Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 110  (Read 2791 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218359
  • Total likes: 23054
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 110
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Paul Walker ( Dong Lee ) அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
« Last Edit: October 12, 2018, 10:33:03 AM by MysteRy »

Offline ! Viper !


திரு  என்கிற  சூரியனும் மனம் 
என்கிற  பூமியும் ஒன்று  சேர்ந்து 
அழகாய்  காணும்  உறவே  திருமணம்

ஒரு  பெண்  வளரும்  போது 
தந்தை துணையில் வளர்கிறாள்
பாசத்தில்  குட்டி  சண்டையில்  தன்
அண்ணன்  துணையில் வளர்கிறாள்
வாழ்க்கை  விழியில்  பாதத்தை  எடுத்து 
வைத்து  வாழக்கை என்னும் கயிறை
கணவர்  துணையில் வாழ்கிறாள்
ஒரு  கட்டத்திற்கு  பிறகு  தன் மகன் 
துணையில் வாழ்கிறாள் வயோதிகத்தில்
பேரப்பிள்ளைககளுக்கு   வழிகாட்டியாய்  இருக்கிறாள்..!

ஆண்  வளரும்  போது  அம்மாவின் 
பிள்ளையாய்  வளர்கிறான்
அம்மாவிற்கு  அடுத்து  பாசத்தை  வைத்து 
சமமாய்  நினைத்து  தங்கையுடன்  வளர்கிறான்
திருமணம்   ஆன  உடன்  தன் தாய்க்கு  பிறகு 
தன் மகனின்  கையை  கோர்த்து
கொண்டு  வாழ்க்கை  பயணத்தை 
மனைவியுடன்  பயணிக்கிறான் ..!

இரவு பகல், .இன்பம் துன்பம் ,
என்று எதிர் சொல்லாய் பெண்ணை
பாராமல் ஆணுக்கு பெண்ணை
இணைச்சொல்லாய் பார்த்தால்
இல்லறம் இன்பமயமாகும் ....!

பரவச கிறுகளுடன் வைப்பர்
« Last Edit: July 11, 2016, 11:46:56 PM by ! Viper ! »
Palm Springs commercial photography

Offline இணையத்தமிழன்

திருமணம் நாள் !

ஒரு விதை
உயிர் கொண்டு
இரு நெஞ்சில்
வேர்விடும் நாள் !
இந்த திருநாள் !

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
மாவிலை தோரணம்
வண்ண வண்ண அலங்காரம்
கொண்டு மண்டபம் நிரம்பி வழிய
ஓமகுண்டத்தின் முன் அய்யர் மந்திரம் ஓத
நட்பும் சுற்றமும் ஆவலோடு  காத்திருக்க
அடடா கண் கொள்ளா காட்சி ...!

பட்டு ஜரிகை படபடக்க
வேஷ்டி சட்டையில்
மாலையும் கழுத்துமாய்
மாப்பிள்ளை கம்பீரமாய்
நடந்து வர பெண்களுக்கிடையே
கிண்டலும் கேலியுமாய்
சலசலப்பில் வெட்கம்
மேலோங்க அசட்டு சிரிப்பில்
மாப்பிள்ளை மணமேடை
வந்து அமர்ந்தது
அடடா கண்கொள்ளா காட்சி ...!

கூரைப்பட்டு மினுமினுக்க
உச்சி முதல் பாதம் வரை
பொன்னால் பூட்டி
சிறு  ஒப்பனையில் முகம் மிளிர
அதையும் தாண்டி வெட்கத்தில்
முகம் சிவக்க மாலை சூடி
மணப்பெண் மனமேடை நோக்கி வர
வந்தவர் எல்லாம் இது வல்லவோ
பொருத்தம் என ஒருசேர முணுமுணுக்க
மணமகன்  அருகில் வந்தமர்த்தால் மணப்பெண்
அடடா கண்கொள்ளா காட்சி ..!

இதோ நெருங்கி விட்டது முகுர்த்த நேரம்
அய்யர் கொடுத்த மாங்கல்ய தட்டை வாங்கி
பெரியவர்களின் ஆசி பெற்று அனைவருக்கும்
அர்ச்சதை வழங்கபட்டு கெட்டி கெட்டி மேளம்
வாத்தியம் முழங்க நானும் அர்ச்சதையை
தூவ முற்படுகையில் கை தட்டி பரிசளித்து
என்னை எழுப்பியவர் மணமகன் (என் paul அண்ணன் )
நான் கண்ட அனைத்தும் கனவா ?

நான் கண்ட கனவேதும் அறிய
வாய்ப்புயில்லாமல், நேற்று
 என்னிடம் கூறியது போல
இன்று பொண்ணு ரொம்ப சிவப்பாம்
என் அம்மா சொன்னாங்க  மைனா
வெள்ளந்தியாய் சொல்லி
கொண்டிருந்தார்   என் அண்ணா
என் கனவு விரைவில் நினைவாக
கடவுளிடம் வேண்டிக்கொண்டேன் ....!
« Last Edit: July 10, 2016, 04:51:36 PM by பவித்ரா »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline thamilan

ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும்
திருமணம் என்பது பரிட்சை
அவளாக எழுதும் பரிட்சை அல்ல
ஆண்டவன் எழுதும் புதுப் பரிட்சை

திருமணம் பூவாய் மணக்கும்
சிலர் வாழ்வில்
வெறும் நாராய் கிழிக்கும்
சிலர் வாழ்வை
கம்பிகள் போட்ட ஜன்னலத்து
காப்பா சிறையா
காலம் தான் தீர்மானிக்கும்

உத்திரம் கலந்த உறவை தாண்டி
உணர்வுகள் கலக்கும்
கழுத்தில் கட்டிய தாலி சிலருக்கு
 இதயத்தை கிழிக்கும் வேலி
வலியை நினைத்து விலகுவதா
இல்லை
வடுவை நினைத்து ஒதுங்குவதா

நல்ல துணை கிடைப்பதே
போன  ஜென்மத்து  புண்ணியம்
ஆணாதிக்கம் அடக்கியாளும் தன்மை
கொண்டவன் வாய்த்திட்டால்
திருமணமே நரகம் ஆகிவிடும்

ஆணாதிக்க அடையாளம்
ஆனாலும் இவளை சக்தி என்பர்
ஆண்டவன் கோர்ட்டில் அழலாம் என்றால்
குற்றவாளியே நீதிபதி

Offline JEE

மணக்கோல கரங்கள்......
யாரும் அறியாமல் அழைத்து வந்த
பதிவு திருமணமோ?..................அதனால்
மணமக்களின் முகம் காண்பிக்க நாணமோ?........
எக்காலத்தவரோ?.............
மணமக்கள் தானோ?.....


எவ்வளவு தான் நாகரீகம் வளர்ந்தாலும்
பாரம்பரிய அம்சங்களை மறுக்காமல்
திருமணச்சடங்குக்குள் நுழைக்கும்
சம்பரதாயங்கள்தான் எத்தனை எத்தனை..... ..
 

ஆடியில் ஆடிப்போன கடைகளிலோ?
ஆடிக்கழிவை எப்படியேனும் தள்ளிட 
ஆலோசித்து விற்பனைக்கென்று
செதுக்கி வைத்த சிலையின் கரங்களோ?............

இரு கரங்கள் இணைக்கும் விளம்பரமோ?
சீரியல்களை எப்படியேனும் ஓட்டிட
ஆவலோடு அசையாமல் பார்ப்பதற்கென்று
சொல்லி  வந்த சீரியசானகரங்களோ? ...........


உலகிற்கே முன்னோடியான நாட்டுப்புற கலைகளோ?
தெருக்கூத்தை எப்படியேனும் காட்டிட
அக்கால நாட்டுப்புற கலை கூத்தாட்டத்துக்கென்று
ஆடிய கலைஞர்களின் நாட்டுப்புறக்கரங்களோ? ......

தைப்பொங்களன்நு எங்களூரின் மேடைகளிளோ?
ஒலியும் ஒளியும் எப்படியேனும் சிறக்க
இளசுகளும் பெருசுகளும் ரிக்கார்ட் டான்சுக்கென்று
அழைத்த ஆட்டக்காரங்களின்   கரங்களோ? ........

இல்லறத்தில் இணையும் நாளன்று மணமக்களோ?
இனிய கரங்களை இணைத்து வாழ்ந்திட
கரங்களை  அலங்கரித்து மணநாளுக்கென்று
எடுத்த வண்ணோவிய  மணமக்களின்கரங்களோ?


காதலன் காதலியின் கரங்களென்று
உரைக்காதிருக்க முடியுமோ?

கவிதைக்கும் கற்பனைக்கும் இக்கரங்கள்
அவரவர் அணிந்த ஆடியின் வண்ணத்தில்
கடந்து நிற்கின்றதோ?

என்னவென்று சொல்வதம்மா? 

யார் கரங்களோ ? வாழ்வு சிறந்திட
பற்றிய கரத்தை பற்றியவாரே............
யார் பற்ற வைததாலும் ,,,,,,
விடாமல் நீடூழியாய்
இறையருளுடன் இன்புற்று
நலமுடன் வாழ்கவளமுடன் .............
« Last Edit: July 10, 2016, 07:44:29 PM by JEE »
with kind regard,

G'vakumar.

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 703
  • Total likes: 2381
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear


இரு மனங்களை ஒரு மனதாகும்
ஈர் உடல்களை ஓர் உடலாகும்
ஒரு உன்னத ஒப்பந்தம் திருமணம்
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த இருவரை
மனதாலும் உடலாலும் தாலி கொண்டு
கட்டிப் போடுவதே திருமணம் என்றாலும்
ஜாதகம் பார்த்து நாள் நட்சத்திரம் பார்த்து 
நல்ல நேரம் பார்த்து  எல்லா பொருத்தமும் பார்த்து
நிச்சயக்கப்படுகின்ற திருமணங்களில்
மனப்பொருத்தம் பார்க்கிறார்களா என்றால்
அது தான் இல்லை

அநேக திருமணங்களில்
மணமக்கள் மனம்விட்டு பேசுவதே
திருமணத்துக்கு பின்பாகத் தான் இருக்கும்
அவனைப் பற்றி இவளுக்கு ஏதும் தெரியாது
அவள் ரசனை அவள் விருப்பம்
அவள் நடையுடை பாவனை
எதுமே இவனுக்குத் தெரியாது   
இருவர் ரசனையும்
எதிரும் புதிருமாய் இருக்கும்
விருப்பு வெறுப்புகளும்
வேறு வேறு விதமாய் இருக்கும்
காலத்தின் கட்டாயம்
ஒருவருக்காக இன்னொருவர்
விட்டுக் கொடுத்து போக வேண்டிய நிலை
ஒருவருக்காக இன்னொருவர்
தன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம்

இது தான் தலைவிதி என
அனுசரித்துப் போகும் தம்பதியர் சிலர்
மனமொத்துப் போய் ஒருவருக்காக இன்னொருவர்
விட்டுக் கொடுத்து வாழும் தம்பதியர் பலர்

தாலி எனும் கயிற்றால் இணைவதை விட
அன்பு எனும் பாசக் கயிற்றால் இணையும்
திருமணங்களே சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன


பதிப்புரிமை
BreeZe

« Last Edit: July 11, 2016, 08:18:40 PM by BreeZe »
Palm Springs commercial photography

Offline StasH

வேண்டுமடி நீயெனக்கு !

யுகங்களாய் சேர்த்து வைத்த
காதல் மேகங்களை பிழிந்து - நான்
மழையாய் பொழிந்து தள்ள
மதிமுகம் காட்டி விழிமூடி -
வேண்டுமடி நீயெனக்கு !

மொட்டு அரும்பும் மாலைக்கும்
பூ மணக்கும் விடியலுக்கும்
இடையில் ஆட்கொள்ளும்
தனிமை துடைக்க -
வேண்டுமடி நீயெனக்கு !

தலையணை ஆயுதம் ஏந்தி 
நீ துரத்தும் நொடிப்பில்
உன் கூந்தல் கானகத்தில்
ஒளிந்து திசை தொலைத்திட -
வேண்டுமடி நீயெனக்கு !

ஊடல் கொண்டு, பின்பு கூடல் கண்டு
இச்சை அடங்கிய முன்னிரவின்
முழுமதியின் ஒளியில் - என் மார்பில்
உன் விரல் புனைப்பெயர் தீட்டிட -
வேண்டுமடி நீயெனக்கு !

உன் பாதச்சுவடை மையப்படுத்தி
அரைவட்ட வளைகோடிட்டு
உப்புச்சாறு நிரப்பிய
கடலின் குறுக்களவு காண -
வேண்டுமடி நீயெனக்கு !

அக்கடலின் கருத்த மணலில்
புதைத்த கால்கள் தனை
மீட்க வரும் அலைகளை
அள்ளி அணைத்திட - என்னருகில்
வேண்டுமடி நீயெனக்கு !

வாகனங்கள் உறங்கிப்போன
ஒரு மார்கழியின் பின்னிரவில்
நிலாமுற்றத்தில் படுத்து கொண்டு
விண்மீன்களின் வருகைப்பதிவு கணக்கிட -
வேண்டுமடி நீயெனக்கு !

உனக்கு நான்
எனக்கு நீ
பிழையில்லா கணக்கு !

காதல் வழிந்தோடும் பின்னொரு நாளில்
கண்ணம்மா
உன் மடியில் விழுந்து
உயிர் துறத்தல்
போதும் எனக்கு !
அதுவரையிலும்
வேண்டுமடி நீயெனக்கு !

« Last Edit: July 11, 2016, 03:03:13 PM by StasH »
மழைக்காதலன்,
StasH

Offline SweeTie

இரு  மனம் கலந்தபின்
ஜாதகப் பொருத்தம் 
இல்லை என்றாலும்   
பொருந்தவைக்கும் ஜோதிடர்கள்
ஆயிரம் பொய்கள் சொல்லி
அரங்கேறும் திருமணம்

மாலையும் மணமேடையும்
மந்திரமும்  அர்ச்சதையும்
மஞ்சள் கயிற்றில் தொங்கும் தாலியும்
பகட்டான  பட்டு வஸ்திரங்களும்
தலைவாழை இலையில்
வகை வகையாய்  உண்டிகளும்
 ஒரு நாள் செலவுக்கு வங்கியில் 
கடன்வாங்கி நிறைவேறும் கல்யாணம்

ஜாதி மதம் மொழியின்றி 
காதலில் கரை  புரண்டு 
கறை  படிந்த  இதயங்கள்   
சங்கமிக்க தேடும் இரவுகள்
பஞ்ச பூதங்களின் ஆசியில்
எட்டாத ஊரின் எல்லையில்
நடந்தேறும் திருமணம்

ஆயிரம் பேர் தூவும் அர்ச்சதைகள்   
புரோகிதரின் புரியாத மந்திரங்கள்
தெரியாதவர்களின்  வாழ்த்துக்கள்
அனைத்தும்  என்ன பயன்
காதலை தியாகம் செய்து
கடடாயத் திருமணத்தில்   இணையும்
இரு மாறுபட்ட இதயங்கள்
இதுவும்  சொர்க்கத்தில் நிட்சயமா?
இல்லை நரகத்தின்  முதல் படியா?

« Last Edit: July 11, 2016, 05:51:55 PM by SweeTie »

Offline SmileY



இதுவரை மற்றவர்கள் மீது
       வைத்திருந்த அன்பை விட !! !!

இதுவரை சந்தித்த உறவுகளை விட!! !!
       அனுபவித்த மகிழ்ச்சியை விட!! !!

இன்று முதல், .. .. ..
   
      இந்த தருணம் முதல்.. .. ..
       
           இணைந்து கைகோர்த்த  நொடி முதல் .. .. ..

இனி வரும் காலமெல்லாம்
       ஆயுள் காலமெல்லாம் !! !!

இந்த இடைவெளி  இல்லா
       நெருக்கத்தில் வாழலாம் !! !!

இன்ப வெள்ளத்தில்
        நாம் நனையெல்லாம் !! !!

இல்லற வாழ்க்கையை
      இன்பமாக வாழலாம் !! !!

அன்பை சுமக்கும்  நீயும் .. .. ..
     அழகை சுமக்கும் அவளும்.. .. ..

இன்று போல்
  இனிமையாக
    இல்லறத்தில்
      இணைய
        இங்கு
          இருக்கும் அனைவரும் சொல்வோம் ...

இதயம் <3 கனிந்த வாழ்த்துக்கள் ...

:);D I ;):-* E   :D Y
« Last Edit: July 14, 2016, 02:33:09 PM by SmileY »
***காயத்தின் வலியை உணர்ந்தவர்கள் !!!!! மற்றவர்களை காயப்படுத்த மாட்டார்கள் ***


Offline JerrY

கண்கள் காத்து இருக்க , கை பிடித்த காதலே
பதுமை போல நீ இருக்க , பாவி நெஞ்சை வருடூத ..

சேலை கட்டி நீ நிக்க , ந பாத்தவா நீ தானா
பல் இளிச்சு நீ காட்ட , பக்கத்துல ந நின்னேன் ..

ஊரு எல்லாம் எட்டிப்பாக்க , யார் அவனு கேள்வி கேக்க
கை புடிக்க வந்தவளை , என்னனு நா சொல்ல ..

அவ அம்மா வா விட்டுபுட்டு , சந்தோசமா வந்தனா
அப்பா வா வேணாம்னு  , விட்டு புட்டு வந்தனா
தம்பி யை  தள்ளி விட்டு , சிரிச்சிகிட்டு வந்தனா
இல்லை தோழி , தோழன் உறவு அறுத்து என் வீடு வந்தனா ..

கட்டுனவன் தான் உலகம் நா , அடிமை இல்லையா அவ மட்டும்
பாரதி இக்கு புக்கு போட்டு , இது பெண்களின் புதுமை தேசம்

போதும் டா உங்க உலக நியாயம் , கை பிடிக்க வந்தவளை
இந்த உலகிற்கு அடையாளம் காட்டு , அவ கைய நீ விட்டு
உன் தாயும் அவனு சொல்லி காட்டு ..

உன் பிள்ளை யார் சாயல்னு , கேட்டதுஎல்லாம் போதும் நிறுத்து
பெருமை அது பெண் தான்டா , அமைதிக்கு உங்க அம்மாவா பாருடானு
சொல்லி சொல்லி உன் புள்ளய உயர்த்து ..

பெண் பார்த்து வளந்த புள்ள , பொம்பள புள்ளய தப்ப பக்கமாட்டான்
காதல பத்தி தெரியாம , காமத்தையும் தேடமாட்டான்

கை புடிச்ச பெண் அவளை , கையில் வச்சி தாங்கணும்
கல்யாண் நாள் இதுனு , தினம் தினம் எண்ணனும் ..
 ..
இவன் ..

இரா.ஜெகதீஷ்