Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 090  (Read 2786 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218350
  • Total likes: 23050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.



நிழல் படம் எண் : 090
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Thamilanஅவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் வியாழக்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 09:56:50 PM by MysteRy »

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
நம் முன்னோர்கள் அறிவை
 கண்டு வியக்கிறேன் நான்
வேளாண்மையில் மனித நேயத்தோடு
தன் சந்ததிக்குமாக
சேர்த்து உழைத்தார்கள் ..


நீர்வளம் காக்க
குளம் வெட்டினால் மட்டும்
நிலத்தடி நீர் உயராது என்று
உன்னித்து பார்த்து பனை வளர்த்து
நதி வற்றாமல் பாதுகாத்து
பயன் கண்டார்கள் ....

நல்ல காற்றை சுவாசித்தாலே
போதும் பல வருடம் கூட  வாழலாம்
புழுதி புகைந்து வரும்
கரியமிலவாயு எடுத்துக்கொண்டு
பிராண வாய்வை நமக்கு
கொடுக்கும் மரங்களாக
நட்டு வைத்துநோயில்லாத
வாழ்வை கொடுத்து  வம்சம் காத்தனர் ...

அன்று போதிய கல்வி அறிவு இல்லை
ஆனால் சுயநலம் இல்லாத சுய சிந்தனை
இருந்தது ..எதை எப்போது விதைக்க
எப்போது அறுக்க ,அறுசுவையோட 
உண்டு மகிழ்ந்து இயற்கையை
அனுசரித்து வாழ்ந்தான் .....

இன்று உயர்ந்த கல்வி தகுதி
ஐந்து இலக்க சம்பாத்தியம்
சொந்தமாக வீடு சொகுசான
குளிர்ரூட்டப்பட்ட மகிழுந்து
என சொகுசான வாழ்க்கை ...

முகத்துக்கு திரை போட்டு
கடிவாளம் கடின குதிரையாய்
பணம் என்னும் காகிதம் தேடி
உன்ன மறந்து உறங்க மறந்து
போலியாய் ஒரு வாழ்க்கை
வாழும் மனிதா  ....

விழித்துகொள்
இயற்கையின் சுவாசம் மரங்கள்
உனக்கும் உன் சந்ததிக்கும்
நல்ல நீர் காற்று வேண்டுமாயின்
மரங்களை வளர்த்து
இயற்கையை காப்போம் ...
« Last Edit: February 16, 2016, 02:59:32 AM by பவித்ரா »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline JEE

பச்சைநிறமே!    பச்சைநிறமே!
வளமையைக்காட்டும்   பச்சைநிறமே!
வண்ணவண்ண   ஏழு    நிறத்தினுள்
முதன்மை நிறமே! . பச்சைநிறமே!



பாறைகளின் மேலும் , உயர்ந்த
மரங்களின் மேலும்
உறைபோல மூடி   படர்ந்து   வளரும்
பாசி இனத்தாவரமே!.



இரு   உயிரினங்கள்   இணைந்து
இணைந்த    வாழ்க்கை   நடத்தும்! 
நட்பு   முறைக்கோர்   சான்றாய்
இலக்கணமான    தாவரமே!
 


இரு    நுரையீரல்   போன்ற   காட்சியிலே!
புகைப்பதனால்    ஒன்று   பாதியளவு
பாதித்ததுபோல்   காட்சிதரும்
பாறையில்   வளர   முடியாத  தாவரமே!
 


இரட்டை இலை   போன்ற   காட்சியிலே !
கடன்சுமையால்   ஒன்று  பாதியளவு
பாதித்ததுபோல்    காட்சிதரும்
கரையான்களால்    வளர முடியாத   தாவரமே!!
 

புகைப்பதை   நிறுத்தி   உடல்   நலம்
பேண வழி காண வேண்டுமே ! !
மீண்டும் கரையான்கள் வேரை அழிக்காதிருக்க
அகற்ற வழி காண   வேண்டுமே !.!



காற்றும் நீருமே உயிரினங்கள்
வாழ வழி  செய்யும் போது   
இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு,
இயற்கை சூழல் சீர்கெட்டால்
அதனைதடுக்கும்  தாவரமே!




அரிதான மூலிகை செடிகளை பராமரிப்போம்!
சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!
இயற்கையுடன்  இணைந்து செயல்படுவோம்!
வளம் குன்றா வேளாண்மைக்கு
உயிர்க்கோளத்தைக் காப்பாற்றுவோம்! ! !

.
« Last Edit: February 18, 2016, 05:38:57 AM by JEE »
with kind regard,

G'vakumar.

Offline thamilan

இறைவன் படைப்பில்
இயற்கை ஒரு அற்புதம்
வானத்தையும் படைத்து
பூமியையும் படைத்தது
அந்த பூமியை செளிர்விக்க
மழை முகில்களையும் படைத்து
அந்த முகில்களை குளிர்வித்து
மழையை பூமிக்கு கொண்டுவர
மரங்களையும் படைத்த
இறைவன் ஒரு அற்புதம்

 இந்த இறைவனின் வரப்பிரசாதமான
இயற்கையை
சுயநலம் பிடித்த மனிதர்கள்
தங்கள் சுய தேவைகளுக்காக அழிப்பதால்
இயற்கையின் அனர்த்தங்கள்
ஏரிகளை அழித்து அங்கே
கட்டிடங்கள் கட்டினான்
மழைதரும்  காடுகளை   அழித்து
வானுயர மாடங்களைக் கட்டினான்
இன்று என்ன நடக்கிறது

மழை இல்லை
மழை வந்தால் அது வடிவதற்கு
இடம் இல்லை
மரங்கள் இல்லாமல்
உலகில் வெப்ப அதிகரிப்பு
இன்று இயற்கையே தலை கீழாக

மழையில்லாமல்
 பூமி காய்கிறது
வயல் வெளிகள் விளையாட்டு மைதானங்களாக
மழை வந்தாலோ
வெள்ளக் காடு
நாடே நீச்சல் குளமாக

காடுகளை அழிப்பதும் நம்
சுவாசப்பைகளை அழிப்பதும் ஒன்று தான்
மரங்களை வெட்டுவதும்
நம் அன்னையிறரின்  மார்பகங்களை வெட்டுவதும்
ஒன்று தான்
மரங்களை பாதுகாப்போம் 
இயற்கையை மாசுபடாமல் காப்போம்

« Last Edit: February 18, 2016, 11:05:55 AM by thamilan »

Offline சக்திராகவா

காத்துல விதை பரவி
காடா மாறிவிட
காட்ட களையெடுத்து
வீடா கட்டிவெச்சு

விருந்துக்கு கரடி வந்தா
வீட்டுல இடமிருக்கா?
இருந்தும் திருந்தலயே
வேரக் கூட விட்டுவெக்க

தின்னை ஓரத்துல
தென்னை நட்டுவெச்சும்
தண்ணீ ஊத்தலனா!
கண்ணி போகுமடா

சித்திரை வெயில் கடந்தும்
சிரிக்கும் காட்டுமரம்
விலங்குக்கும் நெழல் தந்த
பூரிப்பில் வாழ்ந்துவரும்

காத்த சுத்தம் பண்ண
கடவுள் வெச்சானோ!
வித்தா லாபமுன்னு
மனுஷன் பிச்சானோ!

யார் போட்ட வெதயோ
ஊரோரம் காடு
புல் நட்டுகூட நீ
புண்ணியம் தேடு!

🌳சக்தி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
புகை தின்ற
புதையல் என
இலை தின்று
மனிதன்
இயற்க்கை நகர்கிறது ..

வகை வகையாய் வார்ந்து
வடிவளகாய்
வளைத்து நெளித்து
வாகாய்  நீவீர்
வாழ்வதற்கு செய்து வைத்தீர்
அவைகளை
வாழா தொழித்து வந்தீர் ..

மனிதன் வாழ
காற்றாக நீராக
மாற்றாக
கடைசியில் நெஞ்சாங்
கட்டையாக மரம் தேவை
ஆனால்
மரம் வாழ மனிதன்
தேவையில்லை ..

மரத்தின் எதிரி மனிதன்
மனிதனின் நண்பன் மரம்
விதயூன்று மரம் வளரும்
அதன் கிளயூண்டு துளிர் தளிர்க்கும்
வேரூன்று விருட்சம் வரும் ..
மனிதா உன்னில் எதயூன்றி
எதுவாகுவாய் ...?

மரத்துக்கும் வழுக்கை விழும்
மறுபடி  வளரும்
ஆனால் உனக்கு ....
மயிரும் உயிரும்
ஒன்றென்று அறிக..

மரம் என்று
மனிதரை திட்டாதீர்
 மருந்துக்கும் பயனற்றோர்
மருந்தாகும் மரமாக
எப்படி மாறுவர் .. ?

நீ அரிந்து விற்பது
மரமல்ல
உன் மரணம்
மனமார உணர்ந்துகொள்
மரத்தின்
மகிமை தேர்ந்து
உதவி செய் ...


- மரத்துக்கல்ல உனக்கு
                    

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
« Last Edit: February 25, 2016, 02:05:33 PM by Maran »

Offline பொய்கை

  • Full Member
  • *
  • Posts: 108
  • Total likes: 792
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யாகாவராயினும் நாகாக்க...
[highlight-text]காடு தான் இதயம் என்றால்
மழை  தண்ணீர் அதன் இரத்தமாகும் ..

காட்டுக்குள்ள  மரத்த வெட்டி
இதயத்த ஓட்டை போட்டால்..
 
மழையும் தான் பொய்த்து போகும்
நமக்கு மரணம் தான் மிச்சமாகும் ..

அண்டவெளி ஓசோனை தொழிலகங்கள்
ஓட்டை இட்டால் , காடுதானே மருந்தாகும்..

இயற்கை தந்த பச்சை நிறம் நீ அழிச்சா
செயற்கையான உன் வாழ்க்கை சிவந்து போகும்..

கொடுவாளை  நீ  கொண்டு வெட்டும் மரம்
சீக்கிரமே உன் சிதைக்கு தீ மூட்ட வந்து சேரும் ..

வெட்டுவதை நிறுத்திவிட்டு நடுவதை நீ தொடங்கு
இயற்கை அன்னை மடிமீது இன்பமாய் நீ உறங்கு ...!
[/highlight-text]
« Last Edit: February 21, 2016, 10:53:20 PM by பொய்கை »

Offline SweeTie

எங்கள் சுவாசம் உங்கள் வாழ்க்கை
உங்கள் சுவாசம் எங்கள் உணவு
எங்களை எரிக்காதீர்  புகைக்காதீர்
தொலைக்காதீர் உங்கள் வாழ்க்கை.

மரங்கள் என்று  திட்டாதீர்
மானம் இல்லாதவனை
கல்நெஞ்சுக்காரன் அவன்   
எம்மை வெட்டியே அழித்துடுவான் . 

வாழ்ந்தாலும்  மடிந்தாலும்
உங்கள் நண்பர்கள் நாம்
பூர்வீகம்  தெரியவில்லை
ஒன்றாக வாழ்கின்றோம் .

இயற்கையின் கொடுப்பனையில்
இங்கிதமாய் வாழ்கின்றோம் i
கொள்ளை லாபம் தேடி எம்மை
வெட்டி ஒழிக்காதீர்

பஞ்சம் பிணி நீங்கி 
நெஞ்சம் நிறை வாழ்க்கை
வாழ்ந்தாக வேண்டுமென்றால்
வாழவிடு எம்மையும்
 

Offline ReeNa

பச்சை மரங்கள் இயற்கை அன்னையின்
பச்சை பட்டு ஆடைகள்.,
வியக்க வைக்கும் அதிசயங்கள் அது
வெளியே கிடக்கும் புதையல்கள் ...
அவைகளை அழித்து அன்னையை
இதய நோயாளி ஆக்குகின்றோம்.

காடுகளை நாம் உருவாக்க வில்லை ..
நாம் தண்ணீரும் ஊற்ற வில்லை ..
பராமரிக்க கூட இல்லை ..
பிறகு அழிக்கும் உரிமை மட்டும்
யார் கொடுத்தார்கள் ..

பயமே இல்லாமல் சித்ரவதை  செய்கிறோம்..
அவளின் குழந்தைகள் கண்ணீர் சிந்துகின்றன
காட்டினை அழித்து நாம் கட்டுவது கட்டிடங்களா ?
இறுதி உறக்கத்திற்கான  உறைவிடங்களா?

ஆக்சிஜன் நிறைந்த காற்றுமண்டலம்
அதை உற்பத்தி செய்யும் காடுகள்
உன் சுவாசம் அந்த மரங்களின் இதயத்தில்..
மரம் சுவாசித்தல் நீயும் சுவாசிப்பாய்
இயந்திரத்தால் மரம் வெட்டும் மானிடா
வெட்டுவது மரம் அல்ல உனது கால்களை ..

காடு அழிவை நோக்கி பயணித்தால்
நாடு அழிவை நோக்கி பயணிக்கும்
காடு காப்போம் ! அதன் மூலம்
நாடு காப்போம் ! அதன் மூலம்
இப்பூவுலகை காப்போம் !
« Last Edit: March 03, 2016, 12:01:36 PM by ReeNa »