Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 101  (Read 2450 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 101
இந்த களத்தின்இந்த  நிழல் படம்  PaulWalker அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


« Last Edit: October 11, 2018, 10:11:45 PM by MysteRy »

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........


அந்த காலத்தில்  நல்ல மனதோடு
பொது மக்களுக்கு சேவை செய்யும்
பலர் இருந்ததால் படிப்பு ஒரு தகுதியாக
இருக்க வேண்டாம் என்று கருதினர்
அதனால் பலரும் அரசியலுக்கு வந்து
ஆதாயம் தேடாமல் தன் இன்னுயிரையும்
தாரைவார்த்தனர் ....

ஆனால் இன்றோ தனக்கு சுரண்டியது
போதாதென்று  தன் தலைமுறைக்குமாய்
சேர்த்து சுரண்டும் நோக்கோடு 
அரசியலுக்கு வந்தவனுக்கு எப்பவுமே
போதும் என்ற மனம் வராத ஒருவன்
அடுத்தவனுக்கு எப்படி சேவை செய்வான்  ...

இனாமாக எதையும் கொடுத்தால்
உடனே வாங்கும் உள்ளங்களே !
சற்றே சிந்தியுங்கள். 
உங்கள் வாக்குகளை விலைக்கு வாங்கி
ஆட்சிக்கு வரும் அவன்
ஊழல் செய்தால் தட்டி
கேட்க்கும் தகுதி உங்களுக்கு இருக்குமா என்று....


சாதிக்க துடிக்கும் ஆர்வமுள்ளவர்களை 
 அவர்களின் திறமை அறிந்து
தேர்ந்தெடுக்காவிடில் பொது
நல திட்டங்கள் நிறைவேறாது
தனி ஒரு இந்தியனின் கடன் சுமையும் கூடும்
இது கண்டிப்பாக நாளைய இந்தியா
பேரழிவை சந்திக்கும் என்பதில் ஐயமில்லை ....


பணத்தின் மேல் பற்றில்லாமல்
பொது நலம் கருதி வாழ்பவர்
சமுதாயத்திற்கு தன்னால் முடிந்ததை
எதையும் எதிர் பார்க்காமல்
பாகுபாடின்றி உழைக்கிறார்கள்
அவர்களை இனம்கண்டு வாக்களியுங்கள்
நாளைய இந்தியா வல்லரசு ஆகும் ....
« Last Edit: May 08, 2016, 03:05:50 AM by பவித்ரா »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline பொய்கை

  • Full Member
  • *
  • Posts: 108
  • Total likes: 792
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யாகாவராயினும் நாகாக்க...
ஆங்கில ஆட்சியை
அடியோடு துரத்திவிட்டு
மக்களாட்சி வந்தாலே
மாநிலங்கள் செழிக்கும் என்று
போட்டேனே ஒட்டு!
எனக்கு நானும்
வச்சேனே வேட்டு !

கொடியில் ஒரு வண்ணமும்
ஆளுக்கொரு சின்னமும்
ஏமாற்றும் எண்ணமும்
கொண்டவனை கொண்டாடி
போட்டேனே ஒட்டு!
எனக்கு நானும்
வச்சேனே வேட்டு !

தன்னலம் பாராது
பொதுநலம் பார்த்திட்ட
பலபேரை ஒதுக்கிவிட்டு
வஞ்சகரின் வாய் பேச்சில்
வாயெல்லாம் நீர் ஒழுக
போட்டேனே ஒட்டு!
எனக்கு நானும்
வச்சேனே வேட்டு !

மக்கள் வரி பணத்தை
பல கோடி பார்த்தவனே
தினம் உழைக்கும் நானோ
இன்னும் என் தெரு கோடி
பார்கலையே...ஆனாலும்
போட்டேனே ஒட்டு!
எனக்கு நானும்
வச்சேனே வேட்டு !

சாக்கடையில் குளித்து
ஜவ்வாது போட்டு வந்து
பட்டை கரை வேஷ்டி
பாங்காக கட்டி வந்த
பாவி உனக்கு
போட்டேனே ஒட்டு!
எனக்கு நானும்
வச்சேனே வேட்டு !
« Last Edit: May 08, 2016, 09:52:21 PM by பொய்கை »

Offline JEE

இந்தியா விடுதலை பெறும் வரை,
தமிழகம் அடிமையாக
ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழிருந்தது.


கம்பனி ஆட்சி (1684-1858)
மன்னர் ஆட்சி (1858-1920)
இரட்டை ஆட்சி முறை (1920-37)
மாநில சுயாட்சி (1937-47

நம்மை யார் ஆள வேண்டும் என்பதில்,
ஒவ்வொரு வாக்காளரும் தெளிவாய்,
முடிவு எடுக்க வேண்டியது கடமை;

ஓட்டளிப்பது புனிதமான கடமை;
ஓட்டுரிமை என் பிறப்புரிமை'
காசு கொடுத்து ஓட்டை விலைக்கு
வாங்கும் ஆட்சி அழிவு தரும்

வெள்ளையனே வெளியேறு
என்று உரக்க கத்தி உயிர் தியாகம்
செய்து பெற்ற ஆட்சி

இன்று
 
கொள்ளையனே வெளியேறு
என்று உரக்க கத்தி உயிர் தியாகம
செய்து பெறும் நிலை வந்து விட்டது

நாம் தமிழன் என்ற உணர்வை ஊட்டி
யுத்தம் செய்ய புறப்பட
அறைகூவல் விடுப்பீர்
ஒன்று படுவீர்
வெற்றி நமதே ....................
« Last Edit: May 08, 2016, 06:04:49 AM by JEE »
with kind regard,

G'vakumar.

Offline thamilan

கரை வேட்டியும் கலர் துண்டும்
இது அரசியல்வாதியின் அடையாளம்
அவனை ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்திடும்
ஏழைகளுக்கு கோவணம் மட்டுமே அடையாளம்

தன் பலம் என்னவென்று அறியாத பாமரன்
அவன் பலவீனம் என்னவென்று
நன்கறிந்த அரசியல்வாதிகள்
கழுத்தை சுற்றி
நாய்ப்பட்டையிட்டு தங்களுக்கு வாலாட்ட வைத்திடும்
வித்தை தெரிந்தவன் அரசியல்வாதி
இயல்பான சுதந்திர உணர்வோடு
திமிறி நழுவிச் சென்றால்
இரண்டு பிஸ்கட்டுகளை வீசினால்
அடங்கிப் போவான் ஏழை பாமரன்
இதை நன்கறிந்தவன் அரசியல்வாதி


சாராயத்துக்கும் பிரியாணிக்கும்
விலை போகும் ஆண்கள்  கூட்டம்
மிக்சிக்கும் கலர் டிவிகளுக்கும்
விலை போகும் பெண்கள் கூட்டம்
தங்கள் ஒரு ஓட்டு
ஒரு நாட்டின் தலைவிதியையே நிர்ணயிக்கும்
இதை அறியாத அப்பாவி மக்கள்

ஒரு பிஸ்கட் போட்டால் வாலைஆட்டிடும்
படிப்பறிவற்ற கூட்டம் இருக்கும் வரை
ஓட்டுப் போட்டு ஜெய்க்க வைக்கும்
அரசியல்வாதிகளோ வாழ்வது
திரு வோடு
ஓட்டுப் போட்டவர் கைகளிலோ
திருவோடு

 மக்களுக்கு சேவை செய்வதற்காகவே
அரசியலுக்கு வந்தவர்களும் இருக்கிறார்கள்
கடமைவீரர் காமராஜர் ஒரு எடுத்துக்காட்டு
தான் படிக்காவிட்டாலும்
எல்லோரும் படிக்கவேண்டும்
ஏழைகளுக்கும் கல்வி போய்ச் சேர
பாடுபட்டவர் அந்த உத்தமர்


இன்றைய அரசியல்வாதிகள்
எரியும் வீட்டிலும் கொள்ளியை  புடுங்குபவர்கள் 
எங்கே பறிக்கலாம் எங்கே பதுக்கலாம்
இது தான் அவர்கள் அரசியல் நோக்கம்
தினமும் ஒரு வேலை சோற்றுக்கு
அல்லல்படும் ஏழைகள் நிறைந்த நாட்டில்
எவன் நல்லவன் எவன் கெட்டவன்  என
சிந்திக்க நேரமேது

 எவன் ஒருவன் அரசியலுக்கு வருகிறானோ
எவன் ஒருவன் ஓட்டுக் கேட்டு
வாசலுக்கு வருகிறானோ
அவனது சொத்து மதிப்பு என்வென்று கேளுங்கள்
ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வாய் என
எழுத்து மூலம் கேளுங்கள்
சொத்துக்கு கூட ஒரு பைசா சேர்த்திருந்தாலும்
அவன் சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமையாகும்
என சட்டம் போடுங்கள்
அவன் செய்வதாக கொடுத்த
வாக்குமொழிகளை  நிறைவேற்றாவிட்டால்
ஆயுள் தண்டனை என சட்டம் கொண்டு வாருங்கள்
ஒரு பயலும்
பதவிக்கு ஆசைப்பட மாட்டான்
பதவிக்கு வருபவனும்
மக்களுக்காக சேவை செய்பவனாக இருப்பான்   
[/b]
« Last Edit: May 12, 2016, 09:19:57 PM by thamilan »

Offline KuYiL

                 நான் !   நீ !   நாம்!  நாடு!

   கட்டுவாசியாய் வாழ்ந்தவன் நாகரீக அரிதாரம் பூசிய போது
   பிறப்பு உரிமை கண்ணாடியில் கண்ட முகம் தான் ஜனநாயகம் !
   
   என்னை சுமந்த கருவறையும் , என் கல்லறை சுமக்கும் என் தாய் நாடும் ஒன்று தான்
   என் முதல் சுவாசம் கொடுத்த இரண்டாம் தாய் என் நாடு!
   என் முதல்  தாகம் தணிக்க தாய்ப்பாலை தண்ணீராய்  தந்தவள் என் நாடு!
   என்  முதல் வார்த்தை ஒலித்த பள்ளிக்கூடம் என் நாடு !
   என் முதல் காதலை உணர  பசுமை கம்பளம் விரித்த  கனவு கன்னி என் நாடு!
   என் அறிவை தீட்டி , என் புகழ் ஏற்றி , என்னை நானே யார் என்று உணர செய்தவள் !
   
   என்னை சீர் தூக்கிய என் தாய் நாட்டை .......
   ஆள போகும் ஒருவன் ! எப்படி இருக்க வேண்டும்...
   தாயை தாண்டி தாய் நாட்டை நேசிப்பவனாய் ...
   அள்ளிகொடுத்த அன்னையை ஆராதிக்கும் ஆர்வலனாய்...
    வேகம் நடையில் , விவேகம் செயலில் ...
    ஆர்பரிக்கும் அறிவியல் உலகத்தில்.....
     என் நாட்டின் பிரஜைகளை , பிரிநிதிகளாய் நிர்ணயிக்கும் விஞ்ஞானியாய்
    நிதர்சன நிஜங்களை நியாய தராசில் பங்காளிகள் பாரபச்சம் பார்க்காமல்
    மனித மாண்புகளை வேட்டையாடும்  "பணம் "என்னும் முதலாளித்துவத்தை
    அடக்கி .... ஏழை , பணக்காரன் ஏற்றதாழ்வுகள் இல்லா...சமுதாயத்தை  உருவாக்கி ..
    எல்லாரும் சமம்..எல்லாரும் நம் மக்கள் ...எல்லாரும் நல்லோராய் வாழ
    வாழ் நாளை அற்பணிக்கும் ஒரு மாமனிதன் என் தாய் நாட்டை வழிநடத்தட்டும் ....


     ஒரு பேனா , தன் தலை குனியும் போது தான் ஒரு நாட்டின் தலை விதி நிமிரும் ...
    என் கை விரலில் போடபடுவது வெறும் மை அல்ல...
   
என் நாட்டின்
                   பெருமை  ,
                     ஓற்றுமை ,
                        பசுமை ,
                        வளமை
                        எள்ளாமை ,
                        இல்லாமை ....ஓங்கி !
                        வறுமை
                        கல்லாமை
                        பொறமை
                        ஆற்றாமை ......நீங்கி
    என் நாடு , உன் நாடு , நம் நாடு ......ஆள போகும் மனிதனை ...தேர்தெடுக்கும்
     உன்னத " மை "  உரிமை ........உங்கள் விரல் ....நீட்டும் முன் ....
      சிந்திப்போம் .....செயல் படுவோம் ....
                       
என்றும் அன்புடன்
   உங்கள் குயில் ....
     
   

   
   
   
   

   

   

 
   
                               
           நான் !   நீ !   நாம்!  நாடு!

   கட்டுவாசியாய் வாழ்ந்தவன் நாகரீக அரிதாரம் பூசிய போது
   பிறப்பு உரிமை கண்ணாடியில் கண்ட முகம் தான் ஜனநாயகம் !
   
   என்னை சுமந்த கருவறையும் , என் கல்லறை சுமக்கும் என் தாய் நாடும் ஒன்று தான்
   என் முதல் சுவாசம் கொடுத்த இரண்டாம் தாய் என் நாடு!
   என் முதல்  தாகம் தணிக்க தாய்ப்பாலை தண்ணீராய்  தந்தவள் என் நாடு!
   என்  முதல் வார்த்தை ஒலித்த பள்ளிக்கூடம் என் நாடு !
   என் முதல் காதலை உணர  பசுமை கம்பளம் விரித்த  கனவு கன்னி என் நாடு
   என் அறிவை தீட்டி , என் புகழ் ஏற்றி , என்னை நானே யார் என்று உணர செய்தவள்
   
   என்னை சீர் தூக்கிய என் தாய் நாட்டை .......
   ஆள போகும் ஒருவன் ! எப்படி இருக்க வேண்டும்...
   தாயை தாண்டி தாய் நாட்டை நேசிப்பவனாய் ...
   அள்ளிகொடுத்த அன்னையை ஆராதிக்கும் ஆர்வலனாய்...
    வேகம் நடையில் , விவேகம் செயலில் ...
    ஆர்பரிக்கும் அறிவியல் உலகத்தில்.....
     என் நாட்டின் பிரஜைகளை , பிரிநிதிகளாய் நிர்ணயிக்கும் விஞ்ஞானியாய்
    நிதர்சன நிஜங்களை நியாய தராசில் பங்காளிகள் பாரபச்சம் பார்க்காமல்
    மனித மாண்புகளை வேட்டையாடும்  "பணம் "என்னும் முதலாளித்துவத்தை
    அடக்கி .... ஏழை , பணக்காரன் ஏற்றதாழ்வுகள் இல்லா...சமுதாயத்தை
    எல்லாரும் சமம்..எல்லாரும் நம் மக்கள் ...எல்லாரும் நல்லோராய் வாழ
    வாழ் நாளை அற்பணிக்கும் ஒரு மாமனிதன் என் தாய் நாட்டை வழிநடத்தட்டும் ....


     ஒரு பேனா , தன் தலை குனியும் போது தான் ஒரு நாட்டின் தலை விதி நிமிரும் ...
    என் கை விரலில் போடபடுவது வெறும் மை அல்ல...
   
என் நாட்டின்
                   பெருமை  ,
                     ஓற்றுமை ,
                        பசுமை ,
                        வளமை
                        எள்ளாமை ,
                        இல்லாமை ....ஓங்கி !
                        வறுமை
                        கல்லாமை
                        பொறமை
                        ஆற்றாமை ......நீங்கி
    என் நாடு , உன் நாடு , நம் நாடு ......ஆள போகும் மனிதனை ...தேர்தெடுக்கும்
     உன்னத " மை "  உரிமை ........உங்கள் விரல் ....நீட்டும் முன் ....
      சிந்திப்போம் .....செயல் படுவோம் ....