Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 098  (Read 3186 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 098
இந்த களத்தின்இந்த  நிழல் படம்  Kanmani அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 10:07:15 PM by MysteRy »

!! DJ HussaiN !!

  • Guest
 ..... இது என் முதல் கிறுக்கல்  பிழைகள் இருந்தால் மன்னித்து விடவும் ...

!! வெவ்வேறு  தாயின்  கருவறையில் பிறந்தோம் !!
!! வெவ்வேறு  தந்தையின்   பாசத்தில் வளர்ந்தோம் !!

!! மழலை வயதில் சேர்ந்து ஒன்றாக  விளையாடினோம் !!
!! இருவரும் சேர்ந்து ஒன்றாக பள்ளி வயதினை  முடித்தோம் !!

!! இருவரும் ஒருவர் மீது ஒருவர் உயிராய் இருந்தோம் !!
!! இணை பிரியாமல் பருவ வயதினை ஒன்றாக  கழித்தோம் !!

!! இருவருக்கும் திருமணமாகி இல்லற வாழ்வில் ஒன்றாக நுழைந்தோம் !!
!! எனக்கு நீ உனக்கு நான் என்று ஒன்றாக வாழ்ந்தோம்  !!

!! வயதான காலத்திலும் மகிழ்ச்சியாய் ஒன்றாக இருந்தோம் !!
!! பிறந்த முதல் இன்று வரை எல்லா வயதினையும் ஒன்றாக கழித்த நாம் !!

!! இன்று இறக்கும் போது மட்டும்  நீ எனக்கு முன்னதாக சென்று விட்டாயே !!
!! உன்னுடன் வாழ்ந்த இவ்வுலகில்  நீ இல்லாமல் என்னால்
 வாழ முடியும் என்று நினைத்து விட்டாயா !!

!! நானும் உன்னுடன் வருகிறேன் !!
!! மரணித்த பின்பும் உன்னுடன் சேர்ந்து ஒன்றாக சொர்க்கம் செல்ல ஆசை படுகிறேன் !!

                                                             !!நன்றி !!


சற்று சிந்தியுங்கள்  இந்த கவிதையில் நிறைய இடத்தில்  ( ஒன்றாக ) என்ற வார்த்தை அதிகமாக குறிப்பிட்டிருக்கும்  ...

நாம் எபோதும் ஒன்றாக ... ஒற்றுமையாக இருந்தால் யாராலும் எந்த சூழ்நிலையிலும் நம்மை பிரிக்க முடியாது  ...


                      !! ஒற்றுமையாய் இருங்கள் சந்தோஷமாக வாழுங்கள் !!
« Last Edit: April 17, 2016, 10:50:37 PM by !! DJ HussaiN !! »

Offline thamilan

என்னவளே
என் உயிரில் கலந்து ஓருயிர் ஆனவளே
உனக்காக நான் எழுதும் கவிதையிது

 
நட்பு 
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த நம்மை
வாழ்க்கைச் சக்கரம்
நட்பு என்ற சங்கிலி கொண்டிணைத்தது
என் தங்கை மூலம் அறிமுகமான  நாங்கள்
நல்ல நண்பர்களானோம்
அடிகடி என் வீடு வந்ததனால்
எங்கள் குடும்பத்தில் ஒருத்தியானாள்   

களங்கமில்லாத அன்பாலும்
உண்மையான  நட்பாலும்
எங்கள் வீட்டில் இடம் பிடித்தாள்

காதல் 
பலவருடங்கள் பழகியதால் அவள்
படிப்படியாக என் மனதினில் படிய ஆரம்பித்தாள்
அவள் அன்புள்ளம் கண்டு
அவள் ஈகைக் குணம் கண்டு
அவள் நல்லொழுக்கம் கண்டு
என் மனதிலும் காதல் விதைகள் விழுந்தன 
அவள் அழகான தேன் சிந்தும் சிரிப்பால்
அந்த காதல் விதைகள்
தளிர்விடத் தொடங்கின

என் காதலைச் சொல்ல நானெடுத்ததோ
ஓராண்டு
காதலைச் சொல்ல நினைக்கும்போதெல்லாம்
வாயிருந்தும் வார்த்தைகள் இன்றி
ஊமையானேன்
 என்று சொன்னேன் எப்படி சொன்னேன்
இன்னும் எனக்கே வியர்ப்பாய் இருக்கிறது
நான் இறந்து பிறந்த நாள் அது
என்ன நினைப்பாளோ
எப்படி எடுப்பாளோ
ஏற்றுக் கொள்வாளோ இல்லை
ஏசி விடுவாளோ
சொல்லிவிட்டு பதில் வரும்வரை
உலகத்தில் உள்ள எல்லா கடவுள்களும்
கண்முன்னே தோன்றி மறைந்தார்கள்
ஒரு இனிய புன்னகை மூலம்
என்காதலை அவள் ஏற்றுக் கொண்டாள்

இல்லறம்
காதலுக்கு முதல் எதிரி
மதம் தானே
நட்பாய் இருத்த போது தலைகாட்டாத மதம்
காதல் என்று வந்ததும் தலைதூக்கியது
எதிர்ப்பு இரு முனையிலும் இருந்து
தாக்கத் தொடங்கியது - காரணம்
நான் வேறு மதம் அவள் வேறு மதம் 
எல்லா எதிர்ப்புகளையும்  உடைத்தெறிந்து
வாழ்வில் ஒன்றானோம்


குடும்பம்
சின்னச் சின்ன ஊடல்களும் கூடல்களும்
ஊடல்கள் எங்கள் அன்பை
ஆழப்படுத்தியதே தவிர காயப்படுத்தவேயில்லை
எங்கள்  அன்பான வாழ்க்கைக்கு சாட்சியாக
இரு அன்பான குழந்தைகள்
எங்கள் காதல் வெற்றிக்கு கிடைத்த
உன்னதமான பரிசுகள்

வயோதிபம் (எதிர்காலம்)

காலஓட்டத்தில் களையிழந்து வலுவிழந்தாலும்
எங்கள் காதல் இன்னும் இளமை மாறவில்லை
எனக்கு அவள் துணை
அவளுக்கு நான் துணை
எங்களுக்கு எங்கள் காதல் துணை
கால்கள் தடுமாறினாலும்
என் கரம் அவளைத் தாங்கும்
காலத்தை வென்றது எங்கள் காதல்
காலனையும் வெல்லும் எங்கள் காதல்   
« Last Edit: April 22, 2016, 09:26:15 AM by thamilan »

Offline பொய்கை

  • Full Member
  • *
  • Posts: 108
  • Total likes: 792
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யாகாவராயினும் நாகாக்க...
மரம் 

உதிர்ந்த விதையும்
தரைதனில் புதைந்து, நீரது  கண்டு ,
புவிதனை பிளந்து, செடியென வளர்ந்து,
கிளை பல கொண்டு, விழுதுகள் இறக்கி ,
தழை என கூரை தானே வேய்ந்து,
மலரென சொல்லும் மனம் பரப்பி,
வண்டுகள் ஈர்க்க மகரந்தம் கொண்டு,
சூலும் கொண்டு, கருவும் ஆகி ,
காயும் ஆகி ,கனியும் ஆகி
அடுத்த சந்ததிக்கு விதையும் ஆகி ,
ஆண்டுகள் பலவும் வீசிய காற்றில்
வீராப்புடனே  வீற்றிருந்து ,
வயது முதிர்ச்சி எனக்கும் வந்து ,
வேர்கள் யாவும் மண்ணில் மக்கிட,
உணவது இல்லா நிலையது  வந்து.,
இலைகள் பழுத்து கொட்ட தொடங்க,
பட்டையாகிய சட்டை அவிழ்த்து ,
வண்டுகள் வந்து பொந்துகள் போட
பட்ட மரமென பெயரென கொண்டேன் ..
விறகாய் மாறி தீயாய் கரைந்தேன் ....!

மனிதன்

தாயின் கருவறை
என்ற திருவறை திறந்து
எட்டி பார்த்து குழந்தை ஆகி
குப்புற கவிழ்ந்து மெதுவாய் எழுந்து
நடையும் பயில்ன்று ,
நன்னெறி நூல்கள் நாளும் கற்று
விடலை தாண்டி இளைஞன் ஆகி ,
காதல் உணர்வும் காற்றாய் வீசி ,
மங்கை அவளிடம் மையலும்  கொண்டு,
குடும்பம் என்ற கூரைக்குள் வாழ்ந்து
சந்ததி என்ற நிம்மதி பெருக்கி
திரைகடல் ஓடி திரவியம் தேடி
நரை பல கண்டு ,கிழவன் ஆகி
நோய்பல கொண்டு , படுக்கையில் வீழ்ந்து
உடம்பை விட்டு உயிரும் போனதே
விறகில்  நானும் வெந்து கரைந்தேன் !
« Last Edit: April 17, 2016, 02:17:00 AM by பொய்கை »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218359
  • Total likes: 23054
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கனவுகள் வந்து போகும் ஆனால்
காரிகை நானிருப்பேன் உன் பின்னால் நிழலாக
என்றும் உன்னை சுற்றியே இருப்பேன்
சூரியனை சுற்றும் பூமியாக

உலகம் சுற்றுவதை நிறுத்தலாம்
காற்று வீசுவதை நிறுத்தலாம்
சூரியன் பிரகாசிப்பதை மறக்கலாம்
இவை அனைத்தும் சொல்லட்டும்
காதல் அர்த்தமில்லாத ஒன்றென்று
என்காதலையும் நான் மறந்து விடுகிறேன்

கனவுகள் நிஜமாகலாம்
காதலும் கனவாகலாம்
உலகமே அழிந்தாலும் உனக்காக
இந்த உலகத்தில் உன்னால் காதலிக்கப்பட்ட
நானிருப்பேன் உனக்காக
நெடுதூரம் நீ சென்றாலும்
உன்னோடு இருக்கும் என் இதயம்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும்
உன்னை உணர்கிறேன் எனக்குள்ளே
நீ இல்லாத ஒவ்வொரு நொடியும்
அனல் மேல் வீழ்ந்த மெழுகாக நான்

உன்னோடு நான் கழித்த
ஒவ்வொரு நாளும்
என் அன்பை உறுதியாக்கியதே தவிர
குறைக்கவில்லை
 உன்னையே காதலிப்பேன்
என் வாழ்வு முடியுமட்டும்
நானே உனது நண்பன்
நானே உனது காதல் தேவதை

முதுமை என்னை தழுவும் வரை
மரணம் என்னை அணைக்கும் வரை
வாழவேண்டும் உன் நிழலில்
உயிர் போகும் போதும்
உன் கரங்களிலேயே என் உயிர் போக வேண்டும்

உன்  கண்களால் நான் பார்க்க வேண்டும்
உன்னோடு மலைகள் ஏற வேண்டும்
உனது உணர்வுகள் உணர்ச்சிகள் உனது கண்ணீர்
அனைத்தையும் உன்னோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்
உன் தலை கோதி உன்னை உச்சி முகர வேண்டும்
உன் ஊன்றுகோல்  பிடித்து உன்னோடு
நான் நடை பழக வேண்டும்
வாழ்க்கை அனுபவங்கள் தந்த
தோலின் சுருக்கங்களை தடவிப் பார்த்து மகிழ வேண்டும்

இன்பமோ துன்பமோ
முதுமையிலும் உன்னோடு கை கோர்த்து
நடைபாதையில் நடக்கவேண்டும்
மரணம் வந்தழைத்தாலும்
நம் உடல் ஒன்றாகவே மண்ணில் சாய வேண்டும்
இன்னொரு ஜென்மம் என்றொன்றிருந்தால்
அதிலும் நீயே எனக்கு
துணைவனாக வர வேண்டும்

Offline SweeTie

இந்த மரம் சாட்சி
நம்   இளமைக்கும்  முதுமைக்கும்
நம்   நட்புக்கும்  காதலுக்கும்
நம்  இல்வாழ்வுக்கும் சாவுக்கும்

இந்த மரம்  சாட்சி
பள்ளி செல்லும் காலமதில்  நாமிருவர்
பலூன் விட்டு விளையாடி மகிழ்ந்த நாட்கள்
பாசமாய் நேசமாய்  பாடி ஆடித் திரிந்த காலம்
குட்டிச் சண்டைகள் வந்து வந்து போனபோது
மிட்டாய்  பரிமாறி நேசமாய்  போன  காலம்
நம் அன்னையரின் தோழமையால்  நம் நட்பு
பாசம் என்ற  வேலிக்குள் வளர்ந்ததுவே..

இந்த மரம் சாட்சி
இளமை என்னும் ஊஞ்சலில்  நாமிருவர்
அரும்பு மீசையுடன் அருகில் நீ வருகையில்
துரு துரு பார்வையில் நீ எனைப் பார்க்கையில்
அங்கங்களை மூடும்  என் விலகிய துப்பட்டா 
அறியாமலே நாணத்தைச் சுமக்கும் என்  கண்கள்
இவை காதலுக்கு அறிகுறியா?? 
இதழுடன் இதழ்  சேர்த்த  நம்   முதல் முத்தம்
மறக்கவொண்ணா இனிய நாளது .

இந்த மரம் சாட்சி
இல்லறம் என்னும் இனிய பந்தத்தில்
கைகோர்த்து  வலம் வந்தோம்
ஊடலும் கூடலும்  பின்னிபினைந்தது
கட்டுண்டோம்  களிப்புற்றோம்
நம் காதல் பரிசுகளாய்  உன்னையும் என்னையும்
நிழல் பிரதி  எடுத்தாற் போல்  பெற்றெடுத்தோம்
ஆசைக்கு ஒரு ஆணும் ஆஸ்திக்கு ஒரு பெண்ணும் 
ஈடு இணை இன்றியே   வாழ்ந்திருந்தோம்
இன்பத்தின் எல்லையில் இணைந்திருந்தோம்

இந்த மரம் சாட்சி
முதுமை நம்மை  வாவென்று  அழைத்தது
குழந்தைகள்  பிரிந்தனர் அவரவர் வழியே
உனக்கு நானும் எனக்கு நீயும் என்றானோம்
முதுமையில் வரும் காதல் காமத்தை கடந்தது
காதலின் இறுக்கத்தின் அர்த்தம் புரிந்தது
கோர்த்த கைகள் கோர்த்தபடி  - பிரிவின்றி
பயணித்தோம் காதலுடன்.. 

சாட்சியாய் இருந்த மரம்
நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு
இன்று உனக்கு துணையாக  இருக்கட்டும்
நன் முதல் சென்று  உனக்கோர்  இடம் பிடித்து
சீக்கிரமே அனுப்புகிறேன்  ஓர்  நற் செய்தி
ஓடியே வந்துவிடு என் அருகில்
நீயின்றி நானில்லை  என் அன்பே !! 

சாட்சிக்கு இருந்த மரம்
இன்று பட்ட மரம் ஆனதுவோ
அன்பே  நீ வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்
சீக்கிரமே வந்து எனை இன்பத்தில் ஆழ்த்திவிட்டாய்
மற்றவர்  கண்களுக்கு  இவை இரு  கல்லறைகள் 
காதலில் இணைந்த நாம் ஒன்றாய் 
ஒரு கல்லறையில் தூங்குவதை
இவர்கள் அறிவார்களோ!!!
« Last Edit: April 19, 2016, 04:46:43 AM by SweeTie »

Offline சக்திராகவா

மரத்தடி மழலைகாலமும்
மனதினில் மலர்ந்த காதலும்
கைதட்டி சிரித்தவர்கள்
கைகோர்க்க நேர்ந்தது!

எப்படி துவங்கியது
நட்பின் நடுவில்
நளின காதல்!

சேர்ந்தா பிறந்தோம்
இல்லையே!
சேர்ந்ததெப்போது?

அதெப்படி
ஊஞ்சலுக்கு
சண்டையிட்டவள்
உறங்குகிறாள் என் மடியில்?

தோழியாய் வந்து
தோள் பற்றி!
மனைவியாய் மாற
மனம் பற்றி!

உள்ளூர கலந்தவளே!
உன் சரிபாதியானபின்
எப்படி இங்கே!
நட்புசண்டை! நாணமானது?

ஆச்சர்ய குறியோடு
அடுத்த கேள்வி!
ஆண்டுகள் எத்தனை போயினும்
ஆறுதலாக நீ வேண்டும்
வருவாயா??

முத்தத்தில் மட்டும்
பங்கில்லை உனக்கு
முதல் காதலில் கூட

அவரவர் காதல்
பெரியதே அவர்க்கு
அதனினும் பெரியதே
இறுதிவரை இணைப்பு   

பிறப்பிலில்லை
இறப்பிலாவது
சேர்ந்தே போவோம்
பிடிக்காத இடம் தான்
பின்னென்ன செய்ய!!!

காதலுடன் சக்தி
« Last Edit: April 18, 2016, 12:10:02 PM by சக்திராகவா »

Offline Dong லீ


!!உயிராகிறது ஓவியம்

தொடக்கம்  கல்லறையில்
!!முடிவு   கருவறையில்
 
பின்னோக்கி காதலை
!!பார்க்கிறேன் வாழ்ந்து 
 
செதுக்கிய கற்களால்
!! அறைகள் வேறு இரு
 
டெய்சியும்  நானும்
!! அருகருகே இறந்தும்

காலயந்திரமாகிட  காதல்
!! டாட்டா  கல்லறைக்கு

வாழ்வில் முதுமை
!! வைத்தோம்  அடி
-
தூணாய் ஒருவருக்கொருவர்
!! காதல்  முழுமையாய்

பொறாமை உலகெங்கும்
!!காதல் எம்  அதிசயமாய் உலக

சுழல  காலயந்திரம்
!! டாட்டா முதுமைக்கு 

காலத்தில் இளமை
!! வைத்தோம் அடி 

குதித்தது துள்ளிக் 
!! காதல் முழுமையற்ற

நாண இயற்கையே
!! காதல் எம் இணக்கமாய்

உதிர வருடங்கள்
!! போனோம் குழந்தைகளாகி   

வளர்ந்தது  அன்பால்
!! நட்பு  முடியா  பிரிக்க

சுழல மீண்டும்  காலயந்திரம் 
!! புதைந்தோம் கருவறைக்குள்   

மீண்டும் பிறந்தோம் 
காதலை முன்னோக்கி தொடர !!

காதல் சக்கரத்திற்கு
தொடக்கம் முடிவு ஏதுமில்லை !!

கல்லறை முதல் கருவறை வரை
சுழன்றுகொண்டே இருக்கும் !!

ஜென்ம ஜென்மமாய் !!

இவண்   பெஞ்சமின் பட்டன்  - அரேபிய மொழி கவிஞன்
வலமிருந்து இடமாய் நிழல் படத்தை பார்த்ததன் விளைவு -இந்த கவிதை
 
( நீங்களும் அரேபிய மொழி வழக்கப்படி
purple வரிகளை வலமிருந்து இடமாய்
வாசித்து புரிந்து கொள்ளுங்கள் )
« Last Edit: April 19, 2016, 02:46:29 PM by Dong லீ »

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
இரு வேறு கருவறையில்
சில வருட வித்தியாசத்தில்
பிறந்து ஒன்றாய் வளர்ந்தோம் ..

என் உடன் பிறந்தவர்
மூவர் இருந்தும் என்னுடனே
பாசம் காட்டி பால்ய
பருவம் கடந்தோம் ...

ஒரு விடுமுறை வேளையில்
நாம் இருவரும் சேர்ந்து
மரக்கண் ஒன்றை
நட்டுவைத்து நீருற்றி வந்தோம் .......

மரத்தோடு சேர்ந்து நாமும்
வளரத்தொடங்கினோம்
உனக்குள் நானும் எனக்குள்நீயும்
கள்ளம் அறியாமல் 
உள்ளத்தை பரிமாரிக்கொண்டோம் ...

நட்டுவைத்த மரம் பூக்க
துவங்கிய வேளையில்
நம் அன்பை புரிய வைத்து
உன் பெற்றோரிடம் பாடாத
பாடு பட்டு சம்மதம்
வாங்கி இல்லறத்தில் இணைந்தோம்...

ஆஸ்திக்கு ஒன்றுமாய்
ஆசைக்கு ஒன்றுமாய்
சந்தோஷத்தின் உச்சியில் இனித்த
நம் வாழ்வை  போலவே வெகுவாய் காய்த்து
பலன் கொடுக்க துவங்கியது நாம் நட்ட மரமும்...

பிள்ளைகளை நன்கு வளர்த்து
ஆளாக்கி நம் வயோதிகத்தை
 அதே காதலோடு வாழலாம்
என்ற என் ஆசையில் தீயிட்டு கொளுத்தி
என்னை துன்ப கடலில் நீந்த விட்டு சென்றாயே ...

உன் சுவாசம் இன்றி தவிப்பது நாம் மட்டும் அல்ல
நாம் வளர்த்த மரமும் தான்!
நீ இல்லாத உலகத்தில் என்னால் முடிந்த வரை
தனித்து பிள்ளைகளை ஆளாக்கி
நம் கடமையை முடித்துவிட்டேன் ...


உன் காதலின்றி இனியும் என்னால்
ஜீவிக்க இயலாது என்று உன்னோடு துயில் கொள்ள
நான்  வந்த பிறகு பட்டு  போனதடி
நாம் வளர்த்த மரமும்....
« Last Edit: April 20, 2016, 04:50:43 PM by பவித்ரா »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline JEE

வாழ்க்கைபயணத்தில்  குழந்தை,
இளமை  முதுமை இனிமை

குழந்தையின் மழலை
கேட்க கேட்க இனிமை
குழந்தையும் தெய்வமும்
குணத்தால் ஒன்று

இளமை  வாழ்வின் இனிமை
இன்பம் அனைத்தையும் தன்
காலடிக்குக் கொண்டு வரத்
துடிக்கும்  இளமை

இல்லறமே இனிதானால்
ஈடு இணையிலலை உனக்கு
இன்பமும் துன்பமும் இணையாய்
தோன்றும் உனக்கு

முதுமையின் அனுபவத்தால்
துவண்டு விடாமல் இணைந்த
கரம் விடாமல் பற்றி தொடரும்
இன்பவாழ்வு இனிதே

முதுமையிலே தனிமை
இழந்த  சிலவற்றை மீண்டும்
பெறலாம். ஆனால்
கடந்துபோன  பயணத்தில்
காலங்களை மீண்டும் பெற எக்
காலத்தும் முடியாது.
.எண்ணி .எண்ணிகாலம் கழிகிறதே



கருவிலே வாழ்வு தொடங்க வில்லை
உலக தோற்றம் முன்னே
பெயரிடப் பட்டேன் அத்தனையும்
அன்றே பதித்துவிட்டான் இறைவன்

அழிவோம் என்று எண்ணி எண்ணி
 அஞ்சி அச்சத்தில் அமர வில்லை
அஞ்சாது அயராது கண் துஞ்சாது
பாடுபடும் எறும்பு போல்
எப்போதும் மனமகிழ்வாய்
 வாழ்க்கையை முடிப்பீர்.
கல்லறை ....................‘இது முடிவல்ல
 தொடக்கம் தான்’.....இன்னொரு வாழ்வுக்கு.........
with kind regard,

G'vakumar.