Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 094  (Read 2724 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 094
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Donglee அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் வியாழக்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 10:02:29 PM by MysteRy »

NanbI

  • Guest
தாயின் கருவறையில்
தொடங்கி கல்லறை
போகும் மட்டும்
என்னோடு பயணிக்க்கும்
என் இசையே  ...

நீ இல்லாது போனால்
இந்த பூலோகத்தில்
பாதி பேர்
கிறுக்கனாகியிருப்பார்கள்
என் இசையே  ....

நீர் தேங்கும் இடம்
பொருத்து நிறம் அமையும்
மனிதரின் மனநிலை
பொருத்து நீ அமைவாய்
என் இசையே ...

என் சந்தோஷத்தை
உன்னுடன் குதுகலமாய்
பகிர்ந்தேன்
என் சோகத்தை
உன்னுள் புதைத்தேன்
என் இசையே ...

சில நேரம் எனக்கு
நீ உணவானாய்
பல நேரம் நீ
எனக்கு மருந்தானாய்
என் இசையே ...

மேலிருந்து விழும்
அருவியை அள்ளி பருக
முயலும் சிறு பறவைபோல
உன்னை எனக்குள்
அடக்க முயல்கிறேன்
என் இசையே ...

எனக்கு உன்னை அறிமுகம்
செய்தவள் என் அன்னை
அவள் இல்லாத இடத்தை
உன்னை கொண்டே
நிரப்புகிறேன் நான்
என் இசையே ...

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218357
  • Total likes: 23054
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இசை எனும் இன்பநாதம்                 
நம் மனதை மகிழ்விக்கும                         
ஓர்  இனிய கானம்                                   

இசைக்கு மயங்காத                                 
 இதயமும் உண்டோ                               
கவலைகளை மறக்க வைத்திட                 
மனதுக்கு அமைதி தர                                 
மனிதன் கண்டு பிடித்த                             
ஓர் அருமருந்து  இசை                               

நம் மனதை வருடும் - ஓர்                       
மெல்லிய மயில் இறகு இசை                   
தெரியாவிட்டாலும் தலையாட்ட வைத்திடும்   
புரியாவிட்டாலும் பிடித்துப் போய்விடும்           
ஒரு மாயாஜாலம் இசை                                   

இருண்ட மனதினில்                                       
அகல் விளக்காய்                                           
துவண்டு போன உள்ளத்தில்                                   
தூண்டுகோளாக                                             
இசை நம்மை பலவிதத்தில்                             
ஆட்கொள்கிறது                                             

கல் எறிந்த குளத்தில்                                 
வளையங்கள் விரிவது போல             
நம் மனதினில்                                   
உணர்வலைகளை தோன்றுவிப்பது இசை   
மது ரச கிண்ணத்தை விட                     
போதையை தருவிப்பது இசை   

« Last Edit: March 22, 2016, 03:41:00 PM by MysteRy »

Offline SwaranGaL

   
   மனிதனிடத்தில் மௌனம் அல்லது அமைதி
       காணமுடிந்தால் அது சோகத்தின் வெளிப்பாடு
   ஆனால் மௌனமான இசையினை அல்லது
       சோகம் கலந்த இசையினை அணுகினால்
    அது ரசனையின் வெளிப்பாடாகும்

   மனிதன் தொலைதூர பயணத்தை நோக்கி சென்றாலும்
       இசையின் தொடர்போடு கவலை மறந்து எந்தவித
   சிந்தனை இன்றி இசையில் முழ்கிவிடுகிறான்
        பசி தூக்கம் இதனைக்கூட சில நேரங்களில்
    மறந்து வேலையை முடிக்க முற்படுகிறான்

    ஆனால் இசையினை  வெறுத்த நாட்களும் இல்லை
       அதனால் களைத்துப் போன நாட்களும் இல்லை
    இசையினை மறந்தால் தானே ஆச்சரியம் தவிர
        நினைவிற்கு எட்டிய தூரத்தில் இசையை ஒதுக்கிய தில்லை
 
    மனிதன் தனிமை சூழ்ந்த நிலையில் யாரிடத்தும்
        பேசாமல் மௌனம் மேற்கொண்டு
     இருண்டுபோன தன் வாழ்வில் வெளிச்சத்தை
         எதிர்கொள்ள முற்பட்டு

    இசையை தனது மூச்சாக பாவித்து
       தனது நண்பனைப் போல
    உறவாடி பயணித்து பிரியாது இசையை
       நாடி என்றும் மகிழ்வான் !
« Last Edit: March 24, 2016, 07:25:39 PM by SwaranGaL »


Offline thamilan

மதுவுக்கு மயங்காத
மதியும் இருக்கல்லாம்
மங்கைக்கு மயங்காத
மனமும் இருக்கலாம்
இசைக்கு மயங்காத
மனிதனும் உண்டோ

மலை மீது உறையும்பனி நீரில்
குளித்துவிட்டு குலுங்கும்
காஸ்மீர் ரோஜா போல
மனதை சில்லிட வைத்திடும் இசை


மண்மீது தூரல்களை 
தூவிச் செல்லும் வான் மேகம் போலே
நம் மனமெங்கும்
இன்பச் சாரல்களை தூவிச் செல்லும் இசை


கர்ப்பத்தில் இருக்கும்
சிசு கூட
தாயின் கை வளையல்
சங்கீதம் கேட்டு மகிழ்கிறது
அடம் பிடித்து அழும் குழந்தை கூட
அன்னையின் தாலாட்டில்
அமைதியாக தூங்குகிறது

பாரதியின்  பாடல்கள்
எத்தனை பேருக்குத் தெரியும்
அது இசை வடிவில் வந்ததனால்
படிக்காத பாமரனும் பாட முடிந்ததே
வந்தே மாதரம்  பாடல்
எத்தனை இந்தியர்களுக்குத் தெரியும்
இசைப் புயலின் இசையாக வந்த பிறகே 
அந்நிய நாட்டவர்களுக்கும் இலகுவில்
இசைக்க முடிந்ததே

இசை இல்லாமல் உலகமே இல்லை
எங்கு இல்லை எதில் இல்லை இசை
வீசும் காற்றில் கொட்டிடும் மழையில்
ஆர்ப்பரிக்கும் கடல் அலையில்
ரீங்காரமிடும் வண்டின் குரலில்
எங்கும் எதிலும் நிறைந்திருப்பது இசை
 

« Last Edit: March 20, 2016, 11:37:20 PM by thamilan »

Offline PaRushNi

துளை நரம்பு தோல் குரல்
இவையே கருவிகளோ..இன்னதென்ற
வடிவமதில் உருவெடுத்தாய்
உன்னை அமைக்கும் வித்தகர்கள்
ஒலியால் ஒளிரவே ?
குளவையோ கைகுத்தல் சத்தமோ கேட்டிலேன்
ராகம் பல்லவி சரணம் அறிந்திலேன் - ஏனோ
துள்ளலும் துயிலுமே கிட்டியது
உன்னைச் சேர்கையில்

மனிதர்களுள் பொதுவானது ஐம்பூதங்கள்
உன்னைச் சேராது எண்ணிக்கையில்
சமத்துவம் உன்னில் தோன்றுகையில்
பிரிவினை வாராது போகட்டும்
யாதொரு உயிரை கொன்றால் மட்டுமில்லை
உன்னைக் கைக்கொரு பக்கமாய் இழுத்தாலும்
அது கொலையே !

மொழிக்கு  அப்பாற்பட்டு
ஏன் செவிக்கு  அப்பாற்பட்டு
உணர்வுக்கு உயிரோட்டம் கொடுத்தாயே
தனிமையில்லாது நட்பாகி நிறைந்தாயே
புன்னகை பூக்கச் செய்தாயே
கண்களின் ஓரமாய் ஈரமாய்
நிறைவு பெறச் செய்தாயே
நீ எனக்கு கொடுத்த அளப்பறியா ஆனந்ததிற்கு
காணிக்கை என்ன கொடுப்பேன்
இந்த கிறுக்கலைத்  தவிர

கிறுக்கலுடன்
-- பருஷ்ணி   :)
« Last Edit: March 21, 2016, 01:36:11 PM by PaRushNi »
Palm Springs commercial photography

Offline KaViTha

நேரமின்றி ஓடும் வாழ்வில் தஞ்சமா...
     காயமொன்றில் வாடும் நெஞ்சமா...

எதுவொன்றும் இல்லாமல்
      சொல்லொன்றும் கொள்ளாமல்
  இருள் கொண்ட உன் ஆத்மா...

இசையால் இளைப்பாறும் ஜீவாத்மா..
       காற்றில் கலந்தாடும் பரமாத்மா...

இமை மூடி கனவை நாடு...
இசை பாடி  சொர்க்கம் தேடு...


காயம் மறக்கும் மாயம் அது....
நேயம் திறக்கும் வண்ண சாயம் அது...


அன்பென்னும் திடலில் நல்கிவிடு..
இசையென்னும்  கடலில் மூழ்கிவிடு...






« Last Edit: March 24, 2016, 01:54:33 PM by MysteRy »

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
சில கேள்விகளுக்குள்
சிக்கியிருக்கிறது
என் சிந்தனை ...
எது உயிர் ?எது ஆத்மா ?எது இசை..?

நீ எனது உயிரென்று சொல்லும்
எவரேனும்எது உயிரென்று
விவரிக்க முடியுமா ..?

உடலின்றி உயிர் வாழ்தல்
சாத்தியமில்லை
உயிரின்றி உடல் வாழ்தல்
சாத்தியமில்லை ...

இரண்டும் இல்லையென்றாலும்
ஆத்மா வாழ்வதாய்
நம்பப்படுகிறது....

சொல்லித்தான் பாருங்களேன்
நீ எனது ஆத்மாவென்று.....
சில சூட்சுமங்கள் வெளிச்சமாகும்....

எது சூட்சுமமென்றோர்
எதிர் கேள்வி
வைத்துத்தான் பாருங்களேன்..,

எது இசையென்ற கேள்விக்கோர் விடை
கிடைக்கக்கூடும்....

தசையாட்டிப் பயிலும் பிஞ்சின் அழுகைக்குள்
ஒளிந்திருக்கும் இசைபோல் ஒரு சூட்சுமம்
அல்லது
சூட்சுமமாய் ஒரு இசை..,

ஒலி பரவா வெற்றிடத்தில்
இசை பரவுமென்னும்
உண்மை நிரூபிக்கட்டுமா...? ஒவ்வொரு
பைத்தியக்காரனின்
செயலும் ஒரு இசை..

கல் எரியும்முன்
கவனித்துதான்  பாருங்களேன்
பைத்தியக்காரன்
இசையெனப் பரவுவான் உம்மில்..
நீங்கள் வெற்றிடம் கொண்டவரெனில்.....

பிரபஞ்ச இருளுக்கு ஒற்றை
ஒளி உருண்டை சூரியனாய் உதிப்பது
போதும் என நாம் நினைப்பதும்
இசையன்றறிக..,

ஒவ்வொரு
தூக்கனாங்குருவிக்கும் சொட்டு வெளிச்ச
சூரியனாய் விட்டில் விரிவது
இசையென்றறிக.....

சேமித்துத்தான் வையுங்களேன்
எல்லா இசையையும்
ஆத்மாவிற்குள்..,

உடலில்லா ஆத்மா
உயிர்பெற்று உறங்கும்
இசையென்னும் இன்ப தொட்டிலில்....,

« Last Edit: March 22, 2016, 08:18:45 PM by PraBa »
Palm Springs commercial photography

Offline MyNa

கல் நெஞ்சத்தையும்
கரைய வைக்கும் இசையே..

உணர்வில்லா ஜடத்தையும்
உருக வைக்கும் இசையே..

புண்பட்ட நெஞ்சத்துக்கு
மருந்தாகும் இசையே..

பசிக்கும் வயிற்றுக்கு
விருந்தாகும் இசையே..

பிறப்பிற்கும் இறப்பிற்கும்
இறுதிவரை வரும் இசையே..

திரும்பிய திசை
எங்கும் இசையே..

இசைக்கு இல்லை
ஈடு இணையே..

இசையின்றி என்
வாழ்கை வெறுமையே ..

இசையால் வாழ்கிறேன் 
இசையோடு வாழ்கிறேன் ..

~ மைனா தமிழ் பிரியை ~



Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 703
  • Total likes: 2381
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear
அம்மாவின் இசை
எனக்கும் அம்மா இருந்தாங்க
அவங்க ஞாபகம் எப்போ வரும்னா
வேற ஒருவருடைய அம்மா என்கிட்ட பாசமா பேசுறப்போ
அம்மா  என்றழைக்காத உயிரில்லையே பாடல்
கேட்கிறப்போ என்னையவே உருகவைக்கும்


நண்பர்களின் இசை
 இவங்கதான் என்னோட சிரிப்பு
 இவங்க இல்லைனா எனக்கு வரும் வெறுப்பு
 என் ப்ரண்டு போல யாரு மச்சா பாடல்
 ஒரு உதாரணம்


கடவுள் தந்த அழகிய வாழ்க்கை பாடல் கேட்கிறப்போ 
நான் பட்டாம்பூச்சியாய் மாறிடுவேன்
மொத்தத்தில் தினமும் இசையோடு நடைபோடுறேன்
மகிழ்ச்சியாய் வாழக் காரணமும்
இறைவன் இசையாய் என் வாழ்க்கையில் இருப்பதனால்





-எண்ணமும் எழுத்தும்
               by BreeZe
« Last Edit: March 24, 2016, 09:01:57 AM by MysteRy »
Palm Springs commercial photography

Offline JEE

[சிவன்   மீட்டும்    உடுக்கை
விஷ்ணு  மீட்டும்    சங்கு
கண்ணன்   மீட்டும்   புல்லாங்குழல்
நந்தி   மீட்டும்  மிருதங்கம்
நாரதர்   மீட்டும்    வீணை
சரஸ்வதி   மீட்டும்    வீணை




ஒலி அலைகளுக்கும்
சக்தி உ ண்டு.
அண்டம் முழுவதும் பரவியுள்ள
இறைவனின் அலைகளுக்கும்
சக்தி உ ண்டு



இறைவனின் அலைகளோடு
சத்தம் என்பது  கலக்கும் போது 
அந்த சத்தம் சக்தி வாய்ந்தது
சக்தி உ ண்டு



அந்த சத்தம் இசையாக யிருந்தால்
இசைக்கு சக்தி உ ண்டு



இப்போதுள்ள மின்கருவிகளால்
அந்த  இசையதனை
சேமித்து வைத்து
திரும்ப திரும்ப கேட்டாலும்
மாறாத தண்மையோடு
சக்தி உண்டு




இறைவனின்அலையோடு
இணைந்து விட்ட
இசைசக்தியை பிரிக்க இயலாது

காலத்தால் அழியாத
சக்தி உ ண்டு

.
இசைக்கு பாம்புகளையும்
மிருகங்களையும் கூட மயக்கும்
சக்தி உ ண்டு



இருதயம் இசைக்கு
அடிமையானால்
இம்மையில் இன்புற்று வாழ
சக்தி உ ண்டு



துன்பம்   கோபம் இவைகளைப்
போக்கி ஒருவரை மகிழச் செய்யும்
சக்தி உ ண்டு



கல் மனதையும் கரைக்க வல்ல
சக்தி உ ண்டு



இறைவனை அடையவும்
உயர்ந்த சிந்தனை சிந்திக்கவும்
சக்தி உ ண்டு



ஈர்க்கும் இசையுடன்
ஒன்று பாடத் தெரிய வேண்டும்
அல்லது இசைக்கருவி
மீட்டவாவது தெரிய வேண்டும்



இரண்டும் இல்லாவிடில்
ரசிக்க தெரியாது
உடனே முடிவெடு


பாடு


மீட்டு
இசை உனக்காக மட்டுல்ல,,,,,,,



லட்சோபலட்ச மக்களை   ஈர்த்து
துன்பம் போக்கிடு,,,,,,,,
« Last Edit: March 26, 2016, 07:04:18 PM by JEE »
with kind regard,

G'vakumar.