Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 100  (Read 2814 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 100

ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சி தனது 100 ஆவது  பதிப்பை எட்டுவதை முன்னிட்டு  இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக   வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...




உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
« Last Edit: October 11, 2018, 10:10:24 PM by MysteRy »

!! DJ HussaiN !!

  • Guest
              !!  ஓவியம் உயிராகிறது  !!

!! உன்னிடம் பல கவிதைகள் வந்து உயிராகிறது !!
!! இன்று உனக்கே உயிர்  கொடுக்கிறேன்  !!

!! இன்று உனக்கு 100 வது நாள் !!
!! உன்னை பார்த்து தான் நானும் கவிதை எழுத வேண்டும் என்று
   ஆசை பட்டேன் !!

!! என்னை போன்ற பல நண்பர்களுக்கும் நீ உதவியாய் இருக்கிறாய் !!
!! உன்னால் தான் பல நண்பர்கள் தங்களுடைய திறமையினை
   வெளிகொண்டு வருகிறார்கள் !!

!! அப்படி தான் நானும் என் திறமையை வெளிகொண்டு வந்தேன் !!
!! எங்கள் கவிதைகளுக்கு உயிர் கொடுத்து எங்கள் மனதையும்
   மகிழ்வித்து !!
!! மற்றவர்க்கும் எங்கள் திறமைகளை காண்பிக்கிறாய் !!

!! என்னை போன்ற பல நண்பர்கள் அவர்கள் திறமைகளை
   வெளிகொண்டுவரவேண்டும் என்று ஆசை படுகிறேன் !!

« Last Edit: May 01, 2016, 02:22:49 AM by !! DJ HussaiN !! »

Offline thamilan

ஓவியம் உயிராகிறது
ஒரு கருவுக்கு உயிர் கொடுத்து
அந்தக் உயிருக்கு உடல் கொடுக்கும்
தாயுமானவள் எங்கள் ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சி

ஓவியம் உயிராகிறது
கொடுக்கும் நிழலுக்கு உயிர் கொடுப்பதால்
நாங்களும் பிரமாக்களே
தூங்கிக் கிடந்த எங்கள் சிந்தனைகளுக்கு
உயிர் கொடுப்பதால்
ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சியும்
பிரம்மனே 

ஒரு நிழலுக்கு உருவம் கொடுத்திட
பலப்பல திறமைசாலிகள்  இங்கே
அந்த உருவத்துக்கு உயிர் கொடுத்திட
இனிமையை பெயரிலும் குரலிலும் கொண்டிருக்கும்
பெண் குயில்  சுவீடி
இன்னொருவர் பேச்சால் மனதினில்
பால் வார்க்கும்  போல் வாக்கர்

எங்கெங்கோ மலர்களில் இருக்கும் தேன்கள்
ஒன்று சேர்ந்து தேன்கூடாவது போல
எங்கெங்கோ  சிதறிக் கிடந்த
எங்கள்  சிந்தனைகள் ஒன்று சேர்ந்து
ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சி கவிதைகளாக

முதல் அடியெடுத்து வைத்த வாரம்முதல் 
நூறாவது  வாரம் வரை
ஓவியம் உயிராகிறது கைபிடித்து
வழிநடத்திய பெருமை எனக்குண்டு
ஓவியம் உயிராகிறது வளர வளர
என்னையும் வளர்த்தப் பெருமை 
ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சிக்கும் உண்டு

எங்கள் நண்பர்கள் இணையதலத்திற்கு
பெருமை சேர்த்திடும்
ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சி
இன்னும் பலப்பல வருடங்களக் கடந்து
வெற்றிநடை போட
நாம் அனைவரும் துணை இருப்போம் நண்பர்களே

« Last Edit: May 01, 2016, 01:31:55 PM by thamilan »

Offline பொய்கை

  • Full Member
  • *
  • Posts: 108
  • Total likes: 792
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யாகாவராயினும் நாகாக்க...
"தொண்ணுற்று  ஒன்பது" ஓவியங்களுக்கு
நீங்கள் இட்ட பாமலைக்கும்.,எழுத்துகளால்
நீங்கள் செய்த அரச்சனைகளுக்கும்  FTC  சார்பாக
நன்றியை சொல்லி "நூறாவது" ஓவியத்திற்கு
வார்த்தை என்ற பூவெடுத்து ,எண்ணம் என்ற
நூலினால் கவிதை என்ற மாலை தொடுத்திட
எல்லா கவிப்பிரியர்களையும் கேட்டுக் கொள்கிறேன் ..!
                     அன்புடன்,
                     பொய்கை

ஓவியமே உன்னை கண்டு
உயிரூட்ட அலைந்திட்டோம் !
உயிரூட்டி உயிரூட்டி
மகிழ்ச்சியிலே திளைத்திட்டோம் !

வாரம் ஒரு ஓவியத்தை இங்கே
கொண்டு வைத்திட்டோம் !
வந்தவரை  எல்லோரையும்
கவி புனைய செய்திட்டோம் !

ஓவியத்தை பார்த்ததுமே
வார்த்தை தேடி புறப்பட்டோம் !
கிடைத்தவற்றை எல்லாம்
இங்கே வந்து கொட்டி விட்டோம் !

ஒன்று முதல் நூறு வரை
இன்று நாமும் வந்து விட்டோம் !
இன்று வரை எத்தனையோ
கவிஞர் நாமும் கண்டு விட்டோம் !

ஓவியத்திற்கு உயிர் ஊட்டி
காலமெல்லாம் களித்திருப்போம் !
வாரா வாரம் உயிரூட்ட
எப்போதும் விழித்திருப்போம் !

உங்களது கவிதை எல்லாம்
உலகம் முழுதும் ஒலிக்கவைத்தே!
தமிழ் எனும் தேமதுர
ஓசை தனில் மூழ்கிடுவோம் !

ஒவ்வொரு வாரமும் சனிகிழமை
இங்கே வந்து கூடிடுவோம் !
தமிழ் உள்ளங்கள் யாவருக்கும்
கவிதையினால் விருந்தளிப்போம் !

நமக்கெல்லாம் வாய்ப்பு
அளித்த இக்குழுமத்தை,
நாளும் வளர உழைத்திடும்
நண்பர்களை இன்று
மனதார வாழ்த்திடுவோம் !

« Last Edit: May 02, 2016, 01:17:35 PM by பொய்கை »

Offline சக்திராகவா

எத்தனை சித்திரம்
எழுத்தாய் போனது
எத்தனை ஓவியம்
உயிராய் ஆனது

நண்பர்கள் நற்றமிழ்
வலையத்திலே!
அடுப்படி கவிஞன் நான்
அரசவை ஏறவைத்தாய்!

கற்பனை வளர்கிறதோ
காட்சிவழியிலே!
இதயத்தை அடைகிறதோ
இணையவழியிலே!

தமிழருமை தெறியாதோர்
தன்னிலை வருந்த கண்டேன்
என் கவியால் மாறவைத்தாய்
என செவியும் கேள வைத்தாய்!

என்னற்ற மாற்றமுன்னாலே!
எண்ணத்தில் ஏற்றமுன்னாலே!
இன்றோடு நூறாம் உனக்கு!
இது கூட முதல் தான் எனக்கு!

வணக்கத்தில் சக்தி

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
அடடா! அதற்குள் இது 100வது
ஓவியம் உயிராகிறதா
நாட்கள் நகர்ந்ததே
தெரியவில்லை ...!

அடுத்து என்ன நிழல்படம்
அடுத்து என்ன என்ற
ஆர்வத்திலே காலம்
கடந்ததே தெரியவில்லை....!

இத்தனை வாரம் சிறப்பாய்
சென்ற இந்த நிகழ்ச்சியில்
எத்தனை  பேரின் ஆசை,
கனவு நிழல்படங்கள் ....!

எத்தனை பேரின் அறிவுக்கு
தீனி போட்டாய்.எத்தனை
கவிஞர்களை உருவாக்கினாய்...!

பலரது காதல்கள் கவிதைகளாக
காலச்சுவட்டில் பதிவாகின 
சிலரது குமுறல்கள் கவிதைகளாக
கொந்தளித்தன ...!

சிலரது நட்பு சிலாகித்து
செதுக்கியது கவிதையாக
சிலரது துயரங்கள்
இறக்கி வைக்கப்பட்டது
கவிதையாக ....!

எவ்வளவு வித்தியாசமாக
நிழல்படம் கொடுத்தாலும் சவாலாக ஏற்று
வண்ணமயமான வார்த்தைஜாலம்
கொண்டு அவர்களது படைப்புக்களை
வழங்கச்செய்தாய்...!

இன்று நானும் கூட  எனதருமை
தாய்மொழியின் அழகும் பெருமையும்
உன்னாலே கற்றுணர்ந்து சற்றே
கிறுக்கவும் கற்றுக்கொண்டேன்...!

உன்னால் இந்த நண்பர்கள்
இணையதள பொதுமன்றம்
பெருமைகொள்கிறது
பல நண்பர்களின் திறமைகளை
வெளிக்கொண்டு வந்ததால் ...!
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 704
  • Total likes: 2382
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear
ஓவியம் உயிராகிறது
இணைய தள வானிலே
ஆயிரமாயிரம் அரட்டை அரங்கங்கள்
நட்சத்திரமாக ஜொலிக்கையிலே
தமிழ் நண்பர்கள் அரட்டை அரங்கம்
முழுநிலவென என்றும் பிரகாசிக்கிறது

தமிழ் நண்பர்கள் இணையதள பொதுமன்றத்தின்
மணிமகுடம்  ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சி
சிந்தனைகள தூண்டிவிடும் ஓர்
அற்புத நிகழ்ச்சி

எழுதியே பழக்கம் இல்லாதவர்களையும்
எழுதிடத் தூண்டிடும் தூண்டுகோல்
இந்த கவிதை நிகழ்ச்சி

வாரம் தோறும் மறவாமல்
வந்தெம்மை மகிழ்விக்கும்
ஆக்கபூர்வமான இனிய நிகழ்ச்சி
ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சி

திருவிழாக்களில் கூடும் பக்தர்கள்  கூட்டம் போல
அரசியல் வாதிகளின் கூட்டங்களுக்கு வரும்
மக்கள் கூட்டம் போல
ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சியன்றும்
கூடிடும் நண்பர்கள் கூட்டம்
அரசியல் கூட்டங்கள்
கூட்டி வரப்படும் கூட்டம்
நண்பர்கள் அரட்டை அரங்கத்துக்கு வரும்
கூட்டமோ அன்பால் கூடும் கூட்டம்


எத்தனை விதமான நிழல்ப்படங்கள் 
எந்த விதமான நிழல் படமானாலும்
அசரவில்லை உயிரூட்டிகள்
யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல
என ஒவ்வொரு  வாரமும் நிரூபிக்கிறார்கள்

ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சி
இன்னும் என்றும் மங்காப் பொலிவுடன்
இன்னும் பல்லாண்டு வெற்றிநடை போட வாழ்த்திடும்
நண்பி


பதிப்புரிமை
             
BreeZe
« Last Edit: May 04, 2016, 08:11:46 PM by BreeZe »
Palm Springs commercial photography

Offline KuYiL

கவிதையின் வயது 100

            இளமை ததும்பும் உனது வயது என்றும் 16!
            கடிவாளம் இல்லாத கற்பனை குதிரை நீ !
            உனக்குள்  வேகம் மட்டும் அல்ல , விவேகமும் அதிகம்!
            சிந்தனை சிற்பிகள் வடித்த சொல் ஓவியங்கள் !
            கற்பனை தூரலில் சிலிர்த்து நிற்கும் வண்ண மலர்கள்!
            புதிய எண்ணங்களின் பொலிவான பரிமாணங்கள் !

          நூறையும் தாண்டி பல ஆயிரம் ஆண்டுகள் இளமையோடு வாழ ,
          வாழ்த்து உரைத்து விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்!

என்றும்  அன்புடன்
உங்கள் குயில் ........

Offline JEE


படம் பார்த்து கவிதை கிறுக்க போகிறேன்

FTC Teamக்கு வாழ்த்துக்கள்
நூறாம் பட பதிப்பில் கொணடாடும்
பலரில் சிலரை நான் காண்கிறேன்

ஸ்ருதி   ராம்  முருகன் பொய்கை                  
பூக்குட்டி பவித்ரா நிலா   நித்யா   
நந்தா தாமரை   தமிழன்    செல்வன்
சிநேகிதன் சக்திராகவா   குழலி

கார்மேகம் கார்க்கி காமினி                           
கவிதைக்காரன்    கவி ஆதி
அன்பென்னும் ஜீவ நீர் அருள்
அன்னக்கொடி~DivYa~_pLayeR - imranabcde   

Yousuf Yevano OruvaN   VJ   rjckE aasaiajiith   
Aadava   <SinDhu> $$JANSI RANI$$   $ Open HearT $   
$ GreeN $~Bharathy    !!SaShi143!!
!! DJ HussaiN   !!!! AnbaY     ! Viper !    ! !wills! !   


படத்தில் முகம் சரியாய் தெரியாமல்  போனது
ஒரு யூகத்தில்  உங்கள் யாவரையும் கண்டேன்
சரியாக முகம் தேரிந்தால்  விடுபட்ட உன்னையும்
இந்த அட்டவனையில் சேர்த்திருப்பேன்
வருத்தப்படாதே   நண்பா

கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது
படம் பார்த்து கவிதை எழுது.வதில்
முதல் இடத்திலும் இரண்டாம்  இடத்திலும்
இருக்கும் நண்பரை வாழ்த்துகிறேன்

இன்னும் பல கொண்டாட்டம் காண துடிக்கிறேன்
பல களங்களில் உனை காண  துடிக்கிறேன்
 உன் படைப்பு பல தேவை உன் படைப்பைக் கண்டு
நாங்கள் மகிழ பல படைப்பு இ்ன்னும் தா............            
.
« Last Edit: May 07, 2016, 07:53:21 AM by JEE »
with kind regard,

G'vakumar.