Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 141  (Read 2747 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 141
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 12, 2018, 10:53:48 AM by MysteRy »

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
இல்லறவியல் காட்சிகள்.....

உங்களை கண்டதுண்டு திரைகளில்
திரைகளில் கண்டதுபோல் இல்லை
வாழ்வியலில்.....
நாயகராய் நாயகியாய் உள்ளமதை
மகிழச்செய்யும் காலங்களின் தேவை

காதல்... பகுத்தறிவு... மதங்கள்... சாதியம்...
வரலாறு... அறிவியல்... இன்னமும் அனைத்தும்
வெளிப்படுத்தும் திரையுலகு..... ஆனால்


காணும் காட்சியிலோ இல்லறவியல் தெரிகிறது
அசலின் சில விம்பமும் விழுகிறது தளவாடியில்
அன்பாய் தெரிகிறது அன்னியோனியம்.....
காண்பதில் மகிழ்ச்சி..... காணும் காட்சி போல்
இல்லறவாழ்வும் நீட்சி பெற்றால் அதுவே இன்பம்

நெற்றியிலே குங்குமம் சாற்றும் மனையாள்
முதுகு புறம் நிற்கும் முரட்டு கணவன்.....


இடையிலே இருவரும் கைகள் பதித்து
பார்க்கும் பார்வையில் சரசமான திமிர்.....


சொல்லியிருப்பானோ சுவரில் தொங்கும்
உன்னை பெற்றவர் எனக்கும் தாய் தந்தையென
அவளது கன்னத்தில் கன்னம் பதித்து..... 
கணவனின் அன்பில் மிதப்பதாக சொல்லும் புன்னகை.....


இள மயில் முகம்வாட என்னடா சொல்கிறாய்
பாவம் அவள் உன்னையே நம்பியவள்.....
தளிர்க்கொடு வதனம் வாடிடல் சரியோ நீ அருகிருந்தும்

உரிமையோடு சில்மிசம் செய்யும் துணைவன்
வெக்கம் கெட்டவனே இதற்குத்தானா நானென
பார்க்கும் வெறுப்பின் பார்வை பாவம்..... அவள்தான்.....
தன் உள்ளே செத்துப்போவாள்.....


இவர்களுக்கு கீழே வசிப்போர் ஆனந்தமாய் வாழ்வரோ
புன்முறுவல் கொண்டு இருவரும் ஒருவராய் அன்போடு.....

மூன்றாம் அடுக்கில் முதல்நாள் வாழ்க்கை போலும்..... 
எங்கோ பிறந்திருப்பாள்... ஏதேதோ கற்பனைகள்.....
காலம் கனிந்துவர தரகர்த்துணை கொண்டு.....
மனம் விரும்பா திருமணமோ... இல்லை
காதலை இழந்த வேதனையோ அவள் முகத்தில்.....?


அழகோடு பதுமயுமாய் அவள்..... அவன் அவள்
தோள்சாய்ந்து பார்க்கும் பார்வை மிரட்டல்.....
நரியிடம் சிக்கிய கலைமான்போல் பேதலித்த பேதையாய்..... 
கட்டிக்கொடுத்தனர் அவர்களுக்கென்ன...? கடமைமுடிந்தது..... 
வலிகள் அவளுக்கல்லவோ.....


மூன்றாம் அடுக்கின் மறுகாட்சியும் முதல்நாளோ... 
ஆனந்தமாய்... அன்போடு... அரவணைத்து களைத்த சாயல்...
எப்போதும் எனை பிரியாதே என்பாளோ..... சொல்லியதை
கேட்டதும் நீயின்றி நானேதென அழுதிருப்பான்... தெரிகிறது.....
காதலோ இல்லை தரகர்த்துணை திருமணமோ.....

நமது இயல்புகள் அகத்திலே மறைந்தாலும்.....
தளவாடியிலே முகத்தின்வழியே அகப்புற
அன்பும் வெறுப்பும் தெரிந்துவிடுகிறதே..... விம்பமாய்.....
விஞ்ஞானம் மனித மனங்களின் எண்ணமதை
சொல்லிவிட்டால் யார்தான் வெளியேவருவோம்.....? 
முதலில் மறைபவன் நானாகவே இருப்பேன்.....



குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
கண்ணாடி விம்பங்கள் என்ன
பேசும்?
உண்மையான காதல் கொண்டு
கவிதை பேசும்

நீ பார்க்கும் பார்வையிலே மனதில்
பட்டாம்பூச்சி
என்னுள் ஆடித்தான் பார்க்கிறதே
கண்ணாம்பூச்சி

விம்பம் தான் நீ என்று
கேலி செய்கின்றேன்
உன் விரல் நுனியோ தீண்டிடவே
வெட்கம் கொள்கின்றேன்

காதலியாய் நான் கொண்ட கனவு
நிஜமானதே
உன் மனைவியாய் தோள் சாயும்  உணர்வு
புதிதானதே

புகைப்படமோ ஆயிரமாய் இருந்தும்
என்ன செய்வது
இந்த நிஜமான நிழற்படமே தினமும் என்
கண்ணில் விடிவது

என் விம்பமாய் நீ இருக்க
உன் விம்பமாய் நான் இருக்க
காலமெல்லாம்  நம் விம்பமாய் காதல்
வலம் வரட்டுமே


                                                       **விபு**

« Last Edit: April 02, 2017, 05:47:32 PM by VipurThi »

Offline ! Viper !

காதல்
மாலை  பொழுதில் சூரியன் ஆரஞ்சு  நிறத்தில் வண்ணமிட
சாலையில் நான்  நடந்து  வந்திட
ஏதோ ஒரு புதிய காற்று என்னை அடித்திட
என் பார்வை ஒரு நிமிடம் அவளை பார்வையிட
முதன் முறையாக என் இதயத்துடிப்பை நான் அறிந்திட
நூறு வருடம்  பழகிய பெண்ணாக நான் அவளை பார்த்திட
எனோ அவள் எனக்கு சொந்தமானவள் தானோ  என்று மனசு அழைத்திட
பார்த்த அந்த நொடி நான் காதலில் விழுந்திட
நெருங்கி சென்று பேசத்துடித்திட
வேண்டாம் என்று விலகிட
திரும்ப அவளை பார்க்க தோன்றிட
மனம் மறுத்து விலகிட
தைரியத்தை வளர்த்து நெருங்கி சென்றிட
ஒரு புன்னகை உடன் என்னை திரும்பி அவள் நோட்டமிட
நான் சட்டென்று  தலையை திருப்பிட
அவள் என்னை நெருங்கி வந்திட
நான் நடுக்கத்துடன் கலந்த வெக்கத்தில் உறைந்திட
அவள் என் அருகில் வந்து பேசிட
இந்த ஒரு நொடி என் வாழ்கை மாற்றிட
அவள் பேச வரும் வார்த்தைகள்  என்னவென்று நான் கற்பனையிட
அவள் பேசிய வார்த்தைகள்

அண்ணா டைம்  என்ன ஆச்சு  சொல்றிங்களா ப்ளீஸ்ஸ்


துளைந்தது எனது உலகம்
சென்னை 60028 bgmஓடு கண்ணில் நீரோடு நின்றிட
டைம்  6:28 pm அச்சுமானு சொல்லி அனுப்பிட
நான் அங்கும் இங்கும் பார்வை இட
என்னமா நீங்க இப்படி இருக்கீங்களேமா என்று Dialogue இட
நல்லா இருமானு  வார்த்தை இடா
நெஸ்ட் (next ) பொண்ணை சைட்  அடிக்க நான் சென்றிட
வீரைவாக  இரவும் வந்திட
காதல் அங்கும் இங்கும் மலர்ந்து
கடைசியில் மொக்கை ஆனது

வாழ்க்கைனா சில அடிகள் விலதானே செய்யும்
பிளேடு வாங்குனாலும் மொக்கை வாங்குனாலும்
[/color]
மீசையை  முறுக்கு [/color]

ftc team viper :D


[/color]
[/font]
« Last Edit: April 02, 2017, 02:28:21 PM by ! Viper ! »
Palm Springs commercial photography

Offline SwarNa

முதற்காதல்

உன்னை இனி அழவிடமாட்டேன்
என்றபோதில் உணர்ந்தேன்
உனதன்பு
நீ என்னென்றும் இன்புற வாழவேண்டும்
நீ வேதனையுறுவதை காண சகியேன்
என்கையில்  தெரிந்தது உன் நேசம்
உனதன்பில் வீழ்ந்த என் மனம்
எழ முயலவில்லை
வீழ்ந்த நானும்,எனதன்பால்
உனை வீழ்த்தி
சரணடைகிறேன் நின்னை
மாசறு அன்பைப் பெற
தகுதியுற்றவன் நீயே

வற்றாத ஜீவநதியாய் எனதன்பும்
எனக்கு
என்றுமே பற்றாத உனதன்பும்
நம்மை பற்றிக்கொள்ள
என் கைத்தலம்தான் பற்றினால் என்ன
நீயும் <3 <3 <3

தடுப்பணை இல்லா காட்டாறாய்
பொங்கிடும் புதுவெள்ளமாய்
என் மனமும் உனைத்தேடி ஓடிட
நம்பெற்றோரும்,உற்றோரும்
  நம்மை வாழ்த்திட
நாம்      <3 <3 <3
வாழ விரும்புகிறேன்
 
நிழற்படமாய் நாமிருப்போமா
தருணங்கள் வெவ்வேறாயினும்
அனைத்திலும் உன்னுடனே
நினைவில் நீங்காமல்
உறைந்திட ஏங்குதே
என் மனமும் <3 <3 <3


[/size]

Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
கண்ணாடி  முன்  உன்  அழகிய  கண்களை  கண்டு  உன்னை  கட்டி  அணைக்க  சொல்கின்றது என் மனம்..

கலையாத  கனவுகள் ...
கவிதையாய்  நீ  வந்தாய் ..
வரைந்து  வைத்த  ஓவியம்  போல்...
வகையாய் என்னுள்  கொண்டாய் ...

என்  இதயமே  என்று  நீ
என்னவன்  மோகத்தை
செதுக்கி  கொண்டாயடா..

உன்னை  கொஞ்சும்  என்  இதழ்கள்  சொல்கிறது ... உன்  இதழ்களை சுவைக்க ...

உன்னிடம்  நான்  கொஞ்சி  சண்டை  இட நீயோ  என்னை  ரசித்த  பார்வையில்  என்னை  கொன்றாயடா ...

உன்  கண்ணை  பார்த்து என்  ஜென்மம்  போதாது  என்று  எனையே  என்  மனம்  கொல்லுதடி ...

நீ  நீரில்  உரையாடி  விட்டு  வரும்  வேளையில்  என்  உள்ளங்கள்  என்னை  எதோ  பண்ணுதடி ...
உன்  கூந்தலின்  வாசம்  என்னை  உன்னிடம்  விழ செய்யுதடீ..

நான்  அழகாக  காட்சி  அளிக்கும்  பொழுது ... உன்  கைகள்  என்னை  கட்டி  அணைக்கும்  தருணம்  என்  வாழ்வில்  இன்பத்தை  தருகிறதடா ..

உன்  சின்ன  குழந்தை  முகத்தை  நான் கண்டு  என்  இதயத்தை  உன்னிடம்  தொலைத்தேனடி ... என்னை  உன்னவனாக  ஏற்று  கொள்ள  டி ...

விம்பத்தை போன்று நீ என் நிழல் போல நான் உன் நிழல் போல வாழ ஆசைதானடி..

Offline சக்திராகவா

தேக தீண்டலே தெரியவில்லை
காற்றின் காதலில்!
கற்பிக்குதோ காற்றும்
காதலிப்பதற்க்கு!

உடைமாற்றும் அழகை கண்டே
உடையும் பொருளானதோ கண்ணாடி
உன் கூந்தலில் ஒளிந்தால் போதும்
ஒவ்வொரு பகலும் பரவிடுமிரவாய்

உரசினால் தான் தீ வருமென்று
கன்னத்தை உரசியே கண்டுபிடித்தானோ
கல்லை உரசுமுன்பு
கற்கால மனிதனும் காதலியோடு!

உறவாடும் விழிகளுகிடையில்
ஓர் திருட்டுத்தனமாக
விரல்களின் விவாதம்
விட்டு விட்டு தொட்டுக்கொண்டு

தேர்ந்த காதலால்
சேர்ந்த இருவரின்
தேடலில்............

சக்தி ராகவா


Offline Dong லீ

இதோ என் கவிதை கண்ணாடி முன்னாடி
நீராடிய துளிகளில் இரண்டு
அழகிய அவள் இமைகளில் திரண்டு
சில்லென்று வீசும் அவள் பார்வையில்
சில்லு சில்லாய் சிதறியது இதயம்
கண்ணாடி துகள்களாய்

கண்ணாடி முன்னாடி நின்றாயடி
பின்னாடி நின்றபடி
உன் அழகை கண்ணாடியில் ரசித்தேனடி
நீ.. என்ன ஒரு அழகியடி
என வியந்தேனடி
இமைகளின் அடியில் இருக்கும் அது
கண்ணாடி? இல்லை என்னை கொல்லும்
 gunஆடி ?

கண்ணாடியும்  காதல் கொள்ளூம்
என்னவளே உன் அழகை கண்டு ..

நேரில் அருகில் உன்  கண்ணில்
காதலை கண்ட ஒரு நொடி
மயங்கி கிடந்தேனடி

 அவள் அழகிய சிறிய
 புன்னகைகள் வெட்கங்கள்
அனைத்தும் புதைந்து
புனிதமடைந்தது கண்ணாடி

இந்த அழகிய காதல் காட்சியை
நொடி விடாமல் நோக்கும்
கண்ணாடியும் நாணி
கோணி தன் முகத்தை
மூடிக்கொள்ளும்
வாயிருந்தால் அதுவும்
கவிதை சொல்லும்


இதோ கண்ணாடியின் அழுகுரல் பின்னாடி

வெக்கப்பட்டு முகத்தை மூடித்தான் ் கொண்டேன்
என்ன கருமம்டா  இது 
கவுண்டமணியின் ரொமான்டிக் லுக்கும்
தோற்றுவிடும்  என

வாயிருந்தால்  கவிதை சொல்லமாட்டேன்
கண்றாவியாய் ஏதேனும் சொல்லிவிடுவேன்
ஓடிவிடு
[/color]



« Last Edit: April 02, 2017, 09:29:46 PM by Dong லீ »

Offline Ms.SaraN

கண்ணோரத்தில் காந்த பார்வையுடன்
உதட்டோரத்தில் ஒரு கள்ள சிரிப்புடன்
காலையில் நீ கண்ணாடிமுன் நிற்கும்போது
சிவந்து போனேனடா நான்[/color]

காலை வேளையில் உன் ஓசை என் காதுகளில் ரீங்காரமிட
அதே மயக்கத்தில் கண் திறந்து
என்னிலை மறந்து உன்னிடம் தஞ்சம் அடையும் வேளையில்
பூஜை வேளை கரடியாய் அலாரம் ரீங்காரமிட
பிரிந்து போனதடா நமது இமைகள்



அழகு பொக்கிஷமாய் நான் கண்ணாடி முன் நிற்க
பின்னாலிருந்த நீ அணைக்க... திடுக்கித்து போனேனடா நான்
என் கண்களில் சிறு கோபம் தெரிய
ரசித்த வகையில் உன் கண்கள் ஓரத்தில் ஒரு கள்ள சிரிப்பு


கண்ணாடி எனும் பிம்பமதில்
உயிர் பூக்களில் உன் கண்கள் தெரிய
உன் அழகை கண்களில் பருகி கொண்டு
நீ தந்த அங்கிகாரத்தை நெற்றியில் சூடி கொண்டு
என் காலை பொழுதை அழகாக்கும் நீ
என்றும் ஒரு கவிஞனே


என் வாழ் நாள் முழுதும்
உன் கண்கள் என்னும் சிறையில்
என்னை கைது செய்து விடுடா கண்ணா
அது ஏனோ தெரியவில்லை
உன் கண்களுக்கு அப்படி ஒரு சக்தி
« Last Edit: April 03, 2017, 12:40:33 AM by Ms.SaraN »