Author Topic: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 135  (Read 2631 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218359
  • Total likes: 23054
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 135
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 12, 2018, 10:50:50 AM by MysteRy »

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
என்னை அனுபவித்ததும் உனது வெறி தீருமோ

பகலிலே பாதையில்
மாட்டிக் கொண்டேன்
கதறுகின்றேன்
அலறுகின்றேன்
காண்பாரில்லை

தந்தன் சுயநலனோடு
கண்கொண்டும் மனக் -
குருடர்கள் காணாது போனர்
ஒலிகேட்டும் செவிடாய்
ஓடி அகன்றனர்

என்னை பொதிபோல்
அள்ளிச் செல்வோரிலும்
எனது கூக்குரல் கேட்டும்
கடந்தோர் கொடிய பிணங்கள்

தனக்கு தானே எனும்
இயந்திர உலகில்
நான் மட்டும் ஏன் கடத்தபடு
பொருளானேன்

என்னை நிர்வாணி ஆக்கையில்
தொலைபேசியின் ஒளிப்பதிவு
ஆரம்பமானது

பெண்மையை மூடுவேனோ இல்லை
முகத்தை மறைப்பேனோ
பெண்மையை மறைத்து முகம் துலக்கி
குடும்பம் மாழ்வதை விட
முகத்தை பொத்தி மானத்தை இழந்து
நான் மாழ்வது மகத்துவம் 

பெண்ணும் அவளது
உறுப்புக்களும் தான்
கடத்தலுக்கும் வக்கீர
கொதிப்புக்கும் தேவையெனில்

யாரது வீட்டில் இல்லை
பெண்கள்?
ஏன் தந்தன் வீட்டு பெண்ணை
பெண்ணாக எண்ணும் எவரும்
அயல்வீட்டு பெண்ணை
காமம் தீர்க்கும் இயந்திரமாய்
காண்கின்றனர்

என்னை அனுபவித்ததும்
உனது வெறி தீருமோ
எனது மரணம் உனது
எதிர்கால வாழ்வின்
நலனாகுமோ

என்னைப் போல் பிள்ளைகள்   
உங்கள் வீட்டில் இல்லையோ
உன்னை ஈன்ற தாயிடம்  இல்லா
தசையோ உறுப்போ எதுதான்
என்னிடம் அதிகமுண்டு ?

என்னை உன் தாய் போல்
என்னை உன் தங்கை போல்
என்னை உன் பிள்ளை போல்
எண்ணிப்பார்

எண்ணிய பின்னும்
என் உடல் உங்கள் உடலின்
பசியை போக்குமா ?
போக்கிய பசி மீண்டும்
எழாது போகுமா ?


போகும் போக்கும் என்றால்
என்னைப் போலொரு பெண்ணுக்கு
உங்களால் இத்தகு ரணம்
வராதென வாக்கு தந்தால்


என் உள்ளமல்ல உடல் இதோ
உங்களுக்கு அர்ப்பணமென்கையில்
பெண்ணுக்கு இரங்காதவன்
பேயிலும் கொடியவன்
கல்லையும் கரைகும் வலிமை
பெண்மையின் உண்மைக்கு உண்டு


கதறிய எனது வார்த்தகள்
இதையமதை உலுக
கைகளும் கத்தியும் என்னை
நெருங்காது நின்றிட
தவறுகள் உணர்ந்தமையும்
எனது விடுதலையும் உறுதியானது


குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline thamilan

பெண்ணைப் படைத்து
கண்ணையும் படைத்த இறைவன் கொடியவனே 
இது கண்ணதாசன் பாடிய பாட்டு
பூவை படைத்த இறைவன்
அதை ரசிக்க கண்களையும் படைத்து
முகர்ந்து பார்க்க மூக்கையும் படைத்தானே
இறைவன் ரசிகனா இல்லை காமுகனா......

பெண்களைப்பற்றி ஏடுகளிலும் கவிதைகளிலும்
பெருமை பேசிடும் ஆணினம்
மனம் முழுவதும் வக்கிரமம்
அழகை உரித்துப் பார்த்திட துடித்திடும்
அவிழ்த்து அனுபவித்திட துடித்திடும்

பூக்களும் பூவையரும்  ஒன்றென்பர்
அதனால் தானோ என்னவோ
பூவையரையும் கசக்கி  முகர துடித்திடும் ஆணினம்

பெண்களுக்கு அழகை கொடுத்த இறைவன்
பெண்மையுடன் மென்மையையும் ஏன் கொடுத்தான்
ஆண்களுக்கு ஆண்மையை கொடுத்த இறைவன்
அத்துடன் வன்மையையும் ஏன்படைத்தான்
விடைதெரியாத கேள்வியது

தன் வீட்டுப் பெண்களை
தாயாக சகோதரியாக மதித்திடும் ஆணினம்
அடுத்தவர் பெண்களை மட்டும் போகப் பொருளாக
காமக் கண்கொண்டு பார்ப்பதும் ஏன்
புரியாத இன்னோரு கேள்வியது  எனக்கு
காமம் இடத்துக்கு இடம் மாறுவதும்  ஏன்

ஏட்டிலும் பாட்டிலும்
பெண்களை உயர்வாக பேசிவிட்டு
மனதின் அடித்தளத்தில்
வக்கிரத்துடன் அலையும் ஆணினமே
ஒரு பெண்ணின் மார்பகங்களில்
குடித்த பால் இன்று நம் உடம்பினுள் ரத்தமாக
அந்த ரத்தமே சூடேறி
அதே பெண்ணினத்தை சூறையாடுவதும் ஏன் 

 பெண்களையே  வேட்டையாடத் துடித்திடும்
நான் மனிதர்களா இல்லை
மிருகங்களிலும் கீழானவர்களா
ஆறறிவை இறைவன் நமக்குத் படைத்தது சிந்திக்கத்தான்   
சிந்தியுங்கள் ஆணினமே

நம்மை உருவாக்கியதும் ஒரு பெண்ணே
நமது சந்ததிகளை உருவாக்குவதும் ஒரு பெண்ணே
பெண்மையை மதித்திடுவோம்

« Last Edit: February 21, 2017, 06:03:16 PM by thamilan »

Offline ChuMMa

தொடக்கம் எனக்கும்
சிரமம் தான் உன்னை போல

எனக்கு வார்த்தை வரவில்லை
உனக்கு இம்மண்ணில் வர வரமில்லை

நீ பெண்ணென்று அறிந்த நிமிடம்
தொடங்குகிறது உனக்கான போராட்டம்

கள்ளிப்பால் தொடங்கி பல வழிகள்
வஞ்சகர்களிடம் -உன்
அஸ்தமனம் காண ..

தப்பி பிழைத்தாய் ஒருவழியாய் எனில்
குடும்பம் காக்கும் பொறுப்பு உன் தலையில்
தம்பிக்கும், அண்ணனுக்கும், அன்னையாய்
நீ !

உன் சொந்தங்கள் உண்ட பின்னே
உனக்கு சாப்பாடு -நீ
உண்டாயோ என கேக்க -மனங்களில்
தட்டுப்பாடு

எல்லோர்க்கும் கிடைத்தது போக
மிச்சமிருந்தால் உனக்கும் பங்குண்டு

இவை உனக்கு பழகிவிட்டதாலோ என்னவோ
உனக்கு இவை பிடித்தது போல இருக்கிறாய்

உனக்கு  பிடித்த உடை அணிந்தால் -சொல்லும்
ஒரு கூட்டம் ஆபாசம் என்று ..
ஆபாசம் பார்ப்பவர்களின் மனத்திலென்று
அறியாமல் ..

பெண் சக்தி என்று சொன்னாலும் -இல்லை
பேதை அவள் போதை என சுற்றும் ஒரு கூட்டம்

பெண் வரம் என்று நினைத்தால்
நீ ரணம் ஆக யார் காரணம்  ?

பொறுப்பதில் நீ பூமி தாய் தான்
ஆனால் நினைவில் வைத்துக்கொள்
வதைப்பதில் நீ பத்ரகாளி !

சினம் கொண்டு இரு -தீய
மனம் கண்டு அறு  நீயே !

     -சும்மா --


“The thing women have yet to learn is nobody gives you power. You just take it. ”


« Last Edit: February 22, 2017, 01:39:29 PM by ChuMMa »
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline ViviYani

நான் நானாகவே வாழ ஆசை

இந்த சமூகத்தில் எனக்கு
மகள், சகோதரி, தாய், மனைவி
மருமகள், மங்கை, மடந்தை
என்று எனக்கு பல நிலைகள்
 
நிலா, பூ, மேகம்
மின்னல், மயில்
மான், பட்டாம்பூச்சி
என்று பல உவமை பெயர்கள்
 
பள்ளியில், கல்லூரியில்
பேருந்தில், பணியிடத்தில்
வீட்டில், நாட்டில், பொதுஇடத்தி
நான் நானாகவே வாழ ஆசை
 
தாய்நாடு, தாய்மொழி
நதி, தெய்வம், குலவிளக்கு
குத்துவிளக்கு என்று
பலரூபங்களில்  போற்றப்படும் நான்
 
இது என்உயிர், என்உடல்
என்உணர்வு, என்வாழ்வு
தேகம்தாண்டி அதன்உள்ளே
எனக்கென்று ஒரு மனமுண்டு 
மாணமுண்டு
உயிருடன்கூடிய உணர்வுண்டு
 
 
கயவனே என்னையும்
உன்னைப்போலவே சகமனுசியாய் வாழவிடு
பெண் என்பவள் போகப்பொருள் இல்லை
என்பதை ஆண்கள் உணரும்வரை
விடியல் தொலைதூரமே.

 
[/size][/color]

credit goes to gaby and niru

Offline PaRushNi

சுற்றிவிடும் பம்பரம் சுழலும் பம்பரம்  8)
கயிற்றை கொண்டு உன்னை கைப்பிடியினில் வைத்து
இருக பக்கவாட்டில்  கட்ட.. :-\
பாதையில் மேலே நகராமல் கீழே கழலாமல்
கயிற்று முனையை விரல்களின் மத்தியில் பிடித்து
முயன்ற அளவு அழுத்தம் கொடுத்து
வீசி எரிய..
ஆஹா என்னே சுழல்கிறது
ஒரு முனை பம்பரம் ! 8)
கண்ணுக்கு புலப்படாத காற்றின் தாக்கமும் உண்டு
உன்னை கீழே தள்ள  :o :o

***********************
ஒரு முனை கூறிய ரணமே என்றாலும்
கண்ணியத்தின் மேன்மை பொருந்திய
ஆண்மயில்களே பாதையின் அரிச்சுவடுகள்
நன்றி உங்களுக்கு.. 8)

***********************
காகித மலரும் காந்தள் மலரும்
பார்க்கும் விழியினில்..
அதன் மதிப்பு அதினதின் சிறப்பு
ரசிக்கத்தான் என்றால் மலராகவே புலப்படுவோம்
கைப்பாவையே என்றால் மேல் மண்டை காலி உனக்கு

************************
ரகசியங்கள் காக்கப்பட வேண்டியவை
உண்மைகள் வெளிப்படவேண்டியவை
மாற்றி உணர்ந்து மொழி பேசாது இருப்பின்
காற்று இல்லை சூறாவளியை
 நீ உருவாக்கினாய்
என்பது பொருள்
(காற்றோ சூறாவளியோ ஆண்/ பெண் பேதமில்லை )
சுற்றித்திரியவே சிறகுகள் அடித்து எழும்பவே பிறந்தோம்
குட்டினாள் வலிக்கும் என பாதகர்கள் தரம் தாழ்ந்து
செய்யும் வினைக்கு
இழுக்கு எங்கனம் பெண்களை வந்து சேரும் ?


பயணம் போ.. பயணம் போ..
பள்ளம் மேடும் ரெண்டையும் பார்த்து


பருஷ்ணி

Offline AnoTH

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 323
  • Total likes: 1595
  • Karma: +0/-0
  • Gender: Male
  • சோதனைகளை சாதனையாய் மாற்று
நாதியில்லாத பாவி அவள் கோலம் பார்த்தாயா ?
ஜோதி ஒளியின்று மயிர் கோதி உருக்கொண்ட
இவள் சேதி - நீ  கேளாயா?
தேகம் இயல்பிழந்து தேவன் அருள் இழந்து
தேவை பலவிருந்து வேலை இவள் அமர்ந்து.

போதை காட்டிய பாதை
அந்தக் குழுவில் சிக்கிய இப் பாவை
தோழியர் கரம்பிடித்த இவள் கரங்கள்
இன்று போராட்டத்   தோல்வியால் முகம்   
மறைத்த  ஆறா ரணங்கள்.

மென்மை மேனியாள் என்றெண்ணி அவள்
மேன்மை வாழ்வை - நீ  சூறையாடி
உந்தன் தன்மையிழந்த தருணம் 
இவள் தாய்மை வாழ்வை - நீ அழித்த நரகம்.

நகமும் சதையும் உடலும்   உணர்வும்
உன்னைப்போல் இவள்  பிறப்பு.
வலியும் பரிவும் சுமையும் சுகமும்
அவள் கர்ப்பப்பை உணர்த்தும்
கருவின் மறு பிறப்பு.

வலியினை பரிவினை சுமையினை அதன்
சுகத்தினை அறிந்திடா மானிடா !
வலியவன் என்ற ஒற்றைச்  சொல்லால்
வலியினைக்  கொடுத்து இவள்
வாழ்வைப்  பறித்ததேனடா ?

« Last Edit: February 21, 2017, 10:48:16 PM by AnoTH »

Offline Dong லீ

குறு குறுவென குதறும்
அருவருப்பான அவன் கண்களில்
அமிலம் ஊற்றி
அழகூட்டினால் என்ன ?

துடி துடிக்க..தூயவளை தீண்டிடும்
துருப்பிடித்த அவன் விரல்களின்
தோலுரித்து ..மிளகாய் தூளை
மிதமாய் மழைச்சாரலாய் தூவி
 கொதிக்கும் எண்ணையில் முக்கி
ரசித்தால் என்ன ?

அவளை அதட்டி அவதூறு பேசி
ஆட்டம் போடும் அவன் நாக்கினை
ஆறாய் மடித்து நாராய் கிழித்து
செந்தீயில் வருடி  .
காரமாய் கறிக்குழம்பு ஊட்டினால் என்ன?

அவளை மதிக்காமல்
எட்டி உதைக்கும் அவன் கால்களை
கட்டி வைத்து .. தேனை ஊற்றி
கட்டெறும்புகளுக்கு விருந்து
படைத்தால் என்ன ?

இரக்கமற்ற அவன் இதயம்
இதற்கெல்லாம் அஞ்சிடுமென்று
நம்புவதென்றால் ..
இதைவிட மூடத்தனம் இல்லை

அவளை நோக்கி
கத்தி எடுக்கும் அவன் புத்தியை
 சாணியில் முக்கிய செருப்பால்
அடித்தால் என்ன ?
என்ற கேள்விக்கு விடையாய்
இந்த கவிதையை மீண்டும்
படித்திடுங்கள்


Offline LoLiTa

  • Hero Member
  • *
  • Posts: 580
  • Total likes: 1131
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Life is Beautiful!♡
என் வீட்டிலும் ஆண்கள் உண்டு
அவர்களுக்கு வெளியே போக
அனுமதி சுதந்திரம் இரண்டுமுண்டு

இயற்கை எமை தீண்டையில்
சமூகத்தில் பெண்ணடிமைத்தனம் 
சம்ரதாயமென வீட்டிலே ஆரம்பமே

எனக்குள்ளே சிறு சிறு ஆசைகள்தான்
ஆனாலும் நிறைவேற வகையில்லை

கல்விக்காகவும் கடவுளுக்காகவும்
அல்லால் வெளியே விடுவதில்லை
அப்போதும் கூடவே வருவர் ஆடவர்

ஆபாசமாய் இல்லாமையிலும்
விரும்பிய ஆடைக்கு தடை
எனக்கான தோழமையை
நான் தேடிட தடை
கல்வியும் என்னால் முடியுமானதை
கற்றிட தடை
கற்றபின் வேலைக்கு செல்லவும் தடை

ஒரு இரவேனும் ஊரைச் சுற்றி 
பார்க்க ஆசை
கோவிலுக்கேனும் தனியாய்
சென்று வழிபட ஆசை
பண்பான ஆண்களை கண்டால்
நின்று பேசிட ஆசை
வீதியோர கடையில் உணவுப்
பொதி வாங்கி தானமிட ஆசை

வீட்டிலே அடங்கி கிடக்கையிலேனும்
விரும்பிய உறவோடு சுதந்திரமாய்
தொலைபேசியில் உரையாட ஆசை
இவைபோல இன்னும் இன்னும் சில
சிறு சிறு ஆசைகள் இதயமதி அனாலும்
அனைத்தும் கானல்நீராயுமில்லை

என்வீட்டு ஆடவரும் வெளியே போகையில்
அடுத்த வீட்டு பெண்களை கண்ணியம் தவறி   
காண்பதனாலோ.... எனக்கு வீட்டுச் சிறை

கண்ணியம் கட்டுப்பாடென பெண்ணை
வீட்டிலே அடைப்போர் வெளியே போகையில்
அடுத்த வீட்டு பொண்களை கண்ணியமாய்
கண்ணுறாமையே பெண்ணினத்தின் துயரம்

குழந்தையாய் பிள்ளையாய் குமரியாய்
பிறந்த வீட்டிலே சிறை
மனைவியாய் தாயாய் புகுந்த வீட்டிலே
சிறை
பெண்ணுக்கானது தியாகமும் சிறையுமா
ஏன் வாழ்கின்றேன்... நெடுங்கால ஆயுளேன்

பிறந்த வீட்டிலும் வளரும் ஊரிலிம் இல்லா
சுதந்திரம்...  புகப்போகும் வீட்டிலோ
வேறு ஊரிலோ கிடைக்குமென்பது வேடிக்கை
பிணமாய் வாழ்வதிலும் சாவது மகிழ்ச்சி

பெண்களை இத்தகை சிந்தனைக்குள்
தள்ளும் ஆணினம் திருந்த வேண்டியது
நமது எமது இல்லங்களில்...
இல்லங்கள் அனைத்தும் திருந்தையில்
நாட்டில் பெண்கள் மதிப்புறுவர்

« Last Edit: February 23, 2017, 12:21:41 PM by LoLiTa »