Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 096  (Read 2976 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 096
இந்த களத்தின்இந்த  நிழல் படம்  VIPER அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் வியாழக்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 10:04:31 PM by MysteRy »

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
பேய் இருக்கா இல்லையா
தெரியாது எனக்கு
அது நல்லதா கெட்டதா
தெரியாது எனக்கு ...

தைரியம் ஊட்டி
வளர்த்த பெண்
இன்று 8மணி ஆனால்
வீட்டுக்குள்ளே
தனியாக இருக்க பயம் ...

யார் விதைத்தது
சாப்பிடாட்டி
அங்க இருக்க பேய் கிட்ட
பிடிச்சி கொடுத்துடுவேன்
பயம் காட்டி சோறு
ஊட்டிய அன்னையா .....

பள்ளிக்கு பின்னால்
போயிட்டு விளையாடாதே
அங்கு ஒரு ஆவி இருக்காம்
நான் வீட்டுக்குள் போக
பயம் காட்டிய நண்பனா ...

அவித்த முட்டை
கொடுக்காவிட்டால்
இரவு முட்டை சாப்பிட்டால்
பேய் பிடிக்கும் என்று பயம் காட்டி
வாங்கி உண்ட உடன்பிறப்பா ...

இரவு நேர வேளைக்கு
சென்றால் கன்னிபென்னை
ஆவி அடிக்கும் என்று
பயம்காட்டி வீட்டில்
அடைத்த சித்தியா....

யார் காரணம்
யாராய் வேண்டுமானால்
இருந்துவிட்டு போங்கள்
உங்கள் சுயநலனுக்காக
வாய்க்கு வந்ததை சொல்லி
இல்லாத பேயை
வரவைக்காதீர்கள் ...

அடுத்த தலைமுறைக்கு
தைரியம்  அவசியம்
பேயே பிடித்தாலும்
பரவாயில்லை
நீங்கள் பிடித்து ஆட்டி
படைக்காதீர்கள்...
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline thamilan

பேய் இருக்கிறதா இல்லையா
இறந்தவர்கள் ஆன்மா
இறைவனடி சேருமா இல்லை
உலகை சுற்றுமா என
எத்தனை வாதங்கள் விவாதங்கள்
இவை நமக்கு அப்பாற்பட்டவை
இது வரை விடை கிடைக்காத
கண்ணால் காணாத ஒன்றை பற்றி
கவலைப்படுவது முட்டாள்தனமாகப் படுகிறது எனக்கு

தன் நிழலைக் கண்டேபயப்படக் கூடியவன்
மனிதன்
மனிதனை ஆட்டுவிக்கும் ஒரு பேய்
பயம்
அடுத்தது பணம்
பேய்களே வரப் பயப்படும்
பயங்கர உலகம் இது
ஆசை காமம் குரோதம்
வன்மம் வஞ்சனை பேராசை என
எத்தனையோ பேய்கள்
ஆட்டிப்படைக்கும் மனிதனை
வெறும் அருவங்கள்
என்ன செய்திட முடியும்
 
பேய்களே பயப்படக் கூடிய அளவுக்கு
மோசமான ஆண்களும் இருக்கிறார்கள்
பெண்களும் இருக்கிறார்கள்
தாயான பெண்கள் சிலநேரம்
பேயாகவும் ஆட்டிப்படைப்பதில்லையா
மனிதனுக்குள்ளேயே ஆயிரம் பேய்கள் இருக்க
வெறும் அருவதைக் கண்கொண்டு பயப்படும்
மனிதனை நினைக்க
 விந்தையாகத் தான் இருக்கிறது

வெளிச்சம் இல்லா இடத்தில் தான்
இருட்டு இருக்கும்
இறை நம்பிக்கை இல்லாதவர் மனங்களில் தான்
பயம் இருக்கும்
அந்த பயமே பேயாகும்

நம் மனங்களில்
மூடநம்பிக்கையை   வளர்த்திட்ட
நம் முன்னோர்கள்
நம்மை பயமுறுத்தியே வளர்த்திட்ட
நம் பெற்றோர்கள்
பயந்தே வாழ்ந்திட்ட நாங்கள்
அரண்டவன் கண்ணுக்கு
இருண்டதெல்லாம் பேய்
இதுவும் நம் முன்னோர் சொன்னது தான்

« Last Edit: April 03, 2016, 08:40:02 AM by thamilan »

Offline பொய்கை

  • Full Member
  • *
  • Posts: 108
  • Total likes: 792
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யாகாவராயினும் நாகாக்க...
[highlight-text]நான் நீராவி பார்த்திருக்கேன்
நீர்... ஆவி பார்த்ததுண்டா?

நான் கொட்டாவி பார்த்திருக்கேன்
நீர்... கெட்ட ஆவி பார்த்ததுண்டா ?

நான் மேதாவி பார்த்திருக்கேன்
நீர்.. மாயாவி  பார்த்ததுண்டா ?

ஆவி என வந்தாலே மேலே தான் செல்லுமடா!
ஆவியென நீ பயந்தால் உன் ஆவி போகுமடா!

ஆவி எல்லாம் வாழும் இடம் சுடுகாடு தானேயடா!
சுடுகாட்டில் வீடு கட்டி ஆவி எல்லாம் நசுங்கித்தான் சாகுதடா!

சேலை கட்டிய ஆவி எல்லாம் இங்கே வந்து போகுதடா!
ஜீன்ஸ் போட்ட ஆவி எங்கே தான் போனதடா!

செத்துப்போன பொண்ணு எல்லாம் ஆவியா வந்து போனால்
அதுக்கும் ஒரு சிம் கார்டு நான் வாங்கி கொடுப்பேனடா!

ஆவியும் கட்டி வந்த அழகான வெள்ளை சேலை .,,
நாம ஊரு போத்தீஸ் இல் எடுத்ததடா... !

நான்  வந்த நிழல் படத்தை  FTC கு   ஏன் கொடுத்த என்று
"வைப்பர்"   வீட்டு ஜன்னல் பக்கம் ஆவி இப்போ போகுதடா!
[/highlight-text]

Offline gab


நள்ளிரவு நேரம்... கும்மிருட்டு...
சின்னதாய் ஒரு ஒலி/ஒளி காணினும்
அங்கு பேய் இருக்கலாம்
போகாதே  ...

நல்ல காற்று வீசும் நேரம்
 மரம் சற்றே வேகமாக
அசைந்தாடும் பொழுது
அங்கும் பேய் இருக்கலாம்
போகாதே ....

புழங்காத பூட்டிய வீட்டில் 
ஒட்டடை அதிகம் படிந்து   
தூசி துரும்போடு
பேயும் இருக்கலாம்
போகாதே  ....

அந்த தெருவோரம் மூலையில்
 ஒருவன் அடிபட்டு  இறந்து
ஆவியாய் அலைகிறான்
போகாதே ....

 கண்மாயில் விஷம் குடிச்சி
செத்த முனியன், மணி 12 ஆனால்
 பேயாய் அலைகிறான்
போகாதே ....

இப்படி சொல்லி சொல்லியே
பிள்ளைகளின் தைரியத்தை
 புதைத்து பயத்தை
விதைத்தாயிற்று....

பகல் 12ம் இரவு 12ம்
பேய் உலவும் நேரம்
போகாதே என்கிறீர்களே ..
மற்ற நேரம் பேய்க்கு ராகுகாலமா?
இல்லை கண்ணில்  கோளாறா?

அவனுக்கு பேய் அடிச்சிருச்சு
 பூசாரி கிட்ட விபூதி போட்டா 
 சரியாய் போகும்...
யாருக்கு ?பேய்க்கா ?
பூசாரிக்கா?

இன்னும் எவ்வளவு நாள்
இப்படி சொல்லி சொல்லி
 ஒரு சாராரின் வருமானத்துக்கு
வழி செய்வீர்கள் ...

எனக்கு ஒரே ஒரு கேள்விதான்
பேய் அடிச்சி செத்தவன்
பேயாய்  மாறி, இவனை  கொன்ற
பேயை கொல்ல முடியுமா?

இதற்கு விடை யோசித்தால்
பேய் என்று ஒன்று இருக்கா இல்லையா?
பதில் உங்களுகே புரியும் ....


பேய் இல்லை ...
அது வெறும் கற்பனையே
என்ற உண்மையை பிஞ்சுகளின்
உள்ளத்தில் விதையுங்கள்.

எதை விதைக்கிறோமோ
அதுவே அறுவடையாகும்.

 


(என் எண்ணத்தின் குமுறல் உளறலாக ....)
« Last Edit: April 04, 2016, 09:26:43 PM by gab »

Offline SweeTie

மாலை நேரம் அடர்ந்த புளியமரம்
மரத்தின் அருகே 
ஒரு முனகல்  ஹ்ம் ...ஹ்ம் ....ஹ்ம் ..
பேயாக இருக்குமோ!
சிறுவயதில் அம்மா சொன்ன ஞாபகம் 
புளிய மரத்தில்தான் பேய் உறங்குமாம் 
உடம்பு வெல வெலத்தது 
அதி வேகமாக ஓடிச் செல்கிறேன்
ஒளிந்து எட்டிப்  பார்க்கிறேன்
கல் எறி  வாங்கிய நாயின்
முனகல் அது. ஹ்ம்.....ஹ்ம் ....ஹ்ம்.....
 
நடுநிசி , நாயின் ஊளை
பேயின் வரவு நாய்க்குத் தெரியுமாம்
பரிமளா  சொல்லித் தெரியும்
வேர்க்க விருவிருக்க மூடி முக்காடிட்டு   
சிவபுராணம்  சொல்கிறேன் தப்பு தப்பாய்
சிவபுராணம் கேட்டால் பேய் ஓடிவிடுமாம்
எத்தினை முறை படித்தேனோ தூங்கிவிட்டேன்
இரவு கழிந்து  விடியல் ஆனது 
பக்கத்து தெருவில் ஒரே ரகளை
பரிமளா  வீட்டில் திருட்டு போய்விட்டதாம்
பயமே நீதான் பேயோ !!!

தூங்கி ஒரு ஜாமம் துடித்தெளுந்தேன்
வெள்ளை வண்ண சேலையில்
கொலுசு சத்தமிட
ஜன்னலில் அசைந்தாடுகிறாள் மோகினி 
ஒ......வென்று  அலறியே இரண்டடி பின்சென்று
மின்சார விளக்கேற்றி  ஜன்னலை பார்க்கிறேன்
வெளிர் வண்ண  ஜன்னல் திரைச்சீலை
காற்றிலே அசைந்தாடி ஏளனம் செய்யவே
வெட்கித்துபோகிறேன்
மனமே நீதான் பேயோ!!!.   
.
வஞ்சகரும் காமுகரும் வாழுங் கால்
பேய்களுக்கு இங்கு இடமில்லை
பொய் புளுகு பித்தலாட்டம் இருக்கும்வரை
பேய்களுக்கு  வாழ வழியில்லை
காமம் குரோதம் தீயசெயல் தீரும்வரை
பேய்கள் நடமாடப்  போவதில்லை 
நமக்குள் இருக்கும் பேய்களை விரட்டினால்
பேய் என்ற சொல்லுக்கு இடமே இல்லை .
 
« Last Edit: April 06, 2016, 03:49:36 AM by SweeTie »

Offline Dong லீ

சாளர கதவுகளின்
சட சட சத்தம் !

இருதய நரம்புகளின்
பட பட யுத்தம் !

திகில் தெறித்த இருள் ..
என்னாகுமோ ! ஏதாகுமோ !

மூளைக்குள் பாயும்
கட கட ரத்தம்!

நாடி நரம்புகள் பதற
கை கால்கள் உதற
மீண்டும் திகில் சத்தம் !

தலைவிரி கோலமாய்
கோர உருவம் !
கும்மிருட்டிலும்
என் குலை நடுக்கிடும்
கொலைவெறி கண்கள் !

ஜல் ஜல்
பின்னணி இசையில்
மெல்ல மெல்ல
நெருங்கிய மோகினி !

கிரு கிரு வென
தலை சுற்ற 
அச்சங்கள் என்
மூளையில் முற்றுகையில் ..

அவள் கைகள்
என் தோளை மெல்ல
தொட முற்படுகையில் ..
என் உயிர் -நொடிக்கு 100
என டிசியில் !!

என் தோளை தொட்டவள்
"என்னங்க"  என்றாள்!!

மனைவியை கண்டு
நான் நடுங்க
என் பின்னால்
பயந்து பம்மியிருந்த பேயோ
தலை தெறிக்க தெறிக்க
ஓட்டம் பிடித்தது !!

மனைவி என்றால் பேயும் நடுங்கும் !

இவண் பேய்க்கு வாக்கப்பட காத்திருக்கும்
பேச்சுலர் சங்கம் !!


[டிசியில் -'dc'yil ]
« Last Edit: April 05, 2016, 12:43:57 PM by Dong லீ »

Offline சக்திராகவா

நீங்கா காதல்
நிறைவேறா ஆசை
அலையுமோ இங்கு
அழிவுடல் ஆன்மா?

நடுநிசி நாய்களும்
நடுங்கிட தொடங்குமோ!
பேச்சடங்கும் நேரத்தில்
பேய்களின் பேரணி!

கண்டதில்லை
கண்ணெதிரில்
கதைவழி மட்டுமே

கருப்பு உருவம்
எரிந்த முகம்
கால்வரை கூந்தல்
கொள்ளிவாய் பேயாம்!

குழந்தை உயரம்
குறும்பும் அதிகம்
குட்டிசாத்தான்
என்கிற பேயாம்!

வெள்ளை உடை
கொள்ளை அழகு
மோகத்தை தூண்டும்
மோகினிப் பேயாம்!

ஆயிரம் பேர்வைத்து
அழைத்தாலும்
ஆவியிக்கு
அஞ்சாதோருண்டோ!

பேய்களை பற்றி
கவிதை சொன்னால்
நானும் கூட
நாளைய பேயாம்!

/சக்தி ராகவாற

Offline PaRushNi

ஒளியை கூட்டி ஒலியை குறைத்து
திகிலூட்டும் பேய்ப் படம் காண
எண்ணினேன் ஆவலாய்
இணையம் வாயிலாய் 8)
   
திரையில்..
அமானுஷ்யத்தை உணரும் குடும்பம்
இன்னல்களின் மத்தியில்
அப்படிப்பட்ட நிலையிலிருந்து
மீட்டு எடுக்க உதவும் குழு என  :-\
..இடையகவைப்பு ..::)

பதறச் செய்யும் இசை
நாய் வீட்டை சுற்றி குறைக்க   :o
..இடையகவைப்பு..  :'(
சாளரம் வேகமாய் அடிக்க   :-X
..இடையகவைப்பு ..   >:(
.....................................
பொறுமையை இழந்தேன்
இனி பேய் வருமா வராதா  :P
என்றெண்ணி உற்று நோக்கினேன்
மீண்டும் …இடையகவைப்பு…
' அட சீ ...போ ..பேயே '   :P  8) என்று சொல்லி
கணினியை நிறுத்திவிட்டேன்

திரைப்படத்தில் கூட
ஆவிகள், தீய சக்திகளின் வரவு
பின்னணி இசையும் அறிகுறிகளும்
விளக்க முடியும் ..ஏனோ
உயிருள்ள மனிதர்களிடத்தில்
முன்னுக்குப்பின் முரண்பாடான
செய்கைகளை யூகிக்க இயலவில்லை?

அர்த்தங்கள் மருவி அச்சங்கள் பெருகிற்றோ?
மரத்தின்  அடியில் இரவில் இருக்க கூடாதென்பது
மன உளைச்சலின் வெளிப்பாடோ ?
ஆவிகள் பிடித்து ஆட்டும் அபலைகள்

புதரை போல் இரகசியங்களை
உள்ளடக்கிய மானிட பதரே
விடைகான விழையலமே சில
விஞ்ஞான முயற்ச்சியில்

கிறுக்கலுடன்
பருஷ்ணி :)

இடையகவைப்பு - Buffering
« Last Edit: April 06, 2016, 08:53:08 PM by PaRushNi »
Palm Springs commercial photography