Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 089  (Read 2484 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218346
  • Total likes: 23050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.



நிழல் படம் எண் : 089
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Vaseegaranஅவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் வியாழக்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 09:55:56 PM by MysteRy »

Offline ReeNa

அழகிய மணி சரம் சிதறி கொட்டும் வானின் மழை  துளியே!
சாரலை வீசி காதலை இறுக்கும் சில்லென்ற  மழை  துளியே!   
சின்ன சின்ன மழை  துளியே! சிலிர்க்கவைக்கும் மழை துளியே!

சூழ் கொண்ட கருமேகம் பிரசவிக்க  காத்திருந்தேன் !
கை  இரண்டை நீட்டி வைத்து உன்னை அள்ள காத்திருந்தேன்!
ஏக்கமுடன் வானத்தையே நித்தம் நித்தம் பார்த்திருந்தேன்!
நீயும் வந்து நீர் தெளித்தால் கோலமிட விழித்திருந்தேன் !

மல்லிகை மணம் வீசும் மாலை பொழுதின் மயக்கத்திலே!
கார்மேகம் ஒன்று கூடி வானத்தை போர்வையாய் மூடியதே !
வானத்தின் இடி முழக்கம் இசை கட்சேரியாய்  ஒலித்ததுவே !
மின்னல் ஒளி வெட்டி வெட்டி ஓடி ஓடி  மறைந்ததுவே !
என்  உள்ளம் ஏனோ  மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியதே!

கொட்டும் மழை முத்துக்களாக மண்ணை முத்தமிட 
சொட்டும் மழை பாறையில்   துள்ளி துள்ளி விளையாடிட
மழை விட்டு வீசும் சில்லென்ற  சாரல்  தேகம் சீண்டிட
மழையில் நனைந்து  வயல்களில் தவளை கானம் இசைத்திட
மழையால் கிளம்பிய மண் வாசனையில் மயக்கமுற்றேனே !
« Last Edit: February 03, 2016, 09:07:15 PM by ReeNa »

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook


பால்யம் மறப்பதேயில்லையார்க்கும் !

ஏதோ நினைத்திருக்க
வேறேதோ நினைவு வந்து
ஏதோ மறந்துவிட
வேறேதோவை நினைக்காது
ஏதோ மறந்ததைப்பற்றி நினைக்க
வேறேதோவும் மறந்து
வேறு
ஏதேதோ நினைவு வர..

நினைவிடுக்கில்
புதைந்துபோன கனவுகளை
குவித்து
தீயிட்டு
அந்த பெருந்தீ
பார்த்தபடி
கடக்கிறது
இந்த இரவு

விடியலில்..
மழைபொழிய ஆயுத்தமாகிறது
வானம்!

மழை பிடிக்கும் என்பதால்
எப்பொழுதும் நம் மீது மட்டுமே
பொழியவேண்டுமென நினைப்பது
பேராசைதான்.
இதை அறிவு உரைத்தாலும்
ஏனோ மனதுக்கு புரிவதில்லை.!

பலத்த காற்று
சத்தமான மழை
நடுங்கிய உடம்பு
நிசப்த மனது

இடுப்பில்
வாள் வைக்காத
இளவரசனாய் வலம் வந்த
என் பால்ய காலங்களை
நினைவுபடுத்துகிறது
இப்போதும்
பெய்யும் இந்த மழை.



« Last Edit: January 31, 2016, 01:54:49 AM by Maran »

Offline JEE

சிறுபிள்ளைகளாக  இருந்த
காலங்களில்  என்றுமே
மறக்க   முடியாத
எத்தனை  இன்பமான  நாட்கள்!!..


நினைத்து பார்த்தாலே
மனதெல்லாம் இனிக்கிறது!!..   


இனிய மாமரத்துச் சோலை
இயற்க்கை காட்சிகள்!


மழைச்சாரலில் நனைந்தால்
அம்மாவின்  திட்டும்!
அப்பாவின் அடியும்!
அலை பாய்ந்த மனமதை
நினைத்து பார்த்தாலே
மனதெல்லாம் இனிக்கிறது!!.   



மழைவெள்ளம் புகுந்ததால்
சேதமடைந்த தொழிற்சாலைகள் 
சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்
குடியிருப்புகள் எண்ணிலடங்கா
வெள்ளம் சூழ்ந்தச் சாலைகள்!!
மெய் படகு காட்சிகள்!!!

ஓடித்திரிந்த  வண்ணச் சோலை
ஒன்று மில்லாத காட்சிகள்!

எங்கு பார்த்தாலும் உரு தெரியாமல்
எல்லாமே சிதைந்த காட்சிகள்!


நினைத்து பார்த்தாலே  நம்
மனதெல்லாம் கசக்கிறது!!

எல்லாமும்  கூட  எங்கோ
ஓடி ஒழிந்து போனாலும்
நாளையைப்  பற்றி  கடுகளவும்   
கவலையே இல்லாத
தெளிவான  மனம்!!


கள்ளமில்லாத மனம்!!
களங்கமில்லாத மனம்!!



உள்ளொன்று வைத்து
வெளியொன்று 
பேசத்தெரியாத
வெள்ளை மனம்!!


நண்பர்களை  மட்டுமன்றி
எவரையும் ஏற்று
எளிதாக நம்பும் மனம்!! 


உயிர்போல பாவிக்கும்
மெய்யான  மனம்!!


பெருமை ,வஞ்சகம், கோபம், ,
பொறாமை  போக்கிரி  பயம்,, 
ஆசை  இச்சை  கவலை
அத்தனையும் அறியாத மனம்!!



அப்பா அம்மா இரு்க்கையிலே
எனக்கென்னவென
எதைப்பற்றியும்
கவலைப்படாததால் தான்
நாளையென்பதுகூட
நாளையை பற்றி கவலைப்படும்!
நல் நம்பிக்கையின் மனம்!!


சிறுபிள்ளையைப் போன்று
மனம்  இறைமேல் பக்குவமானால்
கவலையென்பது இல்லை!!


எல்லையில்லா இன்பம் பெற
எங்கும் நிறைந்த பரமனிரு்க்கையிலே
எனக்கென்னவென
எதைப்பற்றியும் கவலை்ப்படாத
சிறு பிள்ளை போல் மனம் நல்க
சிந்தனைகளை செலவிடுவோம் 
வாழ்க வளமுடன்.......................









« Last Edit: January 31, 2016, 02:57:54 PM by JEE »
with kind regard,

G'vakumar.

Offline thamilan

முகில்கள் கண் சிமிட்டி
கை தட்டி  சிரித்திடும் சிரிப்பில்
பிறந்திடும் மழையே
தேவையான போது வராமல்
தேவை இல்லாத போது
வரும் மழையே


சிறுவயதில்
குளிப்ப தென்றால் காததூரம் ஓடும் நான்
நீ வருகிறாய் என்றால்
உன்னில் நனைய முதலில் நிற்பேனே

மழை வந்தவிட்டால்
மழையில் நனைந்தபடி நடுவீதி யில்
நண்பர்களுடன் பந்து விளையாடுவதில்
உள்ள சுகத்துக்கு
உலகத்தில் ஈடு உண்டோ
மனிதர்கள் போவதும் தெரியாது
வாகனங்கள் வருவதும் புரியாது
உலக உருண்டை எங்கள் காலடியில்
என்பது போன்றதொரு பிரமை

மழையே ஒரு அழகு
அந்த மழையில் நனைத்த மலர்கள்
இன்னும் அழகு
மழைத் தூறல் ஒருவித அழகு
அந்த மழையில் நனைந்த பெண்
மனதை மயக்கிடும் அழகு

அழகும் ஆபத்தில் முடியும்   
உலகை காத்திடும் அந்த மழை
சில நேரங்களில் உலகையே
உலுக்கியும்  விடுகிறது
மழை வராதா என்று
ஏங்கித் தவித்தோர்
ஏன் மழை வந்தது என்று
ஏங்கித் தவித்ததும் உண்டு
எதுவும்  அளவுக்கு மிஞ்சினால்
நஞ்சி தானே


Offline SweeTie

மேகம் சிந்தும் மழைத்துளிகள் 
மரங்களுக்கு கொண்டாட்டம்
இலைகள் சொட்டும் மழைத்துளிகள்
சிறுவருக்கு  களியாட்டம்
மண்ணில் படியும் மழைத்துளிகள்
பூமிக்கு ஆனந்தம்
பெருகி ஓடும்  மழை நீர்
நதிகளுக்கு குதூகலம்

இடியும் மின்னலும் சேர்ந்தே
ஒன்றாய் வருவது கோடை மழை
கோடைமழையில்  கொஞ்சிவிளையாடும்
மின்கம்பிகளில்  புறா ஜோடிகள்
குளிரும் இருளும் ஒன்றாக
மாரி மழையுடன்  சேர்ந்துவிடும்
ஓடையில் மீன்கள்  புரண்டு ஓடும் 
நண்டுகள் பொந்தில் உறங்கிவிடும் 

கருமேகக் கூட்டங்கள்
கருணையுடன் மோதுகையில்
கொட்டும் மழைத்துளிகள்!
ஒரு குடையில்  நடை பயிலும் 
இணைபிரியாக் காதலர்க்கு
இனிப்பான  சமாச்சாரம் !

கார்முகிலாள்  அவள்  கார்குழலால் 
காரிருளன் காதலன் முகம் துடைத்து
மின்னலவள்  சென்று மறைந்திட்டா ள்
நெஞ்சம் இடி இடிக்க - மழை
நீர்த்துளிகள்  பெருகியோட 
நிலையறியாமல் நின்றிட்டான் அவன்......




« Last Edit: February 02, 2016, 08:11:39 PM by SweeTie »

Offline பொய்கை

  • Full Member
  • *
  • Posts: 108
  • Total likes: 792
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யாகாவராயினும் நாகாக்க...
மழையே ! மழையே ! என்  மழையே !

மனித மிருகங்கள் விரண்டு ஓடிட
இடிதனை முழக்கி வந்திடும் என் மழையே !

இருண்ட பூமியில்  மின்னலை பாய்ச்சி
வழிதனை கண்டு வந்திடும் என் மழையே !

வானவில் என்ற தோரணம் கட்டி
புவிதனில் வந்து புகுந்திடும் என் மழையே !

கரியென மேகம் காற்றினில் மிதக்க
புரவியில் ஏறி புறப்பட்டஎன்  மழையே !

வறண்ட ஏரி ,குளங்களின்  வயிற்றினை நிறைக்க
அன்னையாய் வந்திடும்  அருமை என்  மழையே !

நல்லோரும் ,சான்றோரும் வாழ்ந்திட்ட போது
மாதம் மும்முறை பெய்திட்ட என்  மழையே !

ஆணவம், அகம்பாவம் அதிகமாய் துளிர்விட்டால்
அதிரடியாய் வந்து அடக்கிடும்  என்  மழையே !

உலகுக்கு அன்னமிடும் என்னருமை விவசாயி
வயல் வெளி  தழைக்க  தேவைக்கு வா மழையே !

கீற்று  குடிசைக்குள் கூரை வழி உள் நுழைந்து
எடுத்துவைத்த பாத்திரத்தில் சப்தமிடும் என்  மழையே !

சிறுவர் சிறுமியர் ஆட்டம் போட்டே ஆடை நனைக்கும்
அற்புதம் காண  வா  என் மழையே !

நத்தையின் வயிற்றில் சொட்டாக விழுந்து
முத்தாக மாறிடும் வித்தான என் மழையே !

மழையே ! மழையே ! என் மழையே !
« Last Edit: February 02, 2016, 01:39:07 AM by பொய்கை »

Offline சக்திராகவா

கோடைவெயில் போதுமென
கொத்து கொத்தாய் விழுந்த துளி
பாதைகளில் பள்ளம் நீறப்பி
சமத்துவம் பரப்பிடுதோ?

கன்னி இவள் கன்னம்தொட
கைக்குழந்தை கப்பல் விட
கருமேகம் தந்த வரம்
கடல் சேர கடந்து வரும்

வான் தந்த மழையே
வா இந்த கனமே
காதோரம் சப்தமிடு
கன்னத்தில் முத்தமிடு

நிறமாறப்போவதில்லை
நீ என்னை தொட்டால்
அன்னை ஏன் பிரித்தால்
அழகிய குடைதந்து

அவள் ஆசை தீற
அதையும் நனைத்திடு
ஆறுதல் சொல்லும்
ஆதவனே பொருத்திரு!

மழைநின்ற மரநிழல்
மலர்போல துளி விட
கடைவாய் நடுங்க
காற்றோடு சாரல்

என்றென்று சொல்ல
எனை நனைத்த மழைத்துளியே!
சக்தி

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
                         
இறைவன் படைப்பில் இயற்கை
அதிசயங்கள் ஆயிரம்
அதில்  வரங்களாக பல
 சாபங்களாக சில
மழை அது பெருங்கொடை ....

மழை பெய்தாலும் குற்றம்
பொய்த்தாலும் குற்றம்
மழை தேவை அறிந்து மும்மாறி
பொழிந்தது ..பொழிய விட்டார்களா ..

சிறு பிராயத்திலே
மழை நீரை சுவைத்தபடி
மழையில் நனைந்து காகித கப்பல் விட்டு
இயற்கையோடு இணைந்து
 நாம் ஆடிய ஆட்டங்கள் இன்றும் பசுமையாக  ...

இன்று ஏட்டில் புகை படங்களாக
மட்டுமே இது சாத்தியம்
 நாம் ரசித்த மழையை
நம் சந்ததிகள் ரசிக்க
முதலில் நாம் விடுவதில்லை 
காரணம் இதன் பின் வரும்
நோய்தொற்றுக்கு  பயந்து .....

யார் கண்டார்கள் இந்த புகை படம்
 எடுத்த அடுத்த நொடி அவன்
முதுகில் இரண்டு அடி விழ்ந்ததோ என்னவோ....

மரத்தை வெட்டி.. கட்டில் ,அலமாரி
அலங்கார பொருள்கள்,  வீடுகட்ட
என்று மனிதன் அவன் தேவைக்காக
அளவுக்கதிகமாக வெட்டி சாய்த்தானோ
அன்றோடு முடிந்தது பருவ மழை ..

அவரவர் தேவைக்காய்
அளந்து பொழியாது
இயற்கையின் கொடை
உன் பயன்பாட்டிற்கு
நீ தான் சேமித்து கொள்ள வேண்டும் ...

மழை தங்கும் இடமெல்லாம்
 உன் தேவைக்காய் பூசி மொழுகி
மாடி மேல் மாடி கட்டி
 உன் போதாதகுறைக்கு
புத்தி இல்லாதவன் கண்ட தீர்வு.....

விளைவு இயற்கை அன்னை
பொழிந்த  போது தாக்கு பிடிக்க
இயலாமல் துவண்டு போகிறான்
அடுத்தவன் உதவியை நாடி நிற்கிறான்
விவசாயி நொடிந்து நிற்கிறான் ...

இயற்கையை நேசிக்க கற்று கொடுங்கள்
இயற்கைக்கு வழி விட்டு வாழ பழகுங்கள்
மரம் நடுங்கள், வளத்தை பெருக்குங்கள்
வாழ்க்கை மேம்படட்டும்.... 
« Last Edit: February 02, 2016, 10:23:20 PM by பவித்ரா »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....