Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 105  (Read 2481 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 105
இந்த களத்தின்இந்த  நிழல் படம் PAUL WALKER அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
« Last Edit: October 12, 2018, 10:31:03 AM by MysteRy »

Offline JEE

முன்பின் அறியாமல் கண்டதும்
காதல் கொள்வது காதலே இல்லை

உணர்ச்சிக்கு அடிமையாகி
 காதல் கொள்வது காதலே இல்லை
 
பல நாள்  அறிந்து கண்டதும்
காதல் கொள்வது காதலே


வாழ்க்கையில் இன்பமும், துன்பமும்
மாறிமாறி இருக்கத்தான் செய்யும்

.வாழ்க்கையில் இன்பமும், துன்பமும்
யாவர்க்கும் வரும் அது நிலையானதல்ல

வெயில் என்றும் குளிர் என்றும்,,
 காயம் என்றும்,  பசி என்றும்,
தாகம் என்றும், சோர்வு என்றும்
துனபமடைந்தால் தான்
இமயத்தின் உச்சியை அடையமுடியும்

இளம் உளளங்களே
இமயம் செல்ல
 என் அன்பு வாழ்த்துக்கள்..............
with kind regard,

G'vakumar.

Offline thamilan

மண் பார்த்த என்னை
கண் பார்த்து
ஆயிரம் கவிதை சொல்லி
காதல்பாடம் நடத்தியவளே 

காந்தக் கருவிழியாளே - உன்
ஓரவிழிப் பார்வையிலே
தொலைத்த என் இதயத்தை தேடுகிறேன்  தேடுகிறேன்
கண்விழித்து தூங்கவும்
காற்றோடு பேசவும்
கற்றுத்தந்தவள் நீ
தானே

என் தாவணி தாஜ்மகாலே
உன்னிடம் பேச வேண்டும்
என் மனதை உன் காலடியில் சமர்பிக்க வேண்டும் - என
தினமும் எண்ணுகிறேன் - ஆனால்

இறைவனிடம் எதையெதையோ
கேட்க நினைத்து
அர்சகரின் அர்த்தம் புரியா
மந்திரத்தை கேட்டவுடன்
கேட்கவந்த அத்தனையும்
மறந்து போய் வெறும்  மனிதனாக
கர்ப்பகிரகத்து சிலையை 
கண்களில் இருந்து மனதுக்கு
இடமாற்றம் செய்யும்
பக்தனைப் போலவே

நானும் உன்னிடம்
ஏதேதோ பேச நினைத்து
உனைக்கண்ட மாத்திரம்
அத்தனையும் மறந்து போய் - உன்னை
என் கண்களால் நகல் எடுத்து
இதயத்துக்கு இடமாற்றம் செய்கிறேன்


Offline EmiNeM

நீ செல்லும் பாதைகளில்
நடந்து பழகிய என் பாதங்களுக்கு
புரியவில்லை...
நீ என்னை விட்டு
சென்றுவிட்டாய் என்று...
தவிப்புகளோடு இன்றும்
தொடர்கிறது அதன் பயணத்தை..,
பழைய நினைவுகளை
சுமந்த என் இதயத்தோடு
நம் காதல் சுவடுகளைத் தேடி..

மங்கிய நிலவொளியில்
சிந்திய மழைத் துளியில்
அனைத்தும் மறந்து
என் கரம் பற்றி - நீ
நடந்த நாட்களை
அசை போடுகிறது மனது.,
என் தோளினில்
உன் தலை சாய்த்து
நடந்த நாட்களின்
நினைவுகளோடு
நானும் காத்திருக்கிறேன்
மீண்டும்
ஒரு பயணத்திற்காக...
வருவாயா என்னவளே...

Offline SweeTie

வட்டக் கருவிழிகள் கண் இமைக்கும் நேரத்தில்
விட்டில் பூச்சிபோல விழியில் விழுந்தவனே
கண்மடல் கொண்டு மூடி அணைத்து 
காதல் என்னும் தாவணியால் போர்த்திட்டேன்
நிலவொளியில் கண் சிமிட்டும் தாரகைகள்
வெண்முகில் துகிலில்  மூடி மறைந்ததுபோல்.

ஓடும்  நதியினிலே துள்ளும் மீன்களைப்போல்
கள்ளப் பார்வையில் பரிமாறும் காதல்ரசம் 
எட்டவொண்ணாத் தூரத்தில் பறக்கும் பருந்துகள் போல்
துடிக்கும் இதயங்கள் கொடுக்கும் காதலின் வேதனைகள்
‘அன்பே சுகமா ‘ ஒரு பார்வை ஏக்கமுடன்
‘கண்ணே நலமா’  மறு பார்வை தாகமுடன்

ரகசியமாய்க் காதல்  சொன்னாய்
என்  காதோடு  உன் இதழ் குவித்து 
இன்பத்தின்  அனல் கொடுத்தாய்
பிறர்  அறியாமால்  தோளோடு தோள்  உரசி
நாணத்தில் முகம் சிவந்தேன் - நீயோ
கண்மூடி என்னை ரசித்தாய்.

காதலுக்கு அர்த்தம் கண்டேன் - உன் 
கண்களுடன் பேசுகையில்
வெட்கத்தில் நிலை குலைந்தேன் - உன்
சுண்டு விரல் இடை தீண்டுகையில்
என்னையே நான் இழந்தேன்  - நீ
முத்தங்கள் திருடுகையில்.

என் உடலின் சம பாதி நீயாகவேண்டி
நீண்டநாள் புரிந்த தவம்
ஈருயிரும் ஒருயிராய் வேண்டுமென கேட்ட வரம்
மடை திறந்த வெள்ளமென நம் காதல்
கரை புரண்டு ஓட வேண்டி  கைபிடிப்பேன்
காதலனே உன்னை என்றென்றும் என் கணவனாக.


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
~ !!! மீண்டும் ஒரு காதல் கவிதை !!! ~
        ~ !!! ஜாதி மதம் இனம் மொழி
                 நிறம் உருவம்   வயது
  பார்த்து வருவது  காதலில்லை ... !!! ~
   ~ !!! மனம் குணம்  உணர்ச்சியின்
       அடிப்படையில் வருவதே காதல் ... !!! ~
   ~ !!! காதலை சுமந்த என் மனம்
          கிறுக்கும் சிறு கிறுக்கல்  ...!!! ~
   ~ !!!  என் காதல் பயணம்
            உன்னை என்னுள் சுமந்த
     நொடி முதல் தொடங்கியது ... !!! ~
    ~ !!! அது தொடங்கியே நொடியிலே
               முடிவை நாடியது ...!!! ~
    ~ !!! என் மூச்சு உள்ள வரை
    உன் கரம் விடமாட்டேன் என்றாய்,... !!! ~
  ~ !!! நீ உரைத்த வார்த்தைகள்
            இன்று காற்றில் கலந்து
    காற்றோடு காற்றாக மறைந்ததை
        நினைத்து  கண்ணீர் சிந்துகிறேன் நான் ... !!! ~
   ~ !!! என் கண்ணீரை துடைக்க உன்
                கரம் தேடுகிறேன் .... !!! ~
   ~ !!! என் மனபாரம் இறக்க
              தலைசாயே உன் மடி  கேட்கிறேன் !!! ~
  ~ !!! இரண்டும் தர மறுத்து
            என்னை விட்டு
        நீ வெகுதூரம் சென்றாய் ... !!! ~
    ~ !!! உன்னை மறக்கவும் இயலமேல்
             நினைக்கும் முடியமேல் 
      என் மனம் துடிகின்றது ... !!! ~
  ~ !!! உன்னை சுமந்த என் மனம்
         இன்னொர்வனை  சுமக்க
              இயல வில்லை ..... !!! ~
    ~ !!! என்றும் உன் நினைவுகளை
            சுமந்து கொண்டு வாழும்
                 என் மனம் ....என் உயிர் .... !!! ~
  ~ !!! என்னை நினைத்து உருகும் இதயம்
           ஒரு புறம் காத்துகொண்டு இருக்க...  !!! ~
  ~ !!! நானோ உன்னை நினைத்து
            ஏங்குகிறேன் ... உருகுகிறேன் ...!!! ~
  ~ !!! உன்னையும்  மறக்க முடியாது  ....!!! ~
      ~ !!! என்னை நினைத்து உருகும்
            இதயத்தையும் என்னால் ஏற்க
                             இயலவில்லை ... !!! ~
  ~ !!! ஒரு முறை உன்னை சுமந்த
         இதயத்தில் யாரையும் ...
            மீண்டும் சுமக்க என்னால் இயலாது ... !!! ~
  ~ !!! இதுதான் காதலா ...!!????... !!! ~
     ~ !!! இறுதி வரை காயங்களை
               மட்டும்  சுமக்க வைப்பதுதான்
                       காதலில் சுகமா ...??? ... !!! ~
   ~ !!! காயங்களை சுமக்க என்
              மனதில் பலமும்  இல்லை ...!!! ~
  ~ !!! காதலினால் காயப்பட்ட
           இதயத்துடன் கிறுக்கலை
                           முடிக்கிறேன் ...!!! ~
   ~ !!! ரி தி கா !!! ~ ;) ;) ;) ;) ;)
« Last Edit: June 09, 2016, 12:39:41 PM by RiThiKa »


Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
அழகே உன்னை படைத்த பிரம்மனுக்கு
கோடி முறை நன்றி கூறினாலும் ஈடாகாது
அனுதினமும் உன் அழகை கண்டு ரசித்தேன் 
உலகமே என்னை சூழ்ந்திருந்தாலும்
கண்கள் ஏனோ உன்னையே தேடி அலைகிறது   
தொடர்ந்தேன் உனக்கே தெரியாமல் உன்னை
நீ பார்க்கும் தருணம் ஏனோ என்னால் 
உன் கண்களை பார்க்க இயலாமால் தவித்தேன்
காந்த கண்களா இல்லை காதல் வலையா அந்த கண்கள்..
கோடி மலர்கள் கூடிய அழகுடன்
எனக்காக உன்னை உருவாக்கினானோ
என்னவோ அந்த பிரம்மன்....

என்னையும் மறந்து எனக்குள் ஏதோ
அளவில்லா ஆசைகள் உன்னை பார்க்கும் தருணம்
பார்க்கும் இடமெல்லாம் உன் முகமே
உன்னுடன் பேசுவதற்காகவே 
உறங்குகிறேன் இப்போதெல்லாம்
கனவில் மட்டுமே பேச முடிந்த என்னால்
உன் எதிரில் நின்று என் காதலை
வெளிபடுத்த இயலவில்லை ஏனோ
நீயோ பார்வையாலே வெளிபடுதுகிறாய் உன் காதலை
இது புரிந்தும் புரியாதவனாய் நான்!!!

நீ பார்க்கும் பார்வையிலே 
அழகாய் என்னை வசியம் செய்தவளே
உன் பார்வையில் என்னை தொலைத்த நான்
இன்றும் என்னை தேடி கொண்டிருக்கிறேன் உன்னில்...
உன் கண்ணில் என்ன மாயமோ
உன் அருகில் இருந்து என் வாழ்நாள் 
முழுவதும் உன்னையே ரசிப்பேன்....
« Last Edit: June 08, 2016, 09:56:37 PM by ராம் »

Offline MyNa

கவிபாடும் கண்களது 
கோவை பழம்..

அவள் பேசும் சொற்கள் 
முத்தாகுதே தினம்..

மல்லிகை வாசம் அவள் 
கூந்தல் மனம்..

என்னை கட்டி இழுக்கிறது     
அவளது பெண்மை குணம்..

கண்டதில்லை இப்படியொரு   
இயற்கையின் வளம் ..

கொடுத்து வைத்தவன் நான்தானோ 
இவள் அழகை காண தினம்..

கணவில்லை இது நிஜம்
என கூறி செல்லடி ஒரு கணம்..

உனாக்காகவே காத்திருப்பேன் 
ஒன்ரினைந்திட நம் கரம்..

உன்னை வாழ்க்கை முழுவதும்
பார்ப்பதே நான் வங்கி வந்த வரம்..
« Last Edit: June 08, 2016, 09:19:27 PM by MyNa »

Offline Dong லீ

காதல் மொழிந்திடும்
காந்த விழிகள் -அவை
விழிகளா விண்மீன்களா
எனை வீழ்த்திடும்
மாயவலைகளா ?!

மீன்களுக்கு வலைவிரிக்க
கண்டிருக்கிறேன்
மீன்களே இங்கு வலைவிரிக்க
மிதக்கிறேன் 

அசையாமல் எனை ரசித்திடும்
அழகான அவள் விழிமீன்களை
இசையாமல்
ரசிக்கிறேன்
 

இருள்  நிலவுகள்
கருவிழிகளான கண்களில்
கவிழ்கிறேன்
   
நெஞ்சை பிளந்து
உயிரை உருவி
காதலால் பூசி
உலவவிடும் அந்த
கண்களில்
மிதக்கிறேன் 

என் விழியில் விழுந்த
அவள் விழியில் புதைந்து
வாழ்வில் இணைந்து
பேரன் பேத்திகள் கொண்டதாய்
கனவுகள் கொள்கிறேன்

மெல்ல மெல்ல
என் வார்த்தைகளை
மெள்ள மெள்ள  அவளிடம்
காதலை சொல்ல

குறு குறு  குறும்பு கண்கள்
படபடப்புடன்  எங்கோ பார்க்க
அவள் சொன்ன வார்த்தைகள்

' போங்க அண்ணா நான் இவ்வளவு நேரம்
அத்தான மட்டும் தானே பார்த்திட்டு இருந்தேன் '

மாற்றுதிறன் கண்களால்
என்  அருகிலிருந்த தம்பி 
வைப்பரை(viper) தான்
இவ்வளவு நேரம்
அவள் பார்த்து
ரசித்திருக்கிறாள் !!

எங்கிருந்தாலும் வாழ்க
கீர்த்தி வைபர்
என கூறி நகர்ந்தேன்

இவன் பல்பு வாங்கும்
பாவப்பட்ட சங்கம்


« Last Edit: June 08, 2016, 10:18:19 PM by Dong லீ »

Offline சக்திராகவா

இருவரிகளில் சொல்லிட முடியாதடி
இதயத்தின் வலி!
இருவரை தவிர புரியாதடி
கண் பேசும் மொழி!

காதல் வந்ததும்
நாணம் வந்ததோ.?
நாணம் காணவோ
நானும் வந்ததோ.?

திரையிட்டு மறைக்காமல்
தின்னுமென்னை உன் பார்வை
முறையிட்டு நான் அழைத்தால்
மூக்கு சிவந்து முறைக்கிறதே!

இரவில் கனவில்
இருக்கும் நெருக்கம்
இயல்பில் எப்போது
இதழ் சிரிக்கும் அப்போது!

நூறு பொண்ண நீ காட்டு
ஊரு பேர கேட்டுவரேன்
நேரெதிரில் நீ இருந்தும்
தெரு முனையில் ஒளியிறேன்டி!

எனக்கும் சில வரம் வேணும்!
கேட்டு கருணை காட்டிடு காட்டிடு!

வழியெல்லாம் மழைவரனும்
குடையின்றி நீ அழனும்
குடைபிடிச்சு நான் வரனும்
கைபிடிச்சு நீ வரனும்!

தலையணையே வேண்டாம்
தலைஇணை போதும்!
வருடிடும் விரலுக்கெல்லாம்
வாய் வழி முத்தம்!

கன்னத்தில் ஈரமாக்கி
கையால் துடைக்காதே
ஈரம் காயும் வரை!
இதழ் இயல்பாய் துடைக்கட்டும்!

பொய்யாக நான் அழனும்
பொருக்காது நீ அழனும்
காதலை புரியவைக்க
கூந்தலுக்குள் கைவிரல்கள்

நிலவொளியில் நீயும்
உன் நிற ஒளியில் நானும்
இறவுகளே போதும் போதும்
இனி விடியல் வேண்டாமே!

இன்னும் பல உள்ளதடி
ஒவ்வொன்றாய்
அறிவாய் நீ

...சக்தி

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 703
  • Total likes: 2381
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear
உன் இமைத் துரிகை
என் மனதில் வெள்ளையடிக்கிறது
இதயம் மட்டும் ஏனோ
இருண்டே கிடக்கிறது
காதல் ஏணியில் ஏறும் மனம்
காயபட்டே இறங்குது தினம்

என் கண்களில் அழுகை - அது 
காதலுக்கு நான் செய்யும் தொழுகை

இந்த உயிர் பொம்மைக்கு
உன் பார்வை தான்
சூட்சுமக் கயிறு
நிலவு நீரில் தன்
முகம் பார்த்துக் கொள்வது போல
உன்னில் எனைப் பார்த்துக் கொள்கிறேன் 
நீ இல்லாத சமயம்
தொலைந்து போகிறேன்

நான் கொண்ட காதலை
மறக்கத்தான் நினைக்கிறேன்
என்னை மறக்க வழி இருந்தால்  சொல் அன்பே
என்னில் இருக்கும் உன்னை மறக்கிறேன்
என்னை மறக்க முடியாத போது எப்படி
நான் உன்னை மறப்பேன்

 
இரண்டு கண்கள் இரண்டு கண்களில்
மயங்கிக் கிடப்பதல்ல வாழ்க்கை
நான்கு கண்கள் ஒரே திசை வழியை
நோக்கி நிற்பதே வாழ்க்கை

உன்கை அணைப்பில்
சிறகுக்குள் அடைகாக்கப்படும்
கோழிக்குஞ்சென  இதமாய் இளைப்பாற
ஏங்குகிறேன் - உன் கை பற்றி
 உலகை வலம்வர
ஒவ்வொரு நிமிடமும் ஏங்குகிறேன்

ஏற்பாயா என்னை
மூடிக் கிடக்கும் கண்களைத் திறந்து
ஒரு பார்வையால் உன்
சம்மதம் சொல்
உன் ஒரு பார்வைக்காக
ஏங்கித் தவிக்கும்
ஒருதலைக் காதலி நான்     


பதிப்புரிமை
BreeZe