Author Topic: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 136  (Read 2222 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 136
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 12, 2018, 10:51:17 AM by MysteRy »

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
மனிதரின் குருதியை பருகுவதே அரசியலானது

மக்களை ஆள்வதாய் அதிகார கதிரையில் அமர அலையும்
இதயமில்லா அரக்கர்கள் அரசியல்
துடுப்பாடையில் இரசிக்கும் ஏதுமறியா மந்தைகள் போல்
அரசியல் அசிங்கங்களையும் தெளிவாக உணர்ந்திடாது
இரையாகி போகும் மக்கள் பாவம் 

பெண்விடுதலை பேசி வீட்டிலே அடைந்தது போதுமென
புதுமை செய் புருசர்களாய் முகம்காட்டி அவர்கள் செய்த
புனித செயல் சில பல திருமணங்களும் -
மரபு மன்னிக்கா கூட்டு வாழ்க்கையுமே 


எவை பொக்கிசமோ அனைத்தும் வித்துவிட்ட ஈனர்கள்
அதிகாரம் கரம்கொள்ள எவன் வீழ்வான் எவன் சாவான்
என்று காத்திருக்கும் பிணம் உண்ணும் கழுகுகள்
உத்தமரென சிலர் வருவர் உருப்பட விடார்
ஊழியை செய்ய வேண்டும் இல்லையேல் கொல்வர்

விற்க்கும் போதும் வாங்கும் போதும் விழுக்காட்டு 
பங்குண்டு எதிர்ப்பானேனென மௌனமாவர்
அழிவது மக்களும் அவர்கள் நலன்களும்
எதிர்ப்பதும் தடுப்பதும் தமது கட்ச்சிகாக
அன்றி மக்கள் நலனுக்காக நிகழ்ந்ததில்லை

மக்கள் தந்த ஆட்ச்சியை ஒருமுறை ஊழிசெய்து
இழந்தால் மறுமுறை அதிலே அமரேனென
சொல்ல மனமில்லா மானம்கொட்டவர்கள்
ஒன்று விட்டு ஒருமுறை ஆட்ச்சி பீடம் ஏறினோமென
சொல்லும் நாகூசா ஈனப்பிறவிகள் சாணக்கியரென்பர்

உலகுக்கு நன்நெறி சொன்ன தமிழ் நாட்டில்
கடந்துபோன ஐம்பது ஆண்டுகளில் தனிமனித
ஒழுக்கம் கொண்ட எவரும் ஆளும்கட்ச்சி
எதிர்க்கட்ச்சி ஆசனத்தில் தலைவர்களாக 
அமர்ந்ததில்லை எனும் உண்மை தமிழரது இழிவு

ஆட்ச்சியை கைப்பற்ற கட்டணம் செலுத்தி
யாரு அதிகம் கொடுத்தாரென தெரியாமல்
பணம் பெற்ற நடுவர் மன்றம் யாரிடம்
அதிகார ஆசனம் தருவாரெனும் தகவலறிய
காத்திருக்கும் சண்டாளர்கள் சாத்தான்கள்

மக்களே எமை அதிகாரத்தில் அமர்த்தினரென
கொள்ளையடித்த கோடி தர கோடிகளை கொட்டி
அதிகார ஆசனம் பிரித்து வாங்கும் அவலம்
மக்கள் எதிர்க்கையில் இரும்பு கரம் கொண்டு 
அழிக்கும் சாக்கடையானது  அரசியலெனும்  புனிதம்


சாகும் வயதில் நாட்டை கொள்ளையடிக்க
ஆட்ச்சி வேட்க்கை கொண்டு காத்திருக்கும்
இரக்கம் பரிவு பாசம் நேசம் அக்கறையை
மக்கள்மேல் கொண்டிடா கொடியவர்கள்


மின்சாரம் தண்ணீர் கல்வி மருந்து சுகாதாரம்
என  எதையுமேதர வக்கற்ர அவமானங்களின் படம்
மீத்தேன் அணுவுலை மணல்கொள்ளை நீர்க்கொள்ளை
மரபழித்தல் விவசாய வேரறுத்தலென அனைத்தையும்
அழித்த துரோகிகள் தாமென கூடிநிற்கும் காட்ச்சியிதுதுதுது


நமது நாட்டில் மனிதரின் குருதியை பருகுவதே அரசியலானது


குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
« Last Edit: February 26, 2017, 05:22:11 AM by SarithaN »
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline thamilan

சட்டசபை
கொள்ளைக்காரர்கள் கூடிடும் கூடாரம்
கோமாளிகள் கூடிடும் கூத்துமேடை
கலகக்காரர்கள் கூடிடும் கலவரபூமி

அரசியல்வாதிகள்
ஓட்டுக்காக கையெடுத்து கும்பிட்டு
காலை வாரிவிடும் கனவான்கள்
அன்னமிட்ட வீட்டேலேயே
கன்னமிடும் கள்வர்கள்
ஐந்து வருடத்துக்கு ஒரு முறை
காட்சித்தரும் குறிஞ்சிமலர்கள்

நம் நாட்டை அழித்திடும் அரசியல்வியாதிகள்
வீடு வீடாக கையேந்தி
பதவிக்கு வந்தவர்கள்  வாழ்வததோ திரு ‘வோடு’
பதவிக்கு வர வாக்களித்தவர்கள்
கைகளிலோ திருவோடு

கொடுக்கும் ஒரு சில நோட்டுகளுக்காக
டிவி குக்கர் இவற்றுக்கு ஆசைப்பட்டு
தங்கள் விலைமதிக்கமுடியாத வாக்குரிமைகளை 
தாரை வார்த்திடும் ஏழை மக்கள்
ஒரு நாட்டையே மாற்றிடும் சக்தி
நமது பெருவிரல் இடும் அடையாளம்
இதை உணராத பாமர மக்கள்
 
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை
ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்
நம் சக்தியை நாம் உணர்ந்துகொண்டால்-எந்த
அரசியல் சக்தியும் நம் அடிபணியும்
நல்லதொரு தேசம் நம் கண்முன்னே மலரும்

Offline ChuMMa

மக்களால் மக்களுக்காக
தேர்ந்தெடுக்க படுபவர்கள்
ஆளுவது மக்களாட்சி !

ஓ அதுவும் சரிதான் , இன்று அவர்கள் பெற்ற
மக்களுக்காக மற்றும் அவர்கள் உறவு
மக்களுக்காகவே ஆள்கிறார்கள் !

மக்களோ அவர்களின் உரிமைக்காக
அவர்களால் தேர்ந்தெடுக்க பட்டவர்களிடமே
போராடவேண்டியிருக்கிறது ...

கவிதைக்கு பொய் அழகுதான் ஆனால்
அரசியல்வாதிகளுக்கு அல்லவே !

ஓட்டுக்காக பணம், இல்லையேல்
உங்கள் கால்களில் கூட விழுந்து தலை வணங்குவர்
வென்றாலோ நீங்கள் 5 வருடம் அவர்கள் கால் அடியில் ..

தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும்
ஓட்டு வாங்கும் கண்ணோட்டம் இருக்கும் வரை
அரசியல் ஒரு சாக்கடை தான்

சுத்தம் செய்வோம் இனி வரும் தேர்தலில் ...

           -சும்மா --
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline இணையத்தமிழன்


பசியோடு இருக்கும் பச்சிளம் குழந்தையிடமும் 
பறித்து தின்னும் அரசியல் வியாதிகள் 
ஜனநாயகம் என்றுசொல்லி
பணநாயகத்தில்  ஆட்சிநடத்தும் 
பணக்காரர்களுக்கு பல்லிளித்து   
நடுத்தறவர்கத்தை பணத்தால் அடித்து
ஏழை வர்கத்தை ஏறிமிதித்திடும்
இன்றைய அரசியல்
 
மக்களாட்சி என்றுசொல்லி
இருப்பவனிடம் பணத்தை வாங்கி
இல்லாதவனிடம் வாக்கை வாங்கி
மக்கள் பணத்தில் பங்குபோட்டு
சொகுசு வாழ்க்கை வாழ்ந்திடும்
இன்றைய அரசியல்

கொள்ளை அடித்தவனோ கொள்ளையன்
ஆனான்
கொலைசெய்தவனோ கொலைகாரன்
ஆனான்
மக்களை ஏமாற்றியவனோ ஏமாற்றுகிறான்
ஆனான்

ஆனால்  இவை அனைத்தையும்
ஒருவனே செய்வானாயின் அவனே
அரசியல்வாதி ஆனான்
                                    - இணையத்தமிழன்
                                        ( மணிகண்டன் )
« Last Edit: February 28, 2017, 02:52:39 PM by இணையத்தமிழன் »

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline AnoTH

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 323
  • Total likes: 1595
  • Karma: +0/-0
  • Gender: Male
  • சோதனைகளை சாதனையாய் மாற்று
தீர்ப்பு நீடிக்கிறது ......................



அனைத்து மக்களும்  ஒரு திரண்டு
இந்தியர் எனும் நாமம்  கொண்டு
அண்ணார்ந்து கைகூப்பி தலைவர் என்றோம்.
திராவிட வழி, நமது மொழி, அது இனி 
முன்னேற்றப் பாதை   என்றெண்ணி,  
கழகம் அமைத்தோர் கரங்களைப் பிடித்தோம்.

திராவிடம் திருடரிடம் என்பதனையறியாது
முன்னேற்ற ஆட்சி புரிவர் என சாட்சி செய்த சூழ்சியால்
கழகமாயினும் அதற்கு கலங்கமாகயில் கடந்து போகிறோம்.............

மறுமலர்ச்சி பிறக்காதாயென  என் மக்கள்
திராவிட வம்சமத்தில் பல அம்சங்களை மாற்ற எண்ணி
முன்னேற்றம் ஒன்றே இதற்கு வழி எனும் குறிக்கோள் கொண்டு
கழகம் தவிர்த்து களம் ஒன்றை அமைத்து கலந்து நின்றால்............

கருத்தரங்கு நடாத்தி கரங்கோற்றோர் அவர், 
மக்கள் கதை கேட்டார் எவர்?

துடுப்பெடுத்தாடும் வீரர் அவர்  வியாபாரிகளால் பந்தாடும் 
                                                                                   - அரசியல் 

வியாபார தந்திரத்தால் விலைபோகும் நிலை அறிந்திடா சமூகமாய்
                                                                                   - ஓர் அரசியல்

தேர்வு செய்தனுப்பும் மக்கள் பிரதிநிதி நீதியின்றி மாறும் சதி
                                                                                    - அது தானா இன்றைய அரசியல்?

மக்களைப் பந்தென எண்ணும் ஓர்  கட்சி.
அப்பந்தை எதிர்கொண்டு தாக்கும் எதிர் கட்சி.
வலியினை ஒரு புறம் தாங்கும் மக்கள் ஆட்சி.
களத்தில் இருக்கவேண்டியது யாரென்பதை நீ யோசி.



தீர்ப்பு நீடிக்குறது........................
« Last Edit: February 28, 2017, 02:08:05 AM by AnoTH »

Offline SweeTie

மக்களே மக்களை ஆளவேண்டி  நாம்   
பெற்ற சுதந்திரம்  பறிபோனதா??
மக்களாட்சி என்ற  போர்வையில்
இல்லாத மக்களை  மிதிப்பதும்
இருப்பவர்களிடம் தட்டிப்  பறிப்பதும் 
சுதந்திரமா ??  இல்லை  சுயநலமா ??

ஐந்து வருடத்துக்கொரு முறை ஆட்சியை பிடிக்க
கட்டு காட்டாய் பணத்தை வாரியிறைத்து 
ஏழை மக்களின் வயிற்றிலடித்து  ஓட்டுக்களை வாங்கி
சட்ட சபை நாற்காலிகளை  சூடாக்கும்  ஒரு வர்க்கம்!
வாங்கிய பிச்சை பணம் இரண்டு நாளில்  கரைந்துபோக
கண்ணீரும் கம்பலையுமாக  கையேந்தும்  ஏழைகள்  வர்க்கம் !

சுயநலம் கொண்ட சுதந்திரவாதிகள்  அவர்கள் 
வஞ்ச புகழ்ச்சியால் மக்களை   மயங்கவைத்து
தங்கள் நாற்காலிகளை  தக்கவைக்கும் சூத்திரதாரிகள்
பகுத்தறிவில்லா  பாமரமக்களை  பேராசை என்னும் 
படுகுழியில் வீழ்த்தும் பயங்கரவாதிகள்
இவர்களா நமது தலைவர்கள் ????

லஞ்சமும் ஊழலும் இவர்களது  பந்தம்   
பஞ்சமும் பட்டினியும்  ஏழைகளின்  சொந்தம்
மக்களை  பகடை காய்களாய்  பந்தாடும் மக்களாட்சி
மக்களின் பிரதிநிதிகள்  என்பதை மறந்து
மக்களை மண்ணிலே  புதைப்பதும்  சரியோ ??
விடை தெரியாத விடியல்கள்  எப்போது  விடியுமென
காலமெல்லாம் காத்திருக்கும் மக்கள் நாம். 

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
என் தமிழ் மண்ணே! உன்னை வணங்குகிறேன்..
கயவர்கள் கூட்டத்தில் சிக்கி தவிக்கிறாய்..
உன்னை காப்பாற்ற என் இனம் தயார்ர் ...
கட்டிளம் குமரிகள் , கட்டெழும் காளையர்கள்

வருகிறோம் படையெடுத்து வஞ்சகர்களை களையெடுக்க
விரைகிறோம் வெகு விரைவாய்  தூயவனை துடைத்தெடுக்க
கண்டு மிரண்டனர் பயந்தனர் இந்திய அரசியவாதிகள்
திகைத்தனர்  திகைத்தனர்    உலக அரசியல்


அரசியல் ஓர் வியாபாரமாய் எம் நாட்டில்
அடுத்தவர் பேச்சுக்கு அடிபணிந்து நிற்க..
பலகாலம் மக்களை நினைக்காமல் 
அரசியவாதிகள் இன்றும் சுயநலமாய்..

தண்ணீர் இல்லாமல் பல விண்ணப்பங்கள் போட்டும்
கல்லாய் பக்கத்துக்கு அரசியவாதிகளின் உள்ளம்
பொன் விளையும் பூமி  மண்ணாய் போகும்
இன்னும் சிலகாலத்தில்  எம் நாடு பாலைவனமாய்!   

தன் பசி மறந்து மாற்றார் பசி தீர்க்க
பச்சை பசேல்  என்ற  வயல்வெளி 
வறண்டு போவதை பார்க்கமுடியாமல்
இவர்களின் உயிரும் காற்றோடு கலக்கும்   

துன்பங்கள் உன் கண் முன்னே
தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும்
உல்லாசமாய்  குளு குளு  அறையில்
துச்சமாய் எண்ணி அவர்களின் துன்பம்


எம் நாட்டின் மிக பெரிய முதியோர் இல்லம்
நாட்டை ஆளும் நாடாளுமன்றம்
அது ஒரு  கயவர்களின்  மூடர்களின் கூடம் 
உங்கள் அட்டகாசம் கொஞ்ச நாள்தான்..
 
நாங்கள் நினைத்திடும்!  தூய்மையான அரசியலை
உங்கள் ஆட்சிமை போதும்
எங்கள் வழி,  எங்கள் கைகளில்
உங்கள் அரசியல் வாழ்க்கை; எங்கள்  தீர்ப்பில்




~பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்  அந்த  பெரிய கயவன்~
« Last Edit: March 02, 2017, 08:39:02 AM by BlazinG BeautY »