Author Topic: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 129  (Read 2954 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 129
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 12, 2018, 10:46:36 AM by MysteRy »

Offline AnoTH

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 323
  • Total likes: 1595
  • Karma: +0/-0
  • Gender: Male
  • சோதனைகளை சாதனையாய் மாற்று
நவக்கிரகங்கள் பெண்மை உருவாய்
தரணியில் பிறந்த நொடி
தசாவதார வடிவாய் ஆடவருடன்
உறவு தொடரும்படி,

விருட்சமாய் இரத்த பந்தம் எழுந்த படி
நவக்கிரகமும் எனக்குத்  தாய் மடி.

சித்தப்பன் பெரியப்பன் அவர்தம்
சின்னம்மாள் பெரியம்மாள் கருவறைதனில்
பிறந்திடா மகனாய்
என்னம்மாள் என்றெண்ணி,

என்னப்பன் என்னம்மாள் அவர்தம்
அப்பப்பன் அம்மப்பன் கதை பேசி
அப்பம்மாள் அம்மம்மாள் கரம் வீசி
பேரன்பு கொண்ட பேரன் நான்.

தாத்தா சொன்ன கதை கேட்டு
பாட்டி தந்த துணி போட்டு
முன்னால் நடந்து செல்ல
பின்னால் குரல் ஒலிக்க,

பசியாறிப்போ பதறாது வா என்று
எட்டுத்திக்கும் குரல் கேட்க
பலமுறை தயங்கமால் தலைநிமிர்ந்து
தயக்கமின்றி தருணம் பார்த்து,

இரு மனம் இணைந்து 
திருமணம் புரிந்து
தேவை நிமிர்த்தம்
தொலை தூரம் கடந்து

புகைப்படம் பார்த்தாச்சு
விமர்சனம் போட்டாச்சு
கொண்டாட்டம் கடந்தாச்சு
திண்டாட்டம் தொடர்ந்தாச்சு

உலகம் தான் மாறிப்போச்சு
குடும்பம் தான் சிதறியாச்சு
குழந்தை தான் பிறந்தாச்சு
அறையில் தான் கிடந்தாச்சு

கூடி வாழ்ந்தாக் கோடி நன்மை
கூலி கொடுத்து வாழ்ந்தும் ஏது இனிமை?
பாசமாய் செல்லமாய் உறவுகளுடன்  மகிமை
அதை மறந்து தொடரும்  தனிமை.

நாழு பேரும் ஒவ்வொரு நாளும்
கதை பேச நேரம் ஏது ? 
நான்கு சுவருள் அடைந்து
காலம் தான் கடந்தாச்சு

சொந்த உழைப்பில் உயர்ந்தாலும்
இன்றைய நாளை எண்ணிக் கண் அயர்ந்தாலும்
சொந்தபந்தம் சொர்ப்பணமாய் காட்சி தர
எந்தன் மனதில் சொல்ல முடியாத வலிகள் எழ,

இதுவும் கடந்து போகும்.....
உறவும் ஆங்காங்கே தொலைந்து போகும்.....
 

« Last Edit: December 18, 2016, 04:47:10 PM by AnoTH »

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
கூடிவாழும் குடும்பங்களை பிரித்து ஏதடா
மூடரே இன்பம்? மூடரில் நானும் ஒருவன்!


பல்கலையும் கற்று முடிக்கவே
காதல் கல்வியும் பட்டம் பெற்றது
இருவீட்டார் இதயம் மகிழ
திருமணம் நடந்தது

காதல் சொல்லையில், சொன்னது போலவே
எமது பெற்றோரும் ஒன்றாய் இருக்கவே
கிராமத்தில் வாழ்ந்தோம்

கிராமத்து வாழ்வை இழிவென எண்ணி
நகரமாம் உயர்வென நரகத்தில் விழுந்து
உறவை இழந்து அன்பை மறந்து
மாயை உலகில் மனித பிணங்களாய்
வாழ்வதை வாழ்வெனெ எண்ணும் மூடரே!

கிராமத்தில் நகரம்போல்
ஆரோய்க்க கேடில்லை
இயந்திர வாழ்வில்லை

அன்புண்டு அன்போடு பெற்றார் ஆசியுண்டு
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாம்
நோயின்றி வாழ மகிழ்ச்சியே வேண்டுமாம்
மகிழ்ச்சியில் மிதக்கும் கிராமத்து வாழ்வின்
வெளிப்பாடே நீங்கள் கானும் எம்குடும்பம்

நாங்களும் எங்கள் பெற்றோரும் ஒன்றாய்
வாழ்வதனால் எங்கள் சகோதரர் சகோதரியர்
குளந்தைகள் பிள்ளைகள் இளைஞர்கள்
யாரும் எவரும் மீதமில்லை அனைவருமே
ஒன்றாய் வாழ்கிறோம்

கடவுளே அன்பெனும் உண்மை மறந்து
பிறர் வாழ்வோடு ஒப்பீடு நடத்தி
உன்வாழ்வை தொலைக்கும் மானுடமே!
குடும்பங்களை பிரிந்து ஆசைகளுள்
அடிமையாகி எங்கே போகிறாய் நில்!

பெற்றோரின் அன்பை மறந்து சொத்தை பிரித்தபின்
வயோதிபர் இல்லம் தள்ளும் இதயமற்ற மனிதரே!
இதுவா அன்பு?  இதுவா நன்றி?  இல்லை,  சிந்தி!
அன்பை தேடு உடைத்த உறவுகளை கட்டிமீழு

தூரம்போயும் செல்வம் தேடு போதுமென்றால்
இல்லம் மீழு, குடும்ப வாழ்வை அன்பாய் வாழு
நாம் எமது பிள்ளைகளோடு இறுதிவரை வாழ
எண்ணுவது போலவே
நம் பெற்றோரும் எண்ணியிருப்பர்

நீ காட்சியில் காண்பது நியத்தில் இல்லை
திரையுலக வியாபாரத்தில்தான் உண்டு
நமது வாழ்வில் முடிந்தவரை காட்சியை
வாழ்வாக்க முயலுவோம் உறவை காத்து
அன்பை வளர்ப்போம்

அதிக சம்பாத்தியம் அன்பில்லா நிலையில்
குற்றமனம் கொள்ளும் நோயால் அழியும்
சிறிய வருவாயிலும் உறவுகளின் அன்பால்
மகிழ்ச்சி நிலைக்க உடல் நோயின்றி வாழும்

கூடிவாழும் குடும்பங்களை பிரித்து ஏதடா
மூடரே இன்பம்? மூடரில் நானும் ஒருவன்!

அறியாமையை விடுத்து அன்பை உணர்ந்து
மணமகளாய் மணமகனாய்  வாழப்போகும்
வீடுகளில் அன்பாய் இருங்கள் இல்லையேல்?
சாபமும் பாவமும் கூடவே இருந்து கொல்லும்

எங்களை பார்த்து பொறாமை வேண்டாம்
உங்கள் வாழ்வை சரியாக வாழுங்கள்.
நிழற்படம் சொல்கிறது!

மனித உயிரை கொல்வதும்!
இருவர் அன்பை பிரிப்பதும் ஒன்றென
சொன்னார் இறைவன்!.



குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
« Last Edit: December 19, 2016, 05:41:32 PM by SarithaN »
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
நாயகன் சேவல்
« Reply #3 on: December 18, 2016, 09:29:22 AM »
கொக் கொக் கொக் கொக்..
கொக்கரக்கோ  கொக்கரக்கோ!
அழகிய குடும்பத்தில்  கொக் கொக்
உயிர் காத்த தேவதை இங்கே கொக்கரக்கோ

என் எஜமானியும் இன்பமான  குடும்பமும்
சொல்லவா சொல்லவா தோழர்களே !

தேவதையாய் உலா வந்த தாரகை அவள் ! 
அவள்  குலத்தில் வண்ணத்து பூச்சியாய்.. 
பெற்றோர்கள் அவளுக்கு  உயிர் நாடி
அவளை தாங்கி நிற்கும்  ஈன்றோர்கள்   

குடும்பத்தின் மகாராஜா மகாராணியாய்
அவள் தாத்தா பாட்டி  வீற்றிருக்க
இவர்களுக்கு  இரு விழிகள் அல்ல
மூன்று விழிகள் - ஈசனை போல்

ஓர் விழி என் தேவதையின்  ஈன்றோர்கள்
மறு விழி  அன்பாய் அரவணைக்கும்
அத்தை மாமன் வெளிநாட்டில்
செல்லமாய் இவளை  தாலாட்டும்
சித்தி சிற்றப்பா பக்கத்துக்கு கிராமத்தில்

அத்தைக்கோர் இரு காளைகள்
மென்மையானவர் அழகானவர்  மூத்தவர்
தன்மையவர்  கோபக்காரர்   இளையவர் 
இருவரும் அவர்கள் உள்ளத்தில்..

இரு அன்பான பிள்ளைகள்  சித்திக்கு
அழகிய மயிலை போல் மூத்தவள்
துறு துறுவென சுட்டியில் இளையவன்
இருவரும்  சித்தப்பாவின் உயிர்கள்..

இன்னோர் தாத்தா பாட்டியும் உண்டு .. 
உள்ளத்தில் இவள்   இளவரசியாய் நின்றாள்.. 
இணைந்தனர் தேவதையின் குடும்பத்தில் 
ஓர் இதயம் அல்ல,ஆனால் ஈர் இதயங்கள் உண்டு

அழகிய கண்மணியை  உலகத்தை காட்டிய
அழகு அன்னையாம்  அவளுக்கு  உயிராம்
பொன்மணியை தாலாட்ட பாராட்ட தாய் மாமனாம்
அவர் கரம் பற்றிய  உள்ளம் கவர்ந்த அத்தையாம்   

அவர்கள் இருவருக்கும் ஒரே சுவாசம்
அன்பு மகன் கொழு கொழுவென
அவளை  பொறாமையில் பார்க்கும்
அத்தை மகன் ஒவ்வோர் நொடிகளும்
 
சொல்லாமல் போக மனம் இல்லை
எங்களை பாதுகாக்கும் இருவர்
நான்கு தூண்கள் என் குடும்பத்திற்கு
அவர்கள் வேறு குடும்பத்தில் பிறந்தாலும்

கேட்கிறதா ! ஓர் கானம்
அழகான  குடும்பத்தின் அழகிய  நாயகன்
கொக்  கொக்   கொக்கரக்கோ - நான்
அனைவரும் இன்பமாய் சொர்கமான  குடும்பத்தில்

நன்றி மீண்டும் வருகிறேன்

~சேவல் ~

« Last Edit: December 20, 2016, 03:32:37 PM by BlazinG BeautY »

Offline JEE

வர்ணம் தீட்டப்படாத பழைய வீடு
உடைந்து சீராக்கப்படாத  சுவருள்ள வீடு............
முற்காலத்தைக்காட்டும் மின்வசறி

முற்காலத்தைக்காட்டும் வடிவம்
முன்முத்தமுமுள்ள மொத்த அம்சமும்
மிடுக்கான தோற்றமுமுள்ள  முற்காலவீடு..........

தொலைக்காட்சி சின்னத்திரையில்
அடிக்கடி மிளிர்ந்தவர்களா?...............................

தொலைதூரமாக பயணிக்கையில்
உல்லாசமாக மிளிர்ந்தவர்களா.?........................

பலவாறு இக்காட்சியை காணுகையில்
கூட்டுக்குடும்பமாக மிளிர்ந்தவர்களே
யென ஏன் காணக்கூடாதோ?.............................

தாய், தந்தை, அண்ணன், தம்பி,
அக்கா, தங்கை, பேரன், பேத்தி...
ரத்த சம்பந்தமான உறவு
இவர்களிடையே பாசப் பிணைப்பு
இயற்கையாக அமைந்தும்
இது சாத்தியமாகுமா?........................................

கூடிவாழ்தலால்  விட்டுக்கொடுத்தல்,
சகிப்புத்தன்மை, பகிர்ந்து அளிக்கும் தன்மை
இவைகளெல்லாம் இல்லாமல்
அந்தஸ்து, வேலை, பொருளாதாரம்,
உணவுமுறை, உடை, பிறந்தவீட்டுப் பாசம்
இவைகளால்  சிக்கல்கள் வரும் போது
இது சாத்தியமாகுமா?........................................

சிறப்பான கூட்டுக்குடும்பம் ஏதென்றால்
அனைவரும் தனக்குண்டானவற்றை
யெல்லாம் விற்று கூடி வாழ்ந்தார்கள்..................
இறைப்பணி செய்யவும் செய்வதில்
செத்து மடியவும் தயாரானார்கள் .......................
ஒருவனும் தனக்கென்று எதனையும்
வைக்கவுமில்லை சொல்லவுமில்லை ..................
யாவரும் பொதுவாக வைத்து அனுபவித்தார்கள்
இறை அடையாளங்களோடு அவர்கட்குள்
இறையும் இருக்கிறேன் என்று வெளிப்பட்டார்.....

இங்கு மட்டுமல்ல உலகெங்கும் பரவியது
இது சாத்தியமாகுமா?........................................

சிறப்பான கூட்டுக்குடும்பம் ஒன்றுண்டு .............

கூடாரவாசியான யாம் தனிமையில் இருந்தாலும்
வீடென்றும்  காடென்றும்  சேர்க்கிறோம்
யாரதைவாரி்க்கொள்வாரென்று அறியாமலே .....

கைவேலையல்லாத நித்திய வீட்டிலே
இது சாத்தியமாகுமா?........................................
சாத்தியமாகுமே................................................

வாழ்க வளமுடன்.............................................,.
« Last Edit: December 18, 2016, 01:05:38 PM by JEE »
with kind regard,

G'vakumar.

Offline ! Viper !

அழகிய மாலைப் பொழுதில்
சூரியன் அழகான  நிறத்தில் வண்ணம் இட
கடற்கரை அருகே தென்றல் காற்றை சுவாசித்த படி
என் தனிமையின் உணர்வை மறந்து இயற்கையின் அழகில்
கைகோர்த்து  நடக்கிறேன்.

ஒரு குடும்பம்  சத்தம் விளையாட்டிலும் பேச்சிலும்
சிரித்துப்  பேசிக் கொண்டு புன்னகை இட்டனர்.

அவ் வழியில் வந்த நான் என்னை அறியாமல்
உரைந்து போன நொடியில் அவர்தம் மகிழ்ச்சியின் 
ஆரவாரத்தில் என்  நினைவை மறந்தேன்,
கனவுலகில் தொலைந்தேன். 

அம்மா, அப்பா, தங்கை, தம்பி, உறவினர்கள் என அனைவரும்,
தங்கள் அன்பைப்பகிர்ந்து நிழலில் கைகோர்த்து
மகிழ்ச்சியில் மிதமிஞ்சிய ஆரவாரம் ஒலித்திட
ஒவ்வொரு  நொடிப்பொழுதையும் இரசித்து நிலைபெற, 

உறவினர்களே இல்லாத எனக்கு அன்று உறவினர்கள் என்றால் என்ன
என்று பொறாமையுடன் என்னுள்
ஒளிந்திருந்த சிறு கண்ணீரத்  துளிகளுடன் காற்றோடு
காற்றாக களைந்து போனேன்.

எனக்கும் இதே போல  உறவினர்கள் கிடைக்காத?
அன்பைப் பெற்று  புன்னகையிட  மகிழ்ச்சி நிலைக்காதா ?
என என்னுள் எழும் கேள்வி உரைந்து போன என் நிமிடங்களைத் 
தொடர்ந்து  பெற்றிட மன ஏக்கத்துடன்

இனி வரும் எதிர்காலங்களில் எனக்கென சில உறவுகள்
கிடைக்கும்  என்று ஏங்கிய படி அந்த பாதையில்
அவர்களைப்  பார்த்துக்  கொன்டே மனதில் ஆசைகொண்டேன்.

வாழ்கை ஓட்டம் ஏக்கத்திலேயே போய்விடுமோ?
என்று எண்ணிய படி ஒரு சலிப்பு சிரிப்புடன் விடை பெற்றேன்.
திரும்பிப்  பார்த்து மனம் ஏங்க என்  மனம் மறுக்கிறது
வரும் காலம் வசந்தகாலம் ஆகும் என்று எனது நடையும் தொடர்கிறது

Offline ReeNa

குடும்ப நிழற்படம் திரையில்  கண்டேன்
சிந்தனை  குதிரையை அதனில்  விட்டேன்
கடந்தகால நினைவுகள் தொலைத்தேன்
கண்கள் குளமாக நிற்க தவித்தேன்

பருவங்கள் மாறும்  ஆண்டுக்குள்ளே
வருடங்கள் மாறிடும் வாழ்வுக்குள்ளே
பறவைகள் போல் பறந்து திரிந்தோம்
இரவும் பகலும் மறந்து  திரிந்தோம்

நலம் விசாரிக்க  யாரும் இல்லை - இன்று
அவசரம் காட்டிடும் வாழ்வினிலே..
ஆறுதலான  உறவுகள் மத்தியிலே
அன்பின் மழையில்  பூத்திருக்கேன்

பாட்டியின் துவையல் வாசம்
தாத்தாவின் கதைகள் தோறணம்
அத்தை  மாமாவின்  அரட்டை  அரங்கம்
தம்பி தங்கையின்  விளையாட்டு  ரகளைகள்
இன்று என் காண் திரையில் மட்டும்

கூட்டு குடும்பம் என்று  ஒளி  விளக்கு 
சிமிட்டும்  நகரத்தின் ஒற்றை  விளக்கு
புதுமையை  தேடி  ஓடுகிறேன் - ஆனால்
பழமையை  ஏங்கி வாடுகிறேன்

நிழல்  படம் தந்தது என் முகத்தின் பொலிவு
இதுதான் சிறந்த வாழ்கை என்பது தெளிவு ..

« Last Edit: December 19, 2016, 06:33:53 PM by ReeNa »

Offline SweeTie

குடும்பம்  ஒரு பல்கலைக்கழகம்
கற்பவையும்   கேட்பவையும்  ஏராளம்
பாழும் கிணற்றில் வீழாமல் பாதுகாத்து
நாளும் நமக்கு  நல்லதே  நடைபெற
யாசிக்கும் இனிய அமுதசுரபி

ஜுரம் என்று படுத்திட்டால்
மருந்தும் விருந்தும் மூன்று நேரம் சொல்லியே
பாடாய் படுத்திவிடும் பாட்டியின் கஷாயம்
அடிக்கடி என் நெற்றியை  தொட்டுப்பார்த்து 
ஜுரத்தின்  ஆழத்தை அறியும்  தாத்தா

கண்ட கண்ட  காவாலிகளின்  சகவாசம்
நாலுகாசு சம்பாதிக்க வக்கில்லாதவன்
என  தினமும் திட்டும் எனதருமை தந்தை
எனக்காக திட்டு வாங்கி காத்திருந்து கதவு திறந்து
 உணவளிக்கும் என் அன்பு தாயார்

அவர் மகளை எனக்கு கட்டிவைத்து
குடும்பம் கலையாமல்  இருக்க நினைக்கும்
மகராசன்  என் மாமா
மாமாவின் சுருதிக்கு ததிங்கிணத்தோம்  போடும் 
என் பாசக்கார  மாமியார்

இவன் படிச்சு என்னத்த  சாதிக்கப்போறான்
நாலு  ஆடு வாங்கி கொடுங்க  மேய்க்கட்டும்
தந்தைக்கு வக்காலத்து வாங்கும் சித்தப்பா
அவர் பாட்டுக்கெல்லாம்  தாளம் போட்டு
நமட்டு  சிரிப்பு  சிரித்து  மழுப்பும்  சித்தி

எதுவுமே நடக்கவில்லை  என்ற முகபாவனையில்
பத்திரிகையில் மூழ்கிவிடும் என் பெரியப்பா
அவருக்கு  காப்பி   கொடுக்கவென்று  கைப்பிடித்து 
காலமெல்லாம் அடுப்பங்கரையே தஞ்சம் என்றிருக்கும் 
பெரியம்மாவின்  அன்பு பார்வை.

சின்ன சின்ன சண்டைகளுக்கென்றே  பிறந்த
என் தங்கச்சிகளும்  தம்பிகளும் 
என்னை அடிக்கடி சைட் அடிக்கும் மச்சாள்
மச்சாளை   எச்சரிக்கும்  என் அண்ணன்
கல்வியே கண்கண்ட தெய்வமென  என் அக்கா

இத்தனையும்  இழந்து   தனிமரமாய்  இன்று
நாடின்றி   உறவு சொல்ல யாரு மின்றி
வருங்கால சந்ததிக்கு  போக இடமின்றி
அந்நிய மண்ணில்  அந்நியர்களாய்
சொந்த நாட்டில்  சுதந்திரமில்லாமல்
வாழ்வது ஒரு வாழ்வா????

 
« Last Edit: December 20, 2016, 07:12:09 AM by SweeTie »

Offline SuBa

என் இனிய இல்லம்
ஈர்த்திடும் காண்போர் உள்ளம்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற சொல்லும்
என் வீட்டில் நாளும் வெல்லும்

என் குடும்பம் எது
என சொல்லும் கவிதை இது
கவிதை சொல்லும் நான்
உங்கள் சுமால் கேர்ள்

குடும்பத்தில் பெரியவர் என் தாத்தா
என்றும் இருபத்திரெண்டாய்
இளமையாய் எண்ணம் கொண்டு
மிஸ் யூ சொல்லி கொண்டு
மீசையை முறுக்கும் மதுரை தாத்தா

தோளில் சுமந்து
தோழனாய் இருந்து
தோரணையாய் என்னை
தோசை ஊட்டி வளர்த்த
என் கேப்டன் தாத்தா 

என்றும் முடுகா முடுகா
என்று மூச்சுவிடாமல் பாடி
என்னுள் பக்தியை புகுத்திய
என் தென்றல் அத்தை

பி வி டி எல்லாம் போகாதே டா
அது எல்லாம் கருமம் டா
என நல்லது கெட்டது கற்பித்த
என் ஊதா அலை அத்தை

பாம்பு பயம் காட்டி
எனை  பாடாய் படுத்தும்
கிராமத்து ராமராஜனாய்
வலம் வரும் ராமர் மாமா

சண்டை என வந்தால்
மண்டை உடையாமல்
"பி ஆர் பி போட்டு வைப்போம் "
என சொல்லி தப்பிக்க
கற்பித்த சிவராசு அண்ணன்

உணவின் மேன்மை உணர வைத்து
அன்பாய் மடியில் அமர வைத்து
வாழைப்பழ தோலை அவிழ்த்து
ஊட்டும் பவித்ரமான அக்கா

தினம் தினம் சலிக்காமல்
புது புது அண்ணி என
கனவிலே பண்ணி சாரி அண்ணி
மேய்க்கும் ப்ருஸ் லீ அண்ணன்

நானும் ரவுடி தான்
வச்சி செஞ்சிருவேன்
இப்படி மிரட்டி உருட்டி
இறுதியில் முட்டை வச்சி
ஆம்லெட் செய்யும்  ஐயர் மாமா பைபர்

என்னை பில்லபி என கொஞ்சும்
என் பிங்கிலிக்கா அக்கா
என் கண்ணின் மணியாய் ஒரு அக்கா
 
அழகாய் , தீயாய் ,மெல்லிசையாய்
பல சகோதரிகள்
கருப்பு காளையாய் ,வினோதமான
பல சகோதரர்கள்

அனைவரும் என் குடும்பம்
அனைவரும் என் கண்கள்
« Last Edit: December 20, 2016, 11:06:04 PM by SuBa »
commercial photography locations