பக்கத்தில் இருப்பதுபோல் மன அமைதி
அம்மா உன் அன்புக்கு ஏது ஈடு இணை.  ,

வேலைகள் தேடி காலங்கள்  விரயமாகி
லிங்க்ட்  இன்  இல் பதிவு செய்து
வீட்டில் இருந்தபடி  ஸ்கைப் இல் பரீட்சை
வெளிநாட்டில் வேலை வாய்ப்பு

தொலைந்த நட்புக்கள் திரும்பவும்
மறந்த சொந்தங்கள் மீளவும்
இணைவது முகப் புத்தகத்தில்
பிரிந்தவர் சேர்ந்தால் பேசவும் வேண்டுமோ??

எங்கு போனாலும் பின் தொடரும் நிழல்களாய் 
உடன் பயணிக்கும்  நண்பர்கள் அவர்கள்
வானில் பறந்துகொண்டே அழைப்பில் இருக்கிறோம்
அன்றாட நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்கிறோம்

சிறுவர் முதல் முதியோர் வரை இணைவதும்  இணையம்
அன்பான நண்பர்களைக் கொடுத்ததும்  இணையம்
நம் கவிதைகளை உலகறியச்  செய்வதும் இணையம்
நல்லதே நினைத்து  நல்லதே செய்தால் நன்மையே செய்யம் இணையம். 

 
« Last Edit: January 07, 2016, 09:36:57 PM by SweeTie »