Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 116  (Read 3169 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 116
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 12, 2018, 10:36:28 AM by MysteRy »

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
இயற்கை அழுகிறது !
« Reply #1 on: September 04, 2016, 12:20:51 PM »
அழகான இயற்கையின் எழிலை ....
ரசிக்கிறேன் ...
மறுகணம் , அச்சம் உண்டாகிறது ...:(

இயற்கை !
அதன் அமைதியை இழந்து
ஆத்திரம் கொண்டால் ....

என்ன ஆகும் ...  நம் நிலைமை...!

நதி - சமுத்திரமாகி கொந்தளிக்கும் 
மலை - எரிமலையாகி அனல் கக்கும்,
நிலம் - பூமி அதிர்ச்சியாகி பிளக்கும் ,
இளங்காற்று  புயலாய் மாறும்,
ஆகாயம்  இருண்டு போகும் .. 

இதற்க்கு ..யார் காரணம் ?

நாம் , மனித இனம் !! 
இயற்கையை அழிக்கிறோம்...
சிரித்தோம்...!! :D
நீரில்  நச்சு கலக்கிறோம்...
மரங்களை வெட்டுகிறோம் ...
குப்பைகளை எரிக்கின்றோம்...
விஷக்  காற்றினால் பெரிய துவாரம்...

இவை  செய்தும், இயற்கை...!!!
அமைதியாய் பொறுமையாய்  இருக்கிறது ....
நிலைமையை  நினைத்து அழுகிறது  ...

பொறுத்தது போதும் !!! பொங்கியெழு ...
அவர்கள்  அழித்தார்கள்... 
இப்பொது  எங்கள் முறை!!!

பொறுத்துக்கொள் மனிதா …!!!
அழிக்கும் பொழுது  தெரியவில்லையா..!!!!  >:(   
இப்போது  கண்ணீர்  சிந்து  .. :'(
சிரித்தாய்  அப்போது.. :D
இப்போது  சிரிக்கிறோம் உன்னை பார்த்து .. ;D

பதில் சொல் ?
என்று  ஏளனமாய்   சிரிக்குறது … !!!!


மன்னித்துவிடு !!! வருந்துகிறோம்  :(
வினை விதையிட்டோம்...   
இப்போது அழுகிறோம்   
திருத்தம்  செய்கிறோம்  !!
இயற்கையை  நேசிப்போம் , சுவாசிப்போம்  ..
சபதம்  கொள்வோம் ..

கவலையுடன்

ப்ளாஜிங் (Blazing)
« Last Edit: September 10, 2016, 04:08:25 AM by BlazinG BeautY »

Offline JEE

அமைதியான நதியினிலே...... 
நதிமீதே மிதந்துந்தினிலே.........
மூன்றாம் தட்டினிலே......
என் இனிய  நண்பர்களோடு....
என் இனிய இல்லத்தரசியோடு.....
என்  மழலைகுட்டிகளோடு......
இருப்பதை காணவில்லையா ?

அழகான மலைக்காட்சி
அழகான நீர்வீழ்ச்சி
அழகான ஆறு
அழகான பசுமை புற்தரை....

இனிய இன்பம் சொல்லவோ?
வார்த்தை இல்லையே.....

கண்ணுக்கினிய காட்சி.......
மனதுக்கினிய காட்சி......
மனதுக்கினிய  மனநிம்மதி.....
அலையில்லா தெளிந்த   மனஅமைதி.......


மலையேற   பெலனுள்ள   போது     
மலை ஏறு...



மலையேற   இயலாதோர்
மலையேறவா?....
மலை ஏறிச்செல்லவா?.....

பக்கத்தில்  பார் வசதியாயுள்ளதே......
பாருக்குள்ளே  போய் வந்தோர் 
மலையேறி அனுபவித்து  மலந்தார்.... ...

இறைவனின் படைப்பின் அற்புதம்
இன்னும் பல காட்சி கண்டோம்.......

இச்சுற்றுலாக் காட்சியை  பார்த்து
நம்மவர் யாவரும் சுற்றுலா போக
நண்பரே வாரீரோ ???
என தூண்டுவதாக  அமைகிறது......

போவோமா? 

இநத இனிய இன்பக்காட்சி காண.....

வாழ்க வளமுடன்....................

« Last Edit: September 04, 2016, 04:39:03 PM by JEE »
with kind regard,

G'vakumar.

Offline ReeNa

அழகான நதியின் மேல் பயணம்......

அப்பயணத்தில் கற்பனையெனும்
மிதவை உந்தில் மிதக்கிறேன்.....

கற்பாறைகளில் அலைகள் மோதுவதை
அபிநயம் கொண்டு  நடனமாடுவதை
கலை நயத்தோடு ரசிக்கிறேன்.....

ஓடக்காரன் பாடுகின்ற பாட்டுக்கு
மெட்டு போடும் அன்பு தோழனாகிய 
என் இனிய நதியே....

மலைப்பாறைகளிலிருந்து தவழ்ந்து 
பரந்த கற்கள் மீது தாவி குதித்து ஓடும்
என் இனிய நதியே....   

இதயத்தில் சாரலாய் வீசும் காற்று
அடிக்கடி மெய்  தீண்டும் அலைகள்
இயற்கையின்  ரகசிய வரிகள்...

மலைகள் அணியும் மாலையாகிய நதியே
மாலைக்கு வண்ணம் கொடுத்த ஜீவ நதியே 

மனம் போன போக்கில்
ஓடும் அருமை   நதியே....
நீ போகுமிடமெல்லாம் 
செல்வம் கொழிக்க வைக்கிறாய் ..

பலநூறு ஆண்டு வரலாறு கொண்ட
வற்றாத ஜீவ நதியே...நீ..
மௌனமாக  மனிதனின்
சுயநலத்தின் அழிவை பாடுகிறாய்.....

உயர்ந்த மலையில் உருவான நீ
உருண்டோடி சமுத்திரத்தில் இணைகிறாய்...

மனிதனின் சுயநலத்தினை எண்ணி  எண்ணி
உயிர் கொடுக்கும் நதி  கலங்குகின்றதே...

நதி தாவி போகும் நீரோட்டம் தடுமாறுகின்றதே 
இன்று பெருவெள்ளம் பொங்கி எழும்புகின்றதே...

அழகான நதியின் மேல் பயணம் செல்லும்
என் இனிய கற்பனையும் கலையுதே....


« Last Edit: September 06, 2016, 04:01:29 PM by ReeNa »

Offline RubeshV

அமைதி தவழும் ஆற்றினில்
அழகிய படகொன்று தவழ்ந்து செல்லும் ..

அவ்வாற்றினில் வெள்ளம் பெருக்கெடுத்தால்
அவ்வழகிய  படகானது நிலைகுலைந்தாடும் ...


அமைதி தவழும் வாழ்க்கையினில்
அழகிய குடும்பமொன்று தவழ்ந்து செல்லும்..

அவ்வாழ்க்கையினில் போராட்டமெனும் வெள்ளம் பெருக்கெடுத்தால்
அவ்வழகிய குடும்பமானது நிலைகுலைந்தாடும்  ...

வாழ்க்கையெனும் நதியினிலே
போராட்டமெனும் வெள்ளத்தை வென்றெடுக்க

 நம்பிக்கையுடன்  நகர்ந்து கொண்டே இருப்போம்  நதியினை போல் 
வெற்றி அன்னை அரவணைக்க காத்திருக்கிறாள் சமுத்திரத்தில்

Offline DaffoDillieS

  • Full Member
  • *
  • Posts: 117
  • Total likes: 696
  • Karma: +0/-0
  • Gender: Female
  • madhangalai olippom manidhaneyathai kapom
பனி படர்ந்த வேளையில்..
நீர் ததும்பியோடும் நதியில்..
மொட்டுக்கள் துயிலெழும் பொழுதினில்..
ஆனந்தக் கப்பலில்..
ஓர் உல்லாசப்  பயணம்!

சில் காற்றின் ஸ்பரிசத்தோடு..
புத்துணர்ச்சி பொங்க..
சலசல ஓசையுடன்..
கதிரவனைத் தேடி..
ஓர் உல்லாசப் பயணம்!

பச்சை வர்ணம் பூசிக் கொண்ட..
மலைகளோடும்..
அதிகாலை வானத்தின் வெளிர் நிறத்தைப் பூசிக் கொண்ட..
ஆற்றுத்தண்ணீரோடும்..
இனிமையின் உணர்வைப் பூசிக்கொண்ட..
பறவைகளின் கின்கினி ஓசைகளோடும்..
நித்தமும் நினைவில் இருக்கும்..
ஓர் உல்லாசப் பயணம்!

இளஞ்சூரியனின் செந்நிறக் கதிர்கள்..
பூமிக்கு வந்து சேரும்முன்..!
பால் பொழியும் அழகு நிலா..
வான்மகனிடம் தற்காலிக விடை பெற்றுச் செல்லும் முன்..!
அதிகாலைப் பொழுதின் பனிப்பொழிவு..
சூரிய வெப்பத்தில் மறையும்முன்..!
வெள்ளித்தகடு போல் மின்னும்..
சமுத்திர ராஜனைக் காண..
ஓர் உல்லாசப் பயணம்!

வானுயர்ந்த மலைச்சிகரங்கள் உருவாக்கிய..
கலை நயமிக்க அரணின் ஊடே..
சின்னச்சின்ன அலைகள் நடனமாடும்..
இயற்கையே அமைத்த..
மேடையின் மேலே..
குடும்பங்களின் குதூகலம் பொங்கும்..
பேச்சுக்களோடும்..
காதலர்களின் அர்த்தமிகு..
அமைதியோடும்..
மழலைகளின் தேனினும்..
இனிய கூக்குரலோடும்..

செல்வோமே.. ஓர் அழகிய உல்லாசப் பயணம்..!!!!!



!வணக்கம்!
 



[/b]
[/color]
« Last Edit: September 06, 2016, 10:11:39 AM by DaffoDillieS »

Offline இணையத்தமிழன்

காட்டில் பிறந்து விலங்கோடு விளையாடி
 மலையை கிழித்து கல்லோடு உறவாடி
இனிய இசையோடு  பாய்ந்து ஓடி
தன் வழி  உள்ளதை  பொருட்படுத்தாமல்
மீன்களோடும் இயற்கையோடும் உரையாடியது
அன்று நான் கண்ட  நதி 

ஒரு நிமிடம் நினைவுக்கு வந்து போனது
என் தோல் மீது அமர்ந்து   மகள் அப்பா
இது தான் நதியா என
மணல் லாரிகள் மட்டுமே   ஓடிய
நதியை காட்டி  கேட்டபோது
அன்றுதான் புரிந்தது நாம்
என்ன  தொலைத்தோம் என்று,
அன்று கரைபுரண்டு ஓடியது என் கண்ணில் ஒரு  நதி

                                      -இணைய தமிழன்
 
« Last Edit: September 06, 2016, 10:27:18 AM by DraGoN BorN »

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline fayaz

பனிமூடிய அதிகாலை
புல்வெளி போர்த்திய மலைச் சோலை..

காற்றின் ஈரப்பதம்..
பறவைகளின் இனிய கீதம்..

மலைத்தொட்டியின் ஊடே மிதந்து செல்லும் அழகிய பயணியர் கப்பல்..
கானாத இயற்கையின் வனப்பைக் கண்டு ரசிக்கும் ஆர்வமிகு கண்கள்..

கப்பல் மிதக்க..
மனதும் மிதக்க..
இக்கப்பல் பயணம் மனதைத் சிறகாக்கியதே..
« Last Edit: September 05, 2016, 11:18:41 PM by fayaz »

Offline சக்திராகவா

மலையோடு பேசும்
நிலை மாறும் மேகம்!
மழைச்சாரலாகி
மண் வந்து சேரும்
 

நதியும் மீனும்
நடுவிலே அவளும்
மழை சாரல் தேடும்
மலர் போல நானும்!

தண்ணீரில் இறங்கும்
பனி போல
தமிழோடு கவியும்
விளையாட

மழையும் முகிலும்
மனதிற்கினிது

சக்தி ராகவா

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
மெதுவென நகரம்
கார்மேகங்கள் ...
உன்னை சீண்டவே
நான் என்பதுபோல்
மேகத்தைத் தொட்டிருக்கும்
மலை சிகரங்கள் ....

சில்லென வீசும் தென்றல் ....
சல சலவென நீர் ஓடும் ஓசை ...
என்னுள் நீ என்றும்
கலந்துருப்பாய்
என்பதுபோல்
தென்றலுடன் நீர் இணைந்து
வீசும் சாரல் .........

அழகிற்கே அழகு சேர்ப்பதுபோல்
கையில் சிக்காமல்
தாவி தவழ்ந்து தழுவி
ஓடும் நதியலைகள் .....

அழகிற்கு கண் படாமலிருக்க
திருஷ்டி பொட்டைபோல்
நதியலைகளின் அசைவில்
ஆடி அபிநயம் பிடித்து
மிதந்து நிற்கும் கப்பல் ......

இவை அனைத்தையும் ரசித்தபடி
மிதக்கும் கப்பலில்
யாம் மிதக்க ...
எனது உள்ளம் வானில் மிதக்கிறது .....
இயற்கையின் அழகை
ரசிக்க இரு கண்கள் பொதுமன்றோ ....!!!!

~ !!!... நன்றி ...!!! ~
~ !!!... ரித்திகா ...!!! ~

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
நினைக்கும் நேரமெல்லாம்
நினைவுகள் நெஞ்சை நிறைக்கிறது
வருடத்தில் பத்து மாதங்கள்
ரசிக்க புசிக்க நேரமின்றி
ஓடி ஓடி உழைச்சாச்சி
சற்றே மாறுதலுக்காக
ஓர் ஒய்வு பயணம்
பிடித்த நண்பர்களுடன் ...!

இரு புறமும் பச்சை பசேல்
என்று இயற்கை எழில் கொஞ்ச
நடுவில் நீளமாய் அழகு
சுண்டி இழுக்கும் நீரில்
காலை வெண்பனியில்
சுகமான காற்று வீச ...!

இளையராஜாவின் இன்னிசை
காதில் ஒலிக்க எனக்கு பிடித்த
தேநீர் கோப்பையோடு
இயற்கையை ரசித்து கொண்டே
 கப்பலில் சுகமாய் ஒரு பயணம்
இறைவன் படைத்த இயற்கை
ஒவ்வொன்றும்  ஓர் அழகு தான்
அன்று நான் ரசித்தது என்றும்
பசுமையாய் என் நினைவுகளில்  ...!
« Last Edit: September 06, 2016, 07:59:25 PM by பவித்ரா »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
« Last Edit: September 08, 2016, 06:10:39 PM by Maran »