தி
திகுதிகு என்று _ கடுமையான வலியோடு வருந்தும் குறிப்பு.
திக்கித் திணறு _ திக்கு முக்காடு : சிக்கலில் தவி.
திக்பிரமை _ திகைப்பு : சுய உணர்வில்லாமை.
திடீர் என்று _ எதிர் பாராத : முன்னறிவிப்பின்றி .
திடுக்கிடு _ அதிர்ச்சி யுண்டாதல்.
திடுதிடு என்று, திடுதிப் என்று _ வேகமாக : எதிர் பாராது.
திட்ட வட்டம் _ உறுதியான : தெளிவான.
திட்டி வாசல் _ கோயில் வெளிக் கதவினுள் பொருத்தப்படும் சிறு கதவு.
திட்டு _ மனத்தைப் புண்படுத்தும் வசைப் பேச்சு.
திமிலோகப் படுதல் _ பரபரப்பு அடைதல்.
திமுதிமு என்று _ கூட்டமாகச் சேர்ந்து ஓசையுடன் ஓடும் தன்மை.
திராணி _ வலிமை : ஆற்றல்.
திராபை _ மதிப்பற்றது : இழிந்தது.
திரிசமன் _ கையாடுதல் : தகாத செயல்.
திருக்கண்ணமுது _ பாயசம்.
திருகு தாளம் _ புரட்டுச் செயல் : மாறுபட்ட பேச்சு.
திரு திரு என்று _ அச்சத்தை வெளிப்படுத்தும் தன்மையில் விழித்தல்.
திருப்பு முனை _ வாழ்க்கையின் பாதையை மாற்றும் கட்டம்.
திருமேனி _ கோவில்களில் உள்ள கடவுள் சிலை.
திருவாய் மலர்தல் _ ஞானிகள் உபதேசித்தல்.
திருஷ்டி பரிகாரம் _ ஒன்றின் சிறப்பினைக் குறைக்குமாறு செய்யும் குறைபாடு.
திரேகம் _ உடல்.
தில்லு முல்லு _ முறையற்ற வழி முறை.
திவால் _ தொழிலில் இழப்புண்டாகி அழிவு கொள்வதால் காணப் பெறும் ஏழ்மை நிலை.