Author Topic: ~ அதிகாலையில் படித்தால் என்னவெல்லாம் பலன்?! ~  (Read 811 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218490
  • Total likes: 23136
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அதிகாலையில் படித்தால் என்னவெல்லாம் பலன்?!



''அதிகாலை என்பது, குழந்தைகள் படிப்பதற்கு மிகச்சிறந்த நேரம். அந்நேரம் படிப்பதால் பாடங்களை எளிதில் குழந்தைகளால் உள்வாங்கிக்கொள்ள முடியும்'' எனக் கூறும் கிராமியக் கலை பயிற்சியாளரான மாதேஸ்வரன், அதற்கான காரணங்களை விளக்குகிறார்.



''பள்ளி, ட்யூஷன், ஆசிரியர்கள், பாடங்கள் என காலையில் இருந்து அடுத்தடுத்த கல்வி நேரத்தை கடந்துவந்து சோர்வான, இறுக்கமான மனநிலையில் இருக்கும் குழந்தைகளால் மாலை மற்றும் இரவு நேரத்தில் சரியாக படிக்க முடியாது. அதனால் மாலை நேரங்களில் எழுத்து வேலைகள் இருந்தால் அப்போது அதனை குழந்தைகளைச் செய்யவைக்கலாம். பின்னர், அவர்களின் உடம்புக்கு ஓய்வு தேவைப்படும். அதுதான், உயர்ந்த தியான நிலையான தூக்கம்.

தூங்கி எழுந்ததும், குழந்தைகளின் மனமும் உடலும் நல்ல புத்துணர்ச்சியுடன் இயங்கும். அப்போது மூளையும் முழுமையான, புத்துணர்வான ஆற்றலுடன் இயங்க ஆரம்பிக்கும். முந்தைய நாள் பிரச்னைகள், கவலைகள் மறந்துபோயிருக்கும். புதிய எண்ண ஓட்டங்கள் தொடங்கும் அந்த வேளையில் படிக்கும் பாடங்கள் குழந்தைகளுக்கு எளிதாகப் புரியும். நினைவில் நிற்கும்.

இரவில் குழந்தைகள் விரைவாக தூங்கச் செல்லும்போது, காலையில் சீக்கிரமே எழுந்துவிடுவார்கள். அப்படி எழுந்து காலையில் 5 - 7.30 மணி வரை அவர்கள் படிப்பது மிகுந்த பலன் தரும். அப்படிப் படிக்கும்போது அறைக்குள், வீட்டுக்குள் முடங்கிப் படிப்பதைவிட, கிராமப்புற மாணவர்கள் வீட்டுத் திண்ணையிலும், நகர்ப்புற மாணவர்கள் பால்கனி, மொட்டைமாடியிலும் என, வெளிக்காற்று ஸ்பரிசம் பெற்றுக்கொண்டே படிக்கும்போது கிடைக்கும் புத்துணர்வு, பாடங்களை விரைவில் மனனம் செய்யவைக்கும். கூடுதலாக, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அதிகாலையில் நல்ல ஹார்மோன்கள் நன்றாக வேலை செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



அறிவுக்கு மேற்கு, வெளிச்சத்துக்கு கிழக்கு, பயணத்துக்கு வடக்கு, முடிவுக்கு தெற்கு’ எனச் சொல்வார்கள். அதன்படி பார்க்கும்போது, மேற்கு திசை நோக்கி அமர்ந்து படிப்பது, நல்ல நினைவாற்றலைக் கொடுக்கும். கவனச்சிதறல் இன்றி படிக்க முடியும். இன்றைக்கும் கிராமப்புறப் பகுதி பாடசாலைகளில் ஆசிரியர் கிழக்கு நோக்கி அமர்ந்தும், மாணவர்கள் மேற்கு நோக்கி அமர்ந்தும்தான் படிப்பார்கள்'' என்கிறார்  மாதேஸ்வரன்.

''10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 8 - 10 மணிநேரம் தூங்க வேண்டும். அவர்கள் அதிகாலை 5.30 - 6 மணிபோல எழுந்து, அதன் பின்னர் படிப்பதே சிறந்தது. 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 4.30 - 5 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் எழுந்து படிக்கலாம்'' எனக் கூறும் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன், காலை நேரம் படிப்பதால் கிடைக்கும் நன்மைகளை விளக்குகிறார்.
''அதிகாலை நேரம் இரைச்சல், ஆள் நடமாட்டம் என எந்தவித வெளிப்புற தொந்தரவும் இன்றி  சுற்றுப்புறம் அமைதியாக இருக்கும். குழந்தைகளுக்கு முந்தைய நாள் நினைவுகள் மறந்து, உடல் உறுப்புகள் புத்துணர்ச்சியுடன் வேலைகளைத் தொடங்கும். மூளை வேகமாக இயங்கும். மேலும் அதிகாலை நேரம் ஆக்ஸிடோசின் (Oxytocin), சிரோடோனின் (Serotonin), டோபமைன் (Dopamine) உள்ளிட்ட பயனுள்ள ஹார்மோன்கள் நன்றாக வேலை செய்வதுடன், நல்ல மன அமைதியையும், நல்ல நினைவாற்றலையும் கொடுக்கும். அதனால் அதிகாலை நேரம் படிப்பதால், மிகுந்த பலன் கிடைக்கும்.

அதிகாலை நேரம் எழுந்ததும் டீ, காபி குடிப்பதைத் தவிர்த்து, ஜுஸ், பால், சத்துமாவு கஞ்சி என ஏதாவது ஒரு திரவ உணவு சாப்பிட்டுவிட்டு படிக்க அமரலாம்'' என்றார் டாக்டர்.