Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 093  (Read 3209 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.



நிழல் படம் எண் : 093
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Pavithraஅவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் வியாழக்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 10:01:19 PM by MysteRy »

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
« Last Edit: March 13, 2016, 02:15:30 PM by Maran »

Offline MyNa

தன்னலமற்ற இரு உள்ளங்கள்
பல வேறுபாடுகளைக் கடந்து
ஒன்றிணைவதே புனிதமான
நட்பு !!

ஆண் பெண், ஏழை பணக்காரன்
என்றெல்லாம் பாகுபாடின்றி
கைகோற்பதே தெய்வீகமான
நட்பு !!

கோபம் வஞ்சகம்
என்பதையெல்லாம் சிந்திக்காமல்
உடைத்தொழிப்பதே உண்மையான
நட்பு !!
 
தோழன் அவன் வாடினால்
தோழி இவள் அவனுக்காக
கலங்குவதே ஆழமான
நட்பு !!

சிலருக்கு இது மூன்றெழுத்து சொல்
அனால்.. பலருக்கு நண்பன் எனும்
உறவு தரும் சொல்
நட்பு !!

நட்பால் இணைந்திருப்போம்..
துயரத்தை மறந்திருப்போம்..
நண்பனுக்கு தோள் கொடுப்போம்..
நட்பிற்கு உயிர் கொடுப்போம்..

நண்பேண்டா !!

~ மைனா தமிழ் பிரியை ~

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நீயும் நானும்,

எங்கும் நுழைந்தோம்..
எதிலும் வென்றோம்..
அலை பல கடந்தோம்..
இன்றும் நிற்கிறோம் ..

நீயும் நானும்,
 
ஏற்றங்கள்  கண்டோம்..
தடை பல கண்டோம்..
காணா இடம் காண கண்டோம்..
இன்றும் காண்கிறோம் ..

நீயும் நானும்,

இணையாய் ஆனோம் ..
நமக்கு நாமே என்றே ஆனோம்..
இப்போ நாமும் சிறப்பாய் ஆனோம்..
என்றோ நாம் சொந்தம் ஆவோம்?

நீயும் நானும்,

வாழ்வின் அர்த்தம் ஆவோம் ..
வழிதனில் வரும் தடை அகற்றி..
வாழ்வோம் ஒன்றாய் வரும் நாளிலே !

Offline thamilan

நீ தள்ளாடி நடந்தாலும்
என் கைகள்
உன்னை கால்களாகத்  தாங்கும்
நீ திடங் கொள்
உனக்கு நான் துணையாக இருப்பேன்
வாழ ஆசைப்பட்டு
உன்னுடன் வாழ்ந்து காட்டுகிறேன்

வா
வாழ்க்கையை எதிர்கொள்வோம்
நாம் தாண்டாத
தடைகற்களா
தடைகற்களை படிகற்களாக
மாற்றுவோம்
பார்க்காத பிரச்சனைகளா
பிரச்சனைகளை நம் காதலுக்கு
ஊக்க மருந்தாய் ஏற்றுவோம் 
 
வீசிஎறி உன் வேதனைகளை
வா
என் கைகளுக்குள் உன்னை
வாரியணைக்கிறேன்
மருந்து தராத ஆறுதலை
என் காதல் விருந்து தரும்

தண்டவாளங்கள் இணைவதில்லை
அவை இரண்டும்
 இருவேறு கோடுகள்
இருவேறு மனங்களானாலும்
நம் காதல்
நம்மை இணைக்கும்
மனம் இணைந்து
கைகள் இணைந்த நம்மை
மணமாலையும் ஒரு நாள்
நிச்சயம் இணைக்கும்
« Last Edit: March 13, 2016, 11:25:36 PM by thamilan »

Offline Dong லீ


காதலியின் கவிதை :

இணையாக இருந்தும்
இணையாமல் இருக்கும்
தண்டவாளங்களும்
பொறாமை கொள்ளும் !
தலைவா நம் காதலை வியந்து  !!

அன்பே ! என் விரல் இடுக்கில்
காதலை நிரப்பும் உன் விரல்கள்!!
மேலும் நிரப்பிவிடு- உன் 
மூச்சுக்காற்றால் 
என் குளிர்காலங்களை !
புன்சிரிப்பால்
என் விடியல்களை !
கனவுகளால்
என் இரவுகளை!
உயிராய்
என் உலகங்களை !

காதலியின் மைண்ட் வாய்ஸ்

மேலும் நிரப்பிவிடு
உன் பணத்தால்
என் வங்கி கணக்கை !
கை விடமாட்டேன்
விட்டால் ஓடிவிடுவான் !!

காதலன் கவிதை :

அன்பே நீ ஒரு ரயில் !
உன்னை அனுதினமும் சுமக்கும்
தண்டவாளமாய் நான் இருந்தால் போதும் !

அன்பே நீ ஒரு குயில் !
உன் மூச்சை சுமக்கும்
இசையை நான் இருந்தால் போதும் !

அன்பே நீ ஒரு மயில் !
உன் தோகை உதிர்க்கும்
சிறு இதழாய் நான் இருந்தால் போதும் !

காதலன் மைண்ட் வாய்ஸ் :

நான்  எழுதுவது கவிதை தானா?அல்லது
இது கவிதை என்று
என்னை நானே ஏமாற்றி கொண்டிருக்கிறேனா?
அன்பே உன் முகலச்சனதிற்க்கு இது
கவிதை 'மாதிரி' இருந்தாலே போதும் !!

ஆர் ஜே மைண்ட் வாய்ஸ் :

நீ கவிதை எழுதாமல் இருந்தால் போதும் !!

« Last Edit: March 15, 2016, 12:51:24 AM by Dong லீ »

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
ஆண் பெண்ணின்
திருமனத்திற்கு வயது
 வரம்பு உண்டு
ஆனால் நட்புக்கு வயது
 வரம்பு கிடையாது ...

கடவுளுகே நம் மேல்
பொறாமை போல
ஆதலால் தான்
 காலதாமதமாக நம்மை
சந்திக்க வைத்துள்ளார் ....

கண்டதும் கூட
 காதல் வந்துவிடுகிறது
நட்பு மட்டும் ஏனோ இதயம்
தொட்டால் மட்டுமே வருகிறது ...

அரட்டை அரங்கத்திலுள்
நுழைந்து உன் பெயர் கண்டதும்
எனக்குள் இருக்கும் அந்நியன் சத்தமின்றி
வெளியேறி அம்பி ஆகிவிடுகிறேன்...

என் தவறை பிறர் பின்னால்
புறம் பேசும்  முன்
என்னிடம் தயங்காமல்
கூறுபவன் என் நண்பன் ....

எனது அறிவை வளர்த்துக்
கொள்ள நல்ல புத்தகம்
தேவை இல்லையடா
உன் நட்பு ஒன்றே போதும்...

தானாக கலங்கிய
கண்ணிற்கும் தூசியால்
கலங்கிய கண்ணிற்கும்
வித்தியாசம் என் நண்பன்
மட்டுமே அறிவான்...

 அடுத்த  நிமிடம்
நமக்கு சொந்தமில்லை
அதற்குள் ஏன் இந்த கோபம்,வெறுப்பு
என்று என்னுள் இருந்த
குப்பைகளை அகற்றியவன் ...

நீதிபதிக்கு வேண்டியது
 எல்லாம் சாட்சி மட்டும்
 தான் உண்மை அல்ல
எனக்கு வேண்டியது எல்லாம்
உன் நட்பு மட்டும் தான்
உறவுகள் அல்ல ...


அன்பு செய்ய நீ இருக்கிறாய்
வேறு என்ன வேண்டும்
தாயின் கைகளுக்குள்
அடங்கும் குழந்தை ஆனேன் ...

நட்பு என்னும் கரம் கோர்த்து 
சீரான ரயில் தண்டவாளம் போல
இணைந்தே செல்லும் இணையில்லாத
நட்பு பயணத்தை தொடருவோம் .. ...
« Last Edit: March 13, 2016, 10:28:01 PM by பவித்ரா »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline பொய்கை

  • Full Member
  • *
  • Posts: 108
  • Total likes: 792
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யாகாவராயினும் நாகாக்க...
இரண்டும் ஒன்றாய் சேர்ந்தாலும்
           இணை என்று சொல்லும் தமிழே !
சேராமல்  நேர்கோட்டில் சென்றாலும்
           இணை என்று சொல்லும் தமிழே !

இணையாக நேர்கோட்டில் சென்றால்
            நட்பென்று சொல்லும் தமிழே !
இணைந்திட்ட போது அதுதான்
           காதல் என சொல்லும் தமிழே !

இருமனம் இரண்டாக பயணிக்கும் நாள் வரை
             நட்பு என்று சொல்லும் தமிழே !
இருமனம் ஒன்றாக இணைந்திட்டால்
             காதல் என சொல்லும் தமிழே !

எல்லாருடைய முகமும் பலவாராய் பார்த்தபோது 
              நட்பென்று சொல்லும் தமிழே !
எல்லாருடைய முகத்திலும் ஒரே முகத்தை பார்த்திட்டால்
              காதல் என சொல்லும் தமிழே !

கருத்து ஒத்த நட்பின் கூடலை
              காதல் என உரைக்கும் தமிழே !
கருத்து மோதலால் ஊடலை  உண்டாக்கி
              நட்பென்று உரைத்திடும் தமிழே !

நட்பெனும் பயணம் நாளும்
              தொடர வாழ்த்திடும் தமிழே !
காதல் பயணம் முற்று பெற்றால்
             அட்சதை தூவிட வா தமிழே !
« Last Edit: March 15, 2016, 08:06:47 PM by பொய்கை »

Offline SweeTie

ஆழ் கடலின் பேரலைகள்
கரையை அணைப்பது  ஏன்?
இடியும் மின்னலும் மழையுடன் 
ஒன்றாய் வருவது  ஏன்?
இளம் பட்டாம்பூச்சிகள்
பறக்கத் துடிப்பது ஏன்?
ஒட்டாத தண்டவாளங்கள் 
ஒன்றாக இருப்பது ஏன்?.

கருத்தொருமித்த  காதலர்
கை கோர்த்து நடப்பது ஏன்?
இணையத் துடிக்கும் இதயங்கள்
தனிமையை நாடுவது ஏன்?
காதலில் கொஞ்சும் வார்த்தைகள்
காதில் அடிக்கடி ஒலிப்பது ஏன்?
காதலில் பரிமாறும் முத்தங்கள்
பழரசம் போல் இனிப்பதும் ஏன்? 

ஏன் என்ற கேள்விக்கு 
பதிலுமில்லை
காதல் என்ற வார்த்தைக்குப்   - புது
அர்த்தமும் இல்லை
பலர் மனதில் காதல்   புதையுண்ட கற்கள்
சிலர் மனதில் ஆசையின் நீரூற்று
ஒட்டாத தண்டவாளத்தில்
ஓடுகின்ற ரயில்கள் போல்
இரு வேறு  மன அதிர்வெண்ணில்   ஓடும்
காதல் ஒரு ரயில் பயணம் .....



 
« Last Edit: March 15, 2016, 06:06:49 PM by SweeTie »

Offline KaViTha

என் ஆன்மாவை விழுங்கி விட்ட கருத்த இரவே !
என் தனிமை கனவிற்குள் குதித்து விட்ட கள்வனே
என் தூக்கத்தை தொலைத்துவிட்டேன் உன் நினைவில்..

என் தேகம் தொடும் உன் சுவாசம் ..
இருள் ஒளி கொள்கிறதே !
காதல் பெருக்கெடுக்கிறதே !

 நான் எந்த உலகில் சஞ்சரிகிறேன்
சில்லென்ற மழை ..
மேனி தழுவிடும் குளிர் காற்று

நான் விழித்து விட்டேனா ?
விடிந்து விட்டதா?
எங்கே உன்னை காணோம் ?

ஓ.,, கனவா ? களைந்து விட்டதா ?
நானும் விடை பெறுகிறேன் ...
« Last Edit: March 15, 2016, 01:24:52 AM by KaViTha »

Offline ReeNa

காதலில்  ஆரம்பித்த  பயணமிது
புது வாழ்கை  தொடங்கும் பயணமிது
இருவர்  ஒருவர்  ஆகும் பயணமிது
நம் கனவு கோட்டை கட்டும்  பயணமிது 

முகவரி  இல்லாத  பயணம்  இது
முடிவே இல்லாத   பயணம்  இது
என் வாழ்கை  துணையாய் நீயும் வந்துவிடு
என் பயணத்தின் பாதையில் நீயும் சேர்ந்துவிடு

உந்தன் கரம் பற்றி நடந்துடுவேன்
காட்டிய   வழியில்   பயணிப்பேன்
அடி மேல் அடி  தான் எடுத்து  வைப்பேன்
உன் கால் தடம் பார்த்தே  நடந்திடுவேன்

பயணத்தின்  அனுபவங்கள்  ஆயிரம்  இருக்கலாம்
துன்பம்  சந்தோசம்  கலந்தே  வரலாம்
திசையும் பாதையும்  மாறி வரலாம்
உன்கைகள்  என் கை கோர்த்து செல்லும் வரை
இந்த  பயணம் எனது வெற்றி பயணம் !