பேதை முதல் மங்கையோ நீ
அரிவையோ தெரிவையோ
பேரிளம் பெண்ணோ .,
இந்நிலத்தே அச்சுறுத்தல்களும் அச்சமும்
எவ்வகை ரூபமென்று யூகிப்பதர்கில்லை
பரிணாம வளர்ச்சியில் இன்னும் மனதளவில்
மக்கி போயிருக்கும் மூடர்களின் நெருக்குதல்கள்
எத்தனை எத்தனையோ
பொறுமையின் சிகரம் என்று பெயர் வாங்கி
இமயமலைக்கு போட்டி காண ஒன்றுமில்லை
நயமான சூழ்ச்சிகளை நூதனமாய் முறியடிக்க
நல்ல நட்பின் வட்டத்தை தேர்ந்திடு
விழித்திரு… சீரும் பாம்பு என்று
சொன்னால் சொல்லட்டும்
கொதித்தெழு… கண்காட்சி பொருள் என்று
உன்னை சாடினால்
நயவஞ்சகத்திற்கு சாட்சி ஆகிடாதே
மடமை பேச்சிற்கு செவி சாய்திடாதே
அதை விட மடமையானது ஒன்றுமில்லை
கிறுக்கலுடன்
பருஷ்ணி
