Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 099  (Read 2558 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 099
இந்த களத்தின்இந்த  நிழல் படம்  நண்பர்கள் இணைய  வானொலி பாவணையாளர் ஒருவரால்  வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 10:08:07 PM by MysteRy »

Offline பொய்கை

  • Full Member
  • *
  • Posts: 108
  • Total likes: 792
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யாகாவராயினும் நாகாக்க...
[highlight-text]படம் காட்ட யாரும் இல்ல
படம் பார்க்க யாரும் மில்ல ..

அரங்கத்தின் வாசலும்
அடைப்பட்டு  போயிடுச்சா..
காணொளி கண்டு கண்டு
கண்ணும் மங்கிதான் போயிடுச்சா..

நேரான நிகழ்ச்சி பார்க்க அரங்கத்தின்
முன் வரிசை முதல் வகுப்பு தானங்க..
நிழலாக பார்க்க போனால் அரங்கத்தின்
பின் வரிசை முதல் வகுப்பு ஆகுமுங்க ..

ரசிகனுக்கும் ரசிகைக்கும்
பிடிச்ச படத்த போடுங்க...
இருக்கை மொத்தம் நிறைச்சு நிறைச்சு 
காச அள்ளி கொள்ளுங்கோ ..

அரங்கத்தில் யாரும் வந்து அமரும் வரை
வெள்ளை திரை தானங்க .,,
என் மனதில் யாரும் வந்து அமரும் வரை
வெள்ளை மனம் தானங்க ..

சினிமா வின் காட்சி ஒளி வெண்திரையை
வண்ணமயம் ஆக்குதுங்க...

கள்ளி இவள் கண்ணின் ஒளி
என் மனத்திரையை
வண்ணமயம் ஆக்குதுங்க..
« Last Edit: April 24, 2016, 11:34:26 PM by பொய்கை »

Offline JEE

பண்டைய காலத்தில் கிரேக்கத்தில்
பிரமாண்ட அரண்மனை இருந்திருப்பதும்
 பத்தாயிரம் பேர் அமர்ந்து ரசிக்கக் கூடிய மிகப்
 பெரிய மண்டபம் அமைக்கப் பட்டிருப்பதும் 
பண்டையகால அதிசயம்
 

ரசிகர்களின் எண்ணிக்கையைக் கூட்டும் நோக்கில்
ரசிக்கும் பல வித்தைகளுடன் ஆயிரம் கதைகள


வண்ணத்திரை வந்தபின் வரவேற்பும்
அதிகமாக அதிகமாக நன்மைகள் பல
எத்தனை எத்தனை நன்மைகள் சொல்லி முடியாது
அரங்குகளில் விழக்காலங்களில்
ரசிகர்கள் வந்த வரத்தென்ன  சொல்லி முடியாது
.
திரைஅரங்குகள் மூடப்படவேண்டி
 பல பரிசுத்தவன்கள் போராடி
 பல தெய்வங்களை வேண்டினர் வேணடிய
பலர் பயனின்றி மண்ணுக்குப் போயினர்

அனைத்தும் ஆளில்லா அரங்குகளாக மாறியது
அனைத்து வீடுகளையும்    பகவான் 
தொலைக்காட்சி பெட்டியால்
அரங்குகளாக மாற்றினார்

மனிதன் நினைப்பததொன்று
மாறாய் நடப்பதொன்று

இப்டித்தான் எண்ணதான் வேண்டினாலும்
அனைத்து மக்களும் வேண்டினாலும்
அவன் பதித்து வைத்தது தான் நடக்கும்

 மனிதன் அறியாமையில்
பலவற்றை செய்கிறான் காலம் கழிந்து
 பலவற்றிற்கு விடை காண்கிறோம்

ஆளில்லாஅரங்குகள் திருமண மண்டபமாக
கட்சிகளின் அரங்காக பரிமளிக்கிறது


அரங்கின் பங்களிப்பு
 அற்புதமாய் திகழும்
அனைவரும் கண்டு மகிழ்வோம்
« Last Edit: April 24, 2016, 06:09:33 AM by JEE »
with kind regard,

G'vakumar.

!! DJ HussaiN !!

  • Guest
                             
                                   
                     !!   அனைவருக்கும் வணக்கம்   !!




!! திரை அரங்கு ... உன்னை பற்றி என்ன எழுதுவது !!
!! சிறியவர் முதல் முதியவர் வரை மகிழ்ச்சியாக இருக்கக் கூடிய ஒரு இடம் நீ !!
   
!! கிராமபுறங்களில் மணல் திடலில் விரிப்பு  விரித்து !!
!! வெள்ளை திரையில்  காணும் படம் !!
!! அதில்  ஆரம்பித்த எங்கள் மகிழ்ச்சி !!
!! இன்று கட்டிடங்களில் குளிர்சாதன பெட்டிகள் நடுவே !!
!! நாற்காலிகளில்  அமர்ந்து பார்க்கும் இன்று வரை !!
!! எங்கள் மகிழ்ச்சி நீடித்துக்கொண்டிருகிறது !!

!! அன்று நாங்கள்  மணல் திடலில் அமர்ந்து பார்த்த படங்களில் !!
!! எண்ணற்ற கருத்துகள் இருந்தன !!
!! இன்று எண்ணற்ற படங்கள் வருகின்றன ஆனால் நல்ல கருத்துக்கள் தான் இல்லை!! 
       
   
!! எவ்வளவு தான் உலகம் முன்னேறினாலும் பழைய நினைவுகள்  என்றும் அழியாது !!
!! இப்போது  எல்லாருடைய வீடுகளிலும் தொலைக்காட்சி பெட்டி உள்ளது !!
!! ஆனால் உன்னில் வந்து குடும்பத்தினருடன் பார்க்கும் மகிழ்ச்சிக்கு ஈடு கிடையாது !!

!! என் வாழ்க்கை முழுவதும் உன்னால் எனக்கு மகிழ்ச்சியே எபோதும் உண்டாகும் !!

!! படம் பாருங்கள் அனால் அதில் தேவையான விஷயங்களை மட்டும் எடுத்து கொள்ளவும் !!
« Last Edit: April 24, 2016, 07:19:10 PM by !! DJ HussaiN !! »

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
   திரைப்படத்தோடு ஒரு உரையாடல்

குலு குலு அறையில்
சொகுசாய் வேளை
பார்பவனுக்கும் சரி !
ஏட்டு கல்வி காணாத
பாமரனுக்கும் சரி
பொழுது போக்கு
என்னவோ நீ தான் ...!

குடும்பதலைவிக்கும் சரி
குழந்தைக்கும் சரி கல்லூரி
மாணவ மனைவியருக்கும் சரி
வயது வேறுபாடு இன்றி
ரசிக்கும் அளவிற்கு
அனைத்து அம்சமும்
உன்னிடமே உள்ளது...!

பல தலைவர்களின் தியாகங்கள்
சில காவியக்கதைகளின் சிறப்பு
பல மறைக்கப்பட்ட நிஜங்கள்
சில ராஜாக்களின் வீரங்கள்
நீ இன்றி என்னால் இவ்வளவு
அறிந்திருக்க முடியாது ...!

நீ ஒரு மாயாஜால
வித்தை தெரிந்தவன்
கந்தல் உடையில்
கடையில் வேளை செய்யும்
கதாநாயகன் கூட  காதல் வந்த
அடுத்த நிமிடம் கனடாவில்
கானம் பாடுவது உன்னில்
மட்டுமே சாத்தியம்....!

உன்னால் வாழ்க்கையில்
முன்னேறியவரும் உண்டு
உன்னால் நடுத்தெருவுக்கு
வந்தவரும் உண்டு
உன்னால் அன்றாட பிழைப்பு
நடத்துபவரும் உண்டு
உன்னால் அரசியலுக்கு வந்து
ஆதாயம் கண்டவரும் உண்டு....!

உன் மூலமாக நல்ல கருத்துக்களை
பதித்த காலம் போய்
இன்று வன்முறை  பகைமை
அடிதடி ஆபாசம் இவற்றைவிதைத்து
பணம் பார்பவர்களை  சற்றே சிந்திக்க சொல் 
 கெட்டதை கற்றுகொள்வது
அவர்களது வாரிசுகளும் தான்...!

உன்னை ஒரு பொழதுபோக்குவதற்கு
மட்டும் அல்லாமல் உன் மூலமாக
மேலும் பல நல்ல விஷியங்களை
மக்களுக்கு கொண்டுபோனால்
அடுத்த தலைமுறை இன்னும் சிறப்பாக
பயன்பெறுவார்கள் உன்னையும்
மேலும் புதிய தொழில்நுட்பத்துடன்
மெருகேற்றுவார்கள் என்பதில் ஐய்யமில்லை ...!

!! இந்த நிழல் படம்  கொடுத்த நண்பர்கள் இணைய  வானொலி பாவணையாளருக்கு எனது நன்றி !!
« Last Edit: April 25, 2016, 04:32:56 AM by பவித்ரா »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline SweeTie

கண்ணைப் பறிக்கும்  வெள்ளித்திரை 
வரி வரியாய் வசதியான இருக்கைகள்
ரம்மியமான குளு  குளு  காற்றோட்டம்
நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியில்
வளர்ந்திடும்  அனுமதி சீட்டின் விலையும்

தொழில் நுட்பவியலின்  வளர்ச்சி
கருப்பு வெள்ளை  நிழற் படங்கள் மறைந்து 
வண்ண வண்ண நிறங்களின் மெருகேற்றம்
காதுகளை   இனிமையில் பிளக்கும்  இசைப்பெருக்கு
அருகில் இருப்பதுபோல் முப்பரிமாண  உணர்வு

கால ஓட்டத்தின்  நெரிசலில் சிக்கிய மனிதர்கள்
நேரமின்றி  தவிக்கும் வேளையில் …. நேரம் ஏ து ?
திரை அரங்கத்தில் நிழற்படம் பார்க்க 
வீட்டுக்கு ஒன்றென்று இல்லாமலில்லை
தொலைகாட்சிப் பெட்டிகள் 
தினமும் திரைப்படம்  அலைவரிசைகளில்

நேரத்தை விழுங்கும் தொலைகாட்சிப் பெட்டிகள்
காலத்தைக் கடத்தும் நீள்தொடர் நாடகம்
வேண்டவே வேண்டாம்
அதனிலும் சிறப்பு  கணினியில் நேரடித் தொடர்பு
தேவையற்ற  காட்சிகள் நீக்கி  பார்த்து முடிக்கலாம்
வேண்டிய திரைப்படம்

களரிகள் போட்டு கூத்துகள்  ஆடி
கொட்டகை  கட்டி  நாடகம் நடித்தது   
தெருக்கூத்து  பார்த்து நம்மை மறந்தது
எல்லாமே  இன்று கனவாய்  ஆனது
நேரமும் இல்லை  சந்தோசமும்  போனது
எதிலும் அவசரம்  எல்லாமே  அவசரம்
மனிதனின் வாழ்க்கை இப்படி ஆனதோ!!!
 
« Last Edit: April 26, 2016, 05:20:32 AM by SweeTie »

Offline thamilan

வேகமாக ஓடும் நவீன யுகமிது
நின்றால் முந்திவிடுவார்கள் என
முட்டித் தள்ளிக்கொண்டு ஓடும் மனிதருக்கு
இரண்டு மணி நேரம் என்பது
ஒரு யுகம் போல
 
இதில் வருசையில் நின்று
இடம் பிடித்து
அருகில் இருப்பவர் வியர்வை நாற்றத்தையும்
புகையிலை நாற்றத்தையும் சகித்துக்கொண்டு
காதுகிழியும் விசில் சத்தத்தையும் பொறுத்துக் கொண்டு 
படம் பார்க்க நேரம் ஏது

முன்பு வெண் திரையானது மாறி
வெள்ளித்திரை ஆனது
கருப்பு வெள்ளைப் படங்கள் மாறி
வர்ணப் படங்களாக ஆகின

இந்தப் படங்களால்
மக்கள் மனதை ஆண்டவர்கள் பலர்
மக்களையே ஆண்டவர்களும் ஒரு சிலர்
கட்டபொம்மனின் வீரம் புரிந்தது 
இந்த திரைப்படத்தால் தான்
கண்ணகியின் கோபம் கண்ணெதிரே கண்டதும்
இந்த திரைப்படத்தால் தான்

இன்றும் திரைப்படங்கள் வருகின்றன
வந்த  வேகத்தில் அரங்கத்தை விட்டு
தொலைக்காட்சிகளுக்கு ஓடி விடுகின்றன

தொலைக்காட்சிகள் திருட்டு குறுந்தகடுகள் இணையதளங்கள்
இவை வந்ததால்
திரை அரங்குகள்
திருட்டுக் காதலர்கள் அரங்கமாக மாறிப் போனது
படம் எடுத்து
பரதேசி ஆனவர்களும் இருக்கிறார்கள்
திரை அரங்கம் கட்டி
திருவோடு எடுத்தவர்களும் இருக்கிறார்கள்

ஆனாலும் திரை அரங்குகளில்
திரைப்படம் பார்பவர்களும் இருக்கிறார்கள்
பிடித்த நடிகர்கள் நடித்த திரைப்படம் வந்துவிட்டால்
வானுயர  கட்அவுட் அதற்கு பாலாபிஷேகம் 
என பட்டையை கிளப்பும்
வெறியர்களும் இருக்கிறார்கள்

திரைப்படம் என்பது
தனிமனித உழைப்பல்ல
பலருக்கு படியளக்கும் ஒரு தொழில்கூடம்
 அந்த உழைப்பாளிகளை கவ்ரவிக்க
ஒரு தடவையேனும் திரையங்குகளில்
திரைப்படம் பார்க்கலாமே


« Last Edit: April 26, 2016, 07:09:05 AM by thamilan »

Offline Dong லீ

சிரிப்புடன் நுழைபவன்
கண் வியர்க்க செய்வதும் நீ
வருந்தும் மனங்களின்
மருந்தும் நீ

மது ஆபத்தென
புகட்டியதும் நீ
மது கெத்தென
பாடுவதும் நீ

பெண்ணை வர்ணிப்பதும் நீ
பெண்ணை இகழ்வதும் நீ

சினிமா உன்   மாயை
தெய்வத்துக்கே புரிவதிற்கில்லை

அரங்கு நிரம்பி வழிய 
ஆர்பரிக்கும் ரசிகர்கள்
அரங்கமே அதிர -
திரையில் நாயகன் !!

நம்ம ஊருக்கு
என்னதான் ஆச்சு
விடை வேண்டி 
மாறுவேடத்தில்
திரையரங்கில் தெய்வம்  !!

எதிரிகள் பந்தாய் பறக்க
"நான் அடிச்சா அடி விழாது
இடி விழும் " என
புடைத்தது நாயகனின் நரம்புகள் !!
சிலிர்த்தது தெய்வத்தின் புலன்கள் !!

"ஐ வான்டூ மேரி யூ"
நாயகன் நாயகி  காதல்கள் !!
நாணி கோலமிட்டது
தெய்வத்தின் கால்கள் !!

"டேய் பாகிஸ்தான்  தீவிரவாதி "
கண்கள் சிவக்க -சடாரென
திரையை கிழித்து
தன்னை நோக்கி
நாயகன் ஓடிவர
அதிர்ந்தது தெய்வம் !!

பக்கத்து இருக்கையாளன்
நாயகனிடம் மிதிவாங்க
பெருமூச்சுவிட்டது தெய்வம்!!

" வை திஸ் கொலைவெறி "
தெய்வம் காரணம்  கேட்க்க
"திருட்டு வி சி டிசெய்பவன்
பார்ப்பவன் 
எவனா இருந்தாலும் வெட்டுவேன் "
என்றான் நாயகன் !!

திருட்டு வி சி டி காக
ஒளிப்பதிவு செய்தவனை
தெய்வமும் நாயகனும்
 தண்டித்து கொண்டிருக்க

திரைக்குள் நுழைந்து
நாயகியை
நோக்கு வர்மத்தில்
மயக்கியிருந்தேன்
 டாங் லீ என்கிற நான் !!
« Last Edit: April 28, 2016, 11:19:23 PM by Dong லீ »