Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 123  (Read 3556 times)

Offline MysteRy

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 123
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Sweetie ( Jo ) சார்பாக   வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
« Last Edit: October 12, 2018, 10:40:59 AM by MysteRy »

Offline AnoTH


மலர் கொடுத்து மலர்ந்த காதல்.
கரம் பிடித்து கவர்ந்த காதல்.
விழிகள் பார்த்து விழித்த காதல்.
உதடு திறந்து உரைத்த காதல்.


அளவு கடந்து அலுத்த காதல்.
வார்த்தை பாய்ந்து வலித்த காதல்.
சுயநலம் பிறந்து சுமந்த காதல்.
கண்ணீர் மறைந்து கனத்த காதல்.


விண்ணை மண்ணை இணைத்த காதல்.
உன்னை என்னை சேர்த்த காதல்.
பண்பை அன்பை சொன்ன காதல்.
வன்மை மென்மை உணர்ந்த காதல்.


பார்த்து பார்த்து இரசித்த காதல்.
மெல்ல மெல்ல வளர்ந்த காதல்.
பேசிப்பேசி சலித்த காதல்.
எண்ணி எண்ணி உயர்ந்த காதல்.


காதல்.. காதல்.. காதல்....
என்னை நீயும்
உன்னை நானும்
மறவாக் காதல்.


சாதல்.. சாதல்.. சாதல்...
நீ இன்றி நானும்
நான் இன்றி நீயும்
வாழாக் காதல்.


அதுவே உன்னில் பாதி
என்னில் பாதி இதயத்தை
பிரியவிடாமல் தடுக்கும்
சங்கிலியால் கட்டிப்போட்ட


உண்மைக் காதல்.
« Last Edit: November 06, 2016, 02:54:44 PM by AnoTH »

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
இரு மொட்டு தளிர்க
நட்பில் இணைய துடிக்க 
ஓவ்வொரு மலராய் முளைக்க 
நட்பென்ற  ஒன்று துளிர்க்க


இணைபிரியா தோழமை நிலைக்க
விஷக்காற்று அவர்களுக்குள் இருக்க
கங்கணம் பார்த்து நிற்க
பிரித்தது  அவர்களின் நட்பை உடைக்க


இரு மலரில் ஒன்று நினைக்க
பழைய நினைவுகளை எண்ணி சுவைக்க
நட்பென்ற சங்கிலியில் போட்டு இனிக்க
இன்னொரு மலர் எண்ணி மறக்க


முடியவே முடியாது என்று முறைக்க
இன்னோர் இதயம் வெடிக்க
அதை பார்த்து இன்பம் களிக்க
நட்பென்ற சங்கிலி முறிக்க


இதை பார்த்த வேறு மலர் வருந்த
வாடிய மனதின் வேதனையை குறைக்க   
என்  மனதில் அவளின்  மனம் ஏங்க 
வருத்திய மனதில் புது நட்பு நுழைய   


காலங்கள் வலிகளை மறைத்தது 
அவள் முகத்தில் புது வெளிச்சமானது   
சிறு சிறு நட்பு  கிடைத்தது 
அவள் நட்பு எனக்கு வரமாகியது


இன்னோர் நட்பில் இணைய
இன்பமாய் இதயம் மகிழ
இன்னொரு துரோகி நுழையாமல் துரத்த   
நன்பரென்ற சங்கிலியில் உறுதியாக 


"நட்பு உண்மையானது , மறுக்கவும் மறைக்கவும் முடியாத ஒன்று"
~ எனது நட்பும் அப்படியே ~
பின்குறிப்பு :இதயம் உண்மையா காதலுக்கு மட்டும்  அல்ல ;  உண்மையான  நட்பிற்கும் அதை விட வலிமை உண்டு . உடைந்தால்   மரணித்து போகும் இரண்டுமே..


« Last Edit: November 12, 2016, 07:43:44 AM by BlazinG BeautY »

Offline DaffoDillieS

நிழலும் நிஜமுமாய் வாழ்வின் முதற்கனவு..!
எங்கோ தொலைந்த நினைவுகளின் படையெடுப்பு..!

இணைத்தாலும் முழுமையடையாக் கண்ணாடிச் சிதறல்கள்..
ஆழ்கடலின் ஆழத்தினும் ஆழமாய்ப்பதிந்து  போன வார்த்தைகள்..
என்றும் ஆறாக் காயங்கள்..
ஈரமற்று உயிரற்றுப் போனதொரு இதயம்..!

சக்கரைக்கட்டியாய் இனித்த நினைவுகள்..
இன்று..
வேம்பாய்க் கசக்கிறதே..!
மெல்லிய பாடல்களை ரசித்த மனம்..
இன்று..
அலைகடலின் இரைச்சலில் அமைதி கொள்கிறதே..!

வெண்மேகமாய்த் தவழ்ந்த இதயம்..
இன்று..
கனத்த கற்பாறையாய்..
தனிமையிலும் உற்சாகமாய்த் திரிந்த நான்..
இன்று..
நடைபிணமாய்.. !!
இளம் தென்றல்..
இன்று..
புயல் வீசும் காற்றாய்..!!
காற்றின் மென் ஸ்பரிசத்தையும் உணர்ந்த ஐம்புலன்கள்..
இன்று..
அரவணைக்கும் தாயின் அன்பு ஸ்பரிசத்தையும் உணர மறுப்பதேனோ..!!
வெறுமைப் புயலாய்த் தாக்க..
கண்களில் மழை மட்டும் பொய்த்ததேனோ..!!

உண்மைகள் பொய்களாய்..
காயங்கள் வடுக்களாய்..
பிளவுற்ற இதயம் துடித்தும் செயலற்றதாய்..
உணர்வுகள் மறைந்தே போயினவே..!!
நேசித்து ஏமாற்றுவதினும்..
நேசித்து ஏமாறும் கோமாளியாய்ப் போவேனே..!!

நொறுங்கிப் போக மனமின்றி..
துடிக்கும் உடைந்த இதயத்தி்ற்கு..
உடைத்தெறிய முடியாப் பாதுகாவலாய்..
பொய்ப்புன்னகையும் பனியாய் உரைந்து போன உணர்வுகளும்..
..இன்றும் என்றும்..!!!



« Last Edit: November 09, 2016, 12:02:27 PM by DaffoDillieS »

Offline ReeNa

உன்னை  பார்த்த  அந்த  நாள்
உனக்காக  என்னிதயமும்  துடித்ததே -நீ
என்னை  விட்டுச்  சென்ற  நாள்
உனக்காக  நானே துடித்தேனே

உன் நிழலாக நானிருந்தேன் அன்று..
உன் நினைவில் கூட நானில்லை இன்று..
நிஜம் இல்லாமல் நிழல் எதற்கு எனக்கு..??

நீ இல்லா நிமிடங்களுடன்,
சண்டையிட்டு கொண்டிருக்கிறேன்,
நின் நினைவுகளின் தொல்லை தாங்காது!

உனக்காக காத்திருக்கும்போது தெரியவில்லை
கடந்து போன காலங்கள்
நீ என்னை விட்டு பிரிந்து சென்றதும்
உணருகிறேன் காத்திருந்த காலங்கள்
 
காதலை ஏற்றுக்கொள்ளும்போது 
கலங்கின  கண்கள்
ஏனோ  தெரியவில்லை
இன்றோ  கலங்கவில்லை
தூக்கி  போட்ட  நிமிடத்தில் 

உன் காலடி தடம் பார்த்து
கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
நான் ரசித்தது உன் விழியை மட்டுமல்ல
நீ வரும் வழியையும்தான்!

இல்லை என்பது உன் மனது
இலைகள் போல் வாடுது என் மனது..!
நீயே உலகம் என்று உள்ளம்
வாழும் எப்போதும் உன்னோடு..!

இன்று முடிகின்றது! !
நாளை தொடங்கின்றது !
நீ பேசுவாய் என்றெண்ணி
என் வாழ்கை தினமும்
கண்ணீராக நகர்கின்றது.

உன்னை  நேசித்த  இந்த  இதயத்திற்கு
உலகில் வேறெதையும்  நேசிக்கத்தான் தெரியவில்லை.  .
தனிமையென்னும் கொடுமையினை எதிர்கொண்டே,
ஒவ்வொரு இரவும் கடந்து செல்கிறது என் வாழ்வில்.
 
உடைந்த  இதயமும்  ஒன்று சேருமோ
உன்  கல்  மனமும்  இன்று  கரைந்திடுமோ
என் தனிமையும் சோர்வும்  உனக்கு என்றுதான்  புரியமோ !!
என்காதலின் வலியை என்று தான் உன்னிதயமும் உணருமோ!!

« Last Edit: November 09, 2016, 12:09:03 AM by ReeNa »

Offline JEE

இதயமே நொறுங்கிப்போனதா?........
இதயமே நொறுங்கிய போதிலும்
இறுக்கியே நொறுக்கிய சங்கிலியோ?...........
இறுக்கியே நொறுக்கிய சங்கிலியிலும்
பூட்டிய பூட்டின் சாவியுன் கையிலோ?...........


இதயமே நொறுங்கிப்போனதா?.......
காதலால் மட்டும்தானா?......
பருவத்துக்கு பருவம் வாழ்வில்
பல சூழலில்  யாம் காணும்
இதயமே நொறுங்கிப்போனதா?..........


குழந்தையாயிருக்கையிலே
அடித்தளமே அசையும் போது ........
அசையாமல் அணைக்க
ஆளில்லாபோது குழந்தையின்
இதயமே நொறுங்கிப்போனதா?............


இளம்பருவத்திலிருக்கையிலே
காதலர் துரோகம் செய்யும் போது.........
ஊன்உறக்கமின்றி அலையும் போது
இதயமே நொறுங்கிப்போனதா?..........


எத்தனை செல்வமிருப்பினும்
எத்துணை கூடமிருப்பினும்.........
எழுபஏழு வயதானதும் ஏனென்று
ஏறீட்டு பார்க்காமலே போகிறபோது
இதயமே நொறுங்கிப்போனதா?..........


எழுபஏழு வயதானதும் போகாதோரும்
எழுபஏழு கோவிலுக்கு ஏறிப்போகிறார்கள்?
காசியாத்திரைக்காக கால்கடுக்க
நாவரழ நடந்தே போகிறார்கள்........


அப்பனே யானிருந்தும் பயனில்லை
அடியேனின் சொல்லை மதிப்பதில்லை
நலம்பொலம்  சொல்லலாமா?

என்னை மையமாகவைத்தே பிரச்சனை
பல கிளைகளை சுமந்த மரம்
கிளைகளாடலாம் அடிமரமேஆடலாமா?....

இதயத்தை நொறுக்கிவிடடார்களே
சங்கிலியால் கட்டிவிடடார்களே
பூட்டையும் போட்டுவிடடார்களே
உன்னண்டையே  நாடி வந்துள்ளேன்
உன்னண்டை சேர்த்துக் கொள் ..........


ஆலயம் நாடியோர்க்கு நாடிய பலன்
அருள்வாயே  எம்பெருமானே.................


வாழ்க வளமுடன்...........

« Last Edit: November 06, 2016, 02:50:51 PM by JEE »
with kind regard,

G'vakumar.

Offline GuruTN

"சிதறுதடி என் இதயம்"

கல்லில் செய்த இதயமென என்னில் ஒன்று கொண்டிருந்தேன்,
சுமைகள் பல வந்தபோதும், மலைகள் போல நின்றிருந்தேன்,
இன்பமான வாழ்வு ஒன்றை எனக்கு நானே அமைத்திருந்தேன்,
உள்ளம் எல்லாம் உளைச்சல் இன்றி நிம்மதியாய் வாழ்த்திருந்தேன்.

கண்கள் என்ற ஆயுதத்தால் என் இதயம் பணிய வைத்தாய்,
உந்தன் பேச்சின் இனிமையிலே கதிரவனை குளிர வைத்தாய்,
வாழ்வின் சுவைகள் இன்னவென்று தெரியாமல் இருந்த என்னில்,
விடியல் ஒன்றை தோற்றுவித்து, பளிச்சென்று மிளிர வைத்தாய்.

நதிகள் போல ஓய்வின்றி தொடர்ந்து நீயும் பேசும்போது,
நேரம் என்ற ஒரு வார்த்தை இருக்கும்தடம் மறந்து போனேன்,
தாய்மை, நட்பு, உறவு யாவும் உன்னிடத்தில் கண்டபோது,
புத்துயிரை நானும் பெற்று, மீண்டும் உன்னால் பிறந்துவந்தேன்.

உனையே நான் உலகமென்று உள்ளத்தில் பதித்து வைத்தேன்,
தவிப்புகள் தள்ளிவிட உன்னிடத்தில் காதல் சொன்னேன்,
தடைகள் பல உண்டு வீட்டில் என்று சொல்லி விலகி நின்றாய்,
தேடி வந்த காலம் போக, தேட வைத்து மறைந்து போனாய்.

எந்தன் வாழ்வில் கனவு போல வந்து போன என்னவளே,
என்னுயிரில் இன்பம் தன்னை, உணர வைத்த பூமகளே,
உள்ளம் எல்லாம் உருகுதடி, உன்னை எண்ணி ஏங்குதடி,
இரும்பென்று இருந்த போதும், இந்த காதல் கொல்லுதடி.

சங்கிலிகள் சுத்தி எந்தன் இதயம் காக்க வேலி போட்டேன்,
இதுவும் இன்று கடந்து போகும் என்று நானும் பொறுமை காத்தேன்,
அவைகள் மீறி என் இதயம் துண்டு துண்டாய் சிதறிப்போக,
காதல் போல ஒரு சக்தி இல்லை என்று உருகி போனேன்.

-குரு-
« Last Edit: November 07, 2016, 10:51:14 PM by GuruTN »
glittertextmaker.info" width="290" height="100" border="0

Offline MyNa

மென்மையான இதயம்  ஒன்று
சங்கிலி  சிறையில் அடைப்பட்டது இன்று
வெகுநாளாய் தனிமையில் போரடி  நின்று
புதைத்தது நிம்மதியை வேரோடு கொன்று

பாசத்தால்  கட்டி அணைப்பான் என்று
அவன்  அருகில்  நெருங்கி  சென்று
வாளால் வெட்டி எறிந்தான் நன்று
வாடி துடித்ததே இந்த இளங்கன்று

என்னை  கொன்ற எழுத்துக்கள் மூன்று
அதுவே  என்  துயருக்கு சான்று
இனி வேண்டாம்  எந்த மாதுவும்  என்  போன்று
போரடி  வென்று  சிகரமாய் தோன்று


ஆணோ  பெண்ணோ இதயம்  அனவைருக்கும் ஒன்று
காயப்படுத்திவிட்டு  சரி  செய்ய முயலாதீர்கள் ..
அது  நெருங்கி வருவதை விட
விலகி  செல்வதையே  அதிகம் விரும்பும் ..


~ தமிழ் பிரியை மைனா ~
« Last Edit: November 06, 2016, 02:23:26 PM by MyNa »

Offline Maran


Offline SweeTie

எதோ  ஒன்றின்  பிணையல்
இனம் தெரியாத  வருடல்
காதலின் இதமான  வலிகள்
புரிந்தும் புரியாத புதிர்கள்

காதல் கொண்டோம்
கலந்தோம்  உயிருக்குள் ஒன்றாய்
பறந்தோம்  பட்டாம்பூச்சிகளாய்
தவழ்ந்தோம்  வானில் முகில்களாய்
மறந்தோம்  உலகையும்  எம்மையும்

காலத்தின் விளக்கம்
காதலுடன் கதை  பேச 
வெடிப்பொன்று  வீழ்ந்து 
பிளவாகிப்   பின் விரிசலும் காணவே 
பிரிந்தன  இதயங்கள் 

மறக்கவொண்ணா  முதல் முத்தம்
இதமான அணைப்பின்  நெருடல் 
காட்சிப்  பிளம்பாக  கனவிலும் நனவிலும் 
மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல்
அனலில் விழுந்த புழுக்களாய்   இதயங்கள்\

கண்களால் கொய்த காதல்
இதயத்தை நெகிழ்த்த காதல்
காலத்தின்  கோரத்தால்  இன்று
ரணமாகி புரையோடி நிற்கும் காதல்
பலமான   காதல் சங்கிலியால்
இறுக்கமாய் பிணைத்த காதல் 
இதுதான்  தெய்வீகக் காதலா?????