Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 097  (Read 2957 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 097
இந்த களத்தின்இந்த  நிழல் படம்  PaRuShiNi அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 10:05:36 PM by MysteRy »

Offline thamilan

ஆண் என்பவன் தனிமரம் போன்றவன்
ஒரு பெண் அந்த ஆணுடன் சேரும் போது
அவள் அந்த மரத்தின் கிளைகள் ஆகிறாள்
குழந்தைகள் அந்த மரத்தில்
பலன் தரும் கனிகள் ஆவர்
 
வெறும் பெண்ணாக மனைவியாக இருந்தவளை
தாய்மை எனும் கடவுளுக்கு நிகரான
உன்னதமான பதவிக்கு உயர்த்துவது
குழந்தையே

குழந்தையும் தெய்வமும் ஒன்றென்பர்
தெய்வம் கூட சில நேரம்
அழவைக்கும்
அந்த அழுகையைக் கூட
ஆனந்தமாக்கிடும் அற்புத மருந்து
மழலையின் சிரிப்பு
அவை பேசும் பேச்சு  புரியாது - ஆனால்
அந்த பேச்சு தரும் ஆனந்தத்துக்கு
ஈடு இருக்காது

குழந்தையின் அழுகையை நாம்
மிட்டாய் கொடுத்து நிறுத்தி விடுகிறோம் - ஆனால்
குழந்தையின் சிரிப்பை காலம்
அதுவாகவே நிறுத்தி விடுகிறது
 
படிப்பால் தலைநிமிர்வார்கள் என
 பால் மனம் மாறா பருவத்தில்
 பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புகிறோம் - ஆனால்
புத்தகப் பையை சுமந்து கூன் விழுந்த
குழந்தைகளே அதிகம்

விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது
குழந்தைகள் உலகம்
அவர்களை விமர்சனம் செய்யும் தகுதி
பெரியவர்களான நமக்கு இல்லை
என்பதே உண்மை
« Last Edit: April 10, 2016, 07:56:31 AM by thamilan »

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 703
  • Total likes: 2381
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear
என்னைப் பற்றி நானே எழுதும்
கவிதை இது
வளர்ந்தாலும் நான் இன்னும்
சிறு பிள்ளை தானே
கருவில் உயிராகி
உயிரில் உருவமாகி
தனி மரங்களாக இருந்த
ஆணையும் பெண்ணையும்
தோப்பாக மாற்றும்
குட்டித் தேவதைகள் குழந்தைகள்
அனைத்து  இன்பங்களையும்
ஒன்றாக குழைத்து
இறைவன் படைத்த ஓவியங்கள்
வர்ணமிகு வானவில்
வெண்பஞ்சு முகில் கூட்டம்
அலைகளின் வெண் நுரைகள்
பட்டாம்பூச்சியின் மென்மை
இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து
இறைவன் படைத்திட்ட
பனிப்பொம்மைகள் குழந்தைகள்
உலகினிலே ஆயிரம் மொழிகள் இருக்கலாம்
மழலைகள் பேசும் மொழிக்கு
ஈடும் இல்லை இணையும் இல்லை
மொழி தெரியாவிட்டாலும் மனதை மகிழ்விக்கும்
சங்கீதம் போல
மனதை மகிழ்விக்கும்
குழந்தைகளின் மழலை
இனிமை என்ற வார்த்தைக்கு
இன்னொரு அர்த்தம்  மழலைகள்
தத்தி நடக்கும் நடையோ 
இலக்கியக் கவிதைகள்
பேசும் வார்த்தைகளோ
ஹய்க்கு கவிதைகள்
மொத்தத்தில் குழந்தைகள்
புதுக்  கவிதைகள்


எழுத்தாக்கம்
BreeZe

« Last Edit: April 10, 2016, 11:58:43 PM by Forum »
Palm Springs commercial photography

Offline MyNa

ஒரு வளர்ந்த குழந்தைக்காக
இக்கவிதை கிருக்கப்படுகின்றது .. ;)

இக்கவிதையில் வரும் அனைத்தும் கற்பனையே ..
யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல.. :)

தேவதை  இல்லைன்னு   யார் சொன்னாங்க ??
இல்லை யார்  சொன்னானு கேக்குரேனுங்க ?? ???

ஒவ்வொரு  வீட்டுலயும்  அம்மா  அப்பாவுக்கு 
அவங்க  பிள்ளைங்க  தேவைதை தானுங்க .. ;D

அப்படி நம்ம  சாட்ல (chat )  ஒரு  தேவதைய
பத்தின கவிதைய  கிறுக்கிறேன்  படிங்க .. ;)

மைக் எடுத்தா நேயர்  விருப்பம் மாதிரி
மூச்சு  விடாம  பாட்டு  பாடும்  குயிலுங்க .. ;D

ஆளே இல்லைனாலும் சலிக்காம 
வேர்ட் கேம் நடத்துறது இவங்க தில்லுங்க .. 8)

மொபைல்ல இருந்தாலும் டைமிங்- கு 
கவுன்ட்டர்  கொடுக்கறதுல செம்ம ஆளுங்க .. :-X

ஒரே ஓவர்ல 4-5 பேர சும்மா அசால்ட்டா 
பொவ்ல்(bowl) பண்ணி அவுட் ஆக்குற வில்லிங்க.. :o

ரூம் போட்டு சிரிக்கிற ஆளுங்க மத்தியில 
பி ஆர் பி (brb ) போட்டுட்டு  சிரிக்கிற டைப்புங்க .. :P

இன்னும் கிறுக்கிறேன்  படிங்க .. ::)

ஏசி(AC) ரூம்ல பீசி(PC) போட்டு உட்காந்துருக்கும்
இவங்க  டீசி(DC)  குவின்  தானுங்க ..  8)

ரசத்துக்கும் பாசத்துக்கும்
இங்க  பேர் போன ஆளுங்க .. ;)

விஷ் ஒன்னு  அனுப்பினா
அத கேட்டுகிட்டே  இருக்க சொல்லுமுங்க .. :D

மைனா  வெளவால்ல இருந்து விஐபி வரை..
அட நம்ம தெய்வம் கூட இவங்க விசிறிங்க.. ;)

சும்மா சிவேனேனு இருந்த  என்ன எழுத சொன்ன
எனக்கு  என்ன எழுத தொனுமுங்க  :-\

ஓவியத்துக்கு  கவிதை  வராதனால
ஓவியம் கொடுத்த  தேவதைக்கே  கவிதை  எழுதிட்டேனுங்க  ::)

ஓவியத்திலுள்ள குழந்தை செல்வங்களுக்கு
உயிர் கொடுத்த குழந்தைக்கு இக்கவிதை ஓர் அன்பளிப்பு ;)

மைனா... (இடையகவைப்பு ). :o ::)

Offline பொய்கை

  • Full Member
  • *
  • Posts: 108
  • Total likes: 792
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யாகாவராயினும் நாகாக்க...
மலர் கண்காட்சியில்
கண்டிராத வண்ண மலர்கள்

அம்மா அப்பா மடியில்
அமர்திருந்தால் அவர்களின்
பொம்மைகள்

தினமும் காண கிடைக்கும்
தீபாவளி மத்தாப்புக்கள்

புரியாத மொழியில்
புதுகவிதை சொல்லிடும்
குட்டி புலவர்கள்

பசிஎன்று வந்தால்
நிற்காமல் பாடிடும்
சங்கீத வித்வான்கள்

இருண்டிருந்த இல்லத்தில்
தன் வரவால் ஒளியூட்டும்
மின்மினிகள்

சோம்பேறி அப்பனையும்
சம்பாதிக்க நினைவூட்டும்
பாசமிகு சித்திரங்கள்

தாத்தாவுக்கும் பாட்டிக்கும்
அன்பு பசி எடுத்தால்
உணவு தரும் பாத்திரங்கள்

சின்னஞ்சிறு மழலை உள்ளத்தில்
என்றும் இல்லை ஜாதி ,மதம்,
குலம்,கோத்திரங்கள்..

Offline சக்திராகவா

கருவிற்கும் கைமுளைத்து
கண்மூடி மண் பிறந்து
கொஞ்சும் மொழி பேசி
நெஞ்சம் மகிழ்கிறதே

என் பிள்ளை
என்று சொல்ல
எத்தனை தவமிருந்தோம்
இப்படியோர் பிள்ளை வர

தொட்டில் பிள்ளையால்
தொலைந்த கோவம் எத்தனையோ?
நடைவண்டி குறுகிட்டு
நின்ற மகிழுந்து எத்தனையோ?


மிட்டாயின் சுருளுக்குள்
மறைந்திருக்கும் சிரிப்பொலியும்
எட்டாத சட்டைக்குள்
ஏமாற்றும் ஏளனமும்

குண்டில்லா துப்பாக்கி
புகையில்லா புகைவண்டி
பேசாத பெண்பொம்மை
வீடெங்கும் நீ விளையாட

அலுப்பில் முடிந்த
அலுவலகம்!
உன் சிரிப்பில் எப்படி
சிதைகிறது!

மண்ணாண்ட மன்னன் மனம்
மண்டியிடும் மழலையிடம்
எந்நாட்டு பிறப்பினிலும்
ஏதோ ஓர் சிறப்பிருக்கும்

பல்முளைக்கும்
முன் முளைக்கும்
முதல் மொழிக்கு
நிகறுண்டோ!!

தேன் கூட திகட்டிவிடும்
திகட்டாதுன்
முத்ததில் முடியும்
எச்சில் துளி!

சின்ன சின்ன கோபம்
சிரிக்க வைக்கும் சாபம்
உறங்கும் நேரம் கூட
உனை நெஞ்சில்சுமப்பேனோ!

கவிதையில் மழலை சக்தி

Offline SweeTie

சின்ன சின்ன  பாப்பாக்கள்
செல்லகுட்டி பாப்பாக்கள்
சிரித்து மகிழும் பாப்பாக்கள்
சலனம் இல்லாப் பாப்பாக்கள்
மழலை பேசும் பாப்பாக்கள்
மனதை கவரும் பாப்பாக்கள்

உலகம் அறியாக் குழந்தை உள்ளம்
கள்ளம்  இல்லா வெள்ளை உள்ளம் 
துள்ளி விளையாடி மகிழும் பருவம்
சுட்டித் தனமும் நிறைந்திருக்கும்
பொம்மை ஒன்றே அவர்கள் உலகம்
சூது வாது தெரியாப் பருவம் 

பள்ளி சென்று  கற்க வேண்டும்
என்னும் எழுத்தும் படிக்கவேண்டும்
அறிவு நூல்கள் சுமக்கவேண்டும்
கலைகள் யாவும் பயில வேண்டும்
கணினிப் படிப்பும் படிக்கவேண்டும்
மொழிகள் யாவும்  அறிய வேண்டும்

பட்டங்கள்  ஆண்டு சட்டங்கள் செய்து
பாரினில் உன் புகழ் ஓங்கவேண்டும்
தலை நிமிர்ந்து நீ நிற்பதுகண்டு
பெற்றவர் மெய் மறந்திடவேண்டும்
நாளைய உலகில் நீ ஒரு கதாநாயகி 
என்பதை நாமும் கேட்கவேண்டும்.
« Last Edit: April 14, 2016, 01:26:49 AM by SweeTie »

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
அய்யிரு திங்கள் உன்னை
தாங்கி ஓர் உயிராய் உன்னை
 ஈன்றிடவே மனசு ஏங்குதம்மா   ...

யாவகமாய் குளிப்பாட்டி
பொட்டிட்டு புது சட்டை போட்டு
 ரசித்திடவே மனசு ஏங்குதம்மா  ...

வகை வகையாய் அமுது
 சமைத்து ஆசை ஆசையாய்
ஊட்டிவிட மனசு ஏங்குதம்மா  ...

தத்தி தத்தி நீ நடை பழக
உன்னுடன் சேர்ந்து நானும்
நடை பழக மனசு ஏங்குதடா ...

உற்றார் உறவினர் உன்னை அள்ளி
 உச்சி முகரும் வேளையில்
 பூரிப்பில் திளைக்க என் மனசு ஏங்குதம்மா  ...

ஆபரணங்கள் ஆயிரம் வாங்கி
அழகுபூட்டி அழகுக்கு அழகு
சேர்க்க மனசு ஏங்குதம்மா ...

சின்ன சின்ன சேட்டைகள்
நீ செய்ய அதை கண்டு ரசிக்க 
மனசு ஏங்குதம்மா  ...

 கலைகள் பல  நீ கற்க
உன்னை பாடச்சாலையில்
சேர்க்க மனசு ஏங்குதம்மா  ...

நீ விரல் நீட்டும் பொம்மைகளை
 எல்லாம் வாங்கி குவிக்க 
மனசு ஏங்குதம்மா ...

நான் ரசித்த இயற்கையை
உனக்குள் உணரவைக்க
மனசு ஏங்குதம்மா  ....

உன்னை  ஊரே மெச்சும் படி
வளர்த்து ஆளாக்க
மனசு ஏங்குதம்மா  ....
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline PaRushNi

கண்மணிகளே !
மின்மினிகளே!
செல்வங்களே!
என்ன பெயர் சொல்லி அழைப்பேன்
பளீரென்று புன்னகைக்கும் தென்றலா
பறவைகளுள் மைனாவோ
கானம்பாடும் இசையோ

யார் நீ எனக்கு
ஊரும் தெரியாது எந்த நாடென்றும் அறியாது
என் செல்லிடபேசியின் அழகு சித்திரமே
அழகிற்கு நிறமில்லை என்பேன்
ஆசை தங்கமே என  ஆர்ப்பரிக்க எண்ணியே
ஆனந்தத்துடன் கிறுக்குகிறேன் இதனையே

மழலைக்கு ஈடு இணையில்லை
மருமகளை கையில் ஏந்தும்
மாமனுக்கோ அத்தைகோ இங்கு பஞ்சமில்லை
பிள்ளைத்தமிழிலும் வயது ஐந்திற்கு முன் வகையில்லை
இதற்குமேல் என்னிடத்தில் வார்த்தையில்லை
இதைச் சொன்னாலும் யாரும் நம்புவதற்கில்லை

பெண்குழந்தைகளை போற்றி பாதுகாக்கும்
பெற்றோர்களுக்கும் சமுதாயத்திற்கும்
தாழ்மையான வணக்கமும்
அங்ஙனம் செய்யாமற்போன கூட்டத்திற்கு
சாபமும்  உடனே வந்து சேரனும்

கிறுக்கலுடன்
பருஷ்ணி :)
« Last Edit: April 16, 2016, 12:30:41 AM by PaRushNi »
Palm Springs commercial photography