Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 109  (Read 2450 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218308
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 109
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Kanmani அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
« Last Edit: October 12, 2018, 10:32:40 AM by MysteRy »

Offline MyNa


ஒரு பெண் தன் வாழ்க்கைப்
பயணத்தைத் திரும்பி பார்க்கிறாள்
அடடே ..எத்தனை மேடு பள்ளம்
எத்தனை சுக துக்கம் அவள் வாழ்வினிலே..

ஒரு தாய்க்கு மகளாக பிறப்பெடுத்து
இளமையை இனிதே கடந்து
இல்லற வாழ்க்கையில் நுழைந்து 
வருங்கால மகளையும் தாயையும்
தனக்குள் சுமந்து ஈன்றெடுக்கிறாள்..

கல்வி, குடும்பம், தொழில்
என எல்லாவற்றிலும்
தனி ஒருவலாக துணிந்து நின்று
பல இன்னல்களைத் தாண்டி
போராடியே வாழ்க்கையை வெல்கிறாள்..

எவை எப்படி இருப்பினும் அவள் ஒருபோதும்
தன் அன்பைக் காட்ட தவறியதில்லை
என்றும் சிரிக்க தவறியதில்லை
அரவணைக்கவும் தயங்கியதில்லை ..

இவை அனைத்தையும் கடந்து வந்து
இன்று அவள் செல்ல பேத்தியை பார்க்கையில்
கடந்த  கால நினைவுகள் அலைமோதிடவே
தனக்குள்ளே சிரித்துக் கொள்கிறாள்
அவள் முன் நிற்கும் சிறுமி பெண்ணாக மாறி
கடந்து வர போகும் காலங்களை எண்ணி ..

பெண்ணை மதித்துப்  போற்றும்  ஆண்கள் மத்தியில்
ஒளிந்து கிடைக்கும் சில நயவஞ்சகர்களிடம் கேட்கிறேன்..
பெண் சுதந்திரமாக வாழ விடினும் பரவாயில்லை
இன்று அவள் உயிர்வாழ சுந்தந்திரம் கேட்கிறேன் .. :)
« Last Edit: July 03, 2016, 07:32:13 PM by MyNa »

Offline thamilan

குழி விழுந்தாலும் களையான கண்கள்   
அனுபவங்களின் முதிர்ச்சியைக் காட்டும்
கோடுகள்  நிறைந்த நெற்றி
வெள்ளிக் கம்பிகளாக காலத்தின் சுவடுகள்
பதிந்த தலை மயிர்
 
பாலைவன பூமி போல
சுருக்கங்கள் விழுந்த தேகம்
பல வருடங்கள் ஓடிக் களைத்திட்ட
நடை தளர்ந்த கால்கள்
பொக்கை வாய் திறத்து
கன்னத்தில் குழி விழும் சிரிப்பு
இதுவே எனது செல்லப் பாட்டி

நான் பிறந்தது எனது தாயின் வயிற்றில் என்றாலும்
பிறந்தது முதல் என்னை தாலாட்டி சீராட்டி
பேச்சிக்கு ஒரு முத்தம் பேத்திக்கு ஒரு முத்தம் என
பல நூறு முத்தங்கள் கொடுத்து
என்னை மார்போடு அணைத்தது
காலில் இட்டு தாலாட்டி
புரியாவிட்டாலும் மனதை மயக்கிடும்
தாலாட்டுக்கள் பாடி
என்னை வளர்த்திட்டவள் எனது அன்புப்பாட்டி

     
அம்மா அடித்தாலோ
அப்பா அதட்டினாலோ
அடைக்கலம் எனக்கு எனது பாட்டியே
என்னை கிச்சிக்கிச்சி மூட்டி
அழுகையையும் ஆனந்த சிரிப்பாக்கும்
அருமையானவள் எனது பாட்டி
அவள் சொல்லும் குட்டிக் குட்டிக் கதைகளுக்காகவே
எப்போது இரவு வரும் என என்னை தவிக்கவைக்கும்
வித்தை தெரிந்தவள் எனது ஆசையான பாட்டி

நான் கேட்டு எதுவும்
இல்லை என்று சொன்னவளில்லை
இந்த உலகினில் அவளுக்கு இணை
யாருமே இல்லை
அவள் தாயிலும் மேலானவள்

கடவுள் கருணையானவன்
அன்பானவன் எல்லோரையும் காப்பவன்
இது எல்லாம் எனக்கு எனது
பாட்டி சொல்லிக் கொடுத்தது - ஆனால்
அந்த கடவுளையே  நான் வெறுத்து
எனது பாட்டியின் இழப்பில் தான்
எல்லாம் இருந்தும் எதுவும்  இல்லாதவனாக
நான் உணர்ந்தது எனது பாட்டியின்
மரணத்தில் தான்

இறந்தாலும் இன்னும் எனது 
உயிருடனும் உணர்வுடனும் கலந்திருப்பவள்
எனது ஆசைப் பாட்டி


Offline JEE

பாட்டீ இந்தாங்க பூ....................

காலை நேரம்  மலர்ந்த பூக்களை
சுற்றிசுற்றி வண்டினங்கள்   வர வர......
வண்ண வண்ண பூக்களை
சுற்றிசுற்றி பெண்டினங்கள்   வர வர.........

பூத்துக்குலுங்கும் பூந்  தோட்டத்தில்
பூவை நோக்க மகள் இல்லையென்பாரோ?......
பூவோடு வந்த மகளோ பூவை கொடுக்க.
.பூ.................. மகள்.............பூரிப்பால்
புன்னகை பூத்தாளே..............

பூவும் புன்னகை பூத்தது.......   அப்
புன்னகையின் கோடி கருத்தில்
புத்தொன்றினை பூவும்
தாயின் காதில் சத்தமாய் ஓதிட.......

தாய்க்கு புன்னகை வரவில்லையென்பாரோ?...... ....

காலையில் பூத்து கூந்தலில்
ஒய்யாரமாய் இருக்க....
மாலையில் வாடுகிறேன்
காலின் கீழ் இருக்க....

கல்லறை குழி தொலைவில்
இருக்கென்று எண்ணி எண்ணி
கூத்தடிக்க கும்மாளம் போட
எல்லோரும் ஒய்யாரமாய் இருக்க....

கல்லறை அருகினிலே
இருப்பதறியும் கண்
எல்லாருக்கும் இருந்தால் ..????
அதனை எண்ணி எண்ணி
கூத்தடிக்க கும்மாளம் போட
எல்லோரும் ஒய்யாரமாய் இருக்க....

புன்னகை தான் வருமோ?
தாயின் காதில் சத்தமாய் ஓதிட.....
புன்னகை தான் வருமோ?


பூவைப்போன்ற பூஈந்த மகளே
பல்லாண்டு வாசம்வீச வேணடுமம்மா...


புன்னகையோடு பல்லாண்டு வாழ
வாழ்த்துகிற தாயுள்ளமே...
பூப்போன்ற மென்மையானவளே.......
நீ வாழ்க ...............
« Last Edit: July 03, 2016, 09:17:30 PM by JEE »
with kind regard,

G'vakumar.

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 703
  • Total likes: 2381
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear


என் கருவின் கரு
நான் பெற்றவள் பெற்றெடுத்த பேசும் பொம்மை
தாயாக இருந்த என்னை தாயின் தாயாக
தரமுயர்த்திய தங்கப் பதுமை
எங்கள் வம்சம் வளர்ந்திட வந்துதித்தவள்
எனது செல்லப் பேத்தி

இயற்கையின் அழகெல்லாம் ஒன்று திரட்டி
இறைவன் படைத்திட்ட ஓவியம்
நந்தவனப் பூக்கலெல்லாம் ஒன்று திரண்ட
பூக்  குவியல்
எட்டி உதைத்தாலும் பஞ்சி போல
மென்மையான பட்டுப் பாதங்கள்
பட்டாம் பூச்சி போல
படபடக்கும் கண்கள்
மேலிருந்து விழும் அருவி போல
அடர்ந்த நீண்ட கூந்தல்
மொத்தத்தில் பிரமனின் படைப்பில்
ஒரு அற்புத  அழகுக்கு குவியல்
என் அருமை பேத்தி

அவள் சிரித்தால் சில்லறை உதிரும்
பேசினால் பூக்கள் மலரும்
கண் சிமிட்டினால் நட்சத்திரங்கள் உதிரும்
பாட்டி என ஓடி வந்து ஆரத்தழுவி
கன்னத்தில் முத்தமிட்டால்
அகிலமுமே எனது காலடியில் கீழே
என ஒரு ஆனந்தக் கர்வம் தோன்றும்

எங்கு பூக்களை கண்டாலும்
அது அவள் கையில் இருக்கும்
பாட்டி இந்த உனக்கு என்று அவள் நீட்டுகையில்
காகிதப் பூவாக இருந்தாலும் அதில்
அவள் அன்பின் மணம் வீசும்

நான் அந்த காலத்துப் பெண்
படித்ததென்னவோ எட்டாம் வகுப்பு தான்
ஆங்கிலம் சுட்டுப்போட்டாலும் வராது
அவள் பெயரை நான் என்றும் ஒழுங்காக உச்சரித்ததில்லை
நான் அவளை கூப்பிடும் போதெல்லாம்
அவள் கேலி செய்து சிரிப்பாள்
பாட்டி நீ BREEZE ஆகிய என்னை FREEZE ஆக்குகிறாயே என
வாழ்க்கை பயணத்தில்
பல மைல்கள் கடந்து விட்டேன்
பிள்ளைகளை பெற்று
அவர்களுக்கும் பிள்ளைகளை பார்த்துவிட்டேன்
நான் தினமும் இறைவனிடம் கேட்பதெல்லாம் ஒன்று தான்

என் பேத்திக்கு திருமணம் முடிந்து
அவள் குழந்தையையும் கண்ணால் பார்க்க வேண்டும்
இன்னொரு தலைமுறையும் தரிசித்த
பெருமை மட்டும் வேண்டும்
அதுவரை என்னை கூப்பிடாதே என்பது தான்

பதிப்புரிமை
BreeZe



« Last Edit: July 05, 2016, 08:20:18 AM by BreeZe »
Palm Springs commercial photography

Offline StasH

பூங்கொத்தை தொட்டு பார்க்க -
பூவொன்றுக்கு பூத்த ஆசை ;
பரிட்சயமில்லா பாட்டியின் -
கைப்பிடி வேலியில் அப்பூங்கொத்து !

*  *  *  *  *

உலக மலர்கள் ஊஞ்சலாட ஏங்கும் - கார்மேக
கூந்தல் இவளது என்றறியா மடந்தை;
இலையுதிர் கால காற்றில், தானே கிழியும் இலைகள் -
இவளது பாதம் தீண்ட தானென்று தெரியா குழந்தை !

மழைத்துளிகள் முத்தமிட்ட புல்வெளியில் -
மலர் பாதம் பதித்து நடந்ததோர் பூந்தேர்;
பூங்கொத்தின் காந்தம் இப்பூவை ஈர்க்க -
பழகிராத வெளிர் முகமோ அதனை தடுக்க -
செய்வதறியவில்லை !

பூவை சுற்றி வண்டுகள் தானே வட்டமிடும் -
பூங்கொத்தை சுற்றி இப்பூவும் வட்டமிடுவதேன் ;
பூவில் வண்டு தேன் தேடும்  - பிற
பூக்களில் இப்பூக்குட்டி என்ன தேடிடுமோ !

*  *  *  *  *

விரல் தொடும் தொலைவில் பூங்கொத்து,
விரல் வேலியிட்ட பாட்டியிடம் சிநேக பார்வை,
பலகையை பற்றியபடியே பரதநாட்டிய பாவனை,
முன்வரிசை பற்களிலிரண்டு வீழ்ந்த செவ்வாயில் -
ஒரு போலிச்சிரிப்பு !

பாட்டி பார்க்கா வன்னம் -
பூங்கொத்தில் சிறியதொரு தீண்டல்,
அத்தீண்டலினூடே பரவசம்,
பூவும் பூவும் மோதிக்கொள்ளும் -
ஸ்பரிசம் உணர்ந்தே குதூகலம்,
குதூகலத்தின் உச்சத்திலோர் துள்ளல் !

பார்வை திரும்பும் தருணம்,
துள்ளல் விழுங்கி - மீண்டுமொரு
பொக்கை வாய் போலிச்சிரிப்பு,
இம்முறை வெட்கத்துடன் !

*  *  *  *  *

அனைத்தும் புரிந்தது -
பூங்கொத்தை உயர்த்தி
பூவொன்று எடுத்து
இவளிடம் கொடுத்தாள்

" கல்லறையில் உறங்கும் - என்
கணவருக்கு இப்பூங்கொத்து;
ஒரு பூ குறைந்தால்
கோபித்துக்கொள்ள மாட்டார் அவர் "
என்று சொல்லி...

*  *  *  *  *

அக்கவிதை - என்
கண்களில் காட்சியானது ;
அக்காட்சி - இன்று
இங்கே கவிதையானது ;

« Last Edit: July 05, 2016, 06:35:28 AM by StasH »
மழைக்காதலன்,
StasH

Offline சக்திராகவா

ரேகையாய் உடல் மாற
மழலையாய் மனமாற
முதிர்ந்த முகத்தோடு
கூன் விழுந்த குழந்தை

ஆட்டத்தில் அசந்த கால்கள்
ஓட்டத்தின் ஓய்விலின்று!
பதுமையின் முதுமை
பாட்டி என்றானது!
அவள் பழக்கம்
கூட மாறிப்போனது!

களைப்பறியா கதைசொல்லி
சிலருக்கு சீனத்து தேவதை!
(கற்பனை பாட்டி)
முந்தானை காசோடு முத்தம் தரும்
மூங்கில் கையேந்தியாள்!

மூளையில்லா பிள்ளை பெற்று
வேலை வாய்ப்பு தேடி வைத்து
முதியோர் இல்லங்களில்!
யமனிடம் யாசகம் கேட்டு!


அன்னையின் அன்னையோ
தந்தையின் அன்னையோ
தின்னை இல்லா வீடென்றால்
தெருவோரம் தானோ!

எத்தனை வகை பாட்டி இங்கே
தொங்கிய தோட்டோடொருத்தி!
தங்கிய ரோட்டோடொருத்தி!
தாத்தாக்களுக்கும் பொருந்துமிது!!

சக்தி ராகவா

« Last Edit: July 06, 2016, 08:02:52 PM by சக்திராகவா »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
என் தாய்க்குத் தாய் ....
எமக்கும் தாயானால் ....
என்னைப்  பெற்றெடுக்காமேல் தாயாக மாறியவள் ...

பசியால் நான் வாட
உணவு ஊட்டியவள் ...
உறக்கமின்றி தள்ளாட
கதை சொல்லி உறங்க செய்தவள் ...
பெற்ற தாய் திட்டினாள்
எனக்காக சண்டைப் போடுபவள் ...
முதுகில் உப்புமூட்டை ஏற்றி
எனக்கு விளையாட்டுக் காட்டியவள் ...
நள்ளிரவில் அழுதால்
மார்பில் சாய்த்து தூங்க வைத்தவள் ...
குழந்தை மொழியில் நான் பேச
குழந்தையாக மாறி என்னை கொஞ்சியவள் ....
நான் வளர்ந்த பின்பும் என்னை
குழந்தைப் போல் கொஞ்சியவள் ....

வயதில் வளந்தாலும்
உம் மடியில் சாய்ந்துக்
கதைகள் பேச எங்கும் என் மனம் ...
உமது அணைப்பிற்கு அடிமைப்படுகிறது ....

தாய் எனும் பொக்கிஷத்தை
எமக்கு கொடுத்த  தங்க மகளே  ....
தங்கத்தினால் கூட உங்களை இடு  செய்ய இயலாது ...

என்னை கண்ணுக்குள் சுமக்கும் பாட்டி ....
உங்களுக்கு இல்லை யாரும் போட்டி ....

~ !!! நன்றி !!! ~
  ~ !!! ரி தி கா !!! ~