மூ
மூக்கணாங் கயிறு _வாலிபத் துடிப்பை அடக்கும் வகையில் ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து வைத்தல்.
மூக்கறு _ அவமானப் படுத்து.
மூக்கறுபடு _ அவமானப்படு.
மூக்கில் விரலை வை _ ஆச்சரியப் படுத்தலைக் குறிப்பது.
மூக்கில் வேர்தல் _ பிறர் இரகசியத்தை எப்படியோ தெரிந்து கொள்ளும் தன்மை.
மூக்குடைபடு _ அவமானப்படு.
மூக்குப்பிடிக்க _ அளவுக்கு அதிகமாக.
மூக்கும் முழியுமாக _ அழகாக.
மூக்கு முட்ட _ வயிறு நிரம்ப.
மூக்கைச் சிந்துதல் _ நினைத்த மாத்திரத்தில் கண்ணீர் விட்டு அழுதல்.
மூக்கைத் துளைத்தல் _ சுவையான உணவு வகை.
மூக்கை நுழைத்தல் _ பிறர் விவகாரத்தில் தலையிடுதல்.
மூச்சுப் பேச்சு காணோம் _ அமைதியாக உள்ள தன்மை.
மூச்சு விடாதே _ எதையும் சொல்லாதே.
மூடு மந்திரம் _ இரகசியம்.
மூட்டை முடிச்சு _ பயணத்துக்குரிய பொருள்கள்.
மூட்டி விடு _ கலகம் செய்.
மூலவர் _ அதிகாரம் கொண்ட பெரிய அதிகாரி.
மூலை முடுக்கு _ எல்லா இடமும்.
மூளியாக _ மங்கலத் தோற்றமின்றிக் கை,கழுத்து முதலியவற்றில் அணிகலன் இன்மை குறிப்பது.