Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 122  (Read 3223 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218358
  • Total likes: 23054
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 122
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக   வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
« Last Edit: October 12, 2018, 10:40:37 AM by MysteRy »

Offline ! Viper !

இப்பொது கண்ணை திறந்து பார்
அதிர்ச்சியில் உறைந்து போனால்
வார்த்தைகள் மனதில் முட்டி மோதி அலைய ஆரம்பித்தது
அவளது சந்தோசம் முழுவதும் இதழின் ஓரத்தில் காண்பித்தாள்
ஒரு நிறைஞ்ச பார்வை என்னை பார்த்து புன்னகை இட்டால்

ஏன் எனக்காக இவ்வளவும் செயிரின்கள்
நான் அப்படி என்ன உங்கள் வாழ்வை மாற்றினேன்
என்று சந்தோஷத்தில் அவனை பார்த்து கேக்க

உன்னை சுற்றி ஒரு இருள் இருக்கிறது அல்லவா
அது நீ வருவதற்கு முன்பு இருந்த என்னோட வாழ்கை
இந்த இருளில் ஒரு அழகிய வெளிச்சம்
நம்மை அழகை கட்டுதே,,
அது நீ எனது வாழ்வில் வந்த பிறகு அடைந்த  எனது சந்தோசம் 

இருளில் கண் மூடாமல் மூடிய படி இருந்த எனக்கு
நீ வந்த பிறகு எனது வாழ்வை மாற்றி அமைத்தது
எனக்கும் வாழ்வில் ஒரு அர்த்தம் இருக்கிறது என்று
இவளுக்காக வாழவே நான் பிறந்தவன் என்று உணர்தேன்

மழை துளிகளில் நாம் நனைவது கூட தெறியாமல்
என் பார்வை வழியில் உன்னை நீ பார்கிறாய்யே
நம்மை சுற்றி மழை துளிகள் அழகாய் காட்சி அமைக்க
உன்னை நான் அடைந்தது வானங்கள்
 புன்னகை என்னும் மழை துளிகளை
ஆசீர்வதைப்பது போல,,

அவள் ரசித்து சிரித்த படியே
வெக்கத்தில் தன் காதலை வெளி படுத்தினால்
உனக்கென நான் எனக்கென நீ
வாழ்வின் இறுதி வரை
ஒன்றாய் இருப்போம்
« Last Edit: October 16, 2016, 11:58:19 AM by ! Viper ! »
Palm Springs commercial photography

Offline சக்திராகவா


இரவலாய் இரவும் வர
பரவலாய் மழையும் விழ
கைவிரல் பிடித்து
கால்களும் நகரும்!

குடை தொடும் மழைத்துளி
இடை படும் இரு விரல்
மயங்கி நீ சாய்ந்திட
மனமது தேய்திடும்

முழுஉடல் சூடேற
மூச்சிலே வெப்பமிட்டு
முகத்தில் இட்ட முத்தம்
முடியுமா விடியும் வரை

கன்னத்தில் சாய்ந்தும்
கண்கள் திறக்காமல்!
நெருக்கமாய் அணைக்க
நொறுங்கிவிட்டாளோ?

நெற்றிப்பொட்டில்
நேரடி முத்தமிட்டும்!
கூந்தல் காட்டில்
குருடணாய் நான்!

நின்றுவிட்டது மழை
நின்றபடியே இரு

சக்தி ராகவா

Offline AnoTH

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 323
  • Total likes: 1595
  • Karma: +0/-0
  • Gender: Male
  • சோதனைகளை சாதனையாய் மாற்று


காதல் செய்த மாயம் நீ
பிரம்மன் வடித்த ஓவியம் நீ
சிற்பியவன்  செதுக்கிய சிற்பம் நீ
கம்பன் எழுதிய காவியம் நீ

 
அழகியே !
 
கண்டேன் உன் விழிகளில்
பூக்களின் மொழியை.
கண்டேன் உன் கூந்தலில்
அருவியின் வீழ்ச்சியை.
கண்டேன் உன் புன்னகையில்
மலரும் மொட்டின் அதிசயத்தை.
 
என்ன இது ?

காளையர் கூட்டத்தில்
முறுக்கி விட்ட மீசை
இன்று காற்றில் பறந்தது.
 
தாயின் பேச்சுக்கு மறுகதை
பேசிய வார்த்தைகள்
இன்று ஓடிப்போனது.
 
வாலிபம் வரை தொடர்ந்த
முரட்டுத்தனம் இன்று
முடிந்துபோனது.
 
இன்னும் என்ன என்ன மாற்றங்கள்
செய்யப்போகிறாயோ என்னுள் ?
போதும் போதும் இந்த நொடிகள்
யுகங்களானது போதும்.
 

கதிரவன் அனுமதித்த
மழைத்துளியே !
நிலவொளி தாண்டி வந்த 
மழைத்துளியே !

ஆடலும் பாடலும்
இன்னிசை விருந்தளிக்க
தாத்தாவும் பாட்டியும்
அந்நாளை மனதில் எண்ணிட,
தாயும் தந்தையும் 
உற்றாரும் உறவினரும்
ஆசீர்வதிக்க, தோழர்  தோழியர் 
எமது கதையைப் பேசிட

இனிதே முடிந்தது அழகிய 
திருமண நாள்.

என்னவளில்  என்னே அழகு ?
ஓர்  அழகு தேவதையாய் 
காட்சிதந்தால்..

காதல் தேவதையே !

தவிப்பை உணர்கிறேன்
என்னவளின் கண்களில்
வடிந்திடும் கண்ணீரால் .

உனது அன்பான மேனியில்
முத்தமிட்டுச்  சென்றுவிடு
கார்மேகத்தின் தூதுவனே !
மழைத்துளியே !


« Last Edit: October 17, 2016, 01:18:57 PM by AnoTH »

Offline SweeTie

ஆயிரம் தாரகைகள்  ஆராத்தி  எடுக்க
நிலா  மகள்  அழகு நடை பயில
துளி  மழையில்   ஒரு குடையில்
துவண்டு விழும் மெல்லிடையாள் நான்
அள்ளி  அணைக்க  ஆறடி ஆண்மகன் நீ

என்னவளே இனியவளே கயலுக்கு இளையவளே
துள்ளி வரும் ஓவியமே   பொன்மகளே
தென்றலில் தவழ்ந்து வந்தேன்
உன் கடை விழியில் ஒளிந்து கொள்வேன்
இடம் கொடடி  என்றவனே ! என்  காதலனே !! 

கண்ணோடு கண் நோக்கி
செவ்விதழோடு  இதழ்  சேர்த்து
படித்திடுவோம் காதல் கவிதைகள் 
வார்த்தைகளில் மொழிகள் இல்லை 
தெரிந்ததும் அறிந்ததும் பாதி பாதி

இதயங்களின் சங்கமம் - அதில்
உருவாகும் அலைகளின் அசுரவேகம்
பூகம்பம்   எரிமலைகள் தோற்றுவிடும்
விசையோடு கூடிவரும் வாகையும்  மறைந்துவிடும்
நிசப்ததைக் கிழிக்கும் மூச்சின் முனகல்.

ஊடல் கொண்ட பெண்மை  மண்பார்த்து
நெற்கதிர்போல்  நாணி நிற்க
கூடல் வேண்டி மன்னன் உள்ளம் அருகேவர
மடை திறந்த வெள்ளம்போல் 
அணை திறந்த மௌனம்   நிலைகொண்ட தங்கே!!!
 
« Last Edit: October 16, 2016, 05:43:19 PM by SweeTie »

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!

இன்பமான வாழ்வு..
இரு மனம் சேர்ந்து ..
இணைந்தது திருமணத்தில்..

மனது ஏங்கியது..
மழைசாரலில்  நனைய..
எண்ணம் தோன்றி முடிப்பதற்குள்..
என்னவர் வந்தார்  குடையுடன்..

புன்னகைத்தேன்  ..
புன்னகைத்தார் என்னை பார்த்து.
நடந்தோம் மழையில்..
நடக்கையில் கரம்  பற்றினார்..

மாலை நேர மழைச்சாரல்,
மணாளன் என்னை தங்கி கொள்ள..
விழாமல் காக்கிறார்...
வாழ்நாள் முழுதும் ..
 
நிறைய பேசி.. சிரித்தோம்,
நேரம் போனது தெரியாமல்..
குடை இருந்தும் ..
குடை இல்லாமல் நின்றோம்..

மோதிரம் என் விரலில் இட்டு..
மூழ்கிப்போனேன்...
இரசித்தார் இப்படியே..
இளவரசி போல் நின்றேன்  ...

திடுக்கிட்டோம்..
தோழி ஓடிவந்தாள்..
நேரம் ஆகிற்று ..
நனைந்தது போதும் ..

காத்திருக்கிறார்கள்  உங்களுக்காக..
காத்திருந்த நேரம் வந்தது..
உள்ளங்கள்   இணையும் நேரம்
உங்கள் புது வாழ்க்கைக்கு..

வாழ்த்துகள்
« Last Edit: October 18, 2016, 03:58:31 PM by BlazinG BeautY »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
வெள்ளை மேகங்கள் மறைய ...
கார்மேகங்கள்  தோன்ற ....
சொட்டு சொட்டென தூறிடும்
மழை துளிகள் ....
அழுகின்றனவோ ....
சந்தோஷ குதுகலத்தில் ஆடுகின்றனவோ ....

நனைக்காமல் நனைத்திடும்
சிறுகுடையினில் இருவரும்
நின்றிட .....
மழைத்துளி  முத்தென நம்மேல்
தூறிட  ....
என் கரம் வளைவினில் நீ ....
கண்ணோடு கண் கலந்திட ....
விழிகள் பாடிடும் காதல் கீதம் .....

உன்னை வர்ணித்திட எம்
நா துடித்திட .....
உன்னை
எப்படி வர்ணிப்பது என
குழம்பியே
என் வார்த்தைகள்
எல்லாம் பாதியில் நிற்கிறது......

கவிதையாய் உன்னை
வர்ணிக்க எண்ணிட .......
எதற்கும்
உன்னை ஒப்பிட்டு
எழுத என் கவிதைகள் எல்லாம்
அனுமதி மறுக்கிறது

நட்சத்திரப் பட்டாளம் சூழ்ந்திட ...
இரவினில் ஒற்றை விளக்காய்
ஜொலித்தித்திடும் நிலவு ....
தான்தான் அழகு என்று
கர்வம் கொண்ட நிலவும்
இன்று உன் முன்  தோற்றேதான்  நிற்கிறது .....

பெண்ணே ...எந்தன் காஞ்சனை நீயே ....
குணத்திலும் அகத்திலும்
பேரழகியை வென்றவள் நீயோ ....
அழகிற்கே அழகு சேர்த்தவளே ....
அழகானவைகள்
எல்லாம் உன் அழகை
கண்டது .....
அவைகளை அவைகளே
முழுவதுமாய் வெறுக்கிறது.....

உந்தன் ஒவ்வொரு அசைவில்
எந்தன் பூமியும் காலின்
கீழ் நழுவதான் செய்கிறது...
உன் காட்சிகள்
எல்லாம்
காவியங்களாய் வந்து
கண்ணுக்குள் பதிவாய் பதிகிறது...
எந்தன் காவிய தலைவியே ...


இந்த நொடி இவ்வாறே ...
நீளட்டுமே ...
மழைத்துளிகள் இப்படியே பொழியட்டுமே  ...
எமது கரம் உன் பொன்போன்ற
மேனியை சுமந்திருக்கட்டும் ....
உன் குளிர் மூச்சி பட்டு
எனது இதயம் பனிக்கட்டியை
உறைந்திடட்டும்
என் இதய தேவதையே ....
உனது அருமை ஒன்றே போதும்
மரணத்தையும் வென்றிடுவேன் ....

~ !! நன்றி !! ~
« Last Edit: October 18, 2016, 12:36:36 PM by ரித்திகா »


Offline DaffoDillieS

  • Full Member
  • *
  • Posts: 117
  • Total likes: 696
  • Karma: +0/-0
  • Gender: Female
  • madhangalai olippom manidhaneyathai kapom
உன்னைக் கண்ட..
அந்த ஒரு நொடி..!
என்னையே தொலைத்த..
அந்த ஒரு நிமிடம்..!
பூமி சுழல்வது தான் நின்றதுவோ..!
இதயம் துடிப்பதைத் தான் மறந்ததுவோ..!
என்னையும் அறியா அச்சம்..!
சென்றேன் உணர்வுகளின் உச்சம்..!

சில நிமிடங்கள்..
செவிகள் செயலிழக்க..
கரங்கள் படபடக்க..
கண்கள் இமைக்க மறக்க..
கால்கள் நிற்க மறுக்க..
கருவண்டு விழிகள் கண்டு ..
நாவு பேசும் சக்தியை இழக்க..

கண்டேன்..!
உன் இதழ்களில் தவழும் புன்சிரிப்பு..
என்னைத் திக்குமுக்காட வைக்கும் புல்லரிப்பு..!
உன் கன்னங்களில் குங்குமப்பூவின் இளஞ்சிவப்பு..
என்னைச் சந்தோஷத்தில் உறைய வைக்கும் பூரிப்பு..!

உன்னைச் சந்தித்த வேளையில்..
உண்டான காதல்..
நம்முள் வந்த அவ்வளவு கசப்புகளையும் இனிமையாக்கியதே..!!
ஊடல்களினும் நம் அன்பு பெரிதென்பதாலா??!!!

வான் பொழியும் இரவில்..
என் குடைக்குள் மழையாய்ப் பெய்பவளே..!
வாழ்க்கைச் சக்கரத்தில் இனைந்தவளே..!
மலர்களையொத்த மனம் படைத்தவளே..!
என் கைகளில் படர்ந்த பொற்கொடியே..!
சுட்டும் விழிப் பார்வையில்..
என்னை நிலைகுலையச் செய்பவளே..!
என் உயிரே! என் ஊனே!
வாழ்வின் ஏந்நொடியிலும் உனைப் பிரியேன்!!!

உன் பூக்கரங்களைப் பற்றி..
செங்காந்தள் விரலுக்கு..
மோதிரமிடக் காத்திருந்த அந்நாளும் வந்தாயிற்று...!!!
உன்னைக் காணக் காண..
நாடி நரம்பு தசைகளில் பெருக்கெடுத்தோடும்..
காதல் முற்றிப் பித்துப்பிடிக்கவிருந்த என்னை...
"திருமணம்" எனும் முதலுதவியழித்து மீட்டெடுத்த என் தேவதையே..!!
என் வாநாளை உனக்கே உரித்தாக்குகிறேன்..!!


!!!!!நன்றி!!!!!


« Last Edit: October 17, 2016, 09:47:15 AM by DaffoDillieS »

Offline ReeNa

காதல்  மழையே  காதல்  மழையே 
காணாமல்  இதயத்தில்  மோதும்  அலையே
மெளனமாக  பேசும்  மொழியே
மெல்லிய  இசையாய்  தீண்டும்  கலையே

முதல்  முதல் காதல்  சொல்லும்  இரவே
முதல் முத்தத்தில் தொடரும் காதல் உறவே
கனவுகள்  மலரும்  இனிய  நேரமே
குடை  நிழலில் நம் நினைவுகள்  சேருமே

காதலுக்கே உயிர் கொடுக்கும் தேவதையே - இது
நம் காதல் பயணத்தின் முதல் பாதையே
சந்தோஷத்தை  அளிக்கும்  என்  சுவாச  காற்றே
சாரலாய் எனை தீண்டும் இனிய அமுத ஊற்றே

கொட்டும்மழை வான்தரும் ஆசீர்வாத துளியே
விழுந்து நான் எழுகிறேன் உன்னழகு விழி வழியே
விழிகளை  பார்த்து  நானும்  வியந்தேனே
இதழ்களில் உன் முத்தமும் இனிக்கும் செந்தேனே

ஒரு  துளி  விழுந்து  மறு துளி  விழுகையிலே
மனம்  விட்டு  என்  காதலை  அறிவித்தேனே
கொட்டும் மழைக்கும் என் காதலை தெரிவித்தேனே.

உன்  ஈர  செவ்விதழ்  தந்த  முத்தத்திலே
மாமழை  இம்மண்ணில் உறைவது  போல
உனக்குள் நானும் மெல்ல உறைந்தேனே..
உன் அன்பால் பனித்துளிபோல கரைந்தேனே..

இரு  நெஞ்சம்  ஒன்றாய் கலந்திடவே
கண்விழிக்குள்  விழுந்த  கவிதையாக 
காதல்  உன்  முகத்தில்  மலர்ந்திடவே

மழையில் உன் காதல் மொழி சிலிர்க்கவைக்கிறது
உண்மை நேசமே நம் காதலை தளிர்க்கவைக்கிறது
பேசாமல் பேசும் அன்பின் கீதமே...
மெய்யன்பே நம் காதலின் வேதமே

நனைகிறேன் மழை சாரலில்
நித்தமும்  காதல்கைதி ஆகிறேன்  உன் மன சிறையில்.
மேகம் சூழ  உன்  அணைப்பிலே
மெதுவாக   என்னை  மறந்தேனே - காதலால்
காற்றில் குடை போல நானும் பறந்தேனே...

அந்த  அழகிய மழையது   
அமைத்த  அழகிய  நிமிடங்களே
நம் காதலின்  முதல்  அரங்கேற்றமே
காதலால் நம் வாழ்வில் வந்தது
மகிழ்ச்சி என்னும் பெரும் மாற்றமே.....
« Last Edit: October 18, 2016, 02:03:35 PM by ReeNa »

Offline JEE

நிற்பது தரையிலல்ல
பாறையோ? அல்ல
செதுக்கிய மரமென தோன்றுதே..........

நிற்பது  தண்ணீரிலல்ல
தரையிலோ? அல்ல
தெளிவான ஓடையென தோன்றுதே.........

வழுக்கிய பாறையோ?மரமோ?
வழுக்கியது உன் பாதம்
வழுக்கியதால் உன்குடை 
வழுகி காற்றிலே  உன்  பின்னே
வழுக்கி ஓட நினைக்கிறதே............

குடையில் தலையின் நிழல்
குடையில் கரத்தின்  நிழல்
நிலவொளியா? சூரியவொளியா?.........

நிலவொளியிலும் நிழல் பட
நம்மவர் நிலவொளியில்
குடைபிடிக்க மாட்டாரே?.............

சூரியவொளியிலும் நிழல் பட
நம்மவர் சூரியவொளியில்
குடைபிடிக்க மாட்டாரோ?.............

மழைச்சாரல் கூட இல்லை
மழை எங்கே?
காலத்து மழை போய்
ஏலத்து மழைபெய்கிறதே ....................

குடைவைத்தால்
மழைதான் பெய்ய வேண்டுமா? ..........

இருமருங்கிலும் பச்சைபசேலென
நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பற்ற
இலையுதிரா மரமெனத்  தோன்றுதே.....

குடையில்பட்ட நிழலைப்பார்த்து
காலத்தை  கணிக்க எனக்கு
இயலவில்லையே.......

நண்பகல் வேளையெனக்
காலத்தை  கணிக்கலாமோ?...........

அடிக்கடி குடைக்குள் இருவர்
நிற்பதும்  மழைக்காக....

இங்கு குடைக்குள் இருவர்
ஓடையை  ரசிக்கவோ?
ஒடையின் மேல் ஓடம் போலே
வாழ்க்கைக்கு அடியெடுத்து வைக்கவோ?....

நீராட வந்தவரோ? அல்ல
நீரிலாடிய சோலையை
காண  வந்தவரோ? ...........

எதோ விருந்துக்கு வந்தோமா
விருந்துண்டோமா வீட்டைப்பார்த்து
போனோமானு இல்லாம
விருந்துண்டு இயற்கையை ரசித்து
பொழுது போக்கிடவந்த புதுமணதம்பதியோ?........

அவர்கள் இயற்கைக்கு தொந்தரவு செய்தனரோ?
இயற்கை அவர்களுக்கு  தொந்தரவு செய்ததோ?......

லிப்ட் கேட்டு ஏறி கூடப் போனவர்
விபத்தில் போனது ஏராளம்....

நாலுநாள் லீவுல வீடு போகாமல்
நாலுவீடு போய் ஓடையில
நீந்த தெரியாமல்
விபத்தில் போனது ஏராளம்......

விபத்து என்பது ஒருமுறை  கூட
வரக்கூடாது
அடிக்கடி வழுக்கி வீழ்தல்
வரக்கூடாது......

எத்தனை பலமாக காற்று போல
பிரச்சனை வந்தாலும் வழுக்கி விழாமல்
இல்லறத்தை இனிதே கொண்டு செல்ல
இறைவன் அநுக்கிரம்  தேவை.........

வாழ்க வளமுடன்.........
« Last Edit: October 16, 2016, 12:05:19 PM by JEE »
with kind regard,

G'vakumar.

Offline RaNJaNi

  • Newbie
  • *
  • Posts: 24
  • Total likes: 99
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ✨Life is simple and Beautiful.!!. I 💓 my Life✨

இத்தருணமே
என்வாழ்வனைத்தும் காத்திருந்த  தருணம்
கார்மேகமோ  எங்களைச்சூழ   
மழை துளியோ மலர்த்தூவ 
என்னவனோ என்னுடைய மேனியில்
அந்த மழைத்துளியும் விழாமல்
தாங்கி அணைக்க   
 
இதயமோ இனைந்து துடிக்க
கண்கள் நான்கும் காதலில் துள்ளிக் குதிக்க
இவுலகிற்கே உரைத்தனர் இருமனமும்
ஒருமனமானது இத்திருமணத்தில்
இத்தருணமே என்வாழ்வின் பொக்கிஷமாகும்
« Last Edit: October 17, 2016, 08:12:44 PM by RaNJaNi »
commercial photography locations