Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 121  (Read 2400 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 121
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக   வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
« Last Edit: October 12, 2018, 10:40:08 AM by MysteRy »

Offline thamilan

ஆடையுடுத்திய விலங்காய்
மனிதனை மாற்றியது விஞ்ஞானம்
அறிவியல் ஆக்கத்துக்கு அழைப்பிதழ் தந்துவிட்டு
அழிவுப் பாதைக்கு
 அடிக்கல்  நாட்டியது விஞ்ஞானம்

விலங்கிடம் இருந்து தன்னை
பாதுகாக்க
விலங்குகளை வேட்டையாட
ஆதிமனிதன் ஆயுதங்களை கண்டுபிடித்தான்
நாகரிகம் வளர
அறிவும் வளர
தன் இனத்தை தானே  அழித்திட
ஆயுதங்களை கண்டு பிடித்தான்  நவீன மனிதன்

ஆசை அழிவுப் பாதைக்கு
வித்திடும்
மண்மேல் ஆசை
மதத்தின் மேல் ஆசை
மண்எண்ணையின் மேல் ஆசை 
இந்த ஆசைகள் யுத்தங்களாக  உருவெடுத்தன

தன் வளர்ச்சிக்காக
தன் இனத்தையே
கொன்று  குவித்தது யுத்தம்
மதங்களின் பேரால் தன் மதத்தவரையே
அழிக்கிறது இந்த யுத்தம்

அப்பாவிகள் கர்பிணிப் பெண்கள்
குழந்தைகள் முதியவர்கள்
என்ன பாவம் செய்தார்கள் இவர்கள்
எத்தனை உயிர்கள்
எத்தனை உடல்கள்
உடல் சிதறி குருதி பெருகி
மண்ணோடு மண்ணாகினவே

ஒரு சில தலைவர்களின் ஆசைகளும்
தீர்மானங்களுக்கும் விலையாக
சரிந்த சாம்பிராஜ்யங்களும்
மடிந்த மனித உயிர்களும்
எண்ணில் அடங்காதவை


Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
என் கண்ணே..
« Reply #2 on: October 10, 2016, 01:55:11 AM »
ஏன் இந்த கொடுமை
சாகவா நீ பிறந்தாய்..
என் கண்ணே! ஆர் அமுதே..
அதற்காகவா உன்னை ஈன்றெடுதேன்...

அழகிய பூமி என்றேன்
இப்போது இடுகாடு ஆனதே..
வசந்த பூமி என்றேன்...
இப்போது நரகம் ஆனதே...
உனக்கு ஏற்ற இடம் இல்லை இது..

நான் என்ன தவம் செய்தேனோ
என் கருவறையில் நீ பிறக்க...
நீ என்ன பாவம் செய்தாயோ
இந்த கொடூர உலகில்  பிறக்க..

மனம் ..
இரக்க மனம் எங்கே போனது...
சின்னஞ்சிறு குழந்தை
குரல் கேட்கவில்லையா...
குழந்தையின் அழுகை
சந்தோசம் கொண்டதா...


கேட்கிறதா உனக்கு  ..
என் கண்ணா என்னை அழைக்கிறேன் ..
அந்தோ! என் குழந்தை  அழுகிறான்..
இதோ! வந்தேன் கண்ணே..
பயம் வேண்டாம்..
அருகில் இருக்கென்டா  கண்ணா...


அந்த பூமி தேவை இல்லை...
அரக்க குணம் மிகுந்த
மனித உருவில் அலைகிறான்..
அழகிய பூமி நரகமானது...
 
எதை நினைத்து அழுவேன்
எனக்கு பிடித்த  அழகிய பூமி
அழிவதை நினைத்தா ..
இல்லை, குழந்தையை நினைத்தா..

சீக்கிரமா வந்து,
இந்த அழகிய புவியை காப்பாற்றுங்கள்..
இல்லையேல்!
அணைத்து அசுரர்களையும் அழித்துவிடுங்கள்..
நிம்மதியாக  வாழ விடுங்கள் ..
« Last Edit: October 14, 2016, 06:06:36 PM by BlazinG BeautY »

Offline AnoTH

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 323
  • Total likes: 1595
  • Karma: +0/-0
  • Gender: Male
  • சோதனைகளை சாதனையாய் மாற்று
என்ன எழுதுவது ?
எப்படித்  தொடங்குவது  ?
என்னவென்று சொல்வது ?
   முதல் வரி..............
இழப்பு என்பதா ?
இறப்பு என்பதா ?
இறுதி என்பதா ?


குபீர்! குபீர்! என்று என் வீட்டை நோக்கி
வருகிறது ஏவுகணைகள்.
சடார் சடார்  என்று சரமாரியாகச்  சரிகிறது
என் உறவுகளின் உடல்கள்.

தவழ்ந்து திரிகிறேன் வாய் பேச முடியாமல்.

நான்  அழுது பார்க்கிறேன் அன்னையவள்
மடியில் சரிந்திட. நடப்பதற்கு எத்தனிக்கின்றேன்
தந்தை கையைப்  பிடித்துவிட.


எங்கே அவர்கள் ?
-------------------------

நீடிக்கிறது  மௌனம்

வரமாட்டார்கள் அவர்கள் என்னை அள்ளி
அணைத்திட மாட்டார்கள்.

சிதறிய உயிர்களின் இரத்த வெள்ளத்தில்
என்ன சாதி தெரிந்ததோ எனக்குப்
புலப்படவில்லை.

சிதறிய உயிர்களில் என்ன மதம்
தெரிந்ததோ என்னால் 
உணரமுடியவில்லை.

இவர்கள் யார் ?


உழைத்து உழைத்து.........!
வலுவிழந்த தந்தைமார்களும்.

அடங்கி அடங்கி.........!
சலித்துப்போன பெண்கள்
குலத்தோரும்,

எண்ணி எண்ணி........!
நாளைய நாளைக்  கனவு
காணும் இளைஞர் பட்டாளமும்,

எதிர்காலம் எமது கையில் என்று
காத்திருக்கும் மழலைச் 
செல்வங்களும்,

இன்னும் சில நாட்கள் என்
பிள்ளைகளுடன் வாழ்ந்து விடலாம்
என்று உயிரைச்  சமாதானப்படுத்தி
வைத்திருக்கும் வயோதிபர்களும்,

இப்படி என் கண் முன்னால்
கிடக்கிறது  நிறைவேறாமல் போன
உயிர்களின் குமுறல்கள்.

வாழ்ந்து விடலாம் யாருக்காக ?

பேசி விடலாம் எதற்காக ?


பசி,தாகம், வலி
அதற்கு  வழி அனாதையாகவாழ்ந்து விடுவது.

ஆனால் நான் வாழ்ந்து என்ன  பயன் ? 

வேண்டாம்.....

தாக்கட்டும்

      ஆளப்பிறந்தவர்களின் ஏவுகணைகள்,

துளைக்கட்டும்

     நான் என்ற
கர்வம் வழி வந்த
மனிதர்களின் துப்பாக்கித்தோட்டாக்கள்,


சிதறடிக்கட்டும்

     ஒற்றுமை வாழ்வை
விரும்பாமல் சிதறிப்போன இன வாதிகளின்
குண்டுகள்.

நான் வாழ்வதை விட வீழ்ந்து போகலாம்.
இந்த உலகம் என்னையும் பயன்படுத்தி விடும்
இன்னொரு யுத்தகளத்தில் என் சகோதரனையும்
அனாதை ஆக்கிவிட.


இறுதியாக ஒரு நொடி நான் மரணிக்கும்
இந்த இடத்தில்

நாளை மரம் ஒன்று முளைவிடும்.
அழித்து விடாதீர்கள் என் இரத்தத்தில்
செழிக்கட்டும் பறவைகளின் இருப்பிடம் .

« Last Edit: October 11, 2016, 02:08:08 AM by AnoTH »

Offline பொய்கை

  • Full Member
  • *
  • Posts: 108
  • Total likes: 792
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யாகாவராயினும் நாகாக்க...
அம்மாவின் ஸ்பரிசம் பட
அமைதியாய் உறங்கிய
அருமையான நேரத்தில்
அய்யோ என்ற ஓலத்தில்
அணு குண்டு வெடித்ததுபோல
அப்பப்பா ..ஒரு வெடி  சத்தம்
அம்மாவும் சாய்ந்திடவே
அவள் ஆன்மாவும் ஓய்ந்திடவே
அன்னையவள் ஊட்டிய
அருமருந்தாம் அவள் தாய்ப்பாலும்
அஞ்சி நடுங்கிய பிஞ்சு அதன்
அண்ணம் தொட்டு  கசிந்தொழுக
அம்மா.. என்ற அலறல் கேட்டு
அருகாமை நின்றுஇருந்த
அன்பான காவலனும்
அற்பமான அவன் உயிரை
அந்தரத்தில் பறக்க  விட்டு
அப்பா போல வாஞ்சையுடன்
அனைத்திட்டான் நெஞ்சுடனே !
அடுத்தடுத்தடுத்து ஆயிரம்
அழுகுரல் கேட்டிடவே
அவர்களையும் காத்திடவே
அப்பொழுதே ஓடிப்போனான்..
அங்கொன்றும் இங்கொன்றும்
அழுகையோடு என்னைப்போல பலசேர ,
அம்மா சொன்ன பெயரெல்லாம்
அவளோடு போனதாலே
அனைவருக்கும் இப்போ ஒரே பெயர்
"அனாதை குழந்தை" என்று ...
« Last Edit: October 10, 2016, 03:54:50 AM by பொய்கை »

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
சுயநலம் மேலோங்க இதயம் சுருங்கி
தன் வருவாய் பெருக்க
தான்தோன்றியாய் வாழ்வோரை
கண்கூடாக காணும் போதும்
சில மனித நேயமிக்க சகிப்புத்தன்மை
கொண்ட இதயங்களை எல்லா இடத்திலும்
இன்றும் காண்கையில்  அவர்களது 
செயல்களில்அன்னை
தெரசாவை  காண்கிறேன்    ....!

ஊதியம் குறைவு என்றாலும்
அதில் நிறைவு கண்டு வாழ
பழகி குடும்பம் விட்டு பிரிந்து
என்னேரமும் தனக்கும் ஏதும்
ஆபத்து நிகழலாம் என்று அறிந்தே 
அழைத்தால் போதும் நான் நிற்பேன் அங்கு
 துணிச்சலாய் தேவை அறிந்து
தீர்வு காணும் அவனும்  என் நண்பனே ....!

அண்டை வீடு பிள்ளை கொஞ்சம்
அசூயையாய் இருந்தாலே
அள்ளி அணைக்க தயங்கும் இதயங்கள் பல
அனைவருக்கும் கருணை இருக்கு ,
எழுத்து பேச்சு வடிவில். ஆனால் 
செயலில் இறங்குபவர்  சிலர் மட்டுமே
யார் வீடு பிள்ளையோ, ஆணோ; பெண்ணோ
ஆபத்து என்றால் அவனை பொறுத்த வரை அது ஒரு உயிர்
அது காக்கும் பொருட்டு போராடும்
ஒவ்வொருவரும்  நிஜ கதாநாயகனே   ..!

நாட்டு மக்களுக்காக உழைக்க
பல பணிகள் இருந்தாலும்
அதிகார துஷ்பிரயோகம்
இல்லாத, மனிதனுக்காக மட்டுமின்றி 
அனைத்து ஜீவராசிகளுக்குமாய்
இயற்கை தாண்டவம் ஆடும் போதும்
தீவிர வாதத்தின் காட்டு மிராண்டி
தனத்தினாலும் நடக்கும் கொடுமைகளில்
மக்களை காக்கும் பொருட்டு 
இன்னுயிர் துறந்த பலரும்
தியாகத்தின் திரு  உருவே  ...!
« Last Edit: October 10, 2016, 05:48:38 AM by பவித்ரா »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline JEE

வண்ண வண்ண பூச்சுகள் 
வர்ணமற்ற
ஏணிப்படிகளுடன்
பாழடைந்த வீடு.......
வண்ண வண்ணப் பொருள்
அலங்காரமற்ற
வாசமில்லா  ஆள்
அரவமற்ற வீடு......

கடுங்குளிர் தாங்கும் 
ஆடையுடன முகம்
மூடி மறைத்தணிந்த தொப்பி.....
கடுங்குளிர் தாங்கும் 
சால்வையுடன முகம்
மூடி மறைத்தணிந்த கரம்................

முகபாவனை அறிந்தும் கற்பனை
தவறாகும் போது
முகபாவனை அறியாது கற்பனை
என்னவாகும்?.....

நீ பச்சிளம் குழந்தையோடு
கொஞ்சுகிறாயா?
நீ பச்சிளம் குழந்தையோடு
கெஞ்சுகிறாயா?.......
அழுகிறாயா? சிரிக்கிறாயா?
ஆனந்ததக் கண்ணீர் வடிக்கிறாயா?.......

அல்லல்படும் என் அறிவுக்கெட்டா
அச்செயல்தான் என்ன?......

நீ பெற்ற செல்வமோ?
உன் கண்மணியோ?..........
கடமை அழைக்கிறது
பிரிய வேண்டுமே என
கண் கலங்குகிறாயோ? ....

யார் பெற்ற செல்வமோ?
உன் கண்ணெதிரேயோ?
தனிமையில் கதறியதோ? .....
கடமை அழைக்கிறது
பிரிய வேண்டுமே என
கண் கலங்குகிறாயோ? .....

நான்கு சுவற்றுக்குள் யுத்தம்
நாங்க பேசி பார்த்தும் முடிவு இல்லை.......
நான்கு திசையிலும்கட்சிக்குள் யுத்தம்
அவங்க பேசி பார்த்தும் முடிவு இல்லை......
அண்டை மாநிலத்தோடு
தண்ணீர்க்காக யுத்தம்.........
யார் பேசியும் முடிவு இல்லை.........

காவேரி அழுகிறது .....
நான் நிறைய பேரை
இழுத்து கடலிலே
சேர்க்கவா செய்கிறேன்?.....
என்னை கேவலப்படுத்திட
நீதிமன்றத்துக்கு
இழுத்துட்டாங்களேன்னு......

காலம் கொடிது  கொடிது.........

அப்பனுக்கு விரோதமா மொவனும்
மொவனுக்கு விரோதமா ஆத்தாளும்
கத்தி கத்தி கத்தி குத்துற காலம்  இது..........

காலம் கொடிது  கொடிது.........

பகவானிடம் வேண்டுவோம்
யுத்தம் நிகழாதிருக்க...........
யாவரும் நலமுடனிருக்க..............


வாழ்க வளமுடன்.................

« Last Edit: October 10, 2016, 02:40:53 PM by JEE »
with kind regard,

G'vakumar.

Offline ReeNa

விரிந்திருந்தது வானம்..!
வீசியதே  கருகிய  வாசம்....

சிறு உயிர்கள் எல்லாம்
கருகிப் போனதே
பார்க்கும் மனதெல்லாம்
உருகிப் போனதே.....

வெடி குண்டு ஓசையெல்லாம்
எங்கும் கேட்குதே
கேட்க்கும் போதெல்லாம்   
மனம் பற்றி எரியுதே....

சிறு பிள்ளையின் கதறல்
ஒலிகளும்  கேட்குதே
நெஞ்சமெல்லாம
பதறிப்போகுதே

இரக்க  சிந்தனை இல்லாமல்
போர் வீரன் ஆபத்தைப்பாராமல்
போர் புரிகிறானே......

இறையே..........
நித்ய ஒளியாக வந்தீர்
மண்ணில்   வழி காட்ட
ஆனால்  நெருங்க விடவில்லை  புகை

மார்பில் ஒளித்து வைத்தீர் ஒளியை
படைக்கலம் சுமக்காமல்
பாசமாக  வந்தீர் .....

பொங்கி எழும்ப அந்நாள்
விரைவில் வரும்

காலத்தின் இறுதி இதுவெனக் காட்டும்
அடையாளமாய்க்  காணும்

யாம்  இக்கொடிய நாளுக்கு தப்பிட
வழி வகை தேடுவோமா?
யாமிருக்கும் பொழுதெல்லாம்
நன்மையே செய்வோமா?.....
« Last Edit: October 11, 2016, 07:03:42 PM by ReeNa »

Offline gab

வாத்துமடையனை வழி அனுப்பி வைத்தால் ,
வாத்துக்கள் எல்லாம் சேர்ந்து கூட்டம் போட்டு
சரியான  நரியை தேர்ந்தெடுத்து
இவன் காப்பான் என் தேசம் என்று
எதிர்பார்ப்போடு அனுப்பி வைத்ததின் வினை
துயரத்தை அறுவடை செய்யும் நிலை ..!

பெரும்பாலான போர்கள்
ஏகாதிபத்தியத்தின் தேவைக்கும்
அரசியல் சுயநலனுக்குமே என
வரலாற்றின் பக்கங்களில்
தெளிவான குறிப்புகள் .

வரிப்பணத்தை வாரி இறைத்தும், அதில்
அந்நியனின் காலாவதியான தொழில்நுட்பத்தை
அநியாய விலைக்கு வாங்கி
நாட்டை பாதுகாக்கும் நிலை.

நாடு நாடக சென்று ஒப்பந்தம் என்ற பேரிலே
 கையொப்பம் இட்டு கைகுலுக்கி
புகைப்படம்  எடுத்து நீ நீ திரும்ப ,
அண்டை நாட்டான் எல்லையில் அத்துமீறி
எங்கள் இயல்பு வாழ்க்கை கெட .
ஏதும் அறியாதவன் போல சிறு பேட்டியில்
உன் கதையை முடித்துக்கொள்வாய் !
உயிர்  கொடுத்து மக்களை காக்கும் கடமை
ராணுவத்துக்கு மட்டுமில்லை உமக்கும்தான்.

கூடுதல்  மழை பொழிந்தால்
இயற்கையை சபிப்போரே !
ஏதேனும் நன்னாளில் சாமானியன்
பட்டாசு வெடித்து மகிழ்ந்தாள் ஓசோனில்
ஓட்டை பெருசாய் போச்சி என்று
அங்கலாய்க்கும் அறிவு ஜீவிகளே !
நாட்டின் வளர்ச்சி ,பாதுகாப்பு கருதி என்று புளுகி
அணுகுண்டு சோதனை நடத்தும் கனவான்களிடம்
கூறுங்கள் பாப்போம் ..!

மக்களை  அழிப்பதற்கு அரசியல்
என்றால் அது எங்களுக்கு வேண்டாம் !
எங்களை காப்பது ராணுவம் தான் என்றால்
அவனே எங்கள் நாட்டை காக்கட்டும் .

போர்களில் வெல்பவனை விட
தன்மானம் இழக்காமல் போர்களை தவிர்ப்பவனே
மக்களாட்சியின் சிறந்த  தலைவன்.
வரும்முன்  காப்பவனே வலியவன்.

Offline சக்திராகவா

ஏந்திய ஆயுதம்
எதிர் திசை பாய்ப்பதும்
எண்ணிலடங்காத
எளியோர் வீழ்தலும்!

வெற்றியென்று நீ
தட்டிக்கொண்டால்
சுற்றிலும் வாழ
மனிதனுண்டோ

நோய் சாவதுபோல்
நீ வந்தும் சாவதனால்
உனை நோயென்றே
சொல்லிடவோ?

நாட்கள் ஓடவில்லை
நடப்பதற்கு மகன் பழகி
தாயவளின் கண்ணெதிரே
தாவி திரிந்தவனை

ஆவி பிரியும்படி
ஆழத்தில் உன் தோட்டா
கருவறை பதுக்கியது
கல்லறை படுத்தலுக்கா?

குண்டுமழை பொழிந்தவனே
உன் தண்டுவடம் நிமிர்ந்திருந்தால்
நீண்ட உடல் விரிந்திருந்தால்
நேரில் வா சுட்டுகொள்ள!

மழலை சிரிப்பரியா
மனித ஜடங்களுக்கு
மாண்ட இவன் முகத்தை
ஒரு கணம் காட்டுங்களேன்
மதவெறி தீரும்படி!

மாறாதவன் இருப்பானெனில்
மணமுடிந்து மகன் பிறந்தால்
மண்டியிட வருவானோ
மகனிழந்த தாய் காலில்!

சக்தி ராகவா!
« Last Edit: October 11, 2016, 09:31:22 AM by சக்திராகவா »