இரு மனம் இணைந்து ...
இரு குணம் உணர்ந்து ...
இரு விட்டார் ஒன்று கூடி
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
மேளம் கொட்டித் தாலி கட்ட
கரமோடு கரம் கோர்த்து
அக்கினியைச் சுற்றி வர
மணமக்கள் அகத்திலும் முகத்திலும்
தேஜஸ் ஒளிர....
ஏழேழு ஜென்ம தொடர் பந்தமென
நடந்தேறுவதே திருமணம் ....
என்ன ஒரு அழகான கற்பனை ...
ஆம் ..கற்பனையே ...இதுவெறும் கனவே ....
சாதி பணம் நிறம் கெளரவம் பொருத்தம்
நட்சத்திரம் என
இவைகளை மட்டுமே பார்த்து
காலம் முழுவதும் ஒன்றிணைந்து
வாழப் போகும் இரு மனங்களைப்
பற்றி துறம்பலவும் கவலையின்றி
தமது குறிக்கோளை மட்டும் நிறைவேற்றி
சுயநலத்துடனும் நிற்கும்
மனிதர்களிடையே திருமணம் என்பது
வேறு மணம்.....
சாதி சாதி சாதியென
சாதியைப் பார்த்தே வாழ்விரானால் ....
நீர் மரணித்த பின்பு
உம்மை சுமக்க நாதில்லை ....
இடுகாட்டில் உம் சடலத்தில்
புதைக்க இடமுமில்லை ....
பத்து பொருத்தங்களை மட்டும் பார்த்து
நடந்தேறிய திருமணம் ....
விவகாரத்தில் முடிந்து இன்று
மனமோ நாடுகிறது மறுமணம் ....
பூமாதேவியின் சுவரூபமானால் பெண் ....
சந்தையில் பேரம் பேசுவதுபோல்
அப்பாவையே வேடிக்கைப் பொருளென
நிற்க வைத்து பேரம் பேசுவதுஏனோ....
பணம் கொடுத்தால் வருபவள்
விலைமாது ....
வரதட்சணை எனும் பேரில்
உம் குலவதுவிடம் கொள்ளையடித்து
வாழ்க்கையைச் சீர்செய்ய
நினைக்கும் நீர் யாது என்பதினை
யாம் அறியலாமா .....

??
கோவிலேனும் இல்லத்தில்
விளக்கேற்ற வருபவள் குணத்தைத்
தெரிந்து கொள்ளவில்லை ....
தோலின் நிறத்தையும் அழகையும்
பார்த்தீர்கள் ....
இன்று உம் வீட்டில் நடக்கும்
போரை ஊரே ஒன்றுக்கூடி
கைகொட்டிச் சிரித்து ரசித்து
வேடிக்கைப் பார்க்கிறார்கள் ....
கெளரவம் உம் கெளரவம்
இன்று காற்றில் பட்டாம்பூச்சிபோல்
சிறகு முளைத்து வானில் பறக்கின்றது ....
திருமணம் வாழ்வில்
ஒருமுறை வரும் வைபோகம் ...
இன்னாருக்கு இன்னாரென
இறைவனால் முடிச்சியிட்டு
இரு உள்ளங்கள் இணைந்து
காதலெனும் பேரலையில் மூழ்கி
மூன்று முடிச்சியிட்டு
சந்தோஷ அலைக்கடலில்
நிகழவேண்டிய திருமணம் ....
உண்மையான அன்பினால்
ஒன்றிணைந்து
இரு கரங்களும் கோர்த்து
பெரியோரின் ஆசி பெற்று
ஏழேழு ஜென்ம பந்தம் தொடங்கட்டும் ....
தாலி எனும் மங்கல கயிற்று
தூக்கு கயிற்றன மாற்றலாகாமல் இருக்கட்டும் ....
நன்றி .......
~ !!.... ரித்திகா ....!! ~