Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 143  (Read 2913 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 143
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 12, 2018, 10:54:40 AM by MysteRy »

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
என் இதயம் தொட்ட
மணவாளனே
உன் இதயம் எங்கே கண்டு
கொண்டேன்

உந்தன் விழியால் என்னை
சிறை கொண்டாய்
என் விழி மூடும் போது நீ
என்னை வென்றாய்

என்  காதல் சொன்ன போது நான்
வெட்கம் கொண்டேன்
உந்தன் உள்ளம் வந்தோ எந்தன் உயிர்
கண்டு நின்றேன்

உன்னை கைபிடிக்கும் நாளுக்காய்
காதலுடன் ஏங்கினேன்
என் கனவு நிஜமாகும் தேதி உன் முகம்
பார்த்து சொல்கிறேன்

அன்று மனம் கவர்ந்தவனாய்
இன்று காதல் கொண்டவனாய்
நாளை மாலை சூடுபவனாய்
வாழும் காலம் யாவும் என்றும்
மாறா காதல் வேண்டும்

உன்னோடு வாழ்வேனே உயிர்
கலந்து ஒன்றாய்
இது போதும் என்றும் என் ஆயுளின்
ஆணி வேராய்

என் உயிர் வீழ்ந்து உந்தன் மடி
சாயும் வேளை
என் கரம் பிடித்திடு போதும்
உந்தன் நினைவில் என்
கண் மூடும் தானாய்

 

                                                         **விபு**
« Last Edit: April 18, 2017, 06:42:42 PM by VipurThi »

Offline Ms.SaraN

மேகங்கள் ஒன்று கூட
அக்னிகள் நடனமாட
வளையல்கள் ஓசையிட
உன் கரம் பிடித்தேனடா கண்ணா

தாயின் கரம் மட்டும் பழகின என் விரல்கள்
உன் கரம் பிடிக்க பழகுமடா இனிமேல்
உன் கரம் பிடித்து இவ்வுலகை  காண ஆசை
என் ஆசைகளை  நிஜமாக்க வந்த மணவாளன் நீ


என் முகம் பார்த்து என் விரல் பிடித்து
நீ அணிவித்த மோதிரம்
சொல்கின்றதடா உன் காதலின் ஆழத்தை
என்றும் உன் காதல் கடலில் மூழ்கிட தவமிருப்பேன்

என்  கை மீது உன்  கை வைத்து
என் விரல்களை சிறை செய்தது போலவே
என் மனதையும் சிறை செய்துவிட்டாய்
இந்த இன்பச் சிறையில் என்றும் சரணடைவேன்

அக்னியின் சாட்சியாக உன் கரம் பிடித்து
அக்கனியை சுற்றும் போது 
பலரின் கண்கள் நம்மை சுற்றும் வேளையில்
ஏனோ தெரியவில்லை என் மனம் உன்னை சுற்றி திரியும் 


கல்யாண தேதி நீ சொல்ல
மாலைகள் நம் கழுத்தில் நடமாட
அக்னியெனும் பூங்காவை சுற்றியபடி
உன் கரம் பிடித்து என் வாழ்க்கையை உன்னிடம் கொடுக்க
ஒவ்வொரு நொடியும் வழி மேல் விழி வைத்து காத்திருப்பேன்

« Last Edit: April 17, 2017, 10:39:02 PM by Ms.SaraN »

Offline DeepaLi

அறியாத ஒருவனிடம்...
அழகான என் வாழ்க்கையை..

புரியாமலே ஒப்படைப்பதை விட...
அனைத்தும் அறிந்த உன்னிடம்...

கண்களை மூடிக் கொண்டு..
கடைசி வரை வாழ நான் தயார்...

உன் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை....
என்  உயிர் மீது கூட  எனக்கு இல்லை...

தந்தையின் மானத்திற்காகவும்...
அன்னையின் அதட்டலுக்காகவும்...


என் வாழ்க்கையை அறியாத ஒருவனிடம்..
அடகு வைக்க முடியாது...

நான் காதலித்த நீ மட்டுமே...
எனக்கு கணவனாக வர வேண்டும்....

என் காத்திருப்பிற்கு பலன் கிடைத்து விட்டது..
இன்றில் இருந்து நான் உன் காதலி அல்ல..

காதல் மனைவி...

இந்த ஜென்மத்தில்.,, என் கரம் பிடித்த நீயே..
ஏழு ஜென்மங்களிளும் கரம் பிடிக்க வேண்டும்...

என ஆசை படுகிறேன்.. என்றும் உன் உயிரில் கலந்த உறவாய்...


deepali

Offline thamilan

ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும்
திருமணம் என்பது பரீட்சை
அவளாக  எழுதும்
பரீட்சையல்ல  இது
ஆண்டவன் எழுதும்
புதுப் பரீட்சை

பூவாய் மணக்கும்
சிலர் வாழ்வில்
வெறும் நாராய்
கிழியும் சிலர் வாழ்க்கை
 
கம்பிகள் போட்ட ஜன்னலது
காப்பா சிறையா புரிவதில்லை
காலம் போட்ட
கணக்குக் கோடுகள்
காலன் வரும் வரை அழிவதில்லை

உதிரம் கலந்த  உறவைத் தாண்டி
உணர்வுகள் கலக்கும்
உறவு முடிச்சின்  இறுக்கத்தால்
உணர்வின் மூச்சி திணறும்

சிலர் கழுத்தில்
கட்டிய தாலி
இதயம் கிழிக்கும் வேலி
வலியை நினைத்து விலகுவதா - இல்லை
வடுவை நினைத்து ஒடுங்குவதா
விடை தெரியாமல் வாழ்ந்திடும்
பெண்கள் பலர்

வெறும் நாள் நட்சத்திரம் பார்த்து
ஜாதகப் பொருத்தம் பார்த்து 
நிச்சயிக்கப்படும் கல்யாணங்களில்
ஏனோ மனப்பொருத்தம் பார்க்கப்படுவதில்லை

திருமணம் முடிந்த அன்றே முதலிரவு
தன்னையே ஒருவனுக்கு கொடுத்த பின்
அவன் கெட்டவனானாலும்
கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன் - என
கல்லாய் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் பெண்ணுக்கு
மாற வேண்டும் இந்த
திருமண சம்பிரதாயங்கள்
« Last Edit: April 16, 2017, 06:30:41 AM by thamilan »

Offline MyNa

இரு மனம் இணையும் திருமணம்
எத்தனை பேருக்குத்தான் அமைந்திடும்
இது போன்ற பூரண  இல்லறம்  ??

மனதிலே ஒருவனை சுமந்து
அவனோடு கனவிலே இல்லறம் அமைத்து
பெறாத பிள்ளைகளுக்கு பெயர் சூட்டி
அவர்களுக்கு தாய் தந்தையாய் உருமாறி
பேரப்பிள்ளைகளை கொஞ்சி விளையாடுகையில் ..

காதருகே கேட்கிறது கெட்டிமேளம்
மணவறையில் மணமகளின் கழுத்திலே
மங்களகரமான மஞ்சள் தாலி ஊஞ்சலாடுகிறது
மணவாளன் போட்ட மூன்று முடிச்சுகளோடு
புதிய ஓர் உறவின் அடையாளமாக ..

உரிமைக்காக முதலாம் முடிச்சு
உறவுக்காக இரண்டாம் முடிச்சு
ஊருக்காக மூன்றாம் முடிச்சு
ஆனால் உண்மை என்னவோ
இது அவள் தனக்கு தானே
போட்டுக்கொண்ட கட்டாய முடிச்சு ..

மனதில் சுமந்தவனை கருவில் சுமந்தவளுக்காக
மணமுடிக்காமலே விவாகரத்து செய்துவிட்டால் மனதளவில்
பூவிந்திரும் பொட்டிருந்தும் கூரை புடவையிருந்தும்
அவள் வாழ்க்கையிலே வண்ணமில்லை
இன்பமாய் வாழ எண்ணமும் இல்லை ..

இத்தனை சுமைகள் மனதில் இருப்பினும்
மணவாளன் கை பிடித்தவாறே கண்ணீரை மறைத்து
புன்னகைக்கிறாள் மணமேடையிலே..
தன்னை தானே தயாராக்கி கொள்கிறாள்
வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை
நல்லதோர் மனைவியாக தாயக தொடர்ந்திட ..

ஒரு பெண்ணின் மனக்குமுறலை
கவிதையாய் இயன்றவரை எழுதிவிட்டேன்..
சொல்ல முடியாத வலிகளோடு
மணமேடையில் மூன்று முடிச்சு போடும்
அந்த மணவாளனின் குமுறலை
எழுதப்போவதுதான் யாரோ ??

~ மைனா தமிழ் பிரியை ~

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
    எந்தன் வாழ்வின்
விடியல் இவளோ ...!!
இரவில் நான் கண்ட
சொற்பனம் இவளோ ...!!!

கனவின்று நிஜமானதே ...
நட்பென்று பழகி ...
உறவொன்று மலர்ந்ததே ....
அது உயிருக்குள் உருகியதே ...

காதலெனும் பூதம் இருவரையும்
ஆட்கொள்ளத் தொடங்கியதே ..

விரல் கோர்த்து நடந்தோம் ...
கதைகள் ஆயிரம் பேசிக்கழித்தோம்...
சமயத்தில் பேசிட வார்த்தைகள் மறந்து
மௌனத்தில் கலந்தோம் ...

இனியும் காத்திட
பொறுமையில்லை என் பெண்ணே ...
உன்னை கட்டி அணைத்து முத்தமிட்டிட
துடித்திடும் கரங்களும்
பட படத்திடும் உதடும் சொல் பேச்சை
கேட்பேனா என்கின்றது

நண்பன் அன்று காதலனானேன் ...
இன்று கணவனுமானேன் ...
உனக்கு காவலனுமானேன் ...
உந்தன் கனவுகளுக்கு
துணையானவனுமானேன் ...

இதோ என்னவள் இவள்..
எதிர்க்கால கனவுகலோடு...
கன்னங்கள் இரண்டும் வெட்கத்தால் சிவந்திருக்க...
விரல்கள் பத்தும் மருதாணியால்
சிவந்திருக்க...

கோர்க்கிறாள் தன் விரல்களை
என்னோடு...
பிடித்தப் பிடி உடும்புப் பிடி...
தளர்ந்த வயதிலும்...
உன்தன் கரம் பிடித்த என்தன் கரம் தளராது...

நான் கண்டேடுத்த  அழகோவியம் இவள்....
எனக்குள் செதுக்கிய உயிரோவியம்
இவள்...
தொடரம் என்தன் வாழ்க்கை இவளோடு....
ஏழேழு ஜென்மமும் இனி இவளோடுதான்...

எங்களின் காதல் இதிகாசம்
தொடங்க இங்கே
வைக்கிறேன் முற்றுப்புள்ளி....

~ ஜெ.ரித்திகா ~
« Last Edit: April 20, 2017, 01:48:24 AM by Forum »


Offline SwarNa

வாயிலில் வாழைமரத்தோரணம்
பன்னீர் தெளித்து வரவேற்பு
பட்டுப்புடவைகள் சரசரக்க
பட்டுப்பாவாடையில் குட்டி தேவதைகளும்
இளங்குமரிகளும் வட்டமிடும் வாலிபரும்
வயோதிகர்களின் நலம் விசாரிப்பும்
மத்திம வயதுடையோர் பலகதை பேசியும்
சற்றேரக்குறைய இரைச்சலும்
மங்கல ஒலியும்
கலவையான உணர்வும் ,மணமும்
மனமெங்கும் வியாபித்திருக்க
கலகலக்கும் கண்ணாடி வளையலே
வேண்டுமென விரும்பி அணிந்திட்ட என் மருதாணிக்கையில் கட்டிய காப்புமாய்
உன் கையில் எனை ஒப்புவித்திட்ட
என் பெற்றோரும்
நாம் பாதபூஜை செய்திட்ட பாதங்களுடன்
நமை ஆசிர்வதிக்க நம் இருரின் பெற்றோரும்
சுற்றம்,நட்பும் சூழ
நின் கரத்தால் மாலையேந்தி
மங்கலநாணும் பூட்டிக்கொண்டேன்
எண்ணம் ஈடேறிய மகிழ்வில் அயற்சியும் சேர
உன் தோளில் சரிந்தவளானேன்
...
இப்படி நடக்குமென எண்ணிய நம் திருமணம்
நெருங்கிய சுற்றத்தார் முன்
கோவிலில் நினைவில்லா நிலையில்
நடந்ததாய் நீ கூறியதில் திகைப்புற்றாலும்
எப்படி நடந்தால் என்ன..
என் கனவு உன்னுடன் வாழ்வதே
விடு வாழ்ந்துவிட்டு போகிறேன்  ..<3 <3  <3

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
இல்லற இணைவு.....

ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமுமான
திருமண இணையர்களின் கரங்கள்
நான்கு கரங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக
அடுக்கப்படுவதுதான் இணைப்பின்
அடையாளமா.....? இல்லற வெளிப்பாடா...?

இப்படி எனக்கு வேண்டாம்.....
என் இரு கரங்களையும்
உன் இரு கரம்கொண்டு மூடிடு.....
இல்லை இல்லை வேண்டாம்.....
என் இரு கரங்கள் நடுவே
நின் இரு திரு கரங்களும் வாழட்டும்.....


ஆபத்துக்கள் வருமெனில் எனைக் கடந்தே
உன்னை வந்து சேரும்
உயிரை தந்தேனும் என் உயிரை நான் காப்பேன்
என் கரங்கள் நடுவே நீ புதைத்தவை நின் கரங்களோ
இல்லை இல்லவே இல்லை.....

நீ எனை நம்பி தந்தவை உன் ஆன்மா...
உன் சரீரம்... உன் வாழ்வு... உன் எண்ணங்கள்.....
உன் ஆசைகள்..... உன் இதயம்.....
உன் எதிர்காலமும் எல்லாமும் .....

பிறந்த வீட்டில் நீ இழந்த சுதந்திரங்களை
கணவன் என்னிடம் கேட்கின்றாய்.....
கரங்களை அடையாளமாக கொடுத்து.....

பெற்றவர் கடமை இருபத்தைந்தோடு நிறைவு.....
கட்டிய என் கடமை வாழ்வின் முடிவுவரை
கலங்காதே..... கண்போல காப்பேன்.....
நின் நல் ஆசைகளுக்கு சிறையிருப்பு இல்லை.....


எனக்கும் வாழும்வரை நின் அன்பு வேண்டும்
உன்வீட்டு பொருளும் பணமும் வேண்டாம்.....
உன் பெற்றோர் தரும் வீடும் வாகனமும் வேண்டாம்
உன் வீட்டார் அன்பு போதும்..... என்வீடாய் நான் நினைக்க.....

உன்னிடம் நான் வேண்டுவதும்.....
நீயும் என் வீட்டுக்கு பிள்ளையென வாழவேண்டும்.....
எனை பெற்றவர் மருமகளல்ல... மகளென எண்ணி
மகிழ்ந்து வாழ்ந்து போற்றவேண்டும்.....

இது முதல் நீ நான் இருவரல்ல.....
நாமெனும் நாமம் கொண்டு... ஓருயிராய்.....
உன் மேனிவலிக்கையில் நான் கசங்கி.....
நான் வலிக்கையில் நீ அழுது.....

வலிகள் பகைகள் வாழ்வில் நெருங்காது
இன்புற்று வாழ இறைவனை சரண்புகுந்து
இதயமதில் தூய்மை தங்க வஞ்சம் களைந்து
அன்போடு உறவாடுவோம்...
மரணமும் பிரியா வரம் வேண்டுவோம்..... 


குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே

 
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....