Author Topic: ~ வாழைப்பழம் ~  (Read 112 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218490
  • Total likes: 23136
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ வாழைப்பழம் ~
« on: March 05, 2016, 01:51:40 PM »
வாழைப்பழம்



உடல் எடையைக் கூட்ட நினைப்போருக்கு வாழை சிறந்தது.
கலோரிகள் நிறைந்தது. எந்த வேளையில் சாப்பிட்டாலும் உடனடி ஆற்றலைத் தரும்.
உடல் எடை குறைந்த குழந்தைகளுக்கு, ஆறு மாதத்திலிருந்தே கொடுக்கலாம்.
பொட்டாஷியமும் மக்னீசியமும் நிறைந்திருப்பதால், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத்தைப் பலப்படுத்தும்.
எலும்பு வளர்ச்சிக்கும் உதவும். எலும்பு தேய்மானம் அடையாமல் தடுக்கும்.
குடல் தொடர்பான பிரச்சினை, வாயுத் தொல்லை, வயிற்றுப் புண் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.
வாழையில் டிரிப்டோபேன் (கூணூதூணீணாணிணீடச்ண) என்ற கூட்டுப்பொருள் செரட்டோனினை தூண்டச் செய்து, அமைதியான மனநிலையை உருவாக்கும்.
பெக்டின் (கஞுஞிணாடிண) என்ற நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கல் பிரச்சினை குணமாகும்.
சாப்பிடும் அளவு
அனைத்து வயதினரும் சாப்பிட வேண்டிய பழம் இது. ஒரு நாளைக்கு 50 முதல் 75 கிராம் வரை சாப்பிடலாம்.
சாப்பிடும் முறை
தனியாகச் சாப்பிடலாம், மிளகு தூவி சாப்பிடலாம்.
பழ சாலட்டில் சேர்க்கலாம்.
நல்ல செரிமான சக்தியுடையோர் மட்டும், வாழைப்பழ மில்க்ஷேக் செய்து சாப்பிடலாம்.

எப்படித் தேர்ந்தெடுப்பது?
கறுப்பு, நிறப் புள்ளிகள் இல்லாத பழமாகப் பார்த்து வாங்க வேண்டும்.
மிதமான அளவில் பழுத்தவையே, சாப்பிட உகந்தவை.
வாங்கும்போதே, பாதிக் காயாகவும் பாதிக் கனியாகவும் தேர்ந்தெடுக்கலாம். இல்லையெனில், ஒரே நாளில் பழுத்து வீணாகிவிடும்.
4-5 நாள்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம். குளிர்ப்பெட்டியில் வைக்கத் தேவை இல்லை.