ஒரு அழகிய உள்ளத்திற்கு........
யார் அது தெரியவில்லையே
என்னை கண்டு கொண்ட ஒரு உள்ளம்
அறிமுகமோ எனக்கு இல்லை
அறிமுகத்தை தந்து சென்ற உள்ளம்
எப்படி அறிந்து கொள்வேன் என்ற போது
என்னை போல் ஒற்றுமைகள் கொண்டது அந்த உள்ளம்
நன் உனக்கு யார் என்ற போது
என் உற்ற நண்பர் என்று சொல்லிய உள்ளம்
நான் பார்த்ததில் பிடித்த உள்ளம்
என் உள்ளம் உணர்ந்த அவ் உள்ளத்தின்
கனவுகள் யாவும் நிஜமாகும்
வரம் மட்டும் கொடு இறைவா.........
**விபு**