Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 111  (Read 2535 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218361
  • Total likes: 23059
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 111
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Stash அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
« Last Edit: October 12, 2018, 10:34:17 AM by MysteRy »

Offline thamilan

விசித்திர உலகம் இது
நான் தான் எஜமான் என
மார்தட்டிக் கொள்ளும் வல்லரசுநாடுகள்
பலப் பல
ஒருத்தரை மற்றவர் அடக்கி ஆள
கண்டம் விட்டு கண்டம் பாயும்
ஏவுகணைகள் 
ஒரு நாட்டையே சுடுகாடாக மாற்றிவிடும்
அணுகுண்டுகள்
பிறரை அளிப்பதத்திற்கும் தம்மை பாதுகாப்பத்துக்கும் என
கோடி கோடியாக செலவிடும் நாடுகள்
பலப் பல

சொர்க புரியாக செல்வம் செழித்த
நாடுகளும் பலப் பல
கேளிக்கை வினோதம்  என
பணத்தை வாரியிறைத்திடும்
செல்வந்த  நாடுகளும்
பலப் பல

இதே உலகில்
பசி பட்டினி
வறுமை பஞ்சம் என
வயிறு காய்ந்து எலும்பும் தோலுமாக
மக்கள் வாழும் நாடுகளும்
பலப்பல

மழை கானா பூமி
அவர்கள் மண்ணிலும் ஈரமில்லை
கண்ணிலும் ஈரமில்லை
பசியால் வாடிடும் அந்த நாட்டு மக்களை
திரும்பிப் பார்த்திட பணக்கார நாட்டவருக்கு
மனதினில் ஈரமில்லை

மனிதரை கொன்று குவிதித்திட
செலவு செய்யும் பணத்தில்
 வறுமை நிறைந்த நாடுகளை
செழித்திட வைக்க
ஏன் எண்ணுவதில்லை
 
கேளிக்கைகளிலும் ஆடம்பர வாழ்க்கைகளிலும்
செலவிடும் பணத்தை  மனிதரை வாழ வைக்க
 செலவு செய்வதத்திற்கு
ஏன் மனம் வருவதில்லை

இறைவனின் படைப்பில்
எல்லா உயிரினங்களுக்கும் இறைவன்
படிஅளந்திருக்கிறான்
ஒன்று இன்னொன்றுக்கு உணவாகிறது
மனிதன் கூட இறந்தால்
கழுகுகளுக்கும் புழுக்களுக்கும்
இரையாகிறான்
மனிதன் மட்டும்
இரையில்லாமல் இறப்பது
கொடுமையிலும் கொடுமை

ஒவ்வொரு பணக்கார நாடுகளும்
அள்ளி செலவழிப்பதில்
கிள்ளி கொடுத்தாலே
இந்த ஏழை நாடுகள்
பசி பிணி அற்று வாழுமே

« Last Edit: July 17, 2016, 09:01:10 PM by thamilan »

Offline StasH

பருந்தின் விருந்து

கழுகண்ணே,
க(வி)த ஒன்னு சொல்லுறே
கவனமா அத நீ கேளண்ணே!

என்ன பெத்தா ஏ ஆத்தா,
அவ நெஞ்சுல பால் வரல
ரத்தங் குடிக்க எனக்கு புடிக்கல ;
அப்பன போல பட்டினியிலே
அவளுஞ் செத்து போனா பாடையிலே !

மேதைக - சுக்கிரனுல
தண்ணி தேடி போனப்ப,
இந்த பொட்டல் காட்டுல
ரொட்டி துண்டு ஒன்னு
தேடி அலஞ்ச பேதையண்ணே !

லட்டு ரெண்டுக்கு ஒரு குபேரரு
லட்ச ரூபா உண்டியல்ல போட்டாரு ;
பிச்ச கேட்டு போன என்ன
எச்சகளையினு வசஞ்சு
எட்டி ஒதச்சாரு !

சாராயங் குடிச்சு முடிச்சு
பஞ்சணையில சொகம் தேடுற
சீமானுங்க மத்தியிலே - நானு
வாய் எச்சில முழுங்கி
வயித்த நிரப்புற சாதியண்ணே !

வாய்பேசாத கோழிக்குஞ்சு - அத 
பொசுக்கி வறுத்து தின்னாங்க;
கிறுக்கி நானு
பேசி தொலைச்சுப்புட்டே
உசுர மட்டும் விட்டு வெச்சாங்க!

பழந்தின்னு பசியாத்த
பழங்காட்டுக்கு போனா,
மேதைக - மரத்த வெட்டி
மேசைக செஞ்சுக்கிட்டாங்கனு
குருவியொன்னு பொலம்புச்சுண்ணே !

நாகரீகம் பாத்தவங்க,
விரல விட்டு - போசனத்த
கரண்டில தின்ன மறக்கல;
சதையிருந்த விரல - அப்பவே
வெட்டி தின்ன நான் மறந்துட்டே !

பசியோட நீ வந்திருக்க,
பருந்துக்கு விருந்து படைக்க
பாவிமக ஒடம்புல ஊனில்ல;
எலும்ப கொத்தி - உன்
அலக ஒடச்சுக்காதண்ணே !

« Last Edit: July 19, 2016, 02:37:56 PM by StasH »
மழைக்காதலன்,
StasH

Offline SweeTie

விடியாத மயான இரவுகளில்
ஓயாத குண்டு வீச்சுகளில் 
ஓர் இனமே அழிந்தது அங்கு
இரத்த வாடை வெறி பிடித்த
பிணம்தின்னிக் கழுகுகளால்.   

அமைதியாய் வழி மொழிந்தன
வல்லூறுகள் கூட்டம்  இங்கு 
கடந்தன  காலத்தின் ஓட்டம்
தொடர்ந்தன கழுகுகளின் வெறியாட்டம் 
ஓடியது இரத்த ஆற்றின் பெருவெள்ளம் .

பிஞ்சுகள்  காய்கள் முதிர் கனிகள் 
அத்தனையும் போயின வெள்ளத்தில் 
தடுத்து நிறுத்த கற்களும்  இல்லை   
பிடித்து வைக்க தூண்களும் இல்லை
வல்லூறுகள்  கூட்டம்  வேடிக்கை பார்த்தது.

ராஜாளி தலைமைத்துவத்தில்
கட்டுண்டது கழுகுக் கூட்டம்
வழங்கியது சன்மானம்
இரத்தத்தை பிழிந்து  இதயத்தை
துளைத்தெடுக்கும் ஏவுகணைகள்

பிணம்தின்னிக்  கழுகுகளுக்கு கொண்டாட்டம்
பெருகியோடும் இரத்த ஆற்றில்
பெருமிதமாய் படகு விட்டு 
வெற்றிக் கொடியேற்றி  வீரவசனம் பேசி
சுற்றி உலா வந்து திளைத்துப் போயின 


வல்லூறுகள் கூட்டம் ரசித்தது
இணைந்தது  கைகோர்த்து வலம் வந்தது
ராஜாளி கிரீடத்தை தூக்கி பார்த்து
‘உயரத்தில் இருக்கிறேன்’ என்பதை
உறுதி செய்து பறைசாற்றியது   
 
காலத்தின் பிடியில் சிக்கியது சிற்றினம்
சிதறியது  சின்னாபின்னமாய் 
சொந்தங்கள் பந்தங்கள் சொல்லிக்க ஏதுமில்லை
 தபால்  தலை ஒட்டாத அஞ்சல்களாய்
அஞ்சலக  பெட்டிகளில் நிரந்தர  அகதிகள்



 

Offline சக்திராகவா


சுரக்காத மார்பு
சுவைக்காத நாவு
உருகி கருக
ஓர் எலும்புக்கூடு

எங்கோ ஒரு தேசம்
எதுவும் இன்றி
இரைத்தேடும் பறவைக்கு!

இங்கோ பல கூட்டம்
இறந்தோர்க்கு
சிலை வைக்க!

பருந்துக்கென்ன
இறந்தால் இரை
அகண்ட பாரில்
அளவோடு தானோ
அன்பும் அமைதியும்

எச்சில் கூட சுரக்கவில்லை
எப்படி பட்ட காட்சி இது
வறண்டது வாழ்வாதாரம் - கருணை
இருண்டது இது ஆதாரம்

கொடிக்கட்டி பறக்கும் நாடுகளே
எங்கே உமது கொடுக்கும் குணம்
கொடுத்துவிட்டீரோ??

சக்தி ராகவா

Offline JerrY

பசியெனும் இருகை சோறு எடுத்து ..
நம் கையால் அதை அவன் வாயில் திணித்து ..
வறுமையெனும் பரிசு எடுத்து அதை
அவன் வாயில் சென்று நம் கொடுத்து ..

நம் மட்டும் உயர் ரக உணவு எடுத்து ''
உலகம் இதுத்தான் சிரித்துக்கொண்டே சித்தாந்தம் பேசுகிறோம் ..

சதை ஒட்டிய உடம்பு உதிர்த்த தேகம்
இமை திறவா கண்கள் ..
பிணம் தானோ என்று கண்கலங்க கடைக்கைல
மெல்லியதாய் ஒரு குரல் பசி பசி ??

தலைக்குனிந்து பார்த்தான் என்னுள் ஒருவன்
மூன்று வேலை உணவோடு , என் வயிறு தினம் நிரம்ப
பிணத்தின் சாயலோடு என் கண்முன்
கையேந்தி நிற்கும் என் சக மனிதன் ..

குனிந்த தலை , தலை நிமிர வெட்கி
குனிந்தே நின்றது ....

பசியால் ஒருவன் இறந்தால் , அந்த பாவம்
உலகின் ஒவொருவரையும் சாரும் ..

தனி ஒரு மனிதனுக்கு உணவு இளைஞனில்
இந்த உலகினை அழித்திடுவோம் ..

இவன் ..

இரா.ஜெகதீஷ் ..

Offline EmiNeM

வறுமை தீண்டிய தேகத்தை
தீண்ட நினைக்குது
ஒரு கழுகு

விடுவாளா அதன் தாய்...
தன் ஒட்டிய மார்பில்
சுரக்கும் இரு சொட்டு
பாலெனினும்
அதை தன் சேய்க்கு
ஊட்டி பசியாற வைப்பாள்

கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
எனும் அவ்வையின் கூற்று
படித்தால் புரியாது
உணர்ந்தால் மட்டுமே புரியும்

நாம் என்ன  செய்கிறோம்
ஒரு குழந்தை பசி என்று
கை நீட்டினால் விலகி செல்கிறோம்

யாருக்கான வாழ்க்கை இது ...?
நான் மட்டுமே வாழ வேண்டும் என்ற சுயநலமா?
என் குடும்பம் மட்டுமே போதும் என்ற பிற்போக்குத்தனமா?

எளியவர்களை விழுங்கி கொண்டிருக்கும்
வலியவர்கள் வாழும்
உலகமிது..
என்றேனும் ஒரு நாள் ..
வலியவனும் எளியவன் ஆவான்
என்பதை மறந்து...

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 704
  • Total likes: 2382
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear


இதயத்தை வருடும் ஒரு
இயற்கையின் அவலத்தை
படம் போட்டுக் காட்டும்  படம் இது


உணவில்லாமல் உடையில்லாமல்
நோய்தீர்க்க மருந்தில்லாமல்
அழிகிறது ஒரு இனம்
எண்ணெய் இருந்தால்  ஓடி போகும்
தங்கம் இருந்தால் தேடித் போகும்
வல்லரசு நாடுகளே
மனித இனம் சுடுகாடாக மாறுவதை தடுக்க
போகாதது ஏனோ 

வல்லூறு கூட
இந்த சிறுவனின் நிலை கண்டு
பரிதாபப்பட்டு பார்த்துக் கொண்டிருக்கிறது
மனிதநேயம் ஈகை குணம் என
வாய் கிழிய பேசிடும் மானிடரே
மெளனமாக இருப்பதும் ஏனோ

அழிவுப் பாதைக்கு அஸ்திவாரம் போடும்
வளர்ந்த நாடுகளே
ஆக்கப் பாதைக்கும் வழியிடுங்களேன்

இதயம் இருப்போரே
இதயத்தில் இரக்கம் இருந்தால்
ஈரம் இதயத்தில் இருந்தால்
சிந்தியுங்கள்
ஒரு குழந்தை பட்டினியால் மரணிப்பது
மனித குலத்துக்கே அவமானம்

நம் ஊரிலும் எத்தனையோ குழந்தைகள்
உண்ண உணவின்றி
உடுக்க உடையின்றி
சேரிகளில் பாதைரோரங்களிலும்
குப்பை தொட்டில்கள் அவர்களுக்கு
உணவிடும் உணவகம்

எத்தனையோ விதத்தில் உணவுகளை
வீண்விரயம் பண்ணுகிறோம்
தேவைக்கு அதிகமானதை
இல்லாத வறியவர்களுக்கு கொடுத்தால்
மனிதகுலம்  வாழும் வாழ்த்தும்

பதிப்புரிமை
BreeZe